கோவை மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டார் திரு.கார்த்திக்!- தலைவர்கள் வாழ்த்துகள்.
மக்கள் உரிமை நீதி பொதுநலச்சங்கம், சென்னையைச் சேர்ந்த திரு.M.இராஜ்குமார். B.Com., D.TEd அவர்களை நிறுவனத்தலைவராகக்கொண்டு 2015 முதல் செயல்பட்டு வருகிறது.
இச்சங்கத்தின் பிரதான பணியாக, பொதுமக்களின் தனிப்பட்ட தாவாக்களை தீர்ப்பது, சாமானிய மக்களுக்கான நலத்திட்டங்கள் வழங்குவது, அரசின் மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பது போன்ற பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இதுதவிர, சுகாதாரம், மரம் நடுதல் மற்றும் நீர் வளத்தை பாதுகாப்பது போன்ற சமூகநலன் சார்ந்த சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறது. மேலும் சுற்றுப்புறச்சூழல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு, கருத்தரங்கம் போன்றவற்றை ஏற்பாடு செய்து நடத்திவருகிறது.
இச்சங்கத்தின் தொடக்ககாலம் முதல் இணைந்து பணியாற்றிவரும் ஈச்சனாரி திரு.T.கார்த்திக்.M.E., தற்பொழுது கோவை மாவட்ட அமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திமுகழகத்தின் தீவிர இணையதள செயல்பாட்டாளராக உள்ள திரு.கார்த்திக், இணையத்தின் வாயிலாக கட்சி சார்ந்த செய்திகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதுடன், இளைஞர்களை அதிகமாக கழகத்தில் உறுப்பினராக்கியதற்காக அதிக புள்ளிகளைப்பெற்று திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களிடம் சிறந்த வினையூக்கி என பாராட்டு சான்றிதழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுநல சங்கத்தின் அமைப்பாளராக கார்த்திக் தேர்வு செய்யப்பட்டதிற்கு, ஈச்சனாரி திரு.மகாலிங்கம், திரு.சிவக்குமார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.