ஈச்சனாரி சின்ன ஊர்நாயக்கர் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!
வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்க மூத்த தலைவர் அவர்களின் சிறிய தகப்பனாரும், கோவை மாவட்டம் ஈச்சனாரி சின்ன ஊர்நாயக்கருமான திரு.நடராஜன் இன்று காலை இயற்கை எய்தினார். அன்னாரின் மறைவுக்கு சமுதாயத் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். இதன் விவரம் வருமாறு,
சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ஆலோகரும், ஈச்சனாரி ஊர்நாயக்கர், தொழிலதிபர் சி.முத்துச்சாமி அவர்களின் சிறிய தகப்பனாரும், ஊர் நாயக்கர் குடும்பத்தைச் சேர்ந்த திரு.இராஜகோபால் அவர்களின் தகப்பனாருமான திரு.என்.நடராஜன் அவர்கள் இன்று அதிகாலை 4 மணியளவில் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார்.
அன்னாரின் மறைவுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் செ.இராதாகிருஷ்ணன், கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ், மகளிரணி அமைப்பாளர் பாக்கியலட்சுமி, அரசியல் கட்சிப்பிரமுகர்கள் ஈச்சனாரி மகாலிங்கம், மாசேகவுண்டன்பாளையம் சிவசாமி, ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினர் மாசிலாமணி, டி.சிவா உள்ளிட்டோர் திரு.நடராஜன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

