🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மக்கள் நலப்பணியில் மகாலிங்கம்! - ஒரேநாளில் 40 கம்பளத்தாருக்கு நலத்திட்ட உதவி!

கடந்த 22,23-ஆம் தேதிகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்பொழுது தமிழக அரசின் சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள 128 பணிகளை தொடங்கி வைத்தும், புதிதாக 67 பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. தமிழக முதல்வரின் கோவை வருகையையொட்டி மாவட்டமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

முதல்வர் நிகழ்ச்சியின் ஒருபகுதியாக இளம் விதவைகள் மற்றும் முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது. இதில் ஈச்சனாரி பகுதியைச்சேர்ந்த 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை பெற்றுத்தருவதற்காக கோவை மாநகராட்சியின் 100-வட்டச்செயலாளர் ஈச்சனாரி.மகாலிங்கம் தீவிர முயற்சி எடுத்து வந்தார். இதன் பலனாக முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே ஷோபனா ராஜன், சின்னக்கண்ணு, விஜயா, நாகம்மாள், சாவித்திரி, லட்சுமி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு விதவை மற்றும் முதியோர் ஓய்வூதியத்தை பெற்றுக்கொடுத்தார். மீதமுள்ள 25-க்கும் மேற்பட்டோருக்கு இன்னும் ஒரிரு வாரங்களில் நலத்திட்ட உதவிகள் வந்து சேரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதனால் கம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த தகுதியுள்ள அனைவருக்கும் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்றுக்கொடுத்துள்ளார் ஈச்சனாரி.மகாலிங்கம் அவர்கள். அவர் மக்கள் பணி தொடர வாழ்த்துவோம்.

தகவல் உதவி: ஈச்சனாரி கார்திக்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved