🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பறவை-விலங்குகள் தொல்லை விவசாயிகளுக்கு இனி இல்லை!

உலகில் மிக அதிக இடர்பாடுகளையும், சிக்கல்களையும் சந்திக்கும் தொழில் என்றால் விவசாயம் தான். பருவநிலை மாற்றத்தால் காலம் கடந்து பெய்யும் மழை அல்லது மழைப்பொழிவு இல்லாமலே போவது என்று இயற்கை ஒருபுறம் சோதித்தால், இதையும் தாண்டி விவசாயம் செய்பவர்களுக்கு பறவை மற்றும் விலங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. முன்பெல்லாம் காகம், சிட்டுக்குறுவிகள் தொல்லை என்றால் தற்போது மயில்களின் எண்ணிக்கை பலமடங்கு பெருத்துள்ளது. அதேபோல் காட்டுப்பன்றிகளின் தொந்தரவும் அதிகரித்துள்ளது.

விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு நவீன தொழில்நுட்பம் மூலம் தொடர்ந்து தீர்வு காண முயற்சி செய்தாலும், புதிய, புதிய சிக்கல்கள் உருமாறிக் கொண்டே உள்ளன. தற்போது மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன், தனது நண்பர்களுடன் இணைந்து பஞ்சுர்லி எனும் சூரிய ஒளியில் இயங்கும் இயந்திரம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார். இது சூரிய ஒளி மூலம் மின்னாற்றலை பெற்று, பேட்டரியில் சேகரித்துக் கொண்டு 24 மணி நேரமும், அனைத்து வகை கால சூழலிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு இயந்திரத்தின் மூலம் 5 ஏக்கர் விளை நிலத்தை பாதுகாக்க முடியும் என்று சொல்லப்படுகிறது. மூன்று நிமிடத்திற்கு ஒரு முறை ஒலி எழுப்பும் தன்மை, இரவு நேரத்தில் 800 மீட்டர் வரை டார்ச் லைட் போன்ற வெளிச்சத்தை ஏற்படுத்தும் என்பதால் விளைநிலங்களுக்குள் வரும் விலங்குகளும், பறவைகளும் அச்சப்பட்டு உள்ளே வருவது தடுக்கப்படும் என்று நம்புகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் பறவைகள் மற்றும் விலங்குகளால் அதிக அளவிலான விளைநிலங்கள் பாதிக்கப்படுவதின் மூலம் விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை சந்திக்கின்றனர். இவ்வாறு பாதிக்கப்படும் பயிர்களுக்கு காப்பீடும் பெற முடியாது என்பதால் விவசாயமே சவாலான தொழிலாக இருந்துவருகிறது. தற்போது விலங்குகள் மற்றும் பறவைகளை விரட்ட தீப்பந்தம், பட்டாசுகளை வெடிக்கச்செய்தும், ஒரு சிலர் தடை செய்யப்பட்ட மின்வெளிகளை அமைத்தும் விளை நிலங்களை பாதுகாக்க முயற்சி செய்கின்றனர். இதனால் பல விலங்குகள் மற்றும் பறவைகளின் உயிரிழப்பு ஏற்படுகிறது. இவற்றை தடுக்கவும் மக்கள் நஷ்டம் அடையாமல் பாதுகாக்கவும் பஞீசுர்லி இயந்திரம் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved