🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ராக்கெட் வேகத்தில் உயரும் விலைவாசி - என்னவாகும் கடன் வாங்குவோர் கதி; வங்கியாளர் சிவக்குமார் பேட்டி

இஇந்தியாவில் ஆண்டு பணவீக்க விகிதம் 2022 ஏப்ரலில் 7.79% ஆக அதிகரித்திருந்தது. இது 2014 மே மாதத்திற்குப் பிறகு மிக அதிகமாகும். ஏற்கனவே சந்தை முன்னறிவிப்புகள் 7.50% ஆக கணித்திருந்த நிலையில் அதையும் தாண்டி 7.79% ஆக உயர்ந்தது. உணவுப் பணவீக்கம் 7வது மாதமாக அதிகரித்தது 8.38% ஆக இருந்தது. இதற்கு எண்ணெய்கள் மற்றும் கொழுப்புகள் (17.28%), காய்கறிகள் (15.41%) மற்றும் மசாலாப் பொருட்கள் (10.56%) ஆகியவை மிகப்பெரிய உயர்வை பதிவு செய்ததே காரணமாக சொல்லப்படுகிறது. இதேகாலகட்டத்தில் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு செலவுகள் (10.91%), சுகாதாரம் (7.21%), காலணிகள் (12.12%) மற்றும் ஆடைகள் (9.51%) ஆகிய துறைகளின் உயர்வும் கூடுதல் அழுத்தத்தை தந்தது. பணவீக்கம் மத்திய வங்கியின் 2% முதல் 6% வரையிலான சகிப்புத்தன்மை வரம்பை விட அதிகமாக இருந்தது. 

2022-ஜனவரியில் 6.01 ஆக இருந்த நாட்டின் பணவீக்கம், பிப்ரவரியில் 6.07%, மார்ச்சில் 6.90%, ஏப்ரலில் புதிய உச்சமாக 7.79% ஆக இருந்தது. இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் பல்வேறு நாடுகளில் பணவீக்கம் கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த ஏபரல் மாதம் 11.3 %ஆக இருந்த ஆண்டு சராசரி பணவீக்க விகிதம் மேமாத காலத்தில் 14.2% ஆஅக உயர்ந்துள்ளது. பணவீக்கம் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பதைத் தொடர்ந்து வழக்கத்திற்கு மாறாக திட்டமிடாத கூட்டத்தை கடந்த மே 2 முதல் 4 வரை இந்திய ரிசர்வ் வங்கி ஆலோசனை நடத்தியது. இதன் முடிவில் ரெப்போ ரேட் விகிதத்தை 0.40% உயர்த்தி ரிசர் வங்கி ஆளுநர் சக்திஸ்கந்த தாஸ் அறிவித்தார்.  

பொதுவாக தொடர்ந்து ஆறுமாதங்களுக்கு மேல் நாட்டின் பணவீக்கம் 6% க்கு மேல் உயராமல் பார்த்துக்கொள்வது ரிசர்வ் வங்கியின் பொறுப்பாகும். தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வந்தால் விலைவாசி கட்டுக்கடங்காமல் உயரும் என்பதால் பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியமாகிறது. மேலும் அமெரிக்கா உள்ளிட்ட பலநாடுகளும் வட்டி விகிதத்தை உயர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே மத்திய ரிசர்வ் வங்கி மீண்டும் ரெப்போ வட்டி விகிதத்தை 0.50% உயர்த்துவதாகவும், இது உடனடியாக அமுலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளது. இந்த உயர்வு காரணமாக ரெப்போ ரேட் விகிதம் 4.90 சதவீதமாக நிலைபெற்றுள்ளது.ஒருமாத இடைவெளியில் ரிசர்வ் வங்கி 0.9% வட்டி விகிதத்தை உயர்த்தியிருப்பதால், வீடு மற்றும் வாகனக்கடன்களுக்கான வட்டியை வங்கிகள் உயர்த்தத் தொடங்கியுள்ளன.

இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank Of India) பிற வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் ரெப்போ ரேட் (Repo Rate) எனப்படுகிறது. இதேபோல், வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருப்பு வைக்கும் தொகைக்கு, ரிசர்வ் வங்கி வழங்கும் வட்டி  ரிவர்ஸ் ரெப்போ (Reverse Repo) எனப்படுகிறது.

கொரோனோ பெருந்தொற்றுக்குப்பின் சூடு பிடிக்கத்தொடங்கிய தொழில்துறை, எரிபொருள் விலையேற்றத்தின் காரணமாக மூலப்பொருட்களின் விலை உயர்வால் கட்டுமானம் உள்ளிட்ட துறைகளிலும்,  நூல் விலையேற்றத்தாலும் ஜவுளித்தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடன்களுக்கான வட்டி உயர்வு மேலும் தொழில்துறையை முடக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து வங்கி ஆலோசகர் சிவக்குமார் அவர்கள் தொட்டியநாயக்கர்.காம் இதழுக்கு அளித்த பேட்டி பின் வருமாறு,

 கேள்வி :  வட்டி உயர்வு, கட்டுமான பொருட்கள் விலை ஏற்றத்தால் சாமானிய மனிதர்களின் வீடு கட்டும் கனவு என்ன ஆகும்? 

 பதில் : கண்டிப்பாக பாதிக்கப்படும் தான். ஆனால் விலையேற்றம் என்பது தவிர்க்கமுடியாதது.. இந்த விலையேற்றம் கட்டுமான பொறியாளர்களையோ அல்லது தொழிலாளர்களையோ சார்ந்தது இல்லை, இது அரசின் கொள்கை முடிவுகள் மற்றும் புறக்காரணிகளால் மட்டுமே நிர்மாணிக்கப்படுகிறது. 

உதாரணமாக சொல்லவேண்டுமென்றால் 2020இல் ஒரு கொத்தனாரின் சம்பளம் 750இல் இருந்து 900வரை இருந்தது, இன்று அதே கொத்தனாரின் சம்பளம் 1000 ரூபாயை தொட்டுவிட்டது. பெரியாள் எனப்படும் கையாள் சம்பளமும் அதேபோல 800 ரூபாயை தாண்டிவிட்டது. இதுபோதாதென்று டீசல் விலை உயர்வு, சுங்கக்கட்டண உயர்வு காரணமாக செங்கல்,மணல், சிமெண்ட் என அனைத்துமே தங்கள் பங்கிற்கு விலை ஏற்றத்தை கண்டிருக்கின்றன.

இந்த சூழ்நிலையில் தற்பொழுது வீட்டு கடனுக்கான வட்டியும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பது கண்டிப்பாக கூடுதல் சுமையாகத்தான் இருக்கும். இதனால் வீட்டிற்கான கட்டுமான செலவுகள் அதிகரிப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. தற்போதய சூழலுக்கு ஏற்ப வீட்டின் ஒரு சதுர அடிக்கு ரூ.2000 முதல் ரூ.3500 ரூபாய் வரைக்கும் கட்டுமானத்தின் தரம் மற்றும் வீட்டு உரிமையாளரின் தேவைக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகின்றது.

தமிழில் ஒரு பழமொழி உண்டு .."ஏறிய விலைவாசிகள் இறங்கா".. அதற்கு ஏற்ப சரியான முறையில் திட்டமிட்டு உங்கள் கட்டுமான வேலைகளை தொடங்குங்கள்.. பொருட்களின் விலை குறையும் என்று காத்திருப்பது உங்கள் விருப்பம். கடைசியாக ஒரு பழமொழியை சொல்லி முடிக்கிறேன். "காற்றுஉள்ளபோதே தூற்றிக்கொள்". நன்றி .

கனவு இல்லம் நிறைவேற ...

Sivakumar.V.K
Home Loan Consultant,
(Home Loans, Home Loans To NRIs, Car Loans)
Coimbatore,Pollachi, Udamalpet,
Mobile --09944066681 Call or sms
write @ siva19732001@gmail.com


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved