தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அமெரிக்க செயற்கைக்கோளையே ஏமாற்றிய இந்தியா! – பொக்ரான் அணுசோதனையின் ரகசிய உளவு ஆட்டம் • நுரையீரலைக் காப்போம் – நோய்களைத் தடுப்போம்! இலவச மருத்துவ முகாம் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 4: மலைக்கு மேலே படகு எப்படி சென்றது? – கால்வாய் பொறியியல் அதிசயங்கள்! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #06 – பீர்பாலின் புத்திசாலித்தனமான பதில்! • ஜாதகத்தால் தடைபடும் திருமணங்கள்: அறிவியல் வளர்ந்த காலத்திலும் தொடரும் நம்பிக்கையின் வலை! • அமெரிக்க செயற்கைக்கோளையே ஏமாற்றிய இந்தியா! – பொக்ரான் அணுசோதனையின் ரகசிய உளவு ஆட்டம் • நுரையீரலைக் காப்போம் – நோய்களைத் தடுப்போம்! இலவச மருத்துவ முகாம் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 4: மலைக்கு மேலே படகு எப்படி சென்றது? – கால்வாய் பொறியியல் அதிசயங்கள்! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #06 – பீர்பாலின் புத்திசாலித்தனமான பதில்! • ஜாதகத்தால் தடைபடும் திருமணங்கள்: அறிவியல் வளர்ந்த காலத்திலும் தொடரும் நம்பிக்கையின் வலை!
விளம்பரங்கள்
ஈச்சனாரி ஊர்நாயக்கர் இயற்கை எய்தினார் - ஆழ்ந்த இரங்கல்

ஈச்சனாரி ஊர்நாயக்கர் இயற்கை எய்தினார் - ஆழ்ந்த இரங்கல்

Radheyan 09 Oct 2022 | 05:45 PM
பகிர்:

சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் மூத்த ஆலோசகரும், நன்கொடையாளரும், தொழிலதிபருமான Rtn.PHF.C.முத்துசாமி அவர்களின் தந்தையாரும், கோவை மாவட்டம், ஈச்சனாரி ஊர்நாயக்கருமான N.சின்னச்சாமி நாயக்கர் (90) அவர்கள் வயது மூப்பின் காரணமாக நேற்று இரவு 8 மணியளவில் இயற்கை எய்தினார்.

பல நூற்றாண்டுகாலத்திற்கு மேலாக ஈச்சனாரி ஊர்நாயக்கர் பொறுப்பிலுள்ள சின்னச்சாமி அவர்களின் குடும்பம், கொங்கு மண்டலத்தில் சமுதாயத்தின் முக்கிய அடையாளமாக விளங்கி வருகிறது. பாரம்பரியமும், பெருமையுமிக்க குடும்பத்தின் வாழையடி வாழையாக ஈச்சனாரி ஊர்நாயக்கர் பொறுப்புக்கு வந்த சின்னச்சாமி அவர்கள், புகழ்பெற்ற ஈச்சனாரி விநாயகர் கோவில் அறங்காவலராகவும், கோவில் புணரமைப்பு பணிகளில் முழுமையாக ஈடுபடுத்திகொண்டு, கம்பளத்தாரின் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் காக்கும் அரணாக விளங்கிய சின்னச்சாமி நாயக்கர் அவர்களின் மறைவு சமுதாயத்திற்கும், ஈச்சனாரி ஊர்மக்களுக்கும்  ஏற்பட்ட பேரிழப்பாகும். 

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உற்றார், உறவினர்,நண்பர்கள் மற்றும் ஈச்சனாரி கிராம மக்கள் அனைவருக்கும் சென்னை, வீ.க.பொ. இராஜகம்பள சமுதாயத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு Eachanairi Oor Naicker thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண