நாளைய நம்பிக்கை நட்சத்திரம் - தாந்தோணி - திரு.S.விஜயன்
திரு.S.விஜயன் அவர்கள் 25.05.1986-இல் கரூர் மாவட்டம் தாந்தோணி கிராமத்தில் திரு.R.சுப்பிரமணியம் - S.சரோஜா தம்பதியினருக்கு விவசாய குடும்பத்தில் மகனாகப்பிறந்தார். இவர் மேல்நிலைப்பள்ளி கல்வி வரை பயின்றுள்ளார். இவருக்கு திருமணமாகி திருமதி.நித்யா என்கிற மனைவியும் V.சிவகுரு, V.சிபிகிருஷ்ணன் என்று இருமகன்கள் உள்ளனர். இவர் கரூரில் ரியல் எஸ்டேட் தொழிலை நடத்திய வருகிறார்.
2003 ஆம் ஆண்டு மதிமுக கட்சியில் அடிப்படை உறுப்பினராக இணைந்த திரு.விஜயன் அவர்கள் 2019-இல் தாந்தோணி நகரச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பு வகித்து வருகிறார். கட்சியின் நிகழ்ச்சிகள், தலைவரின் நடைபயணங்கள், பொதுக்கூட்டங்கள், மாநாடுகளிலும் தவறாமல் கலந்து கொண்டு வருகிறார். தவிர கட்சி நடத்தும் பல்வேறு போராட்டங்கள், மறியல், ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டு கைதாகியுள்ளார்.
திரு.விஜயன் அவர்கள் அரசியல் பணியில் மட்டுமல்லாது சமுதாய பணியிலும் ஆர்வம் கொண்டவர், வருடம் தோறும் மாவீரன் கட்டபொம்மன் பிறந்தநாளன்று சமுதாய மக்களை ஒன்று திரட்டி, உள்ளூரில் உள்ள கட்டபொம்மன் புகைப்படங்களுக்கு அணிவித்து மரியாதை செய்வதோடு சுற்றியுள்ள பதினெட்டு பட்டியிலும் கொடியேற்றியும், அன்னதானம் வழங்கியும் சிறப்பாக கொண்டாடிவருவது வழக்கம். சமுதாயத்தின் சார்பில் விடுதலைக்களம் நடத்து அனைத்து போராட்டம் மற்றும் கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்பவர்.
தேர்தல் களத்தில் இதுவரை எந்த பதவிக்கும் போட்டியிடவில்லை என்றபொழுதிலும், பொதுமக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார். தண்ணீர் தொட்டி, சாலை, தெரு விளக்கு போன்ற வசதிகளை அமைத்துதர நகராட்சி ஆணையரிடம் மனு அளித்து நிறைவேற்ற முயற்சிகளை மேற்கொண்டு நிறைவேற்றியுள்ளார். தவிர பொதுமக்களின் குறைகளையும், தேவைகளையும் அடையாளங்கண்டு, நிர்வாக ரீதியான தீர்வுகளை பெற்றுக்கொடுத்து வருகிறார். அரசியல், சமுதாயம் என தொடர்ந்து சிறப்பாக இயங்கிவரும் திரு.விஜயன் அவர்கள், வரும் காலங்களில் சிறப்பான பதவிகளைப்பெற்று சார்ந்துள்ள கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.