🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கம்பளத்தார் குலம் காக்கும் பெண்கள் அனைவருக்கும் சர்வதேச மகளிர்தின வாழ்த்துகள்!

கடந்த 1909ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமெரிக்க சோஷியலிச கட்சி சார்பில் தேசிய மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. தொழிலாளர் நல ஆர்வலர் தெரசா மல்கேயில் இந்த தினத்தை முன்வைத்தார். நகரெங்கிலும் ஆயத்த ஆடை பணியாளர்களுக்கு எதிராக இழைக்கப்படும் ஒடுக்குமுறைகளை கண்டித்து இந்த தினத்தை அவர் முன்னெடுத்தார்.

இதற்கு கிடைத்த முக்கியத்துவத்தை பார்த்து ஈர்க்கப்பட்ட அமெரிக்க சோஷலிச தலைவர்கள், மகளிர் தினம் கொண்டாடுவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர். ஆனால், அந்த சமயத்தில் குறிப்பிட்ட தேதி எதுவும் வரையறை செய்யப்படவில்லை.

இந்தச் சூழலில் 1975 மற்றும் 1977ஆம் ஆண்டுகளில் சர்வதேச மகளிர் தினத்தை ஐ.நா. அமைப்பு கொண்டாட தொடங்கியது. இதையடுத்து மார்ச் 8ஆம் தேதியை சர்வதேச மகளிர் தினமாக ஐ.நா. பொதுச்சபை அறிவித்தது. இந்த நாளில் பெண்களின் உரிமைகளை நிலைநாட்டவும், உலகெங்கிலும் பெண்கள் அமைதியாக வாழுவதற்கு நடவடிக்கை எடுப்பது என்றும் உறுதியேற்கப்பட்டது.

இதற்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினத்தன்று புதிய கருப்பொருளை ஐ.நா. அவை அறிமுகம் செய்து வருகிறது. பெண்களின் சாதனைகள் குறித்து பேசப்படுவதோடு மட்டுமல்லாமல் பாலின அடிப்படையிலான வேறுபாடுகள், சமத்துவத்தின் நோக்கம், பெண்ணுரிமை உள்ளிட்டவை குறித்து இந்த நாளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

அமெரிக்க நாட்டிலும், ஐரோப்பிய நாடுகளிலும் 19-ஆம் நூற்றாண்டிலிருந்தே பெண்கள் உரிமைக்களுக்காகப் போராடினார்கள். கிளாராஜெட்கின்ஸ் அம்மையாரின் தலைமையில் பெண்களின் உரிமை காக்கும் இயக்கம் தோன்றியது. பல ஆண்டுகள் போராடிய பின்னரே இங்கிலாந்து நாட்டில் பெண்கள் வாக்குரிமை பெற்றார்கள்.

2023ஆம் ஆண்டின் கருப்பொருள் : அனைவருக்கும் டிஜிட்டல் :

”பாலின சமத்துவத்திற்கான புத்தகங்கள் மற்றும் தொழில்நுட்பம்" என்ற பெயரில் இந்த ஆண்டின் கருப்பொருள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்க்கை தரம் மேம்படுத்தப்பட வேண்டும் என்று இந்நாளில் உணர்த்தப்படுகிறது.

சர்வதேச மகளிர்தினத்தில் கம்பளத்தார் குலம் வாழையடி வாழையாக செழித்தோங்கி வளர ஆதார சுருதியாக உள்ள பெண்கள் அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved