தமிழக முதல்வருக்கு இராஜகம்பளத்தார் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கடிதம்!
சட்டமன்றத்தேர்தலில் வெற்றிபெற்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள திமுக தலைவர் தளபதி.திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இராஜகம்பளத்தார் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.P.இராமராஜ் அவர்கள்கள் வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் கழக தேர்தல் அறிக்கையில் மாவீரன் கட்டபொம்மன் சிலை சென்னையில் நிறுவப்படும் என்று வாக்குறுதி அளித்தமைக்கும், ஆலங்குளம் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் DNT ஒற்றைச்சான்றிதழ் வழங்கப்படும் என்று உறுதி அளித்ததற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாக்குறுதிகளை புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பது உள்பட பலகோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.