🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கார்த்திகை தீபம் ஸ்பெஷல் அப்பம், பொரி உருண்டை ரெசிபி!

கார்த்திகை தீபத் திருநாளில் விளக்கேற்றுவது எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு இனிப்பு பண்டங்கள் செய்வது முக்கியம். அதில் முக்கியமான இரண்டு இனிப்பு பண்டங்கள் செய்யலாம். 

ஸ்வீட் அப்பம், பொரி உருண்டை இரண்டும்  திகட்டாத அளவான இனிப்பு சுவையுடன் இருப்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாகும். பஞ்சு போன்ற இந்த ஸ்வீட் அப்பத்தை 10 நிமிடத்தில் செய்யலாம்.

1.ஸ்வீட் அப்பம்

தேவையான பொருட்கள் :

அரிசி மாவு - 1 கப்

கோதுமை மாவு - 1 கப்

வெல்லம் - 1 கப்

தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்

வாழைப்பழம் - 1

ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்

எண்ணெய் தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை :

 கோதுமை மாவு, அரிசி மாவு, துருவிய வெல்லம், வாழைப்பழம், ஏலக்காய் பொடி, துருவிய தேங்காய், 1 சிட்டிகை உப்பு அனைத்தையும் கொடுக்கப்பட்ட அளவில் எடுத்து நன்கு மாவு பதத்தில் அரைத்து கொள்ள வேண்டும்.

பிறகு வாணலில் எண்ணெயை காய வைத்து அரைத்த ஆப்ப மாவை எண்ணெயில் ஊற்றி இரு புறமும் பொறித்து எடுத்தால்  பொறித்து எடுத்தால் ஸ்வீட்  ஆப்பம் தயார். 

கூடுதல் குறிப்பு :

அப்பத்தை நேரடியாக எண்ணெயில் பொறித்து எடுக்கலாம், இல்லையெனில் குழிப்பனியார சட்டியில் தாராளமாக எண்ணை (அ) நெய் விட்டு பொறித்து எடுத்தால்  பனியாரம் போலும் சுட்டு எடுக்கலாம்.

2) பொரி உருண்டை 

பொரி - 500 

கிராம் வெல்லம் - 1 கப் 

ஏலக்காய் - 2 

தண்ணீர் - 1/2 கப் 

செய்முறை:

முதலில் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி சூடானதும், வெல்லத்தைப் போட்டு தீயை குறைவில் வைத்து 5-10 நிமிடம் கொதிக்க விட வேண்டும். வெல்லப் பாகு தயாராகிவிட்டதா என்பதை பார்க்க, ஒரு தட்டில் தண்ணீர் ஊற்றி, அதில் ஒரு துளி வெல்லப் பாகுவை விடும் போது, பாகுவானது கல்லு பதத்திற்கு வந்தால் தயாராகிவிட்டது என்று அர்த்தம். அப்படி பாகு தயாராகிவிட்டால், ஏலக்காய் மற்றும் பொரியை பாகுவுடன் சேர்த்து தீயை குறைவில் வைத்து, 2-3 நிமிடம் கிளறினால், பொரியானது பாகுவுடன் நன்கு ஒன்று சேர்ந்திருக்கும். மேலும் கலவையானது வெதுவெதுப்பான நிலையில் இருக்கும் போது, கையில் அரிசி மாவில் வைத்து பின் கலவையை உருண்டைகளாக பிடித்து ஒரு தட்டில் வைத்து, நன்கு குளிரை வைத்தால், பொரி உருண்டை ரெடி.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved