🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வளரும் நட்சத்திரம் - பொள்ளாச்சி - திரு.S.K.குணசேகர்

திரு.S.K.குணசேகரன் அவர்கள் 31.10.1987-இல் கோவை மாவட்டம், பொள்ளாச்சி  அருகேயுள்ள குள்ளக்காபாளையம் கிராமத்தில் திரு.K.S.கந்தசாமி  – திருமதி.பத்மினி தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகனாகப்பிறந்தார். இளங்கலை (BBA) பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு திருமணமாகி திருமதி.செல்வி என்ற மனைவியும் S.G.சம்யுத்தா, S.G.மித்ரா என்ற இரு மகள்களும் உள்ளனர்.


2007 ஆம் ஆண்டு பா.ஜ.க வில்  அடிப்படை உறுப்பினராக இணைந்து பணியாற்றத் தொடங்கிய திரு.குணசேகரன் அவர்கள், கட்சியின் பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள், மாநாடுகள் போன்றவற்றில் ஆர்வமுடன் கலந்து கொண்டு பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்துள்ளார். இவரின் அதீத கட்சி பற்று காரணமாக 2017 ஆம் ஆண்டு பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய இளைஞரணித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சிறப்பாக பணியாற்றிவருகிறார். அதனை தொடர்ந்து சக்திகேந்தர் என்ற அமைப்பில்  பொருளாளராக பொறுப்பு வகித்துவருகிறார். இப்பொறுப்பின் மூலம் அரசிடம் மக்கள் நலத்திட்டங்களான எரிவாயு மானியம், பசுமை வீடு, கழிப்பறை, ஊக்கத்தொகை ஏழை-எளிய மக்களுக்கு பெற்றுத்தந்து சிறப்பாக பணியாற்றிவருகிறார். 


இளம் அரசியல்வாதியான திரு.குணசேகரன் அவர்கள் அரசியலில் மட்டுமில்லாது சமுதாயப்பணியிலும் ஆர்வமுடன் பங்கேற்று வருகிறார். ஆண்டு தோறும் ஜனவரி-3, மாவீரன் கட்டபொம்மன் பிறந்தநாள் அன்று, சமுதாய இளைஞர்களை ஒன்று தீரட்டி, கோவை மாவட்டம், ஈச்சனாரியிலுள்ள கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துவதுடன், சமுதாய பிரமுகர்களின் கலந்தாய்வுக்கும் ஏற்பாடு செய்து, மாவீரனின் புகழ்பரப்பி வருகிறார். தேசிய அரசியல் பாதையை தேர்ந்தெடுத்திருக்கும் திரு.குணசேகரண் அவர்கள், கம்பளத்தாரின் புகழை அகில இந்திய அள்வில் கொண்டு சென்று புகழ் பரப்புவதுடன், சமுதாய மக்களை அனைத்து அதிகார பீடங்களிலும் அமர்த்த அயாராது உழைக்க வேண்டும் என்று அன்புடன் வேண்டி, அரசியலில் மேன்மேலும் உயர்ந்து பலபொறுப்புகளைப்பெற்று உயர்ந்திட வாழ்த்துகிறோம்.  

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved