🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தங்கத்தோடு போட்டிபோட்டு உயரும் பிளாட்டினம்!

தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் வேளையில் மக்களின் கவனம் பிளாட்டினம் பக்கம் திரும்பத் துவங்கியுள்ளது, கடந்த 2 மாதத்தில் இது தெளிவாகத் தெரிகிறது. அதிலும் இன்றைய விலை உயர்வு பலருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது, குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு இந்த விலை உயர்வு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு காலத்தில் தங்கம் விலையும், வெள்ளி விலையும் ஒன்றாக இருந்தது. இதேபோல் தங்கத்தைப் போலவே வெள்ளிக்கும் சிறப்பான ரீசேல் வேல்யூ இருப்பதாகக் கூறினாலும் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாகவில்லை என்றாலும் சிறிய அளவிலான வர்த்தகம் பிளாட்டினம் வைத்துக்கொண்டு இருந்தது.

இந்த நிலையில் தங்கம் வலை ஒரு பவுன் 50000 ரூபாயைத்தாண்டியுள்ள நிலையில் பிளாட்டினம் விலை வெறும் 20000 ரூபாயாக இருந்ததால் இளம் தலைமுறையினரின் கவனம் பிளாட்டினத்தை நோக்கித்திரும்பியது. இதனால் மார்ச் மாதத்தில் மட்டும் பிளாட்டினம் விலை 4 சதவீதம் உயர்ந்தது, ஏப்ரல் மாதம் 2442 ரூபாயில் இருந்து 2606 ரூபாயாக உயர்ந்துள்ளது.

நேற்று (09.04.2024) ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் 10 கிராம் பிளாட்டினம் விலை 1200 ரூபாய் உயர்ந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவின் முக்கிய நகரங்களில் நேற்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,060 ரூபாய், மும்பை - 26,060 ரூபாய், டெல்லி - 26,060 ரூபாய், கொல்கத்தா - 26,060 ரூபாய், பெங்களூர் - 26,060 ரூபாய், ஹைதராபாத் - 26,060 ரூபாய், கேரளா - 26,060 ரூபாய், அகமதாபாத் - 26,060 ரூபாய், ஜெய்ப்பூர் - 26,060 ரூபாய், லக்னோ - 26,060 ரூபாய், கோயம்புத்தூர் - 26,060 ரூபாய், மதுரை - 26,060 ரூபாயாக உள்ளது.

பிளாட்டினம் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது மிகவும் விலை உயர்ந்த நகைகள் தான். ஆனால், பிளாட்டினம் உற்பத்தி மற்றும் அதன் பயன்பாடு பற்றி ஆழமாகத் தெரிந்து கொள்வது அவசியம். பிளாட்டினம் உலகளவில் எவ்வளவு உற்பத்தி செய்யப்படுகிறது? அதில் எவ்வளவு சதவீதம் நகைத் துறையில் பயன்படுத்தப்படுகிறது என்பதை விரிவாகப் பார்ப்போம்.

தென்னாப்பிரிக்கா தான் உலகிலேயே மிகப்பெரிய பிளாட்டினம் உற்பத்தியாளராக உள்ளது. உலக பிளாட்டினம் உற்பத்தியில் சுமார் 70% தென்னாப்பிரிக்காவிலிருந்தே கிடைக்கிறது. ரஷ்யா உலகின் இரண்டாவது பெரிய பிளாட்டினம் உற்பத்தியாளராக உள்ளது, மொத்த உற்பத்தியில் சுமார் 12% பங்களிப்பு செய்கிறது. இதைத் தொடர்ந்து ஜிம்பாப்வே மற்றும் கனடா ஆகிய நாடுகளும் குறைந்த அளவிலான பிளாட்டினத்தை உற்பத்தி செய்கின்றன.

உலகளவில் மொத்த பிளாட்டினம் உற்பத்தியில் சுமார் 30% முதல் 40% வரை நகைத் துறையில் பயன்படுத்தப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில், சீனாவில் நகைகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், நகைத் துறையில் பிளாட்டினம் பயன்பாடு அதிகரித்து வருகிறது. மேற்கத்திய நாடுகளில், பிளாட்டினம் திருமண மோதிரங்கள் மற்றும் பிற நுணுக்கமான நகைகளில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பிளாட்டினம் நகைகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்ற கருத்து பலரிடம் நிலவி வருகிறது. உண்மையில், பிளாட்டினம் பல்வேறு தொழில்துறைகளில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பிளாட்டினத்தின் உருகும் வெப்பநிலை மிகவும் அதிகம். இதன் காரணமாக, உயர் வெப்பநிலையில் இயங்கும் இயந்திரங்களில் இது பயன்படுத்தப்படுகிறது. கார் எரிபொருட்களில் உள்ள கார்பன் மோனாக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகளை குறைக்கப் பிளாட்டினம் கேட்டலிட்டிக் கன்வெர்ட்டர்களில் (Catalytic Converters) பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் காற்று மாசு குறைக்கப்படுகிறது.

மருத்துவத் துறை, கெமிக்கல், பல் மருத்துவம், கண்ணாடி தொழில், மின்சார தொழில், ஆட்டோமொபைல் எனப் பல துறையில் பிளாட்டினம் உலோகம் முக்கிய இணை, வேதி பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

இதனிடையே பிளாட்டினத்திற்கு எதிராக சமூக அரவலர் ஒருவர் பதிவிட்டுள்ளது, பிளாட்டினம் குறித்து முழுமையாக அறிந்துகொண்டு முதலீடு செய்ய வேண்டியது அவசியம் என்பதை உணர்த்துகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது, பிளாட்டிணம் வாங்கிய எண்ணி சில மாதங்களில் எனது ஒன்றறை வயது இளைய மகனுடன் விளையாடும் போது படக் என்று இழுத்து அறுத்து விட்டான்…பிளாட்டினத்தின் (அடர்த்தி) டென்சிட்டி அதிகம்.. எனவே இது life long என்ற வாதத்தின் மேல் நம்பிக்கை போய் வி‌ட்டது.. வாங்கின கடைக்கு எடுத்து சென்று கேட்டால்… இது இண்டியன் மேக் இல்லை.. இத்தாலி மேக்.. அனுப்பி பத்த வைக்க 3 மாதம் ஆகும்...எனவே இதை எடை போட்டு இன்றைய விலையில் எங்களிடம் கொடுத்து விட்டு வேறு நகை வாங்கி கொள்ளுங்கள் என்றனர்.

45, 500 க்கு சில மாதங்களுக்கு முன்பு வாங்கிய அதே செயினின் இன்றைய மதிப்பு 27,000 என்றனர்.. கிட்டத்தட்ட 18,500 நஷ்டம்.. அப்படியா மீதி உள்ள பணத்தில் தங்க நகையாவது வாங்கி கொள்ளலாம் என்று நினைத்த நிலையில் அங்கு வந்த மேனேஜர் போன்ற நபரிடம் என்னை பேச வைத்து……….. சார் இப்போது பிளாட்டினம் விலை கிராமுக்கு சற்று குறைந்து உள்ளது.. மேலும் பிளாட்டினம் +தங்கம் (18k)கலந்த நகைகள் புதிதாக வந்துள்ளது.. மேக்சிமம் டிஸ்கவுண்ட்.. என என்னை மறுபடியும் தங்கள் நளின பேச்சின் இறுதியில் 21 கிராம் எடையுள்ள ஒரு செயின்..( 15g platinum +6g 18k gold) 81, 000 மதிப்பு போட்டு கூட்டி கழித்து இறுதியில் 76,000 ஸ்பெஷல் விலை நிர்ணயம் செய்து.. (சூடான பாதாம் பால் உபசரிப்பு இப்போது) 75,600 இறுதி பில் அமொவுன்ட்…பழைய செயின் ரிட்டர்ன் செய்த நகையின் மதிப்பை கழித்து 48,600 பணம் கட்டி வாங்கி அணிந்து… இடையில் ஒருமுறை கொக்கி ஸ்ப்ரிங் லூசானதால் அதை மாற்றி S வடிவ கொக்கி 5500 கொடுத்து மாற்றி இன்று வரை கழுத்தில் அணிந்து உள்ளேன்.. சோகமான கிளைமாக்ஸ் என்னவென்றால் மொத்தமாக 1 லட்சம் மதிப்புள்ள (நான் மொத்தம் செலவழித்தது)

1. ரூ.45500 (முதல் செயின்)

2. ரூ. 48500 (முதல் செயின் கொடுத்து மாற்றிய வகையில்)

3..ரூ.5500 (S கொக்கி)

ஆக மொத்தம் ரூ.99,600… ஆனால் இன்றைய பிளாட்டினம் ஒரு கிராம் வெறும் 2100 ரூபாய்… எனது செயின் இன்றைய மதிப்பு வெறும் 48,900…. கிட்டத்தட்ட பாதி நஷ்டம்…. எனவே என்னை போன்ற நடுத்தர வர்க்கத்தினர் தயவு செய்து கொஞ்சம் யோசித்து முடிவு எடுங்கள்… இன்றைய பிளாட்டினம் விலையான 2100 per gram வாங்கினாலும்.. செய்கூலி சேதாரம் GST சேர்த்து 4200 வந்து விடும் 1 gram… எனவே நான் பிளாட்டினம் விலை ஏறும் வரை காத்திருக்க முடிவு செய்து விட்டேன்…கொடுத்து விட்டு ஒரு பெரிய கும்பிடு போட வேண்டும்… இது கதை அல்ல என் உண்மையான அனுபவம்... என்று எழுதியுள்ளார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved