நாளைய நம்பிக்கை நட்சத்திரம் - ஆண்டிபட்டி - திரு.S.இரத்தினவேல்பாண்டியன்
திரு.S.இரத்தின வேல்பாண்டியன் அவர்கள் 26.09.1982-இல் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள கரிசல்பட்டி கிராமத்தில் திரு.சுருளிமுத்து – ஜக்கம்மாள் தம்பதியினருக்கு விவசாயகுடும்பத்தில் பத்துபிள்ளைகளில் மூத்த மகனாகப் பிறந்தார். இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளி படிப்பை உயர்நிலைக் கல்வியெடு நிறுத்திக்கொண்டார். இவருக்கு திருமணமாகி திருமதி.R.தாமரை செல்வி என்ற மனைவியும் R.நிவேதா நல்லி என்ற மகளும் R.ரோகித் என்ற மகனும் உள்ளனர். ஆண்டிப்பட்டியில் நிவேதா என்ற பெயரில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார்.
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தீவிர இரசிகரான திரு.இரத்தினவேல்பாண்டியன், கேப்டன் அவரிகளின் நற்பணியின் பாலும், பொதுநல சேவையாலும் ஈர்க்கப்பட்டு, பொதுவாழ்வில் ஆர்வம் உண்டாயிற்று. அதனையொட்டி 2004-ல் கஜேந்திரா என்ற பெயரில் மாபொரும் நற்பணிமன்றத்தை உருவாக்கி, பொதுநலசேவைகளில் ஈடுபடத்தொடங்கினார். இதன்தொடர்ச்சியாக கேப்டன் அவர்கள் 2005-ல் தே.மு.தி.க கட்சி தொடங்கியபொழுது அடிப்டை உறுப்பினராக இணைந்து துடிப்புடன் கழகப்பணி ஆற்றினார். 2006-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலை முதல்முறையாக எதிர்கொண்ட தேமுதிக-விற்கு அதன் ஆண்டிப்பட்டி சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட்ட தேனி மாவட்ட செயலாளர் திரு.M.N.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு தீவிரமாக களப்பணியாற்றியதன் விளைவாக, திரு.M.N.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பரிந்துரைப்படி, கேப்டன் மற்றும் அண்ணியார் அவர்களின் ஆசியுடன் தேனி மாவட்ட கேப்டன்மன்ற செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்.
அரசியல் பணியில்மட்டுமல்லாது சமுதாய பணியிலும் ஆர்வமுடையவரான திரு.இரத்தினவேல் பாண்டியன், தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தின் ஆண்டிபட்டி ஒன்றிய துணைச்செயலாளராகவும் பெறுப்பு வகித்து வருகிறார். ஆண்டு தேறும் மாவீரன் கட்டபொம்மன் பிறந்தநாளன்று கரிசல்பட்டி கிராமத்திலுள்ள கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து படுவிமர்சையாக கொண்டாடுவது வழக்கம். பொதுபோக்குவரத்திற்கு இடையூராகவும், நீராதாரமாகவும் உள்ள கரிசல்பட்டி சக்கம்மாள் கோவில் குளத்தை சுற்றி வளர்ந்திருந்த சீமைகருவேல மரங்களை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு வெற்றிகண்டார்.
கடந்த 2019- டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் S.S.புரம் பஞ்சாயத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு தே.மு.தி.க சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தபோதிலும், தொடர்ந்து அரசியல் களத்தில் சுறுசுறுப்புடன் பணியாற்றி வரும் திரு.இரத்தினவேல் பாண்டியன், வரும்காலங்களிலும் தனது மென்மேலும் பல பதவிகளைப்பெற்று சமுதாயத்திற்கு பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.