🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தொழிலதிபர் மு.மணிவாசகன் தந்தையாரும் நல்லாசிரியருமான சி.முத்து இயற்கை எய்தினார்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவிநாயகா புளு மெட்டல்ஸ் உரிமையாளரும், திமுக மாநில செயற்குழு உறுப்பினரும், இராஜகம்பள சமுதாயத்தின் பாதுகாவலருமான திரு.மு.மணிவாசகன், மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் உறுப்பினர் திரு.மணிகண்டன் மற்றும் தொழிலதிபர் திரு.சரவணன் ஆகியோரின் தகப்பனாரும், அரசு வழக்கறிஞர் ம.கங்காதரன் அவர்களின் பாட்டனாரும், முன்னாள் தலைமை ஆசிரியரும், நல்லாசிரியர் விருது பெற்றவருமான ஐயா சி.முத்து அவர்கள் வயது மூப்பின் காரணமாக இன்று (14.05.2024) அதிகாலை 1.30 மணியளவில் இயற்கை எய்தினார்.

அன்னாரது நல்லடக்கம் இன்று மாலை 4.30 மணியளவில் அவரது சொந்த ஊரான சிலுக்கநாயக்கன்பட்டி (சிலுக்கபட்டி) கிராமத்தில் நடைபெறவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.  

பள்ளி ஆசிரியராக சிறப்பாகப்பணியாற்றி எண்ணற்ற சாதனையாளர்களை உருவாக்கி நற்பெயரும், புகழும் சேர்த்து நீங்க புகழைப்பெற்ற ஐயா சி.முத்து அவர்களின் மறைவிற்கு சமுதாய தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நல்லாசிரியர் ஐயா முத்து அவர்களின் மறைவிற்கு சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், தனது நீண்டகால ஆசிரியப்பணியில் சிறப்பாக பணியாற்றி நாட்டிற்கு பல நல்ல குடிமக்களையும், சாதனையாளர்களையும் உருவாக்கிக்கொடுத்ததுபோல், தனது பிள்ளைகளையும் நாட்டிற்கும், வீட்டிற்கும், சமுதாயத்திற்கும் உதவும் தயாள குணமும், கருணை உள்ளமும் கொண்டவர்களாக வளர்த்தெடுத்து காலத்தால் வெல்ல முடியாத புகழை ஈட்டி, இயற்கை அன்னையின் மடியில் இளைப்பார இப்பூவுலகிலிருந்து விடைபெற்றுள்ள ஐயா சி.முத்து அவர்களின் இழப்பு குடும்பத்தினருக்கும், சமுதாயத்திற்கும் பேரிழப்பாகும்.

அன்னாரை இழந்துவடும் தொழிலதிபர் மு.மணிவாசகன் சகோதரர்களுக்கும், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved