🔴 LIVE | முப்பெரும் விழா 2023


காலத்தை வென்று நிற்கும் கம்பளத்தார் வீரம்!

75-வது சுதந்திர ஆண்டையொட்டி தினத்தந்தி நாளிதழ் தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் என்ற தலைப்பில் ஆங்கிலேயரை எதிர்த்து சமர் புரிந்த பாலையக்காரர்கள் குறித்தான வரலாற்றுத் தகவல்களை தொடராக வெளியிட்டு வருகிறது. அதில் நமது பாளையக்காரரான தளி எத்தலப்ப நாயக்கர் வீரவரலாறை பதிவு செய்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ள விபரம் வருமாறு..

எத்தலப்பா நாயக்கர், தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டத்தில் அமைந்துள்ள தளி பாளையப்பட்டை ஆண்ட ஒரு பாளையக்காரர் ஆவார்.

கி.பி 1800-இல் பழனி,விருப்பாச்சி,ஆயக்குடி,இடையகோட்டை, ஊத்துக்குழி, தளி ஆகிய ஆறு பகுதிகளில் பாளையக்காரர்கள் ஆட்சி செய்தனர். இதற்கான கல்வெட்டுகள் திருமூர்த்தி அணை பின்புறமுள்ள ஆலமரத்தடியில் இருக்கிறது.1799-ல் வீரபாண்டிய கட்டபொம்மனை ஆங்கிலேயர்கள் தூக்கிட செய்தி தளி பாளையக்காரர் எத்தலப்ப நாயக்கருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அதற்காக அவர்களை பழிவாங்க நினைத்தார். 

ஆங்கிலேயர்கள் தங்களின் ஆதிக்கத்தில் அனைத்து பகுதியிலும் கொண்டுவரும் நோக்கில் பாளையக்காரர்கள் தூதுவர்களை அனுப்பினர். அந்தவகையில் தஞ்சாவூரில் இருந்து தளிக்கு தூதுவர்களின் தலைவர் அந்திரை கேதிஷ் அனுப்பப்பட்டார். 

ஆங்கிலேயருக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கவும், கட்டபொம்மனை தூக்கிலிட்ட ஆங்கிலேயருக்கு பாடம் புகட்டவும், அந்திரைகேதிஷை தனியே அழைத்து சென்று, கைது செய்து தூக்கிலிட்டார் தளி எத்தலப்ப நாயக்கர்.

பாளையக்காரர்கள் ஆட்சி காலத்தில் திணைக்களம் கிராமத்தில் அந்திரைகேதிஷை தூக்கிலிட்ட அந்த இடம் "தூக்குமரத்தோட்டம்" என்று அழைக்கப்படுகிறது. கொங்கு பாளையக்காரர்களின் சுதந்திரக் கிளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் இந்த கல்வெட்டே ஆதாரமாக உள்ளது.


எத்தலப்ப மன்னர் ஆட்சி முறையில் நீர்ப்பாசனம் துறையில் சிறந்து விளங்கியது. குளங்கள் அமைத்து தன் சுற்றுவட்டாரப் பகுதியில் விவசாயமும், அனைத்து சமுதாய மக்களுக்கு நீர் மேலாண்மை மூலம் சிறப்பான முறையில் ஆட்சி நடந்தது.

மாடுகளும்,ஆடுகளும் மேயும்போது ஆபத்தான விலங்குகள் கூட தொந்தரவில்லாமல் நகர்ந்து செல்லுமாம். இது எப்படி சாத்தியப்பட்டது என்று தெரியவில்லை.மலைமேல் உள்ள இடங்களில் "பட்டி"கள் அமைத்து பராமரித்து வந்திருக்கிறார்கள்.

ஆங்கிலேயருக்கு எதிரான போரில் ஒரே நாள் இரவில் தளிக்கோட்டை தரைமட்டமாக்கப்பட்டது. போரில் எத்தலப்ப நாயக்கர் வீரமரணம் அடைந்தார். அவர் வாழ்ந்த அரண்மனையும் சூரையாடப்பட்டது. எனினும் ஆங்கிலேயரை தைரியமாக தூக்கிலிட்ட அவரது வீரம் இன்றளவும் உயர்வாக பேசப்படுகிறது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved