🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஆளும் கட்சியில் ஓன்றியச் செயலாளர் பதவியை மீண்டும் கைப்பற்றினார்!

ஆளும்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தில் 15-வது பொதுத்தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த 2021-சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே கிளைக்கழக மட்டத்திலான தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு, பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதற்கடுத்து சட்டமன்றத் தேர்தலும், தேர்தலில் கழகம் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தபின் கொரோனோ நிவாரணப்பணிகளிலும் தீவிரம் காட்டி வந்த நிலையில், பிற அமைப்புகளுக்கான தேர்தல் தள்ளிப்போகின.

இதனையடுத்து மீதமுள்ள மாநகர, நகர,ஒன்றிய, பேரூர் கழங்களுக்கான தேர்தல் நடத்தப்படுமென கடந்த ஏப்ரல் மாதம் தலைமைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டது. இதன் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் தேர்தலில், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புதூர் கிழக்கு ஒன்றியச் செயலாளராக கம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த M.செல்வராஜ் அவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்தபின் நடைபெறும் உட்கட்சித் தேர்தல் என்பதால், கட்சிப் பதிவிகளை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவிவருகிறது. இப்போட்டி புதூர் ஒன்றியத்திலும் எதிரொலித்தாலும், M.செல்வராஜ் அவர்கள் கட்சியின் நீண்டகால விசுவாசி என்பதோடு, கீழ்மட்டத்திலிருந்து பலபொறுப்புகளில் திறம்பட செயலாற்றியவர். மேலும் ,கழகம் கடந்த பத்தாண்டுகளாக எதிக்கட்சியாக இருந்தபொழுது புதூர் கிழக்கு ஒன்றியக் கழக  செயலாளராக இருந்து, கட்சியிடும் கட்டளைகளை திறம்பட நிறைவேற்றி மாவட்டக் கழக செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் அவர்களின் அன்பைப்பெற்றவர். மேலும், கட்சியின் மாநில மகளிரணிச் செயலாளர் கனிமொழி கருணாநிதி அவர்கள் 2019 தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பொழுதும், 2021-சட்டமன்றத் தேர்தலில் விளாத்திக்குளம் தொகுதியில் மார்க்கண்டேயன் போட்டியிட்டபொழுதும், தீவிரமாகப் பணியாற்றி அதிக வாக்குகளை புதூர் ஒன்றியத்தில் பெற்றுக்கொடுத்ததின் மூலம் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றவர் செல்வராஜ்.


இதுதவிர, கம்பளத்தாருக்கே உண்டான எளிமை, நேர்மை, விசுவாசத்தோடு கட்சிக்காக உயிரைக்கொடுத்து உழைப்பவர் செல்வராஜ் என்பது கட்சித் தலைமை முதல் அடிமட்டத்தொண்டர் வரை அறியப்பட்டவர். ஆளும்கட்சி என்ற கோதாவின்றி எளிய மக்களோடு என்றும் இருப்பவர். செல்வராஜ் அவர்களின் இந்த அடிப்படை குணங்களால், எத்தனையோ பேர் தங்கள் பணபலம், சமூக பலத்தால் ஒன்றியச் செயலாளர் பதவியை கைப்பற்ற முனைந்தபொழுதும், அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரின் ஏகோபித்த ஆதரவோடு, போட்டியின்றி ஏகமனுதாக செல்வராஜ் அவர்கள் ஒன்றிய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் 20-க்கு மேற்பட்ட மாவட்டங்களில் 40 லட்சத்திற்கும் அதிமான கம்பளத்தார் சமுதாய மக்கள் இருந்தபோதிலும், உரிய அரசியல் அங்கீகாரம் பெறமுடியவில்லை என்பது கம்பளத்தாரின் நீண்டநாள் ஏக்கம். திராவிட முன்னேற்றக் கழகத்தில் கம்பளத்தார்கள் மிக அதிகமாக இருந்தபொழுதும் ஒன்றியச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளில் ஒருசிலரே இருப்பது ஏமாற்றமளிப்பதாக இருந்தது. இத்தகைய சூழலில் கட்சியின் உண்மைத்தொண்டர் ஒருவருக்கு மீண்டும் ஒன்றியச் செயலாளர் பதவி வழங்கி அங்கீகரித்துள்ள மாவட்டச் செயலாளரும், மாநில சமூகநலத்துறை அமைச்சருமான கீதாஜீவன் அவர்களுக்கும், விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அவர்களுக்கும் கம்பளத்தாரின் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஒன்றியச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து செல்வராஜ் அவர்கள், மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன், சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோரை சந்தித்து வாழ்த்துப்பெற்றார். ஒன்றியச்செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள செல்வராஜ் அவர்களுக்கு, சென்னை,வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், அறக்கட்டளைத் தலைவர் மு.பழனிச்சாமி, விடுதலைக்களம் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

திரு.செல்வராஜ்  (மேலும் படிக்க நீலநிறத்தை அமுக்கவும்) அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க தொடர்புகொள்ள வேண்டிய கைப்பேசி எண்: 8428514347/9442445263


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved