🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பேராசிரியர் நாகராஜன் எழுதும் விஞ்ஞானமும் மெய்ஞானமும் - பகுதி 2

அன்பும், வீரமும் கொண்ட அனைத்து நமது சமுதாய சொந்தங்களுக்கும் எனது பணிவான வணக்கம். 
விஞ்ஞானமும், மெய்ஞானமும் உலகில் இரண்டு கண்கள் எனக்கூறலாம்.  இந்த இரண்டையும் ஒருசேர பெற்றவர்கள் ஒரு சிலரே. இந்த இரண்டையும் தன்னிடத்தில் பெற்றிருந்த எனக்கு தெரிந்த அறிஞர் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி மேதகு அப்துல் கலாம் அவர்களே!

இந்த உலகில் அறிவு, அன்பு என்ற இந்த இரண்டால் சாதிக்க முடியாதது எதுவும் இருக்கமுடியாது என்று பெரிய மகான்கள் கூறியுள்ளார்கள் . நானும் அதை உணர்ந்திருக்கிறேன். அன்பு என்பது மெய்யானத்தால் அடையக்கூடியது. அறிவு என்பது விஞ்ஞானத்தால் பெறக்கூடியது. விஞ்ஞானத்தின் வெளிப்பாடுகள் உலகம் முழுவதும் ஒரே மாதிரியானவை. அதாவது ஒரு பொருளின் நிறை என்பது இந்தியாவில் அளந்தாலும் அல்லது இங்கிலாந்தில் அளந்தாலும் ஒரே மாதிரிதான் இருக்கும். அதே மாதிரி தான் ஒவ்வொரு விஞ்ஞானத்தின் வெளிப்பாடுகளும். ஆனால், மெய்யானம் என்பதும் ஒரே மாதிரிதான் இருந்தாலும் இடத்துக்கு இடம், மனிதனுக்கு மனிதன்,  நாட்டுக்கு நாடு வேறுபடும். உதாரணமாக, சங்கராச்சாரியார் ( ஆதிசங்கரர்) ஒரு சாதாரண மனிதர், ஆனால் அவரிடமிருந்த ஞானம் இதுவரை யாரும் கண்டிராதது. சுவாமி விவேகானந்தர் ஒரு சராசரியான குடும்பத்தில் பிறந்து மிக உயர்ந்த துறவி நிலையை  அடைந்தார். அவர் தனது சிறிய வயதிலேயே உச்சத்தை தொட்டார். அது எப்படி சாத்தியமானது? ஒருவருடைய சூழ்நிலைதான்! மற்றும் ஒருவருக்கு உள்ளே உள்ள வேட்கை. அதாவது அவரவர் விரும்பும்  விருப்பம். இதைத்தான் , நாம் எதுவாக விரும்புகிறோமோ அதுவாகவே ஆகிறோம் என்கிறது பகவத்கீதை. எனவே, நாம் மிகவும் முக்கியம், நமது சூழ்நிலைகள் முக்கியம், நமது எண்ணங்கள் முக்கியம். அதாவது வேட்கை. முக்கியம். இது மெய்ஞானமா? அல்லது விஞ்ஞானமா?  சிந்தியுங்கள் மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம். வாழ்க வளமோடு!

அன்புடன் உங்கள்
முனைவர்.கெ. நாகராஜன்.
இயற்பியல்துறை பேராசிரியர்

உங்கள் வினாக்கள் மற்றும் சந்தேகங்களை எனக்கு எழுதுங்கள். அவைகள் அனைத்தும் அடுத்த வாரம் பதிவில்  பதிலளிக்கப்படும்.                   
வாட்ஸ்அப் எண்: 7395988767

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved