🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இளம்வயதினரின் கனவு தேசமான கனடா வில் உயரும் குடியுரிமைக்கட்டணம்!

மென்பொருள்துறையின் வளர்ச்சிக்குப்பின் வேலைவாய்ப்பிற்காக இந்திய இளைஞர்கள் அதிகம் விரும்பும் நாடு அமெரிக்கா. அதற்கு அடுத்த இடத்தில் இளைஞர்கள் படிப்பு மற்றும் கல்விக்காக அதிக விரும்பும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவோடு எல்லையை பகிர்ந்துகொள்ளும் கனடா உள்ளது. தற்போது அந்நாட்டு அரசு நிரந்தரக்குடியிருப்புக்கான கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.   

இதன்படி, 2024-ஏப்ரல்'30 ஆம் தேதி முதல் கனடாவில் குறிப்பிடத்தக்க நிரந்தர குடியிருப்புக்களுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு (IRCC) தெரிவித்துள்ளது.

அத்தோடு, இந்த கட்டணங்கள் கனடாவின் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் பாதுகாப்பு விதிமுறைகளின் படி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கோரி விண்ணப்பிப்பவர் மற்றும் அவரது கணவன் அல்லது மனைவிக்கான கட்டணம் 515 கனேடிய டாலர்களிலிருந்து (ஓரு கனேடிய டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு 61.00 ) 575 டாலர்களாக அதிகரிக்கப்படவுள்ளது.

கட்டண அதிகரிப்பு:

அதேவேளை, பெடரல் திறன்மிகுப் பணியாளர்கள், மாகாண நாமினி திட்டம், கியூபெக் திறன்மிகுப் பணியாளர் திட்டம், அட்லாண்டிக் புலம்பெயர்தல் வகுப்பு முதலான திட்டங்களுக்கு விண்ணப்பிப்பவருக்கான கட்டணம் 850 டாலர்களிலிருந்து 950 டொலர்களாக உயர்த்தப்படவுள்ளது.

அத்துடன், அவர்களில் விண்ணப்பிப்பவரின் கணவன் அல்லது மனைவிக்கான கட்டணம் 850 டாலர்களிலிருந்து 950 டாலர்களாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.

மேலும், குறித்த பிரிவினரின் பிள்ளைகளுக்கான கட்டணமும் 230 டாலர்களிலிருந்து 260 டாலர்களாக உயர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

கனடா குடியுரிமைக்கான தேர்வில் கடந்த ஆண்டு மட்டும் 119053 பேர் தேர்வாகியிருந்தனர். இது தேர்வு எழுதியவர்களில் 92 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. கனடா நாள் நிகழ்வுகளின் போது சுமார் 1130 பேர் கனேடிய பிரஜைகளாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved