🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மாவட்ட துணைத்தலைவராக K.குணசேகர் நியமனம்! பணி சிறக்க வாழ்த்துகள்

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்மாநில தலைவராக அண்ணாமலை ஐ.பி.ஏஸ் பொறுப்பேற்றுக்கொண்டபின், புதிய நிர்வாகிகள் நியமனம் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அக்கட்சி அமைப்பிலுள்ள 30-க்கும் மேற்பட்ட அணிகளுக்கான நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். பாஜக மற்ற மாநிலங்களில் செய்ததுபோல் "சோசியல் எஞ்சினியரிங்" என்ற யுக்தியை பயன்படுத்தி அனைத்து சமுதாய மக்களையும்  அரசியல் மையப்படுத்தி வருகிறது. இதனால் தமிழகம் இதுவரை கண்டிராத வகையில் அனைத்து சாதிய அமைப்புகளையும் அக்கட்சி தொடர்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளது.

சமூகநீதி பேசும் திராவிடக்கட்சிகளின் அரசியல் மேற்கே கொங்கு வெள்ளாளக்கவுண்டர்-அருந்ததியர், வடக்கே வன்னியர்-பறையர்-முதலியார், தெற்கே நாடார்-முக்குலத்தோர்-தேவேந்திரகுல வேளாளர் என்ற அளவில் பெரும்பான்மை சாதிகளை மையப்படுத்தி வந்த அரசியல் போக்கு மாறி அனைவருக்குமான அரசியல் வாய்ப்புகளை திறந்துவிட்டுள்ளது பாஜக.  வாக்கு அரசியலில் பெரும்பான்மைக்கு முக்கியத்துவம் இருந்தாலும், எண்ணிக்கை பலமற்ற மற்ற சாதிகளின் வாக்குகளை இலவசமாக அறுவடை செய்து வந்தன. திமுக ஆட்சி பொறுப்பேற்றுக்கொண்டதற்குப் பிறகு பேராசிரியர்.சுப.வீரபாண்டியன் தலைமையில் சமூகநீதி கண்காணிப்புக்குழு அமைத்து அரசுப்பணிகளில் அனைத்து சமூகங்களுக்குமான வாய்ப்புகளை கண்காணிக்கும் என்று அறிவித்திருந்தாலும், இதுவரை அக்குழு என்ன செய்துள்ளது என்பது மில்லியன் டாலர் கேள்வி. திமுக பொறுப்பேற்றுக்கொண்ட பின் இதுவரை அமைத்துள்ள பல குழுக்கள், நியமனப்பதவிகள், வாரியப்பதவிகள் எதுவிலும் இலவசமாக வாக்குகளை வழங்கிக்கொண்டிருக்கும் சமூகங்களைச் சேர்ந்த கட்சியினருக்கு எந்த வாய்ப்பையும் வழங்கவில்லை. தேர்தலுக்கு முன் வாக்குகளை அறுவடை செய்ய தேர்தல் வியூக நிபுணர் "பிரசாந் கிஷோர்" ஐபேக் நிறுவனம் மூலம் சமூகங்களை ஆய்ந்து, கட்சியில் துணை அமைப்புகளை ஏற்படுத்தி அதில் ஆங்காங்கே வாக்கு வலிமையுள்ள சமுகங்களை திருப்தி படுத்திய திமுக, ஆட்சி நிர்வாகத்தில் நடைபெறும் நியமனப்பதவிகளில் தேர்தலில் போட்டியிடும் வசதி வாய்ப்பற்ற பெரும்பான்மை பலமில்லாத சமுதாங்களுக்கு வாய்ப்புகளை வழங்கவில்லை என்பது அனைவருக்குமான அரசாக தமது அரசு இருக்கும் என்ற தமிழக முதல்வரின் வாக்குறுதிக்கு வலு சேர்ப்பதாக இல்லை.

மாறாக பாஜகவில் அனைவரையும் ஒன்று திரட்டும் பணியில் முதற்கட்ட வெற்றியை பெற்றுள்ளனர். தேர்தல் காலங்களில் யாருக்கு எந்தவிதமான வாய்ப்புகளை வழங்கவுள்ளனர் என்பது கேள்விக்குறியதாக இருந்தாலும், இதுவரை பெரும்பான்மை அரசியலில் நம்பிக்கையற்ற சமூகங்களுக்கு ஏற்படும் அரசியல் விழிப்புணர்வு, விகிதாச்சார பிரதிநிதித்துவ அரசியலை முன்னெடுக்க தொடக்கப்புள்ளியாக இருக்கும் என்பது உறுதி.

அந்தவகையில் தமிழகத்தில் இராஜகம்பளத்தார் குடியிருக்கும் கிராமங்கள் தோறும் அரசியல் கட்சிகளின் கிளை பரப்பி ஆண்டாண்டு காலமாக அரசியலில் ஈடுபட்டு வந்தாலும், பெரிய வாய்ப்புகளையோ, பதவிகளையோ பெற்றிடாதவர்களுக்கு பாஜக மாநில, மாவட்ட அளவிலான பதவிகளை வழங்குவது பாராட்டுக்குறியது. அந்தவகையில் இராஜகம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த பொள்ளாச்சி குள்ளக்காபாளையம் K.குணசேகர்கோவை மாவட்டம் பாஜக ஓபிசி பிரிவின் மாவட்ட துணைத்தலைவராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

குணசேகர் அவர்களை இந்த பொறுப்பிற்கு பரிந்துரை செய்த மாவட்டத் தலைவர் அவர்களுக்கும், மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மாநில அமைப்புச்செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved