🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இராஜகம்பள உறவுகளுக்கு யுகாதி திருநாள் வாழ்த்துகள்!

யுகாதி பண்டிகையானது தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கொங்கன் ஆகிய மாநிலங்களில் உள்ள மக்களிடையே பக்தியையும் உற்சாகத்தையும் காட்டும் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் யுகாதி இவர்களின் வருடப்பிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

உகாதி என்பது யுகாதி என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்து உருவானது ஆகும். “யுக்” என்றால் வயது என்றும் “ஆதி” என்றால் ஆரம்பம் என்று பொருளை தருகிறது. அதாவது யுகாதி என்ற சமஸ்கிருத சொல்லுக்கு புதிய ஆண்டின் துவக்கம் என்பது பொருள் ஆகும். 

யுகாதி பண்டிகை வரலாறு:

இந்து புராணப்படி பிரம்ம தேவன் இந்த யுகாதி நாளில் தான் இவ்வுலகை படைக்கும்  வேலையை தொடங்கினார் என்று பிரம்ம புராணத்தில் சொல்லப்படுகிறது. யுகாதி பண்டிகையை தென்னிந்தியா முழுவதும் மிகச் சிறப்பாக கொண்டாடுவார்கள். யுகா என்றால் யுகம் அல்லது வயது அல்லது ஆண்டு என்றும், ஆதி என்றால் துவக்கம் என்றும் பொருள். புதிய வாழ்க்கை அல்லது யுகத்தை புதிதாக துவங்குவதற்கான நாள் என்பது இதன் பொருள் ஆகும்.

சித்திரை மாதத்தின் முதல் நாளில் பிரம்மா இந்த உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணத்தில் கூறப்படுகிறது. இன்றைய சுபநாளில் புதிய முயற்சிகளை மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். அதனால் தான் யுகாதி பண்டிகை மிகவும் விமர்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் சைத்ர மாதத்தின் முதல் வசந்த காலத்தின் பிறப்பைக் குறிப்பதால், இந்நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இருக்கிறது.

யுகாதி பண்டிகையின் சிறப்பு:

யுகாதி பண்டிகை பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதியில்  கொண்டாடப்படும். அன்று அமாவாசை ஒரு நாழிகை இருந்தால் கூட மறுநாள் தான் யுகாதி கொண்டாட வேண்டும் என்பது விதி.

பூரண பிரதமை திதி தினமே யுகாதி திருநாள் என்று சொல்லப்படுகிறது.

மனித வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறிவரும் என்பதையும் அதைப் பொறுமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த யுகாதி பண்டிகை உணர்த்துகிறது.

யுகாதி பண்டிகையின் போது அனைவரும் விடியற்காலையிலே நீராடி விடுவார்கள். அதன் பிறகு வீட்டிற்கு முன்பு மாவிலை தோரணம் கட்டி வண்ண கோலமிட்டு அலங்கரிப்பார்கள்.

உகாதி அன்று பல்வேறு இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், தெலுங்கு சாகித்ய நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்குதல் ஆகியவை உகாதி நாளன்று நடைபெறும்.

பண்டிகை கொண்டாடும் முறை:

இந்த பண்டிகைக்கும், தமிழ் வருடப்பிறப்பிற்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. காலையில் எழுந்து நீராடி தெய்வத்தை நினைத்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

விநாயகர், பெருமாள், கௌரி அம்பிகை மற்றும் இஷ்ட தெய்வம், குலதெய்வங்களை முன்வைத்து போளி, புளியோதரை, பால் பாயசம் செய்து ஏழு ராகங்கள் பாடி தெய்வங்களுக்குப் படையல் செய்து, ஆரத்தி செய்வது வழக்கம். செய்த படையலை ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்குதல் வேண்டும். இதுபோல யுகாதி பண்டிகை அன்று செய்து வந்தால் நற்பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved