🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அரவக்குறிச்சி பேரூராட்சித் தலைவராக ஜெயந்தி மணிகண்டன்!

தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் கடந்த 2-ஆம் தேதி பதவிப்பிரமானமும், இரகசியக்காப்பு பிரமாணமும் எடுத்துக்கொண்டனர். இதனையடுத்து இன்று மேயர், துணைமேயர், நகரமன்ற தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. இதில் வெற்றிபெற்றவர்கள் இன்றே பொறுப்பேற்றுக்கொள்கின்றனர்.

இதில் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவராக திருமதி.ஜெயந்தி மணிகண்டன் தேர்வாகிறார்.  இவர் அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய திமுக செயலலாளர் திரு. மணிகண்டன் அவர்களின் துணைவியார் ஆவார். ஆளும்கட்சியான திமுக சார்பில் அரவக்குறிச்சி பேரூராட்சியின் 07-வது வார்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெயந்தியை பேரூராட்சி தலைவர் வேட்பாளராக அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்பேரூராட்சியில் திமுக பெரும்பான்மை பெற்றுள்ளதால் திருமதி.ஜெயந்தி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார். 

பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருமதி.ஜெயந்தி மணிகண்டன் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதோடு, அவரை இப்பதவிக்கு வாய்ப்பு வழங்கிய திமுக தலைவர், தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின், பரிந்துரை செய்த அமைச்சர் மாண்புமிகு அமைச்சர் செந்தில்பாலாஜி, சட்டமன்ற, நாடாளுமன்ற, மாவட்ட, ஒன்றியக்கழக நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved