🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அடைவதற்கு பொன்னுலகம் காத்திருக்கிறது! - மாமேதை மார்க்ஸ் நினைவுநாள்

பல்லாயிரமாண்டு கடந்த மானுட வரலாற்றில் 19-ஆம் நூற்றாண்டு வழங்கிய அருட்கொடை மனித குல விடுதலைக்கு வழிகாட்டிய மாபெரும் மேதை, தத்துவவியலாளர், படிப்பாளர், சிந்தனையாளர் காரல் மார்க்ஸ் அவர்களின் 139-வது நினைவுநாள் இன்று. 23 ஆண்டுகள் நூலகத்திலேயே வாழ்க்கையை கழித்து, 40 ஆயிரம் புத்தகங்களைப் படித்து குறிப்பெடுத்து, தான் புகைத்துப் போடும் சுருட்டுக்குக்கூட தான் எழுதும் புத்தகத்தின் வருவாய் போதாதென்று தெரிந்தும் மூலதனம் எனும் நூலை உலக மக்களுக்குக் கொடுத்தவர் காரல் மார்க்ஸ்.  இழப்பதற்கு ஏதுமில்லை அடைவதற்கு பொன்னுலகம் காத்திருக்கிறது உலகத் தொழிலாளர்களே வாருங்கள் என்று மார்க்ஸ் விடுத்த அறைகூவலுக்கு பின்னால் வறுமையிலும் அன்புகாட்டிய மனைவி ஜென்னியும், உற்ற நண்பன் பிரடெரிக் ஏங்கல்சும் அளித்த ஆதரவு காலம் மார்கஸுக்கு வழங்கிய கொடை.

மார்ச் 14 1883ல்   ப்ரடெரிக் அடால்ப் சோர்கே, நியுஜெர்சிக்கு செய்தியை எங்கெல்ஸ் அனுப்புகிறார். அதில் மார்க்ஸ் இன்று மறைந்தார் என்பது தந்தியில் உள்ள வாசகம்.

Liebknechtக்கு அன்றே எங்கெல்ஸ் கடிதம் எழுதுகிறார். என்னிடம் இருந்த ஒரே முகவரிக்கு அனுப்பிய  டெலிகிராம் மூலம் மார்க்ஸ் மறைவை அறிந்திருப்பீர்கள். மார்க்ஸ் உணவு எடுத்துக் கொண்டால் தேறிவந்துவிடலாம் என கடந்த வாரம் லண்டனில் உள்ள புகழ் வாய்ந்த டாக்டர் தெரிவித்திருந்தார். பசித்து சாப்பிட துவங்கியிருந்தார் மார்க்ஸ். ஆனால் இன்று மதியம் வீடு கண்ணீரால் சூழ்ந்தது. அவர் பலவீனமாக இருக்கிறார் என சொல்லி மாடிக்கு அழைத்தனர். டெமூத் இரு நிமிடம் மட்டுமே அங்கு இல்லை. 

மார்க்ஸ் அரைத்தூக்கத்தில் இருப்பது போல இருந்தது. மாடிக்கு சென்று பார்த்தேன். அது நிரந்தர உறக்கம் என தெரிந்தது.The greatest mind of the second half of our century had ceased to think. மருத்துவர்கள் ஆலோசனை பெறாமல் ஏன் இப்படி திடீரென முடிவு வந்தது என்பதை சொல்லமுடியாது. கடந்த 6 வாரத்தில் நான் போதுமான அளவு பார்த்துவிட்டேன். ஜென்னியின் இறப்பு இறுதி நெருக்கடிக்கு காரணமாகாமல் இல்லை. பாட்டாளிகளின் இன்றுள்ள இயக்கத்திற்கு அவர் மூலகர்த்தா. நாம் அவருக்கு கடன்பட்டுள்ளோம் என்ற வகையில் அக்கடிதம் சென்றது.

எட்வர்ட் பெர்ன்ஸ்டினுக்கும் எங்கெல்ஸ் கடிதம் அதே நாளில் எழுதுகிறார். எனது தந்தி கிடைத்திருக்கும்.  திடீரென கொடுமையாக அது நடந்துவிட்டது. அவர் இரண்டு நிமிடங்களில் சிந்திப்பதை நிறுத்திவிட்டார். அவர் தேறிவருவார் என டாக்டர்கள் தெரிவித்தனர். கொள்கை, நடைமுறைகளில் எவ்வளவு மதிப்புமிக்கமனிதர் அவர். அவருடன் நீண்டகாலம் உடன் இருந்தவர்களால்தான் இதை உணரமுடியும். அவர் பலவீனமாகி இன்று காலை இறந்துவிட்டார். அவரின் பலமான பார்வை தீர்க்கம் வருகிற ஆண்டுகளுக்காகஅவருடன் சேர்ந்தே புதைக்கப்படும். நாம் யாரும் அந்த அளவு திறமையானவர்கள் அல்லர்.  இயக்கம் இருக்கும். ஆனால் அந்தமேம்பட்ட மூளையின் வழிகாட்டுதல் இல்லாமல். அவர் பல தவறுகளிலிருந்து அவ்வப்போது கொள்கையை  விடுவித்தவராக, காத்தவராக இருந்தார்.இப்போது நள்ளிரவை நெருங்கப்போகிறது. மதியமும் மாலையிலும் தேவையானதை செய்துவிட்டு கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

Johann Philip Beckerக்கு மார்ச் 15 1883ல்எங்கெல்ஸ் கடிதம் எழுதினார். கடந்த இலையுதிர் காலத்தில் மார்க்சை பார்த்து சென்றதற்கு நன்றி. நேற்று மதியம் 2.45க்குஅவரைவிட்டு இரண்டு நிமிடம் மட்டுமே இல்லாதிருந்தோம். அவர் தனது சாய்வு நாற்காலியில் ஆழத்துயில் கொண்டார். நமது கட்சியின் மிகச்சிறந்த மூளைசிந்திப்பதை நிறுத்திக்கொண்டது. வலிமையான இதயம் துடிப்பதை நிறுத்திக்கொண்டது. Internal Hemorrahage ஆக இருக்கலாம். நீங்களும் நானும்தான் 1848ன் பழைய சகாக்கள். புல்லட்டுகள் சப்தமிடுகின்றன. நம்மில் ஒருவரையும் தாக்கலாம். ஆனால் அது நம்மை வெகுநாள் வலியில் கிடத்தாமல் வரட்டும்.

Frideric Adolp Sorge சோர்கேக்கு மார்ச் 15அன்று கடிதம் எழுதினார் எங்கெல்ஸ். தங்கள் தந்தி இன்று மாலை கிடைத்தது.மார்க்ஸ் உடல்நிலைப்பற்றி தொடர்ந்து தங்களுக்கு தெரிவிக்கமுடியவில்லை. அது மாறிக்கொண்டேயிருந்தது. அவரது துணைவியார் மரணத்திற்கு முன்னர் அக்டோபர் 1881ல் மார்க்ஸ் புளுரசியால்தாக்கப்பட்டார். 1882 பிப்ரவரியில் அவர் அல்ஜியர்ஸ் அனுப்பப்பட்டார். ஆனால் பயணத்தில் கடும் குளிரால் மறுபடியும்அவருக்கு நோய் ஏற்பட்டது. பின்னர் கோடை வெப்பத்திலிருந்து அவரை காத்திட அவர் மாண்டே கர்லோ மனோகோ அனுப்பப்பட்டார். பிறகு பாரிஸ் அருகில் அர்ஜெண்டில் பகுதியில் அவர் மகள் மேடம் லாங்கே (Longuet) வீட்டிற்கு சென்றார். Bronchitis தொல்லைகளிலிருந்து குணப்படுத்த முயன்றனர். குணம் அடைந்துவந்தார். ஆறுவாரங்கள் வெவே பகுதியில் இருந்துவிட்டு குணமாகி செப்டம்பர் 1882ல்திரும்பினார். இங்கிலாந்தின் தென் கடற்கரைப்பகுதியில் அவர் குளிர்காலத்தில் இருக்க அனுமதிக்கப்பட்டார். பனிக்காலம் வந்தவுடன்  வைட் தீவு பகுதியில் இருந்தார். ஆனால் அங்கு மழையின் காரணமாக அவர் பாதிக்கப்பட்டார். 

ஜென்னியின் மரணத்தை அடுத்து  பிராங்காட்டிஸ் தொல்லைகள் தொடர்ந்தது. Lung Abscess காரணமாக உடல் பலவீனமாகியது.  லண்டனில் தலைசிறந்த மருத்துவர் அவரை ரே லங்கெஸ்டர் அழைத்து செல்ல பரிந்துரைத்தார். தற்போது ஆறுவாரமாக கொடுமையான பய உணர்வுகள். அவரை பார்க்க உகந்த நேரமான மதியம் 2.30க்கு வந்தேன். வீடு கண்ணீரில் இருந்தது. Slight hemorrahage பலவீனமாக இருந்தார் என்றனர். அவரை தாயினும் மேலாக பார்த்து வந்த ஹெலன் டெமூத் அரைத்துக்கத்தில் இருக்கிறார் என தெரிவித்தார். நாங்கள் அறைக்குள் நுழைந்தோம். அவர் மீண்டு எழாத தூக்கத்தில் இருந்தார். அந்த இரண்டு நிமிடத்தில் அவர் அமைதியாக வலியேதுமின்றி போய்விட்டார். அவர் நாடித்துடிப்பும் மூச்சும் நின்றிருந்தது. எவ்வளவு கொடுமையானதாக இருந்தாலும் சுய தேற்றல் இயற்கையானது. முற்றுப்பெறாத வேலைகளை முடிக்கவேண்டும் என்கிற தவிப்புடன் இருந்து ஒன்றும் செய்யமுடியாது என்ற நிலை ஜெண்டிலான இறப்பை விட ஆயிரம் மடங்கு கசப்பானது.

Death is not a misfortune for him who dies but for him who survives என்றார் எபிகுரஸ். அற்பவாதிகளை நிர்மூலமாக்கிய அவர் இரண்டு நட்களில் அவரது மனைவியின் கல்லறைக்கு அருகில் அமைதியாக அடக்கமாவார்.  Mankind is shorter by a head, and the greatest head of our time. பாட்டாளிகளின் இயக்கத்தில் பிரஞ்சுகாரர்கள், ருஷ்யர்கள், அமெரிக்கர், ஜெர்மானியர் என அனைவரும் அத்தனை நெருக்கடியிலும் அவரிடம் வழிகாட்டலைப் பெற்றனர். ஆனால் என்ன இனி, தலமட்டஒளிவட்டங்கள், சிறு மூளைகள் எல்லாம் சுதந்திரமாக இருக்கும். நாம் எதற்கு இருக்கிறோம். தைரியத்தை இழக்காமல் இருப்போம்.

Friedrich Lessenerக்கு எங்கெல்ஸ் மார்க்ஸ்இறப்பு குறித்து கடிதம் எழுதினார். அக்கடிதமும் மார்ச் 15, 1883ல் எழுதப்பட்டது. நமது பழைய நண்பர் நேற்று  மூன்றுமணிக்கு மென்மையாக அமைதியாக நிரந்த தூக்கத்தில் ஆழ்ந்தார். உடனடி காரணம் உள்ஹெமரேஜ் ஆக இருக்கலாம். இறுதி சடங்கு சனிக்கிழமை மணி 12க்கு நடைபெறும். Tussy(மார்க்சின் மகள் எலியனார்) உங்களை வரச் சொல்கிறார். அவசரத்தில் இக்கடிதம் எழுதப்படுகிறது.

Der Sozialdemokrat, Zurich பத்திரிக்கையில் மே3 1883ல் மார்க்ஸ் இறப்பு குறித்து தெளிவுபடுத்தி எங்கெல்ஸ் எழுதினார். நமது மாபெரும் கோட்பாடுகளின் ஆசான் பற்றி தவறான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. சில விவரங்களை தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. மார்க்ஸ் லிவர் தொல்லைக்கு மருத்துவம் தரப்பட்டது. அவருக்கு வயிற்றுவலி, தலைவலி, இன்சோம்னியா அவதி இருந்தது. தொடர்ந்த இருமல் காரணமாக தொண்டை வலியாலும் தூக்கமில்லாமல் அவதிப்பட்டார். பிராங்காட்டிஸ் தாக்கத்தை அவர் பெரிதுபடுத்திக் கொள்ளவில்லை. இவை அவரது மரணத்திற்கு காரணமாயின.ஜென்னியின் மரணத்திற்கு 4 அல்லது 5வாரங்களுக்கு முன்பாக ப்ளுரசி தொல்லை.ஆரம்ப நிமோனியா அறிகுறிகள் இருந்தன. அவர்  வைட் தீவு, அல்ஜீரியா பகுதிகளுக்கு குணமடைய சென்றார். ஆனால் தொடர்குளிர் மழையால் குணமடைய முடியாமல் நிலைமை மோசமானது. மாண்டே கார்லோ சென்று பிறகு மகள் லாங்கெ வீட்டில் அர்ஜெண்டில் பாரிஸ் பகுதியில் கோடையைக் கழித்தார்.  கடுமையான பிராங்காடிஸ் நோயிலிருந்து  குணமாகி வருகிறார் என டாக்டர்கள் கருதினர்.

பிறகு வெவே என்கிற ஜெனிவாஏரிப்பகுதிக்கும் அதன் பின்னர் (லண்டனில் வேண்டாம் என) தென்கடலோரப்பகுதியிலும் அவர் இருந்தார். செப்1882ல் குணமாகி லண்டன் திரும்பினார். 300அடி உயர்  ஹாம்ஸ்டெட் குன்றில் கூட என்னுடன் சிரமம் இல்லாமல் ஏறினார். நவம்பர் பனிமூட்ட பயத்தால் அவர் வைட் தீவு அனுப்பப்பட்டார். அங்கும் குளிர் , இருமல் அவதியால் பலவீனமானார். படுக்கையில் ஒய்வு எடுக்கும் நிலை ஏற்பட்டது. மார்க்சின் மகள் திருமதி லாங்கே மறைந்தார். மறுநாள் ஜனவரி 12,(1883) அன்று மார்க்ஸ் லண்டன்வந்தார். ஆகாரம் எடுக்கமுடியவில்லை. பால்தான் குடிக்க முடிந்தது. Lungs Tumor பிப்ரவரியில் ஏற்பட்டது. கடந்த 15மாதங்களாக மருந்துகள் கூட பலனளிக்கவில்லை. பிராங்கடிஸ் தொல்லையிலிருந்து விடுவிக்க டாகடர்கள் முயற்சி பலனளித்தது. ஆகாரம் விழுங்கக்கூடிய முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால் அன்று 2 மணிக்கு வீடு கண்ணீரால் சூழ்ந்தது.

மார்ச் 14 1883 அன்று காலை அவர் பால், சூப், சிறிது ஒயின் எடுத்துக்கொள்ள முடிந்தது. அவரின் விசுவாச  டெமுத், மார்க்சின் அனைத்து குழந்தைகளையும் 40 ஆண்டுகளாக உடன் தங்கி வளர்த்தவர், அவர் அரை தூக்கத்தில் இருக்கிறார், வாருங்கள் பார்ப்போம் என அழைக்கிறார். நாங்கள் உள்ளே சென்று அவர் நிரந்தர துயில் கொண்டதை பார்த்தோம். இதைவிட அமைதியான சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடியான மென்மையான சாவு வராது. 

மார்க்சை புதைக்கும் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் வெறும் 11 பேர். அப்போது ஏங்கெல்ஸ் சொன்னது "இப்போது சொற்ப மனிதர்களால் நேசிக்கப்படுபவராக மார்க்ஸ் இருக்கிறார். ஆனால் ஒருகாலத்தில் உலகமே மார்க்ஸை கொண்டாடும். உலகத்துக்கே மார்க்ஸ் வழிகாட்டியாக இருப்பார்".


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved