🔴 LIVE | முப்பெரும் விழா 2023


காயமே இது பொய்யடா - வெறும் காற்றடைத்த பையடா... சாதிக்க வந்தவன் சவமாய் போகிறான்..

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், ரெங்கையன்பட்டி கிராமத்தைச்சேர்ந்த தவமணி அவர்களின் மகன் விஜயமுருகன் (22) சென்னை மேடவாக்கத்திலுள்ள கோல்டன்டெக்ஸ் என்ற துணிக்கடையில் சேல்ஸ்மேனாக கடந்த சில வருடங்களாக பணியாற்றி வந்தார். நேற்று இரவு 10.30மணியளவில் பணிமுடிந்து மேடவாக்கம் கூட் ரோடு அருகில் நண்பர்களுடன் நடைபாதையில் நடந்துசென்றுகொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராதவிதமாக குடிபோதையில் சாப்ட்வேர் இஞ்சினியர் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் (புல்லட்) மோதியதில் விஜயமுருகன் படுகாயமடைந்தார். அவருடன் சென்ற இரு நண்பர்களுக்கும் தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே விஜயமுருகன் உயிர் பிரிந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலந்தூர் போலீசார் வாகனம் ஓட்டி வந்த நபரை கைது செய்து, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் சென்னையைச் சேர்ந்தவர் என்பதும், தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும், கொரோனா பெருந்தொற்றால் கடந்த ஒன்றை வருடங்களாக வீட்டிலிருந்தே வேலை பார்த்து வந்தததும், நேற்று தான் மீண்டும் நேரடியாக அலுவல பணியில் இணைந்திருப்பதும், "ஓபன்டே"வை நண்பர்களுடன் மதுவிருந்துடன் கொண்டாடிவிட்டு வீடு திரும்பும் வழியில் விபத்து நடந்ததுள்ளது தெரியவந்தது.

இன்று காலை தகவல் தெரிந்தவுடன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு விரைந்த விடுதலைக்களம் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் சிங்கராஜ் இராஜகம்பளம், பிரேத பரிசோதனைக்கான ஏற்பாடுகளை செய்தார். இதற்கிடையே விருதுநகரிலிருந்து தென்றல் டிவி கணேசமூர்த்தி, அருப்புக்கோட்டை சந்திரசேகர் ஆகியோர் சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் சமுதாய நலச்சங்கத்திற்கு தகவல் தெரிவித்ததையடுத்து , சமூகநீதிப்போராளி முகப்பேர்.ராஜா, சரவணா ஸ்டோர்ஸ் செண்பகராஜ் ஆகியோர் விருதுநகரிலிருந்து வந்திருந்த விஜயமுருகன் உறவினர்களை அழைத்துக்கொண்டு காவல்நிலையம் சென்று வழக்குப்பதிவு செய்து ஆவணங்களை பெற்றுத்தந்தனர்.

தவிர,தகவல் அறிந்து காவல்நிலையத்திற்கு வந்த பாஞ்சை போர்முழக்கம் பெ.செந்தில்குமார் மற்றும் சென்னை, சில்லவார் மகாசனசங்கத்தின் தங்கவேல்சாமி பெருமாள் ஆகியோர் உறவினர்களுக்கு ஆறுதல்கூறிச்சென்றனர். பிரேதபரிசோதனை முடிந்து நடைபெற்ற நிகழ்வில் விஜயமுருகன் உடலுக்கு தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பேரவையின் நிறுவன தலைவர் பி.வி.இராதாகிருஷ்ணன், வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில்குமார் ராமராஜ் ஆகியோர் கலந்துகொண்டு மலர்மாலை அணிவித்து  மறியாதை செலுத்தினர்.

அதனைத்தொடர்ந்து மாலை 4 மணியளவில் விஜயமுருகன் உடல் அவரது சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. விஜயமுருகன் பணியாற்றிவந்த கடை உரிமையாளரான முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர் எல்லா ஏற்பாடுகளையும் முன்னின்று செய்ததோடு, ஆம்புலன்ஸ்,இறுதிச்சடங்கிற்கான செலவுகளை ஏற்றுக்கொண்டு தன் சார்பில் இரண்டுபேரை  அதே ஆம்புலன்சில் அனுப்பி வைத்தார்.

கூலித்தொழிலாளியின் குடும்பத்தில் பிறந்த விஜயமுருகனுக்கு இரண்டு மூத்த சகோதரிகளில், ஒருவர் கடந்தசில மாதங்களுக்கு முன் விருதுநகரில் நடந்த விபத்தொன்றில் பலியானார். மற்றொரு சகோதரி இருதநோயால் கஷ்டப்பட்டு வருபவர். மேலும் இவரின் தந்தையும் ஒருசில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார் என்று தெரியவருகிறது. நோய்வாய்ப்பட்ட சகோதரிக்கும், வயதான தாய்க்கும் ஒரே ஆதரவாக இருந்த விஜயமுருகனின் அகால மரணம் அவர்களை நடைபிணங்களாக்கியிருப்பது கொடுமையானது. அக்குடும்பத்திற்கு ஒரே ஆதரவு விஜயமுருகன் பணியாற்றிவந்த நிறுவன முதலாளி மட்டும் தான். அவரும் அதை உணர்ந்துள்ளதும்,உடன் இருந்து அனைத்து ஏற்பாடுகளையும் பார்த்துக்கொண்டதும், என் குடும்பத்தில் ஒருவன் என்று சொன்னது மட்டுமே ஆறுதலைத் தருகிறது. மதங்கள் கடந்து மனிதம் வாழட்டும். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved