🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமூகநீதி 360 டிகிரியில் பன்முக பார்வை- பகுதி-1

அரசியல் அறிவியலின் தந்தை அரிஸ்டாட்டில் ' மனிதன் ஒரு சமூக விலங்கு' என்றார். மனித விலங்கு முழுமையாக வாழ சமூகம் தவிர்க்க முடியாத தேவை. சமூகமாக மனிதன் வாழப்பழகாமல் இருந்திருந்தால் நாம் வாழும் இந்திலையை அடைந்திடுக்கவே முடியாது. பிள்ளை, தாய், குடும்பம், உறவுகள், சமூகம், கிராமம், நகரம், நாடு, உலகம் என்று விரிந்தாலும், சமூகம் மிகவும் அடிப்படையான அமைப்பாகும். அது மனிதனின் பல அடிப்படையான தேவைகளைப் பூர்த்தி செய்கின்றது. சமூகம் தனது செயல்பாட்டைப் பூர்த்தி செய்து கொள்ள பல சமூக, கல்வி, பொருளாதார, மத, கலாச்சார, அறிவியல் தொழில்நுட்பக் கட்டமைப்புகளையும் நடைமுறைகளையும் நம்பிக்கைகளையும் உருவாக்கி வாழ்ந்து வருகின்றது. தனி மனிதனைவிட சமூகம் சக்திவாய்ந்தது. ஆனால் ஒருசமூகம் மற்ற சமூகத்தைச் சமமாகப் பாவிக்கின்ற வண்ணம் இல்லாததாலும், ஒரு இனக்குழு தங்கள் சமூகமே மேலானது என்ற எண்ணம் இயல்பாகவே எழுவதாலும், ஏதாவது ஒருவகையில் செல்வாக்குடன் இருந்த ஒரு சமூகம், பிற பின்தங்கிய சமூகங்களை அடிமைப்படுத்துவதும் சுரண்டுவதுமான மிருகக்குணம் மேலோங்கி கோலோட்சிச் செய்கின்றது. தனி மனிதர்களையும் சமூகங்களையும் நெறிப்படுத்தப் பல சித்தாந்தங்கள், மத நம்பிக்கைகள், அரசியல், பொருளாதார தத்துவங்கள் கொள்கைகளை உருவாக்கி இருந்தாலும், பாகுபாடற்ற அனைவருக்கும் உரிய வாய்ப்புகள் கிடைக்கின்ற ஒரு அமைப்பு முறையை மனித இனம் இன்றுவரை உலகில் எங்கும் உருவாக்கவில்லை. இருக்கின்ற அமைப்புகள் ஏதாவது ஒருவிதத்தில் மிருகக் குணம் மேலோங்கி அன்பு, கருணை போன்ற மனித குணம் நடைமுறைப்படுத்தப்படாத விரும்பும் குணங்களாகவே பார்க்கப்படுகிறது.

உலகிலிருந்த பல அநீதியான, மனிதத்தன்மையற்ற அமைப்புகள், தொடர் முயற்சியால் நீக்கப்பட்டு, அனைவருக்கும் ஓரளவிற்கு வாழும் வய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியத் திருநாட்டின் தனித்துவமான நம்பிக்கைகளும், சமூக கட்டமைப்புகளும், ஏற்றத்தாழ்வையும் அநீதியையும் நியாயப்படுத்துகின்ற, அநீதி இழைக்கப்பட்டவர்களே ஏற்றக்கொள்கின்ற ஒரு வினேதமான அமைப்பு நடைமுறையைப் பார்க்க முடிகிறது. எனவே, அனைத்து சமூகங்களுக்குமான நீதியைப் பெற இந்தியச் சமூகக் கட்டமைப்புகளையும் நம்பிக்கை நடைமுறைகளையும் நாம் சரியாகப் புரிந்துகொண்டு அந்த அநீதிக்குத் தீர்வுகாண வேண்டியுள்ளது. சமூகங்கள் அந்தந்த பகுதிகளில் பூகோள தேவைகளுக்காகவும் கடந்த கால சமூகக் கொள்வினை. கொடுப்பினை உட்பட வரலாற்றுக் காரணங்களாலும், பொதுப்புத்தியில் வளர்ச்சி என்று கருதுகின்ற அளவீடுகளில், முன்னும் பின்னும் இருக்கலாம். எல்லா சமூகங்களும் ஒரே மாதிரி இருக்க வேண்டிய அவசியமில்லை. அந்தந்தச் சமுதாயங்கள் அந்தந்தச் சமூகத்தில் பிறந்த மனிதர்கள் குறைந்தபட்ச வாழ்வை நிறைவாக வாழும் அளவிற்கு அமைப்புகளையும், வாய்புகளையும், விழுமியங்களையும், ஒழுங்குமுறைகளையும் பெற்றிருந்தால் போதும். எப்படிப்பட்ட பழமையான, மாற்றத்தை விரும்பாத  சமூகங்களாக இருந்தாலும், கால வளர்ச்சியின் மாற்றங்களுக்குத் தப்ப முடியாது. மனிதன் மேம்பட்டு வாழ மாற்றங்கள் தவிர்க்க முடியாதது. மாற்றம் என்ற பெயரில் மாற்ற முடியாத, மாற்றக்கூடாத மனித உணர்வுகளையும் மாற்ற முயற்சிப்பது சரியான போக்கல்ல. அது சாத்திமும் அல்ல. நவீன சட்டத்தின் அரசாட்சி முறை, பல்சமூகங்கள் கூட்டாக, தேசமாக வாழ அவசியம் என்றாலும் அவை ஒருபோதும் மனித உணர்வுகளின் நுட்பமான தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது. இன்றைய காலகட்டத்தில் அது சமூக உறவுகளின் மூலமே  சிறப்பாகப் பூர்த்திசெய்ய முடிகின்றது. ஒவ்வொரு சமூகமும் காலவளர்ச்சிக்கு ஏற்ப சமூக நடைமுறைகளையும் சீரமைத்து வருகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த இயல்பால நடைபெறும் சமூக மாற்றங்களைக் கூட ஒரு குறிப்பிட்ட திசையில் ஒரு குறிப்பிட்ட பழக்கவழக்கத்தை கடைப்பிடித்தால் மட்டுமே உயர்வானது என்றும், மற்றவை தாழ்வானவை என்றும் ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டு, அதன் போக்கிலே சமூகங்கள் ஒடிக்கொண்டிருக்கின்றனர். பல சமூகங்கள், சமூகங்களின் செயல்பாட்டையே சீரழிக்கும் அளவில் செயற்கையான அவசிமற்ற ஆடம்பர சமூக நடைமுறைகளை மேற்கொள்ள முயற்சிக்கின்றன. சமீப காலங்களில் சமூக விழுமியங்களில் மாற்றம் செய்கின்ற சமூகங்களே உயர்வான சமூகங்கள் என்ற நிலை மாறி பொருளாதர, ஆட்சி, அதிகார அளவீடுகளில் செல்வாக்குப்பெற்ற சமூகங்கள் உயர்வானவர்களாவும் மற்ற சமூகங்கள் தாழ்வான சமூகங்களாகவும் பார்க்கின்ற போக்கு உருவாகியுள்ளது. ஆனால் இந்த நவீன அளவீடுகள் ஆரோக்கியமான மனிதத்தன்னையைப் போற்றிப் பேணுகின்ற சமூக விழுமியங்களுக்கு ஒருபோதும் மாற்றாக முடியாது. எனவே அந்தந்தச் சமூகங்களின் விழுமியங்களை இயல்பாகச் செம்மைப்படுத்துவதும் நவீன கட்டமைப்பில் அனைவருக்கும் உரிய வாய்ப்புகளை வழங்கி நிறைவான வாழ்வு வாழ வழிசெய்வதுமே சரியான சமூகநீதி.

 நவீன விடுதலை இந்தியாவில் அரசமைப்புச்சட்டம் சமதர்ம சமுதாயத்தை உருவாக்கும் உன்னதமான இலட்சியக்கனவோடு உருவாக்கி நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டு செயல்படுத்தினாலும், நடைமுறையில் ஒபிசி/டிஎன்டி மக்களுக்கு தொடர்ந்து ஓரவஞ்சகமே இழைக்கப்பட்டுவருகின்றது. அதற்குப் பிரதானக் காரணம் சமூகநீதி மற்றும் இடஒதுக்கீடு பற்றிய பல தவறான கண்ணோட்டங்கள்தான். ஏன் இடஒதுக்கீடு தொடர்பாக அரசமைப்பு நிர்ணயசபையில் நடந்த விவாதங்களே அதற்கு சான்றாக எள்ளது. அதன் அடிப்படையிலேயே இன்றைக்கும் பல உச்சநீதிமன்ற தீர்ப்புகளும் வாத பிரதிவாதங்களையும் காணமுடிகிறது. அதாவது இடஒதுக்கீடு என்பது வாய்ப்பு மறுக்கப்பட்ட வரலாற்றால் வஞ்சிக்கப்பட்ட மக்களை மேம்படுத்தத் தற்காலிகமான ஏற்பாடு, அது மிகையாக இருக்கக்கூடாது. நிர்வாகத் திறமையைப் பாதிக்கின்ற வகையில் இருக்கக்கூடாது போன்ற பல தவறான எண்ணங்கள் நிலவுகிறது.

 ஆனால் அரசமைப்புச்சட்டத்தின் முகப்புரையில் சொல்லப்பட்டுள்ள நோக்கங்களோடு ஒப்பிடும் போது இதுவரை சமூகநீதி குறித்த முன்னைக்கப்படும் கருத்துக்கள் அனைத்தும் பிழையானது என்று உணரமுடியும். முதலில் சமூகநீதி குறித்த எப்படிப்பட்ட சிந்தனைகள் இன்றைய பொதுப்புத்தியில் இருக்கின்றது என்பதைப்பார்ப்போம். பல சமூகங்களுக்குக் கால காலமாகக் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டு சமூகத்தில் கீழானவர்களாக, தீண்டத்தகாதவர்களாக இருந்தவர்களையும் மேம்படுத்த அவர்களுக்குச் சலுகைகள் வழங்க வேண்டும் என்று  

ஆனால் அரசமைப்புச்சட்டத்தின் முகப்புரையில் சொல்லப்பட்டுள்ள நோக்கங்களோடுஒப்பிடும்போது இதுவரை சமூகநீதி குறித்து முன்வைக்கப்படும் கருத்துக்கள் அனௌத்தும் பிழையானது என்று உணரமுடயும். முதலில் சமூகநீதி குறித்த எப்படிப்பட்ட சிந்தனைகள் இன்றைய பொதுப்புத்தியில் இருக்கின்றது என்பதைப்பார்ப்போம். பல சமூகங்களுக்குச் கால காலமாகச் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டு சமூகத்தில் கீழானவர்களாக, தீண்டத்தகாதவர்களாக இருந்தவர்களையும் மேம்படுத்தாவர்களுக்குச் சலுகைகள் வழங்க  வேண்டும் என்றுஒருசாரரும், இல்லை அது திறமையானவர்களின் உரிமைகளைப் பறிக்கின்றது. இத்தனை ஆண்டுகள் வழங்கியதே அதிகம். நாடுநாசமா போனதற்குக் காரணம் இந்த தேவையற்ற இடஒதுக்கீடுதான் என்று இன்னொருசாராரும், இடஒதுக்கீடு கோருவதே இழிவானது என்று எண்ணுவதையும், எழுதுவதையும், பேசுவதையும் நாம் பார்க்க முடிகிறது. சட்டத்தைச் சரியாகப் பார்க்க வேண்டிய நீதிமன்றங்களும் இதற்கு விதிவிலக்கல்ல் இருதரப்பிற்கும் நீதியைச் சமன் செய்து வழங்குகிறோம் என்ற போர்வையில் சமதர்ம சமுதாயத்தைப் படைக்கும் அரசமைப்புச்சட்டத்தின் உன்னத நோக்கத்தைச் சிதைக்கும் வண்ணம் பலதீர்ப்புகளை வழங்கியுள்ளது. சரத்து 14ன் படி சமமானவர்களைச் சமமாக நடத்துவதுதான் சம்த்துவம் சமமற்றவர்களைச் சமமாக நடத்த முடியாது என்று விளக்கமே எல்லா தீர்ப்புகளுக்கும் அடிநாதமாக இருக்கின்றது. ஆனால், சமமற்ற சமூகங்களுக்கு சில சலுகைகள் கொடுப்பது தவறல்ல அது சரத்து 14 ன் நோக்கத்தை முற்றிலுமாக மீறக்கூடாது என்றும் விளக்கமளித்துள்ளதால் சமூகநீதி குற்றுயிரும் கொலை உயிருமாக நீடித்துவருகின்றது. இப்படிப் பற்பல தவறான புரிதல்கள், குழப்பங்கள் சமூகநீதியைத தழைக்கவிடாமல் எய்துகொண்டுள்ளது. இந்நூலின் நோக்கம் கருதி இங்கு ஒரு சில த்வறான எண்ணங்களுக்கு மட்டும் விளக்கமளித்துள்ளோம்

 15% இருக்கும் முன்னேறிய வகுப்பினருக்கு 65% வாய்ப்புகளையும், 23% இருக்கும் SC/ST வகுப்பினருக்கு 23% வாய்ப்புகளையும், 62% இருக்கும் ஓபிசி மக்களுக்கு 20%ப் வாய்ப்புகளையும் வழங்குவது எப்படி சம்த்துவ உரிமையாகும்? சம்மானவர்களைச் சமமாக நடத்துவதான் சமத்துவம் என்றால் முகப்புரையில் சொல்லப்பட்டுள்ள "EQUALITY of status and of opportunity" எப்படி உத்தரவாதமாக வழங்க முடியும். மேலும் சரத்து 16-4யை மேலோட்டமாகப் பார்த்தாலே தெரியும் அது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அரசுப் பணிகளில் போதிய பிரதிநிதித்துவம் வழங்க அறிவுறுத்துகிறது. இன்னும் சொல்லப்போனால் வரைவு நிலையிலிருந்த அதே சரத்து 10-3ள் எந்த வகுப்புகளாக இருந்தாலும் போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்றுதான் இருந்தது. அதாவதுமுன்னேறிய வகுப்பினராக இருந்தாலும் அந்த வகுப்பிற்கு உரியப் பிரதிநிதித்துவம் இல்லையென்றால் அவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றுதான் இருந்தது பின்புதான் அதில் பிற்படுத்தப்பட்டோர் என்ற வார்த்தை சேர்க்கப்பட்டது. அதோடு சேர்த்து சரத்து 335ல் SC/ST மக்கள் இடஒதுக்கீட்டில் உரிமை கோருகின்ற போது நிர்வாகத்திறமை பாதிக்காத இடஒதுக்கீடு வழங்கலாம் என்ற நிபந்தனையையும் சேர்த்ததன் விளைவு, இடஒதுக்கீடு ஏதோ திறமை அற்றவர்களுக்கு வழங்கும் சலுகைபோலவும் விரும்பத்தகாத ஒரு காரியம் போலவும், கடந்த காலங்களின் கட்டமைப்புகளால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கருணையின் காரணமாக வழங்கும் ஒரு சிறப்பு ஏற்பாடு போலவும், பொதுப்புத்தியில் பதிந்துள்ளது.

 ஆனாஅல் இடஒதுக்கீட்டுக் கோட்பாட்டின் சாரமும் சத்தும் என்ன்வென்றால் எந்தக் காரணத்தாலோ ஒரு வகுப்பு அவர்களுக்குரிய பங்கைப் பெற முடியவில்லையென்றால் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது தான். அதாவது பிரதிநிதித்துவத்தை / பங்கை உறுதி செய்யும் ஒரு நடைமுறைதான். மக்களாட்சியின் உயிர்போன்ற பிரதிநிதித்துவம் தான் இடஒதுக்கீடு. முன்னேறிய வகுப்பினர் உரிய பிரதிநிதித்துவம் பெறவில்லை. என்றால் அவர்களுக்கு வழங்க வேண்டும். ஆனால் என்ன நடக்கிறது. 15%ஈருக்கும் முன்னேறிய வகுப்பினர் ஏற்கனவே எல்லாத்துறைகளிலும் எல்லாப் பணிகளிலும் 60%ம் உயர்பதவிகளில் 100%ம் இருக்கும்போது அந்த பிரிவில் மட்டும் 8 இலட்சம் ஆண்டுவருமானம் பெறும் ஏழைகளுக்கு 10% தனி இடஒதுக்கீடு வழங்கு என்பது உலக வரலாற்றில் எங்கும் மோசடியாகும். ஓபிசி பிரிவினருக்கு இழைக்கப்படும் அநீதிமட்டுமல்ல, நாம் அனைவரும் ஏற்றுக்கொண்ட அரசமிப்புச்சட்டத்திற்கு முற்றிலும் புறம்பானது. தேசத்தை ஒருபோதும் ஆரோக்கியமான வளர்ச்சிப்பாதைக்குக் கொண்டு செல்லாது. இடஒதுக்கீடு திறமை இல்லாதவர்களுக்கு வழங்கும் சலுகையல்ல, அது அனைத்துச் சமூகங்களுக்குமான பிறப்புரிமை, பிரதிநிதித்துவம், எல்லா சமூகங்களுக்குமான பங்கு, மக்களாட்சியின் ஆணிவேர். திறமை என்ற போர்வையில் அதிகாரத்தில் 60% ஓபிசிமக்களின் பங்கை மறுப்பதுஅநீதியின் உச்சம்.

 அட்டவணைச் சாதிகள் தீண்டாமையால் பாதிக்கப்பட்டவர்கள் அதனால் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது சரி, ஓபிசிக்கு இடஒதுக்கீடு கோருவது நியாயமா? என்று பலர் பேசக் கேட்டிருப்பீர்கள். ஆனால் மேற்படி சரத்து 16 4 ல் 'பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்' இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றுதான் உள்ளது அதில் அட்டவணியச் சாதிகள் மற்றும் அட்டவணியப் பழக்குடிகள் என்று குறிப்பிடவில்லை. பிற்படுத்தப்பட்டோர் என்றால் யார் என்ற வரையறையும் அரசமைப்புச்சட்டத்தில் 2018ம் ஆண்டுவரை கொடுக்கவில்லை. மேலும், 1951 முதல் அரசமைப்புச்சட்டத்தின் முதல் திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்ட சரத்து 15 4ல் சமூகரீதியாக, கல்விரீதியாகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், அட்டவணைச் சாதிகள் மற்றும் அட்டவணைப் பழங்குடிகள் என்று பிரிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பின் நீதிமன்ற தீர்ப்புகளின் விளக்கப்படி பிறபடுத்தப்பட்டோர் என்பது மேற்படி மூன்று பிரிவுகளையும் உள்ளாக்கியது தான் என்று கூறியுள்ளது. மேலும் அரசமைப்புச்சட்டத்தில் சரத்து 366 24 ல் அட்டவணைச் சாதிகள் என்றால் யார் என்ற வரையறையும் சரத்து 366 25 ல் அட்டவணைப் பழங்குடிகள் என்றால் யார் என்ற வரையறையும் கொடுக்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு 102வது அரசமைப்புச்சட்டம் கொண்டுவந்து சரத்து 366 26C ல் சமூகரீதியாக, கல்விரீதியாகப் பிறபடுத்தப்பட்ட வகுப்புகள்  யார் என்ற வரையறை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பிற்படுத்தப்பட்டோர் என்றால் யார் என்ற வரையறை எங்கும் கொடுக்கப்படவில்லை. மேற்படி நீதிமன்ற விளக்கத்தின்படியே புரிந்துகொள்ளப்படுகிறது.

 மேற்படி மூன்று வரையறைகளும் சொல்லும் பொதுவான விபரம் என்னவென்றால் சரத்து 342ன் படி எந்ததெந்த சாதிகள் எல்லாம் மேற்படி மூன்று வகுப்புகள் என்று அறிவிக்கப்படுகின்றனவோ அந்த சாதிகள்/ பிரிவுகள் மேற்படி மூன்று வரையறைக்குள் வந்தவர்களாகக் கருதப்படும் என்றுதான் குறிப்பிட்டுள்லது. ஒருசாதியினரை எதன் அடிப்படையில் சமூகரீதியாக, கல்விரீதியாகப் பிற்படுத்தப்பட்ட வகுப்ப்னர், அட்டவணைச் சாதிகள் மற்றும் அட்டவணைப் பழங்குடிகள் என்று அறிவிக்க வேண்டும் என்ற வரையறைகொடுக்கப்படவில்லை. ஆனால் 1935ம் ஆண்டு முதல் பயன்படுத்தப்படும் தீண்டாமைக்கு உள்ளாக்கப்பட்ட சாதிகள் அட்டவணைச் சாதிகள் என்ற அளவுகோலே இன்றுவரை கடைப்பிடிக்கப்படுகின்றது. 1950க்குப்பிறகு இந்திய மானுடவியல் ஆய்வாகம் பரிந்துரைத்த 5 அளவீடுகளான

1) பழமையான பழக்க வழக்கம்

2) தனித்துவமான கலச்சாரம்

3) பூலோகத் தனிமை

4) மற்ற சமுதாயத் தொடர்பில் தயக்கம்

5) பிற்பட்டதன்மை ஆகிய அளவீடுகளின் படி அடையாளம் காணப்படுகின்றனர்.1999ல் அதற்கான வழிமுறைகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி

1) சம்பந்தப்பட மாநில அரசின் பரிந்துரை

2) இந்தியத் தலைமைப் பதிவாளர் ஒப்புதல்

3) அட்டவணைப் பழங்குடிகள் ஆணையத்தின் ஒப்புதல்

4) குடியரசுத் தலைவரின் அரசமைப்புச்சட்ட ஆணை ஆகிய நடைமுறைகள் மூலம் ஒரு சமூகத்தை அட்டவணைப் பழங்குடிகள் என்று சேர்க்கின்றனர்.

 மேலே குறிப்பிட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர்,சமூகரீதியாக, கல்விரீதியாகப் பிறபடுத்தப்பட்ட வகுப்பினர் தவிர இதரப் பிற்படுத்தப்பட்டோர் என்ற சொல்லும் அரசமியப்புச்சட்டத்தில் சரத்து 338 10 ல் 11.08.2018 வரை குறிப்பிடப்பட்டு இருந்தது. 102 வது திருத்ததின் மூல அச்சரத்து நீக்கப்பட்டுவிட்டது. இப்படியாக இன்றையன் நிலையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்றால் சமூகரீதியாக கல்விரீதியாகப் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் அட்டவணியச் சாதிகள் மற்றும் அட்டவணைப் பழங்குடிகள் மூன்றையும் உள்ளடக்கியதாக புரித்துகொள்ளப்படுகின்றது.

 1950 முதல் SC/ST அடையாளம் காணும் வரையறையும் நடைமுறையும் உள்ளது. ஆனால் மேற்படி இதர பிற்படுத்தப்பட்டோர் அல்லது அமூகரீதியாக கல்விரீதியாகப் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் யார் என்று அடையாளம் காண்பதற்கு அரசமைப்புச் சட்டம் சரத்து 340 ன் கீழ் 19.01.1953ல் காக்கா கலேல்கர் தலைமையில் தேசிய அளவில் முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நியமிக்கப்பட்டது. அது எந்தெந்த சாதிகளெல்லாம் கீழான சாதிகளாகப் பர்க்கப்பட்டதோ அந்த சாதிகள் எல்லாம் பிற்படுத்தப்பட்ட சாதிகள் என்று அடையாளம் கண்டு 30.03.1955ல் பரிந்துரைத்தது. ஆனால் மத்திய அரசு சாதி அடிப்படையில் மட்டும் ஓபிசி வகுப்பை அடையாளம் கண்டு 30.03.1955ல் பரிந்துரைத்தது. ஆனால் மத்திய அரசு சாதி அடிப்படையில் மட்டும் ஓபிசி வகுப்பை அடையாளம் காணும் அந்த ஆணையத்தின் முறையை 1956ல் நிராகரித்துவிட்டது. 14.08.1961ல் உள்துறை அமைச்சகம் சரத்து 16 4 மற்றும் 15 4 ல் உள்ள மாநில அரசுகளின் உள்ளார்ந்த அதிகாரங்களை பயன்படுத்தி மாநில அரசுகளே பிற்படுத்தப்பட்டவகுப்பினரைக் கண்டறிந்துகொள்ளலம் என்று அறிவுறுத்தி அறிக்கிய அனுபியது. அதன் பின் பல மாநிலங்கள் பல் ஆணையங்களை நியமித்து அடையாளம் கண்டனர். தேசிய அளவில் மொராஜிதேசாய் அரசு மீண்டும் 1.1.1979ல் பி.பி. மண்டல் தலைமையில் இரண்டாம் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை நியமித்தது. இவ்வணையம் 22 புள்ளிகள் கொண்ட 11 குறியீடுகளைக்கொண்ட சாதி உட்பட சமூக, கல்வி பொருளாதார அளவுகோலை உருவாக்கி அதன்படி 11 புள்ளிகளுக்கும் அதிகமாகப் பெற்ற சாதிகளைப் பிற்படுத்தப்பட்டோர் என்று அடையாளம் கண்டு அறிக்கியயை 31.12.1980ல் சமர்பித்தது. 13.08.1990ல் இவ்வறிக்கை செயல்படுத்தப்பட்டதை எதிர்த்து தொடுக்கப்பட்ட இந்திரா சஹாணி வழக்கில் மண்டல் ஆணியயத்தின் அளவீட்டுமுறையை சரியென்று ஏற்றுக்கொண்டது. அதாவதுசாதியும் ஒரு குறியீடாக மற்ற புறநிலைக் குறியீடுகளுடன் (objective criteria) சேர்த்துப் பயன்படுத்தலாம் ஆனால் சாதி அடிப்படையில் மட்டும் ஒரு வகுப்பை அடையாளம் காணமுடியாது என்று தெளிவுபடக் கூறிவிட்டது. மற்ற குறியீடுகளில் ஒத்டநிலையில் அல்லது சிறு வேறுபாடுகளுடன் இருக்கும் சமூகங்களை ஒருபோதும் வேறு வேறு பிரிவுகளாக வகைப்படுத முடியாது என்றும் உத்தரவிட்டுள்ளது. இப்படிப் பிற்படுத்தப்பட்டோரை அடையாளம் காண்பதற்கும் வகைப்படுத்துவதற்குமே நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது.

 தவிர இஅடஒதுக்கீடு திறமைக்கு எதிரானது என்ற வாதத்தின் அடிப்படையில் பல அநீதிகள் கட்டமைக்கபட்டுள்ளது. திறமை என்பது பிறப்போடு வருவதல்ல அது வளர்ப்பிலும் முயற்சியிலும் பயிற்சியிலும் வருவது. உரியநேரத்தில் உரிய முறையில் வாய்ப்புகள வழங்கினால் அனைவருக்கும் உரியத் திறமையைப் பெறமுடியும். முனேறிய வகுப்பினர் திறமையை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்புகளை அதிகம் பெற்றுள்ளதால், அதுவும் தேர்வுக்குத் தேவையான படிப்பியனை பெற்றுள்ளதால் அவர்களே அனைத்து இடங்களையும் எடுத்துக்கொள்ள முடிகிறது. ஆனால் முன்னேறிய வகுப்பினர் அனைவரும் திறமையானவர்கள் என்று நம்மில் பலர் நம்பிக்கொண்டிருந்தோம். சமீபத்தில் நடந்த பல போட்டித்தேர்வுகளில் முன்னேறிய வகுப்பைச்சேர்ந்தபொருளாதாரரீதியாகப் பலவீனமான பிரிவினர்கள் (EWS) பெற்ற மதிப்பெண்கள் மற்ற SC/ST/OBC பிரினரைவிட மிகக் குறைவாக இருந்தது. அதாவது திறமையற்றவர்கள் என்று கருதப்பட்ட வகுப்பினர் அதிக மதிபெண்ணும் திறமையான வகுப்பினர் என்ற கருதப்பட்டவர்கள் குறைவான மதிப்பெண்களும் பெற்ற இதுவரை இருந்த தப்பெண்ணங்களைத் தவிடுபொடியாக்கிவிட்டது.

 இடஒதுக்கீடு அதிகமாக வழங்கினால் நிர்வாகத்திறமை குரைந்துவிடும் அதனால் இடஒதுக்கீடு 50% தாண்டக்கூடாது என்ற பொய்யான அர்த்தமற்ற வாதமும் தமிழக அரசின் நிர்வாகத்திறமை தகர்த்துள்ளது. அதாவது தமிழகத்தில் 69% செங்குத்து இடஒதுக்கீடு மீதமுள்ள 31% இடஒதுக்கீட்டிலும் 30% பெண்களுக்கும் 20% தமிழ்வழி பயின்றவர்களுக்கும், 4% மாற்றுத்திறனாளிகளுக்கும், 5% முன்னாள் இராணுவவீரர்களுக்கும், 30% பெண்கள் இடஒதுக்கீட்டில் 10% ஆதரவற்ற விதவைகளுக்கும் என்று கிடைமட்ட இடஒதுக்கீட்டில் 18.3% வழங்கப்படுகிறது, ஆகமொத்தம் 87.3% (69+18.3) இடஒதுக்கீடு தமிழகத்தில் பலகாலமாக வழங்கப்பட்டுவருகிறது ஆனால் மத்திய அரசு மதிப்பீட்டின்படி தமிழகம்தான் நிர்வாகத்திறமையில் முதல் மாநிலமாகத் திகழ்கின்றது. எனவே இடஒதுக்கீட்டினால் நிர்வாகத்திறமை குறைந்துபோகும் அதால் இடஒதுகீடு 50% ஐ தாண்டக்கூடாது என்ற அரசு மற்றும் நீதிமன்றங்களின் நிலைப்பாடு அநீதியாக ஓபிசி மக்களின் உரிமைகளை மறுப்பது அயோக்கியத்தனம். அதைக்கண்டு கொள்ளமல் வாழும் நாமும் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

மேலும் இடஒதுக்கீடு என்பது ஏதோ அரசுத்துறையில் அல்லது கல்வி நிறூவனங்களீல் மட்டும் வழங்கும் சலுகைகள் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர் அது அப்படியல்ல சமுதாயத்தின் எல்லா நிலைகளிலும் எல்லாச் சமூகங்களுக்கும் உரியப் பங்கினை ழங்குவதுதான் உண்மையான சமூகநீதி. இடஒதுக்கீடு சமூக நீதியின் ஒரு அங்கம்தான். அதேபோன்று அரசுத்துறைகளில் இடஒதுக்கீடு வழங்குவது மட்டும் இடஒதுக்கீடு அல்ல, அரசின் அல்லா நடவடிக்கைகளிலும் திட்டம், நீதிமன்றம், ஆராய்ச்சி நிறுவனங்கள் என்று எல்லா அமைப்புகளிலும் உரியப் பங்கை வழங்குவதும் இடஒதுக்கீடுதான் . தனியார்த் துறைகளில் உரிய பங்கு, நிதி நிறுவனங்களில் உரிய நிதிகளியயும் எல்லா சமூகங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படவேண்ட்ம். அதையும் தாண்டி பிராந்திய சமூகநீதி, சுற்றுச்சூழல் சமூகநீதி, தலைமுறைகளுக்கு இஅடையிலான சமூகநீது நிலைத்தசமூகநீதி என்று சமூகநீதிக்குப் பன்முகங்கள் உண்டு. அவற்றையெல்லாம் அடுத்த நூலில் விரிவாகப் பார்ப்போம்.

இந்த சிறிய விளக்கம் மூலம் எப்படி சமூகநீதி தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது?, அதன்மூலம் எப்படி ஓபிசி மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றது? என்பதை மட்டும் கோடிட்டுக் காட்டியுள்ளோம். உணர்வு பெறுவோம் உயர்வு பெறுவோம்.  


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved