நாளைய நம்பிக்கை நட்சத்திரம் - சிவகிரி - திரு.மாரிச்சாமி
திரு.மாரிச்சாமி அவர்கள் 05.06.1986-ல் தென்காசி மாவட்டம், சிவகிரி அருகேயுள்ள திருமலாபுரம் கிராமத்தில் திரு.பாம்புல் நாயக்கர் – திருமதி.போகம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள M.S பல்கலைகழகத்தில் வரலாற்றுதுறையில் முதுகலை பட்டமும், ஸ்காட் கல்வியியல் கல்லூரியில் B.Ed பட்டமும் பெற்றுள்ளார்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரியில் கலைமகள் டுட்டோரியல் கல்லூரியும், ராயகிரியில் கலைமகள் Paramedical of Nursing கல்லூரியும் நடத்தி வரும் திரு.மாரிச்சாமி, அரசியலில் தீவிர ஈடுபாடு உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திரு.வைகோ அவர்களின் தீவிர ஆதரவாளரான திரு.மாரிச்சாமி, மாணவப் பருவத்திலிருந்தே மதிமுக-வில் அடிப்படை உறுப்பினராகவுள்ளார். இதன்தொடர்ச்சியாக 2000-ல் வாசுதேவநல்லூர் ஒன்றிய பிரதிநிதியாக பணியாற்றியவர், 2002-ல் ஒன்றிய மாணவரணி அமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து 2010-ல் மாவட்ட மாணவரணி துணைச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட திரு.மாரிச்சாமி அவர்கள், 2015 –ல் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட மாணவரணி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். கட்சியின் தீவிர செயல்வீர்ரான திரு.மாரிச்சாமி அவர்கள் திரு.வைகோ அவர்கள் நடத்திய மதுவுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு நடைபெற்ற களோபரத்தில் கைதாகி சிறை சென்றுள்ளார். மேலும் முல்லைப்பெரியாறு, ஸ்டெர்லைட் எதிர்ப்புபோராட்டம், மீத்தேன் திட்ட எதிர்ப்பு, நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம், புதிய கல்விக்கொள்கைக்கெதிரான போராட்டம், பிரதமருக்கெதிரான கருப்புக்கொடி போராட்டம், வேளாண் சட்ட திருத்த மசோதாவிற்கெதிரான போராட்டம் என பல போராட்டங்கள், மறியல், ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டு 10-க்கும் மேற்பட்ட முறை சிறை சென்றுள்ள திரு.மாரிச்சாமி அவர்கள் மீது பல அரசியல் வழக்குகள் நிலுவையில் உள்ளது, அவரின் தீவிர அரசியல் பொதுவாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசியல் தவிர சமுதாய பணியிலும் ஆர்வம் உள்ள திரு.மாரிச்சாமி அவர்கள் மாவீரன் கட்டபொம்மன் நினைவுனாளன்று கயத்தாரிலுள்ள கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதுடன், அதையோட்டி திரு.வைகோ அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு வருபவர். மேலும் மாவீரன் கட்டபொம்மனின் பிறந்தநாளன்று உள்ளூரில் சிறப்பான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து, மனவளர்ச்சி குன்றியோர்களுக்கு அன்னதானமும், மாணவ-மாணவியருக்கு பரிசுகள் வழங்கியும் வருகிறார். மேலும் பாஞ்சையில் ஆண்டு தேறும் நடைபெறும் சித்திரை திருவிழாவிற்கு சமுதாய மக்களை தனது சொந்த செலவில் அழைத்து சென்று வீரசக்கதேவியை தரிசித்து வருபவர் திரு.மாரிச்சாமி அவர்கள்.
ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட மனுதாக்கல் செய்திருந்த நிலையில் தேர்தல் இரத்து செய்யப்பட்ட நிலையில், மீண்டும் புதிய மாவட்டமாக தென்காசி உதயமான நிலையில், உள்ளாட்சித் தேர்தலுக்காக காத்துக்கொண்டிருக்கிறார். சாதி, மத பேதமின்றி உதவிதேடி வரும் அனைவருக்கும் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்துவரும் திரு.மாரிச்சாமி அவர்கள், கொரோனா பொதுமுடக்கத்தின் காரணமாக வாழ்வாதரங்களை இழந்துவாடிய துப்புரவு பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள், ஏழை-எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட பொருள்களை நிவாரணமாக வழங்கியுள்ளார். வளர்ந்துவரும் இளம் அரசியல் தலைவரான திரு.மாரிச்சாமி, அவர்கள் வரும் காலங்களில் பல பதவிகளையும், பொறுப்புகளையும் பெற்று சார்ந்துள்ள கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.