🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நம்மில் ஒருவர் நெல்சன் மண்டேலா! - சர்வதேச நெல்சன் மண்டேலா தின சிறப்பு

தென் ஆப்பிரிக்காவிலுள்ள சோசா பழங்குடி இனத்தில் 1918 ஜூலை திங்கள் 18-ஆம் தேதி பிறந்தவர் நெல்சன் மண்டேலா. மிகவும் பின்தங்கிய சமூகம் என்றாலும் இவரது தந்தை சோசா பழங்குடி இன மக்களின் தலைவராக இருந்தபடியால், இளம் வயதில் ஆடுமாடுகளை மேய்த்த நிலையிலும், பள்ளி செல்லும் வாய்ப்பைப்பெற்றார் மண்டேலா. பள்ளி சென்றவுடனே மண்டேலா வாழ்க்கையில் நடந்த முதல் மாற்றம்  ரொலிலாலா மண்டேலா என்ற பெயரோடு நெல்சன் என்பதை சேர்த்து "நெல்சன் ரொலிலாலா மண்டேலா" ஆக மாற்றினார் ஆசிரியர். கல்வியின் மீது நெல்சனுக்கு இருந்த ஆர்வமே பின்னாளில் லண்டன் சென்று படிக்கவும், சட்டம் படிக்கவும் அடித்தளமாக இருந்தது.

நெல்சன் பிறந்த தென்னாப்ரிக்காவில் ஆப்பிரிக்காவின் பல பகுதியைச் சேர்ந்த பழங்குடி மக்கள் குடியேறி லட்சம் ஆண்டுகளுக்கு மேல் ஆனதாக சொல்லப்படுகிறது. ஐரோப்பியனரோடு இருந்த தொடர்பே பெரும்பான்மை குடியேற்றம் நடைபெற்றதற்கு காரணமாக இருந்துள்ளது. மண்டேலா சார்ந்த சோசா மற்றும் சூலு ஆகிய இரண்டு பழங்குடி இனக்குழுக்களே தென்ஆப்ரிக்காவின் மொத்த வரலாறும்.

1652-இல் கேப் கடல்வழி கண்டுபிடிக்கப்பட்டது டச்சுக் கிழக்கிந்திய கம்பெனி கேப் டவுனை உருவாக்கவும், அதன் பின்னர் 1806 முதல் பிரித்தானிய காலனி நாடாகவும் ஆக காரணமாக இருந்தது. ஏற்கனவே ஐரோப்பிய குடியேற்றத்தின் மூலம் டச்சு, ஃப்ளமிஷ், ஜெர்மன், பிரஞ்சு (போயர்கள்) ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், பிரித்தானிய குடியேற்றம் குழுக்கழுக்கிடையே மோதல்கள் உருவாகிட போதுமானதாக இருந்தது. துவக்கத்தில் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப்பகுதியைக் கைப்பற்ற பிரித்தானியர்களுக்கும், சோசா, சூலு, ஆப்ரிகானர் குழுக்களிடையே கடும் மோதல் நிலவி வந்தது.

முதலில் குடியேற்றப்பகுதிகளுக்காக தொடங்கிய மோதல், தென்னாப்ரிக்காவில் குவிந்துள்ள வைரம், தங்கம் போன்ற கனிமவளங்களை கைப்பற்றுவதற்கான போராக மாறி, ஆங்கிலேயர்களும்- ஐரோப்பிய குடியேற்றவாதிகளான போயர்களும் மோதிக்கொண்டனர். போரில் போயர்களின் தோல்வி ஆங்கிலேயரின் ஆதிக்கத்திற்கு வழிவகுத்த அதேவேளையில், ஐரோப்பிய வெள்ளையின தென்னாப்பிரிக்கர்கள்  மத்தியில்  பிரித்தானிய எதிர்ப்புக்கொள்கை உருவாக காரணமாக இருந்தது. வெள்ளையினம், நிறத்தவர்கள், கருப்பினம் என்று மூன்று பிரிவிகளாக தென்னாப்ரிக்கா பாகுபாடாகியது. டச்சு, பிரித்தானிய, பழங்குடிகள் என்றில்லாமல் நிறம் முதன்மை பெற்று, இக்குழுக்களுக்கிடையேயான மோதல்கள், விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், பிற நிறத்தினர் மீதான ஆதிக்கம் "நிறவெறி" ஆக வரலாற்றில் இடம்பெற்றது.

தொடக்கத்தில் நிறவெறிக்கு எதிரான வன்முறையற்ற அறவழிப் போரில் நம்பிக்கை கொண்டு போராடிய தலைவர்களில் முக்கியமானவரான நெல்சன் மண்டேலா, பின்னாளில் ஆப்ரிக்க காங்கிரஸின் இராணுவப்பிரிவுக்கு தலைமையேற்று நிறவெறி அரசுக்கு எதிராக கொரில்லா போரை வழிநடத்தியவர், தேசத்துரோக குற்றச்சாட்டின் கிழ் 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். தேசத்துரோகி என்று குற்றம்சாட்டப்பட்டு  இருபத்தியேழு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் தென் ஆப்ரிக்காவின் குடியரசுத் தலைவர் ஆகியதும், கொரில்லா போராளிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டதும் வரலாற்றில் நடைபெற்ற வினோதங்கள்.

79 விழுக்காடு வாழும் பூர்வகுடி கருப்பின மக்கள் 9 விழுக்காடு உள்ள வந்தேறி வெள்ளையின ஆட்சியினரால் வாக்குறிமை மறுக்கப்பட்டு, நிலவுடமை பறிக்கப்பட்டு, உள்நாட்டுப்பயணங்கள் தடுக்கப்பட்டு, அடக்கி, ஒடுக்கப்பட்டபொழுது, வெகுண்டெழுந்து கருப்பின இளைஞர்களை ஒன்று திரட்டி வெற்றிகண்டவர் 21 வயதே ஆன நெல்சன் மண்டேலா.

உலகில் நடைபெற்ற புரட்சிகள் அனைத்தும் வர்க்க அடக்குமுறை, நிறவெறி அடக்குமுறை, மொழி அடக்குமுறைகளுக்கு எதிரானதே. இந்தியாவிலும் 65 விழுக்காடுள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களுக்கு எதிரான அடக்குமுறை அமைதியாக சத்தமின்றி பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 65 விழுக்காடு மக்களுக்கு உச்சநீதி மன்றங்களில், உயர்நீதி மன்றங்களில், துறைச் செயலர்கள் அளவில், இராணுவ உயர் பதவிகளில், பொதுத்துறை நிறுவனங்களில், தனியார் நிறுவனங்களின் மேல் அடுக்குகளில் சமூகநீதியின்றி சுரண்டல்கள் தொடர்கிறது. இந்தச் சுரண்டலுக்கு எதிராக ஒவ்வொரு பிற்படுத்தப்பட்ட குடிகளிலும் மண்டேலாக்கள் உருவாகட்டும். நாளைய மண்டேலாக்களை உருவாக்க ஆகஸ்டு 07-இல் மதுரையில் சமூகநீதி மாநாட்டில் சங்கமிப்போம். போராடத்துணியாத இனம் மெல்ல சாகும்.

நோபல் பரிசு, பாரத ரத்னா உள்ளிட்ட பல சர்வேதச விருதுகள் பெற்ற நெல்சன் மண்டேலாவின் பிறந்த தினமான ஜூலை 18 ஐ, சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக ஐநா அறிவித்துள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved