தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • கம்பளத்தாரின் கைமணம்... தேனியின் பெருமை! • 35 ஆண்டுகால சமூகப் பணிக்கு மகுடம்; புதுச்சத்திரம் அரிமா சங்கத்தின் 5-வது தலைவராக பொறுப்பேற்கிறார் தொழிலதிபர் ஆர். முத்துச்சாமி • இராஜகம்பளத்தாரின் ஐஐடி வெற்றிப் பயணத்தில் மகுடம் சூட்டிய கவின் பிரசாந்த்! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • கம்பளத்தாரின் கைமணம்... தேனியின் பெருமை! • 35 ஆண்டுகால சமூகப் பணிக்கு மகுடம்; புதுச்சத்திரம் அரிமா சங்கத்தின் 5-வது தலைவராக பொறுப்பேற்கிறார் தொழிலதிபர் ஆர். முத்துச்சாமி • இராஜகம்பளத்தாரின் ஐஐடி வெற்றிப் பயணத்தில் மகுடம் சூட்டிய கவின் பிரசாந்த்!
விளம்பரங்கள்
ஊராட்சி மன்றத் தலைவர்-பொள்ளாச்சி. திருமதி.கார்த்திகா குமரேசன்

ஊராட்சி மன்றத் தலைவர்-பொள்ளாச்சி. திருமதி.கார்த்திகா குமரேசன்

Admin 27 May 2020 | 06:30 PM
பகிர்:

திருமதி.கார்த்திகா குமரேசன் B.Com., அவர்கள் 1986-ல் கேரள மாநிலம், பாலக்காடு அருகேயுள்ள  நெய்தலை  என்னும் கிராமத்தில் திரு.மோகன்ராஜ் – திருமதி.மகாலட்சுமி தம்பதிகளுக்கு  மூத்த மகளாக விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.இளங்கலை வணிகவியல் பட்டதாரியான  திருமதி கார்த்திகா அவர்கள் தனது தாய்மாமனான தாமரை.திரு.குமரேசன்.M.Com., (இவர் பற்றி மேலும் விபரங்களை அறிய நீலநிறத்திலுள்ள பெயரை க்ளிக் செய்யவும்)அவர்களை மணமுடித்துள்ளார். இத்தம்பதியினருக்கு  K. சியாம் பிரசாத் என்ற ஒரே மகன் உள்ளார்.

postgallery(70)

அதிரடி அரசியல் கணவரான திரு.குமரேசன் அவர்களுக்கு நேர் எதிமாறான குணமுடையவர் திருமதி.கார்த்திகா அவர்கள். நிதானம், சாந்தம், சகிப்புத்தன்மை, மனிதாபிமானம் ஆகியவற்றை ஒருங்கே பெற்றவர். குமரேசன் அறக்கட்டளையின் இயக்குனராகவுள்ள திருமதி.கார்த்திகா அவர்கள், அதன் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கணவருடன் இணைந்து பொதுமக்களுக்கு செய்துவருகிறார். மேலும் கணவரின் குமரேசன் ரியல் எஸ்டேட் ,குமரேசன் வாட்டர் சர்வீஸ் மற்றும் குமரேசன் பேக்கரி போன்றவற்றில் பங்குதாரராகவும், நிர்வாகத்தையும் கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை விவசாயம், குடும்பம் மற்றும் தொழில் ஆகியவற்றில் கணவருக்கு உறுதுணையாக இருந்தவர், கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் மூலம், கணவரின் அரசியல் வாழ்க்கைக்கும் கைகொடுக்க வந்துள்ளார். கட்டுக்கடங்காத காளையாக வளம் வரும் திரு.குமரேசன் (இவர் பற்றி மேலும் விபரங்களை அறிய நீல நிறத்திலுள்ள பெயரை க்ளிக் செய்யவும்) அவர்களுக்கு, கடிவாளமாக இருந்து வழிநடத்துவார் என்பதில் சந்தேகமில்லை. கணவரின் வேகமும், கார்த்திகா அவர்களின் விவேகமும் அரசியல் களத்தில் இணையும்பட்சத்தில் வெற்றிகள் வசப்படும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, நல்லட்டிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பாளராகக் களமிறங்கி வெற்றிவாகை சூடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

postgallery(70)

மிகஇளம் வயதில் கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ளும் தகுதியும், திறமையும் வாய்ந்தவர் திருமதி.கார்த்திகா குமரேசன் என்பதில் ஐயமேதுமில்லை, இருந்தபோதிலும் சமுதாயம் அவருக்கு நினையூட்டக் கடமைப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பின் மூலம் திருமதி.கார்த்திகா அவர்கள் சாதி,மதம்,இனம்,மொழி பாகுபாடின்றி அனைவருக்காகவும் உழைத்து, அரசியலில் அடுத்தடுத்த நிலைகளுக்கு உயர்வதுடன், தன் கணவரையும் உயர்த்துவார் என்ற நம்பிக்கை, ஆதரவாளர்கள், நலம் விரும்பிகள், சமுதாயத்தினர் என அனைவருக்கும் உண்டு. அந்த நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் சிறப்புடனும், பொறுப்புடனும் செயலாற்றி, சமுதாயத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்து, மாந்தர் குலத்திற்கு பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி, வாழ்த்துகிறோம்.

குறிச்சொற்கள்

அரசியல் தலைவர்கள் தமிழ்நாடு Pollachi.Mrs.Karthika Kumarasan Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண