🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமூகநீதி மாநாட்டு தீர்மானங்கள் முதல்வரை சந்தித்து வழங்க ஏற்பாடு!

கடந்த 7-ஆம் தேதி சமூகநீதி கூட்டமைப்பு மதுரையில் நடத்திய சமூகநீதி மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. இம்மாநாட்டில் மத்திய, மாநில அரசுகளை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்துவது உள்ளிட்ட 100 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இத்தீர்மானங்களை மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரிடம் நேரடியாக வழங்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இதுசம்மந்தமாக சமூகநீதி கூட்டமைப்பு நிர்வாகிகள் முதல்வரை சந்தித்து தீர்மானங்களை வழங்க நேரம் ஒதுக்கக்கோரி கடிதம் வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் அவரிடம் நேரடியாக வழங்கப்படவுள்ளது. சமூகநீது மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் பின்வருமாறு..  

1.ஓபிசி மக்கள் தொகை கணக்கெடுப்பைக் கடந்த 90 ஆண்டுகளாக நடத்தாததால் அம்மக்களுக்கு உரிய கல்வி, வேலைவாய்ப்பு, வளர்ச்சித் திட்டங்களில் உரியப் பங்கு கிடைக்கவில்லை. எனவே அவர்களின் மேம்பாட்டிற்கு உரியத் திட்டமிட்டு, மத்திய அரசு வரும் 2021ல் காகிதமில்லா கணக்கொடுப்பில் ஓபிசி சாதிவாரி புள்ளிவிபரங்களும் சேர்க்கப்பட வேண்டும் என்று வற்புற்த்தித் தீர்மான நிறைவேற்றப்படுகிறது.

2. தமிழக அரசு புள்ளிவிபர சேகரிப்புச் சட்டம் 2008-ன் படி சாதிவாரி, சமூக, கல்வி, பொருளாதாரக் கணக்கெடுப்பு நடத்தி தமிழகத்தில் BC/MBC/DNT/SC/ST சமூகங்களுக்கு வழங்கப்பட்டு வரும் 69% இடஒதுக்கீட்டைக் காக்க வற்புறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

3.மத்திய அரசு 2011-இல் நடத்திய சாதிவாரி சமூகப் பொருளாதார கணக்கெடுப்பு புள்ளிவிபரங்களை உடனே வெளியிட வற்புறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

4. மத்திய மாநில அரசுகள் புள்ளிவிபர அடிப்படையில் சமூகநீதி அறிஞர்களியக் கொண்ட குழு அமைத்து, சட்டப்படியான வகுப்புவாரி தொகுப்பு இடஒதுக்கீட்டு முறையைச் செயல்படுத்த வற்புறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

5. இந்திய அரசமைப்புச்சட்டத்தின் உன்னத நோக்கமான சமதர்ம சமுதாயத்தை உருவாக்க வகுப்புவாரி இடஒதுக்கீடு அடிப்படை உரிமை என்றும் அது எல்லா சமூகங்களுக்கான சம பகிர்மானம் என்றும் தெளிவுபடுத்த அரசமைப்புச்சட்டத்தில் திருத்தம் செய்ய வற்புறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

6. 50% இடஒதுக்கீடு உச்சவரம்பை நீக்க அனைத்து சமூகத்தினருக்கும் உரிய வகுப்புவாரி இடஒதுக்கீடு வழங்க அரசமைப்புச்சட்டத்தில் திருத்தம் செய்ய வற்புறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

7. இடஒதுக்கீடு அரசுப் பணிகள், கல்வியில் மட்டும் என்பதை மாற்றி அரசின் எல்லாத்துறைகளிலும் இடஒதுக்கீடு எல்லா நிலைகளிலும் இடஒதுக்கீடு வழங்க அரசமைப்புச்சட்டத்தில் திருத்தம் செய்ய வற்புறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

8. OBC/DNT மக்களுக்கும் பணிமூப்புடன் பதவி உயர்விலும் இடஒதுக்கீடு வழங்கிட அரசமைப்புச்சட்டத்தில் திருத்தம் செய்ய வற்புறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. 

9. எல்லா தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வழங்க அரசமைப்புச்சட்டத்தில் திருத்தம் செய்ய வற்புறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

10. அரசமைப்புச்சட்டத்தில் நிர்வாகத்திறமை பாதிக்காத அளவிற்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நிபந்தனை அரசமைப்புச்சட்டத்தின் சமதர்ம கோட்பாட்டிற்கு எதிரானது மட்டுமல்ல இடஒதுக்கீட்டை இழிவாக சித்தரிக்கும் செயல் (it is derogatory and assault on the dignity of the classes), திறமை என்பது முயற்சியிலும் பயிற்சியிலும் வருவது ஆதாரமற்ற, அர்த்தமற்ற, கற்பனையான தப்பெண்ணம் எனவே இந்த நிபந்தனையை உடனடியாக நீக்க,  அரசமைப்புச்சட்டத்தில் திருத்தம் செய்ய வற்புறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

11. பெண்களுக்கு 50 % கிடைமட்ட இடஒதுக்கீடு வழங்க அரசமைப்புச்சட்டத்தில் திருத்தம் செய்ய வற்புறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

12. ஓபிசி மக்களூக்கு வழங்கியுள்ள 27% இஅடொதுக்கீடு 12%ம் கூட பூர்த்தியாகாத நிலையில் ஓபிசி கிரீமிலேயர் வருமான அளவீடுகளில் அரசு/பொது/தினியார்த்துறையில் பணிசெய்யும் ஓபிசி மக்களில் மாதசம்பளத்தை சேர்க்கவும், விவசாய நில அளவிலும் மாற்றங்களியக் கொண்டு வந்து கோடான  கோடி ஓபிசி பணியாளர்கள்/விவசாயிகளின் உரிமைகளியப் பறிக்க, சர்மா குழு வழங்கியுள்ள பரிந்துரையை அரசு ஏற்கக்கூடாது என்ன்று வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

13.கிரீமிலேயர் அளவீடுகளில் ஆண்டு வருமான அளவீட்டை முழுமையாக நீக்க வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

14.கிரீமிலேயர் குளறுபடிகளைச் சரி செய்ய ஓபிசி உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழுவை உடனே நியமிக்க வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

15. தனியார் நிறுவனத்தில் நிரந்தரமில்லா நிலையில் சம்பளத்திற்கு பணி செய்பவர்களின் மாதச் சம்பளத்தை கிரீமிலேயர் வருமான வரம்பில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

16. சட்டவிரோதமாக, முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கிய மத்திய அரசை வன்மையாகக் கண்டிக்கின்றோம். அரசியல் போதிய பிரதிநிதித்துவம் இல்லையென்றால் மட்டுமே இடஒதுக்கீடு வழங்க வேண்டும். கடந்த 70 ஆண்டுகளாக 100% மத்திய அரசு செயலாளர்கள் பதவிகளை முன்னேறிய வகுப்பினர் மட்டுமே அனுபவித்துக்கொண்டும் மற்ற எல்லா பணிகளிலும் 70% பிரதிநிதித்துவம் ஒருக்கும் போது முன்னேறிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க அரசமைப்புச்சட்டத்தை திருத்தியது, சமூகநீதியின் அரிச்சுவடி அறியாதவர்களின் செயல். எனவே மத்திய அரசு அந்த அரசியல் அமைப்புச்சட்டத்திற்கு எதிரான, 103-வது அரசமைப்புசட்டத்திருத்தம் 2019-ஐ முழுமையாகத் திரும்பப் பெற வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

17.மத்திய மாநில அரசுகள் இடஒதுக்கீடு குறித்து வெள்ளையறிக்கை வெளியிட வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

18. OBC/DNT இடஒதுக்கீட்டை மத்தியில் 65% ஆகவும் மாநிலத்தில் 75% ஆகவும் உயர்த்த வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

19. நீதித்துறை, இராணுவம், துணைராணுவம், அறிவியல்துறை உட்பட அர்சின் எல்லாத்துறையிலும் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

20. மத்திய, மாநில தனியார்த்துறையில் இடஒதுக்கீடு வழங்கச் சட்டம் இயற்ற வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

21. இடஒதுக்கீட்டை முறைப்படுத்த மத்திய மாநில அரசுகள் முழுமையான இடஒதுக்கீட்டுச்சட்டம் இயற்ற வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

22. மத்திய கல்வி நிறுவனச் சட்டம் 2006-ஐ திருத்தி எல்லா கல்வி நிறுவனத்திலும் ஓபிசிக்கு இடஒதுக்கீடும் மாநில  இடங்களில் மாநில அரசின் இடஒதுக்கீட்டு   விகிதப்படி இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்ய வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

23. மத்திய கல்வி நிறுவனச் சட்டம் 2006-ல் பிற பிரிவினருக்கு இடஒதுக்கீடு அதிகரிக்கும் போது ஓபிசி இடங்களைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற விதி பகல் கொள்ளை. எனவே அதை உடனடியாக நீக்க வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

24. நீதியரசர் ஈஷ்வரய்யா தலைமையிலான தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் 2015-ம் ஆண்டு, வகுப்புவாரித் தொகுப்பு ஓபிசி இடஒதுக்கீட்டு பரிந்துறையை அப்படியே செயல்படுத்த வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

25.நீதிபதி ரோகிணி ஆணையம் விரைவில் அறிக்கை சமர்ப்பித்து வகுப்புவாரித் தொகுப்பு ஓபிசி இடஒதுக்கீட்டித் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

26. பிற்படுத்தப்பட்டோர் (BC/MBC/DNT) மேம்பாட்டிற்காக காகா கலேல்கர் ஆணையம் 1955லும், மற்றும் பி.பி. மண்டல் ஆணையம் 1980லும் வழங்கியுள்ள படித்துரைகளை முழுமையாகச் செயல்படுத்த வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

27.தேசிய அளவில் DNT/NT/SNT மக்களின் மேம்பாட்டிற்காகப் போடப்பட்ட பாலகிருஷ்ண ரெங்கே ஆணையம் 2008லும் மற்றும் பிகுராம்ஜி இதாதே ஆணையம் 2019லும் வழங்கியுள்ள பரிந்துரைகளை முழுமையாகச் செயல்படுத்த வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

28. மத்திய மாநில அரசுகளின் சாதிப்பட்டியல்களில் பல்வேறு குழப்பங்களும் குறைபாடுகளும் குறிப்பாக நூற்றுக்கணக்கான  விளிம்புநிலைச் சமூகங்கள் எந்த சாதிப்பட்டியலிலும் சேர்க்கப்படாமலும், சாதிச்சான்றிதழ் முறைகேடுகள், சாதிச்சான்று வழங்க மறுப்பது, புலம்பெயர்ந்தவர்கள் எங்கும் இடஒதுக்கீட்டின் வாய்ப்பை பெறமுடியாத நிலை போன்ற பல சிக்கல்களையும் இன்னல்களையும் களைய சாதிப்பட்டியல்களை முறைப்படுத்த மத்திய மாநில அரசுகள் நிபுணர் குழுவை உடனே அமைக்க வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

29. மாநில அரசு சாதிச்சான்றிதழ் வழங்கத் தெளிவான வரையறை, விதிமுறையுடன் கூடிய சட்டம் இயற்ற வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

30. தேசிய அளவில் DNT சாதிப்பட்டியலை இறுதி செய்ய நியமிக்கப்பட்டுள்ள நிதி ஆயோக் முன்னாள் துணைத்தலைவர் முனைவர் ராஜீவ் குமார் தலைமையிலான மூவர் குழு விரைவில் DNT பட்டியலை உறுதிசெய்ய வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

31. ஒரே நாடு, ஒரே சாதிச்சான்றிதழ், ஒரே முறை வழங்க வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

32. புலம்பெயர்ந்த மக்களுக்கு அந்தந்த பூர்வீக மாநிலத்தில் வசிப்பிட நிபந்தனையின்றி ஓபிசி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

33. மத்திய/ மாநில எல்லா வளர்ச்சி திட்டங்களிலும் ஓபிசி மக்களின் மேம்பாட்டிற்கு போதுமான நிதி ஒதுக்கீடு மற்றும் எல்லா திட்டங்களிலும் ஓபிசி மக்களுக்கு உரியப் பகிர்மானம் வழங்க வற்புறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

34. ஓபிசி மக்களின் உரிமைகள் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை முறையாகக் கண்காணிக்கவும், ஓபிசி மக்களுக்கு எதிரான காவல்துறை அத்துமீறகள், மனித உரிமை மீறல்கள் போன்ற பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் தீர்வுகாண தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அலுவலகங்களை நாட்டின் எல்லா பகுதிகளிலும் உடனடியாக நிறுவ வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

35. வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் பொய்வழக்குகளைத் தடுக்க, தண்டிக்க உடனடி சட்டத்திருத்தம் கொண்டுவர வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

36. உரிமைமீறல்களால் பாதிக்கப்படும் ஓபிசி/DNT மக்களுக்கு உடனடியாக உரிய இழப்பீடு வழங்கச் சட்டம் இயற்ற வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

37. மத்திய அரசு வழங்கும் ஒபிசி/DNT சமூக மேம்பாட்டுத் திட்டங்களான கல்வி உதவித்தொகைத் திட்டம், மாணவர்கள் விடுதித் திட்டம், வெளிநாட்டுக் கல்வி உதவித்திட்டம், பொருளாதார நிதி உதவி திட்டம் போன்ற திட்டங்களைத் தமிழகத்திற்கும் உரிய அளவில் வழங்க வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

38. சமூக நீதிக்கு எதிரான விளிம்புநிலைச் சமூகங்களைப் பாதிக்கின்ற ஐக்கிய நாடுகளின் இனப்பாகுப்பாட்டிற்கு எதிரான அமைப்பும், தேசிய மனித உரிமை ஆணையமும் பரிந்துரைத்துள்ள பழக்கவழக்க குற்றவாளிகள் சட்டத்தை முழுமையாக நீக்கவும், வனச்சட்டம், விலங்குவதைச்சட்டம் போன்ற அனைத்துச்சட்டங்களிலும் பூர்வகுடி மக்களின் வாழ்வுரிமைகளைப் பாதிக்கின்ற பிரிவுகளை உடனே நீக்கவும் வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

39. அர்சியல் பிரதிநிதித்துவம் பெற முடியாத எண்ணிக்கையில் குறைவான நாட்டின் எல்லா பகுதியிலும் பரவியுள்ள சேவைச் சமூகங்கள் உட்பட அனைத்து சமூகங்களுக்கும் நியமனப் பிரதிநிதித்துவம் அரசின் எல்லா தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புக்களிலும் வழங்க சட்டம் இயற்ற வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

40. மத்திய அரசு இந்தியாவில் உள்ள பூர்வகுடி இனங்களைக் கண்டறிந்து, அங்கீகரித்து அவர்கள் முன்னேற்றத்திற்காகப் போடப்பட்டுள்ள அனைத்து சர்வதேச சட்டங்களையும் உடனே செயல்படுத்த வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

41. ஓபிசி காலி இடங்களை நிரப்ப ஓபிசி பிரிவில் தகுதியானவர்கள் இல்லை என்றால் எந்த இடங்களை கிரீமிலேயர் ஓபிசி பிரிவினருக்கே வழங்க வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

42. எல்லாப் போட்டித்தேர்வு/நேர்முகத்தேர்வு அமைப்புகளிகும் மூன்றில் இரண்டு மடங்கு ஓபிசி அதிகாரிகளை நியமனம் செய்ய வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

43. தேர்வு மூலம் நியமனம் மற்றும் தேர்வில்லாத நியமனங்களில் தற்போது நடைமுறையில் இருக்கும் வேறு வேறு இடஇதுக்கீடு அளவை எல்லாப் பணிகளிலும் ஒரே விகிதமாக வழங்க வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

44. தூதர்பணி, ஆணையத்தலைவர், உறுப்பினர்கள், வாரிய தலைவர், உறுப்பினர்கள் போன்ற எல்லா நியமனப்பணிகளிலும் ஓபிசி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

45. அமைச்சர்கள், துறைச்செயலாளர்கள் போன்ற எல்லா உயர்நிலை நிர்வாக அமைப்புகளிலும் ஓபிசி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

46. அரசு ஆலோசகர்கள்/ வெளியாட்கள் மூலம் பணி போன்ற இலட்சக் கணக்கான வேலைகளில் ஓபிசிக்கு இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

47.பொதுத்துறை நிறுவனங்களில் இயக்குனர் குழுமங்களில் (Board of Directors) நியனமங்களிலும் ஓபிசி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

48. அனைத்து அரசு ஒப்பந்தத் தொழிலாளர்கள் நியமனங்களில் (Contractual Workers) ஓபிசி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

49. அனைத்து அரசு ஒப்பந்தப்பணிகளிலும் (Contracts) ஓபிசி பிரிவினருக்குமூன்றில் இரண்டு மடங்கு வழங்க வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

50. மத்திய அரசில் இணையச்செயலாளர் அந்தஸ்தில் பக்கவாட்டு நுழைவு நேரடி நியமனங்களில் ஓபிசிக்கு இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.



51. அரசு நிறுவனங்கள் வழங்க பெட்ரோல், இயற்கை வாயு, மண்ணெண்ணை விநியோகஸ்தர்கள், விற்பனை நிலையங்களில்/ சேவை மையங்களில் ஓபிசி மக்களுக்கு இப்போது வழங்கப்பட்டுவரும் 27% அளவை உயர்த்தி மூன்றில் இரண்டு மடங்கு வழங்க வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது, அரசின் மொத்த் கொள்முதலில் மூன்றில் இரண்டு மடங்கு ஓபிசி பிரிவினர் நடத்தும் நிறுவனங்களிலிருந்து கொள்முதல் செய்ய வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

52. 65% இளைஞர்களுக்கு உரிய வாய்ப்பளிக்க எல்லா மாவட்டங்களிலும், மத்திய மாநில அரசுகளின் கூட்டு முயற்சியில் ஓபிசி மாணவர்கள் போட்டித்தேர்வு மையங்களிய உருவாக்க வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

53. ஓபிசி தொழிற்சங்கங்களுக்கு எல்லாத்துறைகளிலும் நிறுவங்களிலும் முறையான அங்கீகாரம் வழங்க வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

54. எல்லாத் துறை/நிறுவங்களின் ஓபிசி இடஒதுக்கீட்டின் நிலைகுறித்து அன்றாட நிலையைத் (Live Status) தெரிவிக்க வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

55.எல்லாப் போட்டித் தேர்வுகளிலும் கேள்வித்தாள்கள் ஆங்கிலத்தில் மாநில மொழியிலும் இருக்க வேண்டும், அரசமைப்புச்சட்ட மொழிகள் அனைத்திலும் தேர்வு எழுத வழிவகை செய்ய வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

56. அந்தந்த மாநிலங்களில் இருக்கும் மத்திய அரசுப் பணிகளுக்கு அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த ஓபிசி பிரிவினருக்கு முன்னுரிமை வழங்க வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

57. தமிழகத்தில் மருத்துவர் சேர்க்கையில் 69% இடஒதுக்கீட்டை முழுமையாகக் கொதுத்த பிறகே அகில இந்தியத் தொகுப்புக்கு (All India Quota-விற்கு) இடம் வழங்க வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

58.தமிழ்நாடுச் சட்டம் 3/2007-ன் படி தமிழ்நாட்டு மாநில கல்விநிறுவனங்களில் நுழைவுத் தேர்வின்றி மாணவர்கள் சேர்க்கை நடத்த வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

59. அதிமுக அரசு மோசடியாகப் பறித்த DNT (Denotified Tribes) சாதிச்சான்றிதழை உடனடியாக முழுமையாக வழங்கி பறித்த கல்வி உரிமை உள்பட அனைத்து உர்மைகளையும் மீண்டும் வழங்க வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

60. மத்திய அரசின் செலவில் அகில இந்திய அளவில் நடத்தும் DNT குடும்பக் கணக்கெடுப்பில் தமிழகத்தின் உரிமையைப் பாதுகாக்க உடனடியாக ஒரு தொடர்பு அதிகாரியை நியமிக்க வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

61. முனைவர் திரு.அதுல்ய மிஸ்ரா தலைமையில் 4 IAS அதிகாரிகள் கொண்ட  உயர்மட்ட குழு 4.3.2019 அன்று சம்ர்ப்பித்த அறிக்கையின் பரிந்துரைப்படி பறிக்கப்பட்ட அனைத்து உரிமைகளையும் மீண்டு வழங்க வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

62. தமிழகத்திலுள்ள 368 சாதிகளின் பட்டியலில் விடுபட்டுள்ள 23 நாடோடிச் சாதிகளை உடனடியாகச் சேர்த்து நாடோடி மக்களைத் தனிப் பட்டியலில் வைக்க வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

63. தமிழகத்தில் பழங்குடி மக்களின் விழுக்காடு மிகக் குறைவாக இருப்பதால் மத்திய அரசின் 7.5% இடஒதுக்கீட்டில் பிறமாநிலப் பழங்குடிகளே அதிகம் நியமிக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டின் நலன் கருதி ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட தகுதியுள்ள மற்ற சமூகங்களை அட்டவணைப் பழங்குடிப் பட்டியலில் சேர்க்கவும் வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

64. அரசு ஆணை 353 நாள் 31.01.1957-ன் படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கும் அனைத்துக் கல்வி உட்பட அனைத்து உதவிகளும் MBC/DNT சாதிகளுக்கும் வழங்க வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

65. தமிழக அரசு முறையான வெளிப்படையான சாதிவாரிப் பள்ளிவிபரங்கள் இல்லாமல் தற்போது நடைமுறையில் இருக்கும் இடஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் கொண்டுவரக் கூடாது என்று வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

66. இடஒதுக்கீட்டில் மாற்றம் கொண்டுவருவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட சமுதாயங்களை அழைத்து அவர்களின் நிலைகளை அறியாமல் இடஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்று வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

67. ஓபிசி/டின்டி மக்களின் நலங்களைப் பாதிக்கின்ற முக்கிய கொள்கை முடிவுகளை  அரசமைப்புச்சட்டம் சரத்து 338B(9)ன் படி தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தைக் கலந்து ஆலோசித்துவிட்டுத்தான் முடிவெடுக்க வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

68. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர்களைச் சுழற்சிமுறையில் அனைத்து சமூகத்திலிருந்து நியமனம் செய்ய வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

69. 69% இடஒதுக்கீட்டின் பலன் கிடைக்காதவர்களுக்கு கிடைக்குமாறு முதல் தலைமுறையினருக்கு முன்னுரிமை வழங்க வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

70. சாதி அடிப்படையில் மட்டும் வகுப்புக்களைப் பிரிக்கக்கூடாது என்றும் ஒத்த சமூக, சல்வி நிலைகளில் இருக்கின்ற சமூகங்களை வகுப்பாகவே தொகுத்து இடஒதுக்கீடு முறையைப் பின்பற்ற வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

71. சாதி அடிப்படையில் அனைத்துச்சாதிகளுக்கும் இடஒதுக்கீடு வழங்குவது சாத்தியமே இல்லை என்பதால் தனிச்சாதி இடஒதுக்கீடு முறையைச் செயல்படுத்தக் கூடாது என்று வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

72. மத்திய மாநில அரசுகள் கடபிடித்து வரும் LPG (Liberalization, Privatization and Globalization) பொருளாதரக் கொள்கைகள் பெருத்த ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிவருகின்றது. அது பல நலிந்தச் சமூகங்களின் வாழ்வுரிமைகளைச் சிதைத்து வருகின்றது. மேலும் அது அரசமைப்புச்சட்ட சரத்து 38 மற்றும் 39-க்கு எதிரானதாகவும் சர்வதேச நிலைத்த முன்னேற்ற 10 வது இலக்கத்திற்கும் எதிராகவும் உள்ளது. எனவே எல்லாத்திட்டங்கள் தீட்டுவதற்கு முன்பும் அத்திட்டம் ஏற்றத்தாழ்வை எந்த அளவிற்குக் குறைக்கும் என்ற மதிப்பீடும் கண்டிப்பாக இடம் பெற வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

73. ஓபிசி மக்களின் உரிமைகளைப் பறிக்கும் எண்ணத்தோடும் இடஒதுக்கீடு இடங்களைக் குறைக்கும் எண்ணத்தோடும் அரசுத்துறை நிறுவனங்களைக் கண்மூடித்தனமாக தனியார் மயமாக்குவதை உடனே கைவிட வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

74. தமிழ்நாடு இராண்டாம் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் பரிந்துரைத்தபடி பிசி/எம்பிசி/டின்டி இடஒதுக்கீட்டை 50% த்திலிருந்து 65% மாக உயர்த்த வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

75. மத்திய அரசு ஓபிசி/டின்டி மக்களுக்கு வழங்கும் இடஒதுக்கீட்டை குறைந்த பட்சம் 52% ஆக உயர்த்த வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

76.ஓபிசி/டின்டி மக்களி மேம்பாட்டிற்கு பாராளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ள எல்லா பரிந்துரைகளையும் விரைந்து நிறைவேற்ற வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

77. ஓபிசி/எம்பிசி/டின்டி மக்களின் மேம்பாட்டைத் துரிதப்படுத்த மத்திய மாநில அரசுகளில் தனி அமைச்சகம் உருவாக்க வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

78. ஓபிசி காலியிடங்களை நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.    

79. இடஒதுக்கீட்டை செயல்படுத்துவது சம்பந்தமான குறைகளைக் களைவதற்கு அதிகாரங்களுடன் கூடிய குறைதீர் மையங்களை மத்திய மாநில அரசுகள் உருவாக்க வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.  

80. இடஒதுக்கீடு சம்பந்தமான நீதிமன்றத்தில் தொடுக்கப்படும் வழக்குகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்கும், கட்டுப்படுத்தும் வழிகாட்டுதல்களை வழங்க வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.  

81. மத்திய அரசு இடஒதுக்கீட்டுச் சட்டத்தைச் செயல்படுத்தும் போதும் உருவாக்கபட்ட கூடுதல் இடங்களில் ஓபிசி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.  

82. IIT, IIM, AIIMS போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இதுவரை நிரப்பப்படாத ஓபிசி இடங்களை உடனே நிரப்பவும், இந்திறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று குழுவின் பரிந்துரையை அரசு ஏற்கக்கூடாது என்றும் வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.   

83. தமிழகத்தின் நீர்வளங்களைப் பாதுகாக்கவும் பெருக்கவும் விரிவான தொலை நோக்குத் திட்டம் வகுத்து நதிகள் இணைப்பு, காவேரி நதிமேலாண்மை, முல்லைப் பெரியாறு அணையில் கூடுதல் சுரங்குப்பாதை அமைத்து அணையின் அனைத்து நீரையும் தமிழகத்திற்குக் கொண்டுவர உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி உடனடியாக திட்டங்களை வகுத்துச் செயல்படுத்த வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. 

84. விவசாயத்தை மெம்படுத்த உரிய விலைச்சட்டம், வட்டியில்லாக் கடன் வழங்க 10 லட்சம் கோடி நிரந்தர நிதி உருவாக்க வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.    

85. சிறு குறு கைவினைத் தொழில்களை அழிக்கும் பெரு நிறுவனங்களைச் சிறு குறு தொழில்களில் அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.    

86. ஓபிசி மக்கள் தொழில் தொடங்க வட்டியில்லா மூலதன முதலீட்டுக் கடன்கள் வழங்க வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.    

87. மூன்றில் இரண்டு பங்கு வங்கிக் கடன்கள் ஓபிசி மக்களுக்கு வழங்க வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.    

88. மத்திய மாநில அரசுகள் முதல் தலைமுறை ஓபிசி மக்கள் தொழிலில் வெற்றி பெறக் கடைசிவரை கைகொடுக்கும் (HANDHOLDING TILL LAST MILE) அமைப்புக்களை உருவாக்க வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

89. தலைநகர் தவிர மற்ற மாநிலங்களில் உள்ள மத்திய அரசுப்பணிகளில் அந்தந்த மாநில அரசு ஓபிசி மக்க்களுக்கு முன்னுரிமை வழங்க வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.  

90. மாநிலத்தில் உருவாக்கப்படும் வேலைகளில் அந்த மாநில மக்களுக்கே முன்னுரிமை வழங்க வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

91. பெண்களுக்கு எல்லாநிலைகளிலும் சம உரிமை வழங்க வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

92. கிடைமட்ட இடஒதுக்கீடுகளை, செங்குத்து இடஒதுக்கீடு போன்ற செயல்படுத்தக் கூடாது என்று வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. 

93. மாநில அரசுகளின் தாராள மதுக்கொள்கை நலிந்த சமூகங்களை மேலும் நலிவடையச்செய்வதால் எல்லா மாநில அரசுகளும் பூரண மதுவிலக்குக் கொள்கையைக் கடைபிடிக்க வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.    

94. அனைத்து நலவாரியப் பயனாளிகள் அடையாள அட்டைகள்  இணையவழி முறையில் விரைவில் வழங்கவும், நலவாரியத்திட்டங்கள் அனைவருக்கும் முறையாகச் சென்றடைய எல்லா திட்டப் பலன்களையும் பயனாளிகளின் வங்கிக்கணக்கிலேயே செலுத்த வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. 

95. நிலமற்ற அனைத்து பிசி/எம்பிசி/டின்டி மக்களுக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

96. மண், நிலம், வனம் உட்படப் பொதுச் சொத்துக்களில் (Common Properties) மக்களுக்கு இருக்கும் பாரம்பரிய  உரிமைகளைப் பாதுகாக்க வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. 

97. வெப்பநிலை அதிகரிப்பு, நிலம், நீர், காற்று மாசு, அதீத வறட்சி, வெள்ளம் போன்ற சுற்றுக்சூழல் சீர்கேட்டால் நலிந்த சமூகங்களே அதிகம் பாதிக்கப்படுவதால், இயற்கையை மீண்டும்  புதுப்பித்து மேலும் சீரழியாமல் தடுக்க அதிகப் பலன் தரக்கூடிய நீண்டகால, குறுகிய காலத்திட்டங்களை வகுத்து மத்திய மாநில அரசுகள் செயல்படுத்த வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.   

98. சாதி அடிப்படையில் பிரிந்துகிடக்கும் ஓபிசி/டின்டி மக்களை வகுப்பு அடைப்படையில் ஒருங்கிணைக்கச் சமூகநீதிக் கூட்டமைப்பு தீவிர முயற்சி மேற்கொள்ள வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.    

99. ஓபிசி/டின்டி மக்களிடம் சமூகநீதி குறித்தும் மறுக்கப்பட்டுவரும் உரிமைகள் குறித்தும் தொடர்ந்து எல்லா வழிகளிலும் தீவிரப் பிரச்சாரங்களை மேற்கொள்வது என்றும் வலியுறுத்திக் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.    

100. ஓபிசி மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க இந்தியா முழுவதுமுள்ள அனைத்து ஓபிசி சமூகங்களையும் ஒருங்கிணைத்துத் தொடர் நடவடிக்கைகள் எடுப்பது என்றும் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved