சூரன்குடி கூற்றம்
சூரன்குடி கூற்றம்
பண்டைய காலங்களில் பாண்டிய மன்னர்களின் ஆட்சியில், அவர்களின் நாடுகள் “வளநாடு, நாடு, கூற்றம், ஊர்” என பிரிக்கப்பட்டு நிர்வாகம் செய்தனர். இந்நிலையில் 14ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட சுந்திரபாண்டியன் மற்றும் அவரது சகோதரர் வீரபாண்டியனுக்கும் இடையே சகோதர யுத்தம் நடந்தது. சுந்தரபாண்டியனுக்கு ஆதரவாக முகலாய தளபதி மாலிக்கபூர் மதுரை மீது படையெடுத்து வந்து பாண்டிய நாட்டை கைப்பற்றினார். அவர்களை எதிர்கொள்ள “விஜயநகர பேரரசின்” உதவியை நாடினார் பாண்டிய மன்னன் வீரபாண்டியன். தொண்டி மண்டலம் (காஞ்சிபுரம்) வரை தனது எல்லைகளை வளர்த்து அங்கு விஜயநகர பேரரசின் பிரதானியாக இருந்த பேரரசர் புக்கரின் மகன் “குமாரகம்பணர்” வீரபாண்டியனுக்கு ஆதரவாக போரிட்டு முகலாயர்களை விரட்டி பாண்டிய நாட்டில் தனது பிரதானிகளை நியமித்தார்.
அப்போது சூரன்குடி கூற்றத்தின் பிரதானியாக நியமிக்கப்பட்டவர் “செயலான் சென்ராய நாயக்கர்”, இவரது கூற்றமே 16ம் நூற்றாண்டில் விஸ்வநாத நாயக்கரால் பாளையக்கார முறை அமுலானபோது, பாஞ்சாலங்குறிச்சி, குளத்தூர், மேல்மாந்தை, காடல்குடி, நாகலாபுரம், என பிரிக்கப்பட்டது. இவரது பேரன் பெத்தையா நாயக்கரின் மைத்துனர்களான கெட்டிபொம்மு நாயக்கா, அனுஷ்மல் நாயக்கா, குஞ்சைய நாயக்கா, சேர்மல் நாயக்கா முறையே பாஞ்சாலங்குறிச்சி, குளத்தூர், மேல்மாந்தை மற்றும் காடல்குடியின் முதல் பாளையக்காரா்கள் ஆவார்கள்.
சூரன்குடியின் பெண்வழி வாரிசு ரெங்கசாமி, ஜெகநாதசாமி, இராமகிருஷ்ணன், ராமலட்சுமி ஆவார்கள். பாயும்புலி நாயக்கர், பெத்தையசாமி, கருத்தபாண்டி, முரட்டுபால் நாயக்கர் போன்றோர்கள், பங்காளிவழி ஆண் வாரிசு ஆவார்கள். குமாரகம்பணரின், பாண்டியநாடு மீட்பு போரில் சூரன்குடி கூற்றத்தின் பங்கு மகத்தானது.