தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • கம்பளத்தாரின் கைமணம்... தேனியின் பெருமை! • 35 ஆண்டுகால சமூகப் பணிக்கு மகுடம்; புதுச்சத்திரம் அரிமா சங்கத்தின் 5-வது தலைவராக பொறுப்பேற்கிறார் தொழிலதிபர் ஆர். முத்துச்சாமி • இராஜகம்பளத்தாரின் ஐஐடி வெற்றிப் பயணத்தில் மகுடம் சூட்டிய கவின் பிரசாந்த்! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • கம்பளத்தாரின் கைமணம்... தேனியின் பெருமை! • 35 ஆண்டுகால சமூகப் பணிக்கு மகுடம்; புதுச்சத்திரம் அரிமா சங்கத்தின் 5-வது தலைவராக பொறுப்பேற்கிறார் தொழிலதிபர் ஆர். முத்துச்சாமி • இராஜகம்பளத்தாரின் ஐஐடி வெற்றிப் பயணத்தில் மகுடம் சூட்டிய கவின் பிரசாந்த்!
விளம்பரங்கள்
ஒன்றியக்குழு உறுப்பினர்-ஆண்டிபட்டி-திருமதி.தங்கமணி இராஜேந்திரன்.

ஒன்றியக்குழு உறுப்பினர்-ஆண்டிபட்டி-திருமதி.தங்கமணி இராஜேந்திரன்.

Admin 22 Jul 2020 | 03:28 PM
பகிர்:

திருமதி.R.தங்கமணி அவர்கள் 1975-இல் உசிலம்பட்டி அருகேயுள்ள மகாலிங்கபுரம் கிராமத்தில் திரு.ஜக்கையா – திருமதி.பொம்முத்தாய் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகளாகப் பிறந்தார். எஸ்.எஸ்.எல்.சி - வரை பயின்றுள்ள திருமதி.தங்கமணி அவர்கள் திரு.இராஜேந்திரன் அவர்களை மணமுடித்துள்ளார்.

postgallery(160)

திரு.S.இராஜேந்திரன் அவர்கள் 1965-இல் ஆண்டிபட்டி அருகேயுள்ள சித்தார்பட்டி கிராமத்தில் திரு.சீனிச்சாமி – திருமதி.காமுத்தாய் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். நடுநிலைப்பள்ளி வரை பயின்றுள்ளார். திரு.இராஜேந்திரன் – திருமதி.தங்கமணி தம்பதியினருக்கு R.இராஜேஷ்கண்ணன், R.இராஜ்குமார் என்ற இருமகன்கள் உள்ளனர்.

அ.இ.அதி.மு.க ஆரம்பகாலத்திலிருந்து இன்றுவரை அடிப்படை  உறுப்பினராக இருந்து வருகிறார் திரு.இராஜேந்திரன் அவர்கள். கட்சியில் எந்தப்பொறுப்பில் இல்லாவிட்டாலும் கட்சிக்கூட்டங்கள், மாநாடுகள், தேர்தல் காலங்களில் இயக்க நிர்வாகிகளுடன் இணைந்து தீவிரமாக பணியாற்றி வருகிறார். மேலும் உள்ளூர் மக்களின் சுக-துக்கங்களில் பங்கேற்பதுடன், கிராம மக்களின் தேவைகளையும், கோரிக்கைகளையும் நிறைவேற்றிக்கொடுப்பதில் அதிக முனைப்புடன் செயல்படுவதால், மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார்.

postgallery(160)

கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் முதல்முறையாக தனது துணைவியார் திருமதி.தங்கமணி அவர்களை அதிமுகழக வேட்பாளராக ஆண்டிப்பட்டி ஒன்றியம் 8-ஆவது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில் களமிறக்கி வெற்றி பெறச்செய்துள்ளார். மிக சாதாரண பின்புலமும், எளிமையான மனிதருமான திரு.இராஜேந்திரன் அவர்கள் மீது மிகுந்த அன்பும், நம்பிக்கையும் கொண்டுள்ளதை இந்த வெற்றி உறுதி செய்கிறது. இப்புதிய பொறுப்பின் மூலம் திரு.இராஜேந்திரன்-திருமதி.தங்கமணி தம்பதியினர் சாதி,மதம், இன,மொழி பாகுபாடின்றி அனைவருக்கும் பாடுபட்டு வாய்ப்பளித்த கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுகிறோம். 

குறிச்சொற்கள்

அரசியல் தலைவர்கள் தமிழ்நாடு Union Councilor-Mrs.Thangamani Rajendran.
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண