தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார் • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார்
விளம்பரங்கள்
அரசியல் பிரபலங்கள் - பொள்ளாச்சி - திரு.A.P.திருநாவுக்கரசு

அரசியல் பிரபலங்கள் - பொள்ளாச்சி - திரு.A.P.திருநாவுக்கரசு

Admin 01 Oct 2020 | 03:55 PM
பகிர்:

திரு.A.P.திருநாவுக்கரசு அவர்கள் 07.06.1990-இல் கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள வக்கம்பாளையம் கிராமத்தில் திரு. ஆறுச்சாமி – திருமதி.பத்மாவதி தம்பதியினருக்கு விவசாய குடும்பத்தில் மகனாக பிறந்தார். இவர் கோவை அரசு சட்டக் கல்லூரியில் M.B.A.,B.L., பயின்றுள்ளார். இவருக்கு திருமணமாகி திருமதி.T.புவனேஸ்வரி என்ற மனைவியும் T.விநாயக்செந்தூர் என்ற மகனும் உள்ளனர்.

postgallery(215)

பொள்ளாச்சி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவரின் தந்தையார் திரு.ஆறுச்சாமி அவர்கள் தி.மு.க-வின் தீவிர பற்றாளராக இருந்தவர் அவரைத்தொடர்ந்து திரு.A.P.திருநாவுக்கரசு அவர்கள் 2010 ஆம் ஆண்டு தி.மு.க-வில் அடிப்படை உறுப்பினராக இணைந்து பணியாற்றினார். அதன் பின் 2019 ஆம் ஆண்டு ஊராட்சிக்கழக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். அதனைத்தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு கோவை தெற்கு மாவட்ட சட்டப்பாதுகாப்புக்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறார். 

திரு.திருநாவுக்கரசு அவர்கள் அரசியலில் மட்டுமல்லாது சமுதாய பணியிலும் சிறப்பாக பணியாற்றி வருகிறார். ஏழை-எளிய மக்கள் தன்னால் இயன்ற உதவிகளும், முதியோருக்கு அரசிடம் இருந்து உதவிகளை பெற்று கொடுத்துவருகிறார். தமிழக அரசு நடத்தும் TNPSC,RRB போன்ற தேர்வுகளில் அதிக மதிப்பெண்  பெற சமுதாய மாணவர்களுக்கு பயிற்சியாளராக இருந்து கடந்து 5 வருடங்களாக பயிற்சியளித்து வருகிறார். மாவீரன் கட்டபொம்மன் பிறந்தநாள், நினைவுநாட்களில் மதுரையிலுள்ள கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து வருவது வழக்கம். தற்பொழுது ஆறு வருடமாக சமுதாய மக்கள் ஒன்றிணைந்து கோவையிலுள்ள கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துவிட்டு வருகிறார்.

postgallery(215)

கடந்த 2019- டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் வக்கம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திரு.திருநாவுக்கரசு அவர்கள் சொற்ப வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார். வெற்றி தோல்விகளை பொருட்படுத்தாது தொடர்ந்து தீவிர இயக்கப்பணியாற்றி வரும் சமுதாயத்தில் வளர்ந்துவரும் இளம் அரசியல் தலைவர்களில் ஒருவரான திரு.திருநாவுக்கரசு அவர்கள், கட்சியிலும் அதிகாரத்திலும் உரியபதவிகளைப் பெற்று, சார்ந்துள்ள கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.

குறிச்சொற்கள்

இளம் அரசியல் பிரமுகர்கள் தமிழ்நாடு Mr. Thirunavukarasu
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண