🔴 LIVE | முப்பெரும் விழா 2023


S.R.இராஜேந்திரன் மறைவு பேரிழப்பு!

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கொல்லபட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும், திண்டுக்கல் மாவட்டத்தில் சமுதாயத்திற்கு பெரும் தூணாக விளங்கியவருமான எஸ்.ஆர்.இராஜேந்திரன் அவர்கள் கடந்த 27.05.2023 அன்று மதியம் இயற்கை எய்தியுள்ளார். 

இது குறித்து சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய  நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,  அமரர்.இராஜேந்திரன்   எனக்கு நெருங்கிய உறவினராக இருந்தும் அறிமுகம் இல்லாமல் இருந்தநிலையில்,  கடந்த ஜனவரி 29 இல் நடைபெற இருந்த முப்பெரும் விழாவை அறிந்து அவராக என்னிடம் அறிமுகம் செய்து கொண்டு,  ஏன் திண்டுக்கல் மாவட்டத்தை புறக்கணிக்கின்றீர் என்று உரிமையோடு கோபித்துக்கொண்டு,  நீங்கள் கட்டாயம் எங்கள் மாவட்டத்திற்கு வரவேண்டும் என்று விழாவிற்கு ஒருவார காலமே இருக்கும் நிலையில் அழைத்துச்சென்று கிராமம் கிராமமாக முக்கிய பிரமுகர்களை சந்தித்து முப்பெரும் விழாவிற்கு குறிப்பிடத்தக்க அளவில் நிதி திரட்டித் தந்தார். எதிர்பாரத விதமாக வந்த பணத்தைத் தாண்டி, அவர் காட்டிய அன்பு, சமுதாயத்தின் மீதான அக்கறை இவற்றையெல்லாம் பழகிய ஒரே நாளில் இராஜேந்திரன் அவர்களுடனான அறிமுகம் தாமதமானதின் மூலம் சமுதாய நலச்சங்கம் தன்னுடைய வளர்சியில் பல வருடங்கள் பின்தங்கிவிட்டதே என்று ஆதங்கப்பட்டதுண்டு. முப்பெரும்விழாவிற்கு ஒருநாள் முன்னதாகவே வந்துவிடுவதாக தெருவித்து, அந்த மாவட்டத்திலுள்ள முக்கிய தலைவர்களையெல்லாம் அழைத்துக்கொண்டு வந்து விழாவை சிறப்பித்து, அடுத்த நாள் சென்னை காஸ்மோபாலிட்டன் கிளப் பில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு விருந்திலும் கலந்து கொண்டு அதில் கலந்து கொண்ட பல தலைவர்களுடன் அன்பு பாராட்டி, சமுதாய வளர்ச்சிக்கான தனது விருப்பங்களையும், முன்னெடுக்க வேண்டிய திட்டங்களையும் பகிர்ந்து எங்களுக்கு பெரும் உந்துசக்தியாக இருந்ததை என்நாளும் மறக்கமுடியாது. 

முப்பெரும் விழா நிறைவு பெற்ற நான்கு மாதங்களில் அவ்வப்போது தொலைபேசியில் பேசுபவரோடு ஒரு மாதம் இடைவெளி ஏற்பட்டு விட்டது. அதன் பிறகு சமீபத்தில் ஒருநாள் தொடர்பு கொண்டபோது அன்பாக கோபித்துக்கொண்டார். அவரின் அன்புக்கு கட்டுப்பட்டு கடந்த 24-ஆம் தேதி இராமநாதபுரத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் தங்களை சந்திக்க விரும்புவதாக தெரிவித்தவுடன், எனக்காக முக்கிய பணிகளையும் ஒதுக்கிவைத்து காத்திருந்து வரவேற்ற பெருந்தகையாளர் எஸ்.ஆர்.இராஜேந்திரன் அவர்கள். 

அந்த மாலை வேளையில் நடைபெற்ற சந்திப்பு தான் இறுதி சந்திப்பு என்பதை அறியாத மனம், என்னுடைய மனைவி, குழந்தைகளையும் அன்பொழுக வரவேற்று உணவருந்த அன்போடும், உரிமையோடும் ஆணையிட்டு அழைத்துச் சென்று, உணவருந்தும் இடைவெளியில் அரை மணி நேரம் அவரோடு பேசிய தருணம், பரிமாறப்பட்ட கருத்து என்றும் என் நினைவில் நிற்பவை. 

நான் சந்தித்து வந்த மூன்றாவது நாள் அவர் மரணமுற்றார் என்ற செய்தி என் செவிகளை எட்ட நான்கு நாள் ஆகிவிட்டது அவருக்கும் இறுதி அஞ்சலி செலுத்தும் வாய்ப்பினை இழந்தது துயரத்திலும் பெருந்துயராய் அமைந்துவிட்டது.

இன்று (31.05.2023) காலைவேதனையை அவரது தொலைபேசிக்கு அழைத்தபோது அன்பு மகன் இராவணன் இந்த துயரச் செய்தியை சொன்னபோது இதயம் சுக்குநூறாய் உடைந்தது. சமுதாயம் குறித்து பெரும் கனவோடு இருந்தவர், பல திட்டங்களை செயல்படுத்தவும், அதற்குண்டான ஏற்பாடுகளை திட்டமிட்டுக்கொண்டிருந்தவரை காளன் பறித்துச்சென்றது சமுதாயத்திற்கு பேரழப்பாகவே கருதுகிறேன். 

அன்னாரே இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய  நலச்சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved