தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார் • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார்
விளம்பரங்கள்
நகர்ப்புற உள்ளாட்சி வெற்றி வேந்தர் திரு.M.P.பிரகாஷ் அறிமுகம்!

நகர்ப்புற உள்ளாட்சி வெற்றி வேந்தர் திரு.M.P.பிரகாஷ் அறிமுகம்!

Radheyan 10 Mar 2022 | 04:18 PM
பகிர்:

திரு.M.P.பிரகாஷ் அவர்கள் 15.04.1985-இல் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகேயுள்ள மேட்டூர் கிராமத்தில் திரு.பொம்மநாயக்கர் - திருமதி.மங்கம்மாள் தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகனாகப்பிறந்தார். மேல்நிலைப்பள்ளி வரை பயின்றுள்ளார். இவருக்கு திருமணமாகி திருமதி.அம்பிகா என்ற மனைவியும், P.ரித்திக் என்ற மகனும் உள்ளனர்.

மேல்நிலைக்கல்விக்குப்பின் விவசாயப்பணியில் முழுமையாக ஈடுபட்டு வந்தார். அதன்பின் சுயதொழில் துவங்கும் ஆர்வத்தில் 2015-ஆம் ஆண்டு "தெய்வம் காயர்ஸ்" என்ற பெயரில் கயிறு திரிக்கும் நிறுவனத்தை தொடங்கி, கயிறு தயாரித்து கேரள மாநிலத்திற்கு சப்ளை செய்து வருகிறார். இந்நிறுவனம் மூலம் 25-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறார் திரு.பிரகாஷ்.

தகப்பனார் பொம்மநாயக்கர் காலத்திலிருந்தே திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவான குடும்பமாக இருந்து வருவதால், தானும் 20-வது வயதில் திமுக-வில் இணைந்து சாதாரண தொண்டராக அரசியல் பயணத்தை தொடங்கினார். அதனையடுத்து கடந்த 12 வருடங்களாக திமுகழகத்தில் பேரூராட்சி வார்டு பிரதிநிதியாக இருந்து வருகிறார்.

கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பவானி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சலங்கபாளையம் பேரூராட்சியிலுள்ள பதினைந்து வார்டுகளில் மிக அதிக வாக்காளர்களைக்கொண்ட 12-வது வார்டில், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் முதல்முறையாக தேர்தல்களம் கண்டு பேரூராட்சி மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  இப்புதிய பொறுப்பில் திரு.பிரகாஷ் அவர்கள் சாதி,மத,இன,மொழி பாகுபாடின்றி அனைவருக்காகவும் சிறப்புடன் செயல்பட்டு வாய்ப்பளித்த கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.

குறிச்சொற்கள்

அரசியல் தலைவர்கள் தமிழ்நாடு Mr.Prakash Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண