தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார் • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார்
விளம்பரங்கள்
ஒன்றியக்குழு உறுப்பினர் - நாமக்கல் - திரு.P.தமிழரசு

ஒன்றியக்குழு உறுப்பினர் - நாமக்கல் - திரு.P.தமிழரசு

Admin 24 Jun 2020 | 03:59 PM
பகிர்:

திரு.P.தமிழரசு அவர்கள் 10.06.1981-இல் நாமக்கல் மாவட்டம், நாமக்கல் அருகேயுள்ள அப்பிபாளையம் கிராமத்தில் திரு.சம்பத் (எ) பழனிச்சாமி – திருமதி.சரஸ்வதி தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். தொடக்கக்கல்வி வரை பயின்றவர், பின் பெற்றோர்களுக்கு உதவியாக விவசாயப்பணிக்கு திரும்பினார். இவருக்கு திருமணமாகி திருமதி.T.சகுந்தலா என்ற மனைவியும், T.திருநிதி என்ற மகளும் T.தளபதி என்ற மகனும் உள்ளனர்.

பாரம்பரியமாக அதிமுக குடும்பத்தைச் சேர்ந்தவரான திரு.தமிழரசு அவர்களின் தந்தையார் திரு.சம்பத் அவர்கள் இருமுறையும், தாயார் திருமதி.சரஸ்வதி அவர்கள் ஒருமுறையும்  அப்பிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பிறவி அதிமுக-வைச் சேர்ந்தவரான திரு. தமிழரசு அவர்கள், பலவருடங்களாக அதிமுக அடிப்படை உறுப்பினராக உள்ளார். கட்சிப்பணிகளில் தீவிரமாக பணியாற்றிவருபவர், கட்சி நடத்தும் அனைத்து நிகழ்வுகளிலும், பொதுக்கூட்டங்கள், மாநாடுகளிலும் கலந்துகொண்டு வருகிறார்.

தாய, தந்தை இருவருக்காகவும் தேர்தல் களத்தில் பணியாற்றிய அனுபவமுள்ள திரு.தமிழரசு அவர்கள், முதன்முறையாக கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், நமக்கல் ஒன்றியம் 7-ஆவது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில் அஇஅதிமுக சார்பில் போட்டியிட்டு மகத்தான வெற்றிபெற்று ஒன்றியக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். பரம்பரியமாக பொதுவாழ்வில் ஈடுபட்டு வரும் குடும்பத்தைச் சேர்ந்தவரான திரு.தமிழரசு அவர்கள், இப்புதிய பொறுப்பின் மூலம் சாதி,மத, இன,மொழி பாகுபாடின்றி அனைவருக்கும் பணியாற்றி, வாய்ப்பளித்த கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பணியாற்ற வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.

குறிச்சொற்கள்

அரசியல் தலைவர்கள் தமிழ்நாடு Namakkal.Mr.P.Tamizharasu
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண