குளத்தூர் பாளையக்காரர்
குளத்தூர் பாளையக்காரர்
குளத்தூர் பாளையத்தின் முதல் பாளையக்காரா் அனுஷ்மல் நாயக்கா ஆவார். அவரது தலைமுறையில் 15வது பாளையக்காரராக பொருப்பேற்றவர் சாமிதுரை அனுஷ்மல் ஆவார். இவரது ஆட்சிக்காலத்தில்தான், 1792ல் நேரடியாக வரிவசூல் செய்யும் உரிமையை நாவபுகளிடம் இருந்து பெற்றான் வெள்ளையன். இவர்களும் பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தின் சகோதரவழி என்பதால், கட்டபொம்மனோடு சேர்ந்து வெள்ளையர்களை எதிர்த்து வரிகட்ட மறுத்தனர். இவர்களையும் கைது செய்து, 16−10−1799 அன்று கயத்தாறில் பானர்மெனால் நடத்தப்பட்ட விசாரனையில் நிறுத்தினர். இவர் வயதானவர் என்பதால் தூக்கிலிடமால் இராமநாதபுரம் சிறைக்கு அனுப்பினர். இவரது மகன் சின்னவெட்டூர் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டார்.
இவரது பேரன் ஜெகநாதராமசாமி மலேசிய பினாங்கு தீவிற்கு நாடு கடத்தப்பட்டார். அதன்பின் இந்த குளத்தூர் பாளையத்தை ஜமின்தாரி முறைக்கு மாற்றம் செய்து, வெள்ளையர்களுக்கு உதவியாக இருந்த மேல்மாந்தை ஜமின்தாரிடம் ஒப்படைத்தனர். சில வருடங்களில் மேல்மாந்தை ஜமின்தார் வரிபாக்கி வைத்திருந்ததால் குளத்தூர் பாளையம் ஏலத்திற்கு வந்தது. அதை தச்சநால்லூரை சேர்ந்த ஆங்கிலோ−இந்தியன் ஹக்ஸ் என்பவர் ஏலத்தில் எடுத்தார். அவரது மறைவிற்குபின், ஹக்ஸ்யின் மகன் கைவசம் வந்தது குளத்தூர். அவருக்குப்பின் விஜயரகுநாத சேர்வைக்காரா் ஏலத்தில் குளத்தூர் ஜமீனை எடுத்தார். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் குளத்தூர் ஜமீனை ஏலத்தில் எடுத்தவர் தில்லைநாயகம் பிள்ளை ஆவார்.
குளத்தூர் பாளையக்காரா் சின்னுவெட்டூர் நாயக்கரின் வாரிசுகள் இன்றளவும் தங்களை மாஜி−ஜமின்தார் (ஜமின்தாரி முறைக்கு முன்பு இருந்த பாளையக்காரா் முறையை குறிப்பதற்காக மாஜி என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது) என்ற பட்டத்தை பயன்படுத்துகின்றனர். தொடர்ந்து இருதலைமுறையாக, பாஞ்சாலங்குறிச்சி கமிட்டித் தலைவராக இருந்துள்ளனர். முதல் விடுதலைப்போரில் கோலோச்சியவர்களில் குளத்தூர் பாளையக்காரரும் முக்கியமானவர் என்றால் மிகையல்ல…