வளரும் நட்சத்திரம் - நிலக்கோட்டை - திரு.S.செல்லபாண்டியன்
திரு.S.செல்லபாண்டியன் அவர்கள் 03.05.1983-இல் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள, தோப்புப்பட்டி கிராமத்தில் திரு.சுப்பா நாயக்கர் – திருமதி.சுந்தரம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். மேல்நிலைப்பள்ளி வரை கல்வி பயின்றுள்ள திரு.செல்லப்பாண்டியனுக்கு திருமணமாகி திருமதி.S.கௌரி என்ற மனைவியும், S.நிதின் கார்த்தி, S.திருமாறன் என்று இரண்டு மகன்களும் உள்ளனர்.
திரு.செல்லபாண்டியன் அவர்கள் 2011 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகத்தில் அடிப்படை உறுப்பினராக இணைந்து அரசியல் பயணத்தை தொடங்கினார். இதன் தொடர்ச்சியாக 2017-ஆம் ஆண்டு நிலக்கோட்டை ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வந்தார். சமீபத்தில் நடைபெற்ற உள்கட்சித்தேர்தலில், ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். அரசியலில் தீவிர ஆர்வமுடைய திரு.செல்லப்பாண்டியன், கட்சியின் நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள்,மாநாடுகளில் தவறாமல் கலந்துகொள்வதோடு, ஆர்ப்பாட்டம், மறியல்கள், போராட்டங்களில் கலந்துகொண்டு பலமுறை கைதாகியுள்ளார்.
அரசியல் தவிர சமூக வளர்ச்சியிலும் அக்கறை கொண்டவர், பல்வேறு சமுதாய இயக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதுடன், தேவையான உதவிகளையும் செய்துள்ளார். தமிழ்நாடு இராஜகம்பளத்து நாயக்கர் முன்னேற்ற கழகத்தின் மாநில துணைத் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ள திரு.செல்லப்பாண்டியன் அவர்கள், இந்த அமைப்பின் மூலம் 10,12 வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற சமுதாய மாணவ -மாணவிகளுக்கு ஊக்கதொகை,கல்வி உதவித்தொகை, பரிசு பொருள்ட்களை வழங்கி வருகின்றனர். மேலும், நிலக்கோட்டை சுற்றுவட்டாரத்தில் கம்பளத்தார் சமுதாய மக்கள் வசிக்கும் கிராமங்களில் DNT விழிப்புணர்வையும், சமுதாய மக்களின் ஒற்றுமையும் எடுத்துரைக்கும் வகையில் கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர். தொட்டிய நாயக்கர் சமுதாய மாணவ-மாணவிகள் MBC சான்றிதழ் பெருவதற்கு பெருமளவில் உதவியுள்ளார். இதுதவிர, சென்னையில் மாவீரன் கட்டபொம்மனுக்கு சிலை அமைக்கக்கோரியும், தொட்டிய நாயக்கர் சமுதாய மக்களுக்கு DNT என்ற ஒற்றை சான்றிதழ் வழங்கோரியும் போராட்டங்கள் நடத்தியுள்ளனர். மேலும், ஆண்டுதோறும் மாவீரன் கட்டபொம்மன் பிறந்தநாளன்று நிலக்கோட்டை சுற்றியுள்ள 47-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து 500க்கும் மேற்பட்ட சமுதாய இளைஞர்களை ஒன்று திரட்டி, நிலக்கோட்டையிலிருந்து மதுரை வரை ஊர்வலமாக சென்று, மாவீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு வருகின்றார்.
இதுவரை தேர்தல் அரசியல் எவ்வித பதவிக்கும் போட்டியிடாதவரான திரு.செல்லப்பாண்டியன் அவர்கள், அரசியல் மற்றும் சமுதாயப்பணிகளில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். வரும் காலங்களில் அரசியலில் பல பதவிகளையும், பொறுப்புகளையும் பெற்று, சார்ந்துள்ள கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.