🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சென்னையில் தொட்டிய நாயக்கர்கள் பற்றவைத்த நெருப்பு!

கடந்த டிசம்பர்-14 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் DNT சீர்மரபினர் நலசங்கத்தின் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கம்பளத்தார் சமுதாய்த்தின் சார்பில் பல மாவட்டங்களைச்சேர்ந்த நூற்றுக்கும் அதிகமானோர் பங்கேற்று நமது வலிமையை நிரூபித்தனர். கடந்த 25 முதல் போராட்டங்களை தீவிரப்படுத்திய சீர்மரபினர் நலசங்கம், துணைமுதல்வரை முற்றுகையிட்டு சிறை செல்லும் அளவிற்கு துணிச்சலுடன் போராடிவருகிறது

இதன் தொடர்ச்சியாக நேற்று (27.12.2020) இரவு கூடிய சீர்மரபினர் நலசங்கத்தின் காணொளி கூட்டத்தில், சென்னை திருவள்ளூரில் இன்று (28.12.20) காலை போராட்டத்தை தொட்டிய நாயக்கர் சமுதாயம் முன்னெடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.  இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட சென்னை, இராஜகம்பளத்தார் ஓபிசி-டிஎன்டி உரிமை மீட்புக்குழுவினர், இரவோடு இரவாக சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் மண்டலப் பொறுப்பாளரும், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியுமான திரு.யுத்தீஸ்வரன் தலைமையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே போராட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்து, அனைத்து சமுதாய மக்களையும் ஒருங்கிணைத்து வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். இந்தப்போராட்டத்தில் தொட்டிய நாயக்கர் சமுதாய்த்துடன் மறவர் சமுதாயத்தின் திரு.இராஜபாண்டி கடக முத்தரையர் மற்றும் வேட்டுவக்கவுண்டர் சமுதாயத்தைச்சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

உடனடியாக போராட்டத்தை ஏற்பாடு செய்து, போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி, தொட்டிய நாயக்கர் சமுதாயம் யாருக்கும் சளைத்தவர்களல்ல என்று நிரூபித்துக்காட்டிய திரு.யுத்தீஸ்வரன் மற்றும் உரிமை மீட்புக்குழுவினருக்கு, தலைவர் திரு.ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்தார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved