🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமூகநீதி 360 டிகிரியில் ஒரு பன்முகப் பார்வை! - பகுதி - 2

சமூகநீதியின் முக்கியக் காலக்கோடுகள்

1. 1854 வருவாய் வாரிய நிலை ஆணை பிஎஸ்ஓ 128-2ன் படி பல சதியினருக்கு நியமனம் வழங்குவதற்கான அறிவுறுத்தல் வெளியிடப்பட்டது.

2. 12.10.1871 பூர்வபழங்குடிகளை ஒடுக்குவத்ற்காக அவர்களின் வாழ்வை முற்றிலுமாகப் பறிக்கும் கருப்புச்சட்டம் குற்றப் பழங்குடிச்சட்டம் 1871 கொண்டுவரப்பட்டது.

 3. 15.08.1911 GO2491 பிராமணர்களின் வெவ்வேறு பிரிவுகளை தனித்தனி சாதிகளாக் கருதுவதை நிராகரிக்கிறது.

 4. 16.09.1921 GO 613(பிரபலமாக கம்யூனல் GO என அறியப்படுகிறது) பிராமணர் அல்லாதவர்களின் பதவிகளின் விகிதத்தை அதிகரிக்க அணைபிறப்பிக்கப்பட்டது.

 5. 15.08.1922 GO 658 நியமனம் மற்றும் பதவி உயர்வு ஆகிய இரண்டிலும் வகுப்புவாத விநியோகத்தை அறிவிக்கிறது

 6. 3.81925 திவான பகதூர் எம்.கிருஷ்ணன் நாயர் தலைமையில் வகுப்புவாரி இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து அய்வு செய்ய ஒரு குழுவை நியமித்தது, குழு அறிக்கை சமர்ப்பிக்கவில்லை

 7. 4.11.1927 GO 1071 12 பதவிகளில் 5 இடங்கள் பிராமணரல்லாத இந்துக்களுக்கு (72% மக்கள்தொகையுடன்), 2 இடங்கள் ஆங்கிலோ இந்தியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு (4%), 2 இடங்கள் முஸ்லிம்கள் (7%), 2 இடங்கள் பிராமணர்களுக்கு (3%), 1 இடம் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு (14%) என 12 பதவிகளில் குறிப்பிட்ட இடஒதுக்கீடுகளை வழங்குகிறது

8. 15.12.1928 GO 1129 வகுப்புவாத இடஒதுக்கீட்டிற்கான 12 புள்ளிகள் சுழற்சி பட்டியலை அறிவிக்கிறது

9. 16.08.1932 இங்கிலாந்து பிரதமர் மெக்டொனால்டு, கயூனல் அவார்ட் என்ற 71 தாழ்த்தப்பட்டோர் தனித்தொகுதிகள் திட்டத்தை அறிவிக்கின்றார்.

10. 24.09.1932 மேற்படிக் கம்யூனல் அவார்டை எதிர்த்து மகாத்மா காந்தி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றார். அம்பேத்கர் காந்தியிடையே தனித்தொகுதிக்குப் பதிலாக மக்கள் தொகைக்கு ஏற்ப தொகுதி இடஒதுக்கீடு முறை பூனா ஒப்பந்தமாக கையெழுத்தானது

11. 1934 தென்னிந்திய BC லீக் BCக்கு தனி ஒதுக்கீடு கோரியது

12. 1935 இந்தியஅரசுச்சட்டம் 1935ல் பகுதி 14ல் அட்டவணியச் சாதிகள் வரையறுக்கப்படுகின்றது.

13. 1943 SCக்கு மத்திய அரசுப் பணிகளில் 8.33% இடஒதுக்கீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்படுகின்றது

14. 21.09.1947 SCக்கு மத்திய அரசுப் பணிகளில் தேர்வு மூலமாக நேரடி நியமனகளில் 12.55% மும் தேர்வு அல்லாத நேரடி நியமனங்களில் 16.66% இடஒதுக்கீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்படுகின்றது

15. 21.11.1947 தமிழகத்தில் GO3437 மூலம் 12 புள்ளிகளாக இருந்ததை 14 புள்ளிகளாக உயர்த்தி, 6 இடங்கள் பிராமணர் அல்லாத இந்துக்களுக்குவி (22% மக்கள் தொகையுடன்), 2 இடங்கள் பிறபடுத்தப்பட்ட இந்துக்களிக்கு (50%), 2 இடங்கள் பிராமணர் (3%), 2 இடங்கள் பிராமணர் (3%), 2 இடங்கள் ஹரிஜனுக்கு (14%), 1 இடம் முகமதியர்களுக்கும் (7%), 1 இடம் கிருஸ்தவர்கள் - ஆகிலோய்ந்தியர்களுக்கும் (4%) என 14 பதவிகளில் பல்வேறு சமூகங்களுக்கு குறிப்பிட்ட இடஒதுக்கீடு வழங்கும் 14 புள்ளிப் பட்டியல் அறிவிக்கப்படுகிறது.

16. 13.09.1950 ST பிரிவ்னருக்கு 5% இடஒதுக்கீடு வழங்கப்படுகின்றது

17. 26.1.1950 SC/ST/SEBC இடஒதுக்கீடு தொடர்பாக அரசமைப்புச்சட்டம் 1950 சரத்துக்கள் 16-4 330 முதல் 342 வரை அமலுக்கு வந்தது

18. 9.4.1951 செண்பகம் துரைராஜன் வழக்கில் GO 3437 நாள் 21.11.1947 கம்யூனல் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.

19. 1951 1வது அரசமைப்புச்சட்ட திருத்தம் கல்வியில் இடஒதுக்கீடு வழங்கும் பிரிவு 15-4 ஐச் சேர்த்தது 

20. 27.91951 தமிழ்நாடு GO 2432 BC க்கு 25%, SC/ST க்கு 15% என 20 புள்ளிகள் சுழற்சிப் பட்டியலுடன் காலியிடத்தை அடுத்த ஆண்டுக்கு கொண்டு செல்லாமல் இடஒதுக்கீடு வழங்குகிறது 

21. 31.8.1952 அனந்தசயன அய்யாங்கார் ஆணையத்தின் பரிந்துரைப்படி குற்றப்பழகுங்கிடிச்சட்டம் நீக்கப்பட்டது 

22. 29.1.1953 காகா கலேல்கர் தலைமையில் முதல் தேசிய பிற்பத்தப்பட்டோர் ஆணையம் நியமனம்

23. மாநில மறுசீரமைப்புக்குப் பிறகு, GO2 643 மூலம் BC க்கு 25%, SC/ST க்கு 16% என 25 புள்ளிகள் சுழற்சிப் பட்டியலுடன் காலியிடத்தை அடுத்த ஆண்டுக்கு கொண்டு செல்லாமல் இடஒதுக்கீடு வழங்குகிறது 

24. 30.03.1955 கலேல்கர் ஆணையம் சாதியடிப்படையில் பிற்படுத்தப்பட்டோரை அடையாளம் கண்டு கல்வி நிறுவனங்களில் 70% இடஒதுக்கீடும், அரசு நியமனங்களில் 40% இடஒதுக்கீடும் வழங்கவும் சாதிவாரிக்கணகெடுப்பு நடத்தவும் பரிந்துரைத்து அறிக்கை சமர்ப்பித்தது 

25. 15.7.1955 தமிழ்நாடு G.O.MS.NO.1247 கல்வியில் இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடப்பட்டது 

26. 31.1.1957 தமிழ்நாடு GO 353 MBC 58 பட்டியல் SC/ST க்கு இணையான கல்வி உரிமைகளை மட்டும் வழங்க உத்தரவிடப்பட்டது

27. 1957 SC/ST பிரிவினருக்கு துறைரீதியான போட்டித்தோர்வுகளில் இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடப்பட்டது

28. 1963 குரூப் சி-பி பணிகளில் பதவி உயர்வில் SC/ST பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க உத்திரவிடப்பட்டது

29. 1969 சட்டநாதன் - 3 உறுப்பினர்களின் கீழ், முதல் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நியமனம்

30. 1970 முதல் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் BC 25% இடஒதுக்கீட்டை 33% ஆக அதிகரிக்கவும், BC யை BC மற்றும் MBC என பிரிக்கவும் பரிந்துரைத்து அறிக்கை சமர்ப்பித்தது

31.25.3.1970 மத்திய அரசில் SCக்கு 15%மும் STக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது 

32. 1971 எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீட்டை ஆய்வு செய்ய உயர் அதிகார குழு 

33. 7.6.1971 தமிழ்நாடு GO 645 இடஒதுக்கீட்டை BC 25% லிருந்து 31%ஆஅகவும். SC/ST க்கு 16% லிருந்து 18% ஆகவும் உயர்த்தியது

34.15.5.1972 தமிழ்நாடு Go 437 MBC 39 கொண்ட திருத்தப்பட்ட சாதிகளின் பட்டியல் அறிவிக்கப்பட்டது 

35. 1.1.1979 மொராஜிதேசாய் பிரதமராக இருந்தபோது மத்திய அரசு பிற்படுத்தப்பட்ட வகுப்பை இனம்காண பிபி மண்டல் தலைமையில் இரண்டாம் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை நியமிக்கப்பட்டது.

36. 2.7.1979 தமிழ்நாடு GO 1156 இடஒதுக்கீடு பெற வருமான வரம்பு ரூ.9000 (ரூபாய்) கிரீமிலேயர் உருவாக்கப்பட்டது

37. 30.7.1979 தமிழ்நாடு GO 1310 Denotified Tribes (DNT) பழங்குடி என்ற பிரிவை Denotified communities (DNT) சமுதாய என்று மாற்றியது

38. 1.2.1980 தமிழ்நாடு GO 72 மூலம் கிரீமிலேயர் GO 1156 - DNT யை DNC யாக மாற்றிய GO 1310 ரத்து செய்யப்பட்டது 

39. 1.2.1980 தமிழ்நாடு GO 73 BC இட ஒதுக்கீடு 24.1.1980 முதல் 31% லிருந்து 50% ஆக அதிகரித்து உத்தரவும்

40. 31.12.1980 பி.பி மண்டல் ஆணையம் ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு உட்பட பல பரிந்துரைகளுடன் அறிக்கை தாக்கல்

41. 14.10.1982 தமிழ்நாடு GO 72 - 73 எதிரான வழக்கு WPs 4995 உட்பட பல வழக்குகளில் தரவுகளை சேகரிப்பதறகாக 2வது தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆனையத்தை நியமிக்குமாறு அறிவுறுத்தி உத்தரவிட்டது 

42. 13.12.1982 தமிழ்நாடு GO 3078 அம்பாசங்கள் தலைமையில் 2வது தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆனையம் நியமிக்கப்பட்டது

43. 28.2.1985 2 அறிக்கைகள் 1) 14 உறுப்பினர்கள் கணக்கெடுப்பின் முடிவுகள் மோசடியானது, இட்டுக்கட்டியது என்று நிராகரித்தும் மற்றும் SEBC அடையாளம் காண்பதற்கு 24 புள்ளிகள் கொண்ட அளவீடுகளைப் பயன்படுத்தவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டும் 67% இடஒதுக்கீடு வழங்கவும் பரிந்துரைத்தது 2)  தலைவர் மட்டும் கணக்கெடுப்பின் தரவை பரிந்திரைத்தும் நடைமுறையில் இருக்கும் BC 50% இடஒதுக்கீட்டைத் தொடரவும் பரிந்துரைத்து இரண்டு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

44. 30.7.1985 தமிழ்நாடு GO 1564 பிற்படுத்தப்பட்டோர் (BC)பட்டியல் வெளியிடப்பட்டது 

45. 30.7.1985 தமிழ்நாடு GO 1565 பொய்யாக பெரும்பான்மை உறுப்பினர்களின் அறிக்கையின் அடிப்படையில் BC க்கு 50% தொடரும் என்று அறிவிக்கப்பட்டது ஆனால் பெரும்பான்மை உறுப்பினர்கள் 67% இட ஒதுக்கீடு வழங்கப் பரிந்துரைத்திருந்தனர். அது சட்டப்படி சரியான பரிந்துரை

46. 30.7.1985 தமிழ்நாடு GO 1566 மிகவு பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் வெளியிடப்பட்டது

47. 30.7.1985 தமிழ்நாடு GO 1567 சீர்மரபினர் DNC பட்டியல் வெளியிடப்பட்டது

48. தமிழ்நாடு GO 1564,66, - 67 இல் வெளியிடப்பட்ட இந்தப் பட்டியல்களை எதிர்த்து தாக்கல் செய்த WP-C 18/1987 வழக்கு இந்திர சஹானி தீர்ப்பின் அடிப்படையில் 19.08.1996 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது

49.  31.1.1987 தமிழ்நாடு GO 558 கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களை BC யாக கருதும் ஆணை

50. 28.3.1989  தமிழ்நாடு GO 242 50% லிடுந்து, 39 MBC சாதிகள் and 68 DNC சாதிகளுக்கு 20% வழங்கப்பட்டது 

50. 1990 தமிழ்நாடு GO 242 எதிர்த்து WP No.10908/1990 வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் போடப்பட்டது

51. 8.1.1990 சென்னை உயர்நீதிமன்றம் WA No.1692 of 1987 வழக்கில் GO 73 மூலம் வழங்கப்பட்ட SC & ST கூட்டு இடஒதுக்கீட்டை இரத்து செய்துவிட்டு தனித்தனி இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டது.

53. 22.6.1990  தமிழ்நாடு GO 1090 உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ST க்கு 1% தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டது

54. 13.8.1990 மத்திய அரசு OM 36012ன் படி ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

55. 25.09.1991 மத்திய அரசு ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடும் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடும் வழங்க உத்தரவு பிறப்பிக்கின்றது 

56. 16.11.1992 ஓபிசி 27% எதிர்த்து இந்திரா சஹானி வழக்கில் 27% செல்லும் என்றும் ஆனால் மொத்த இடஒதுக்கீடு 50% தாண்டக்கூடாது என்றும் மத்திய மாநில அரசுகள் நிரந்தர ஆணையங்களை நியமிக்க உத்தரவிட்டது 

57. 15.3.1993  தமிழ்நாடு GO 9 நீதியரசர் சண்முகம்தலைமைடில் 1st நிரந்தர (TNBCC) பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நியமனம் 

58. 14.8.1993 தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையச் சட்டம் 1993ன் படி முதல் நிரந்தர தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் (NCBC நியமனம்)

59. இந்திர சஹானி தீர்ப்பின்படி மத்திய அரசு OM 36012 ன் படி ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடும் கிரீமிலேயர் வரையறையும் வெளியிட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது 

60. 10.9.1993 மத்திய அரசின் தீர்மானம் எண் 12011ன் படி ஓபிசி சாதிப்பட்டியல் வெளியிடப்பட்டது.

61. 15.10.1993 மத்திய அரசின் OM 36012ன் படி ஓபிசி சாதிச்சான்றிதழ் படிவமும்  வழிமுறையும் வெளியிடப்பட்டது.

62. 1993 SLP.No. 13526/1993 வழக்கில் உச்சநீதிமன்றம் இடஒதுக்கீடு 50% த்தை தாண்டக்கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

63. 31.12.1993 தமிழ்நாடு இடஒதுக்கீடுச் சட்டம் 1993 நிறைவேற்றப்பட்டது 

64. 19.7.1994 தமிழ்நாடு இடஒதுக்கீட்டுச் சட்டம் 45/1994 குடியரசுத் தலைவர்யின் ஒப்புதலைப் பெற்றது அதே நாளில் GO 28 மூலம் BC/MBC/DNC சாதிப்பட்டியல் வெளியிடப்பட்டது

65. 31.8.1994 76 வது அரசமைப்பு திருத்தச்சட்டம், சட்டம் 45/1994 9வது அட்டவணையில் ..257Aல் வைக்கப்பட்டது

66. 1994 சட்டம் 45/1994 எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் WP-C 454/1994 வழக்குத் தொடுக்கப்பட்டது

67. 10.2.1995 உச்சநீதிமன்ற அரசமைப்புச்சட்ட அமர்வு ஆர்,கே.சபர்வால் வழக்கில் பதவி அடிப்படயில் இடஒதுக்கீடு இடங்களை கணக்கிடும் முறையைக் கொண்டுவர உத்தரவிட்டது.

68. 17.6.1995 77 வது அரசமைப்பு திருத்தச்சட்டம் சரத்து16-4A SC/ST களுக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கியது

69. 19.8.1996  தமிழ்நாடு GO 1564,66, - 67 எதிர்த்து SLP-C 18/1987 வழக்கு இந்திரா சஹானி தீர்ப்பின்படி தள்ளுபடி

70. 17.3.1997  தமிழ்நாடு G.O.MS.No.24 2nd நிரந்தர(TNBCC) பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நியமனம் 

71. 12.3.1999  தமிழ்நாடு GO 242 எதிர்த்து போடப்பட்ட WPNo. 10908/1990 இந்திரா சஹானி தீர்ப்பின் அடிப்படையில்  முடிக்கப்பட்டது 

72. 16.9.1999 உச்சநீதிமன்ற அரசமைப்புச்சட்ட அமர்வு Catch Up Principle உறுதிசெய்தது அதாவது பொதுப்பிரிவினர் SC/ST க்கு பின் பதவி உயர்வு பெற்றாலும் அவர்கள் பழைய பணிமூப்பைப் பெறுவர் என்று தீர்ப்பளித்தது

73. 1.5.2000 81வது அரசமைப்பு திருத்தச்சட்டம் சரத்து 16-4B காலியிடங்களை அடுத்த ஆண்டுகளில் நிரப்ப வழி வகை செய்தது

74. 17.11.2001 85 வது அரசமைப்பு திருத்தச்சட்டம் சரத்து 16-4Aல் திருத்தம் கொண்டுவந்து பணிமூப்பும் வழங்கியது 

75. 13.11.2002  தமிழ்நாடு GO நீதிபதி ஆறுமுகத்தின் TNBCC தலைவர் காலத்தை நீட்டித்து உத்தரவு

76. 12.8.2005 உச்சநீதிமன்ற அரசமைப்புச்சட்ட அமர்வு இனாம்தார் வழக்கில் தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்க சட்டத்தில் இடமில்லை என்று தீர்ப்பு வழங்கியது.

77. 9.12.2005 93rd அரசமைப்பு திருத்தச்சட்டம் சரத்து 15-5 தனியார் கல்விநிறுவனங்களிலும் இடஒதுக்கீடு வழங்கியது 

78. 7.6.2006 தனியார் கல்விநிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்கும் தமிழக சட்டம் 12/2006 நிறைவேற்றம் 

79. 2006 சட்டம் 12/2006 எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் WP(Civil) No.462/2006 வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 27.7.2015 அன்று Ashok Kumar Thakur Vs. Union of India, (2008) 6 SCC1 தீர்ப்பின் அடிப்படையில் முடிக்கப்பட்டது

80. 11.7.2006  தமிழ்நாடு GO 30நீதிபதி MS ஜனார்த்தனன் TNBCC ஆணையம் முகமதியர் மற்றும் கிருஸ்தவர்கள் இட ஒதுகீட்டை மேம்படுத்தப் பரிந்துரை செய்ய உத்தரவு

81. 1.7.2007 மத்திய அரசு கல்வி நிறுவன இடஒதுக்கீட்டுச் சட்டம் 2006 நிறைவேற்றம்

82. 2007 TNBCC ஆணியயம் சிறுபான்மை சம்பந்தமாக இடஒதுக்கீடு அறிக்கை தாக்கல்

83. 5.1.2007 தமிழக சட்டம் 33/2007 BC 30%த்திலிருந்து முகமதியர்களுக்கு 3.5%, கிருஸ்தவர்களுக்கு 3.5% வழங்கியது

84. 2008 சட்டம் 33/2007 எதிர்த்து WP 31274/2008 வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

85. 11.7.2008  தமிழ்நாடு GO 76 நீதிபதி MS.ஜனார்த்தனன் TNBCC ஆணையத்தின் காலம் நீட்டிக்கப்பட்டது

86. 29.7.2008  தமிழ்நாடு GO 28 BC/MBC/DNC சாதிப்பட்டியல் திருத்தி வெளியிடப்பட்டது

87. 2.12.2008 தமிழக சட்டம் 51of 2008 மூலம் கிருஸ்தவர்களுக்கு Act 33/2007 வழங்கிய 3.5% இரத்து செய்யப்பட்டது.

 88. 2008 அருந்ததியர் இடஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஜனார்த்தனன் கமிஷன் நியமிக்கப்பட்டது

 89. 12.3.2009 தமிழகச் சட்டம் 4/2009, 18% எஸ்சி இடஒதுக்கீட்டில் அருந்ததியர்களின் 7 வேறு வேறு சாதிச்சான்றிதழ் பெறும் சாதிகளுக்கு 16% முன்னுரிமை இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் இயற்றப்பட்டது.

 90. 2009 சட்டம் 4/2009 எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது அம்ற்றும் 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.

 91. 25.3.2010 CA.No.2628 to 2637/2010 ஆந்திரமுஸ்லிம்கள் இடஒதுக்கீடு அரசியலமைப்பு சாசன் அமர்விற்கு மாற்றப்பட்டது

 92. 13.7.2010 தமிழகசட்டம் 45/1994 எதிர்த்து தாக்கல் செய்த வழக்கு WP 454/1994, உச்சநீதிமன்றம் 69% இடஒதுக்கீட்டை நியாயப்படுத்துவதற்கான தரவுகளை TNBCCக்கு அளிக்கும்படியும் மற்றும் அதன் அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டது.

 93. 2010 சென்னை உயர்நீதிமன்றத்தில் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி CN ராமமூர்த்தி WP 14025/2010 வழக்கைத் தாக்கல் செய்தார். அது 1.04.2015 அன்று முடிக்கப்பட்டது.

 94. 2011 தேசிய அளவில் சாதிவாரி சமூகப் பொருளாதாரக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் வெளியிடப்படவில்லை.

95. 08.07.2011 தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆனையம் (TNBCC), சட்டப்படி செல்லாத அம்பாசங்கர் ஆணையத்தின் அடிப்படையில் 69% இடஒதுக்கீட்டை நியாயப்படுத்தும் அறிக்கியயைச் சமர்ப்பித்து

96. 11.7.2011  தமிழ்நாடு GO 50TNBCC அறிக்கையை ஏற்றுக்கொண்டு அரசு உத்தரவிட்டது.

97.  தமிழ்நாடு GO 50 எதிர்த்தி உச்ஸ்நீதிமன்றத்தில் காயத்திரி வழக்கு WP-C No.365/2012 நிலுவையில் உள்ளது.

98. 2012 நீதிபதி ஜனார்த்தனன் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு பரிசீலிக்க ஆணையத்திற்கு உத்தரவிட கடிதம் எழுதியுள்ளார்

99.  21.3.2012 தமிழ்நாடு GO 35 MBC யில் உள் ஒதுக்கீடு பரிந்துரை செய்ய ஆணையத்திற்கு உத்தரவிடப்படுகிறது

100. 24.5.2012 சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்காமல் இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று பெரும்பான்மை ஆணைய உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.

101.  25.5.2012 Lr No 1/MS/2012 மூலம் மேற்படி தீர்மானத்தை அனுப்பி, தலைவர் தனிப்பட்ட முறையில் அனுப்பும் அறிக்கையை அரசு ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று உறுப்பினர் செயலாளர் அரசுக்கு எழுதியுள்ளார்.

 102. 13.6.2012 தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் இடஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்று பெரும்பான்மை அறிக்கையையும் வன்னியர்களுக்கு 20%  எம்பிசி இடஒதுக்கீட்டில் 10.5% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அப்போதைய தலைவர் நீதிபதி ஜனார்த்தனன் பரிந்துரை செய்தும் 2 அறிக்கைகளையும் ஆனையம் சமர்ப்பித்தது.

 103. 2014 தமிழக சட்டம் 33/2007 எதிர்த்து WP 7570/2014 வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்

 104. 27.2.2015 தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஓபிசி இடஒதுக்கீட்டை மூன்றாக பிரிக்கப் பரிந்துரைக்கின்றது.

 105. இராமமூர்த்தி தொடுத்த Wp 14025/2010ல் அவருக்கு ஆனையத்தின் அறிக்கையின் நகலையும் அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையும் தெரிவிக்குமாறு உத்தரவு பிரப்பிக்கப்பட்டது.

 106. 27.7.2015 நுகர்வோர் குரல் அமைப்பு தாக்கல் செய்த Wp(Civil) No.462/2006 வழக்கு Ashok kumar Tharkur Vs. Union of India, (2008) 6SCC 1 தீர்ப்பின் அடிப்படையில் தெரிவிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 107. 30.9.2015 சட்டம் 33/2007 எதிர்த்த WP 31274/2008 வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இருதரப்பும் முரளிதர் ராவ் ஆந்திர வழக்கின் அரசியலமைப்பு பெஞ்ச் தீர்ப்பிற்குக் கட்டுப்பட்டு நடந்துகொள்ல சம்மத தீர்ப்பு.

 108. 2.10.2017 ஓபிசி உள் ஒதுக்கீடு குறித்து பரிந்துரை செய்ய நீதிபதி ரோகிணி ஆணையம் நியமிக்கப்பட்டு இன்றுவரை காலம் நீட்டிக்கப்பட்டு வருகின்றது

 109. 1.12.2016 சட்டம் 33/2007 எதிர்த்த WP 7570/2014 இன்னொரு வழக்கில் சம்மதம் இல்லாவிட்டாலும் மேற்படி தீர்ப்பின்படி முடித்து வைக்கப்பட்டது.

 110. 11.8.2018 102வது அரசமைப்புச்சட்ட திருத்தத்தின் மூலம் சரத்து 338-B, 342A, 336- 26C சேர்க்கப்பட்டு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு  அரசமைப்புச்சட்ட அங்கீகாரமும், குடியரசுத் தலைவருக்கு SEBC அறிவிக்கும் அதிகாரமும் வழங்கப்பட்டது

 111. 14.8.2018 அறிவிப்பு No.S.O.3989-E மூலம் 102வது அர்சமைப்புச்சட்டம் 15.8.2018இருந்து செயல்பாட்டுக்கு வரும் என்று அறிவித்தது.

 112. 13.11.2018 தமிழ்நாடு GO 73, 4 IAS அதிகாரிகள் கொண்ட குழு DNT மக்களின் பிரச்சனைகள் பற்றி ஆராய போடப்பட்டது

 113. 14.1.2019 103வது அரசமைப்புச்சட்ட திருத்தத்தின் மூலம் சரத்து 15-6, 16-5 சேர்க்கப்பட்டு முன்னேறிய வகுப்பில் பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்களுக்கு (EWS) இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்கிறது

 114. 8.3.2019  தமிழ்நாடு GO 26 மூலம் மீண்டும் GO 1310/1979 திருப்பப்பெறப்பட்டு DNC மத்திய அரசுக்கு நியமனம்

 115. 8.7.2020  தமிழ்நாடு GO 52 நீதிபதி தணிகாச்சலம் ஆணையம் MBC உள் ஒதுக்கீடு பரிந்துரை செய்ய நியமனம்

 116. 18.8.2020 மத்திய அரசின் சமூகநீதி அமைச்சகம் DNT சமூக பொருளாதார குடும்பக் கணக்கெடுப்பு நடந்த உத்தரவு

 117. 21.12.2020  தமிழ்நாடு GO 99 சாதிவாரி தரவுகளைத் திரட்ட நீதிபதி குலசேகரன் ஆணையம் நியமனம். எந்த அறிக்கையும் கொடுக்காமல் ஆணையத்தின் காலம் முடிந்தது.

 118.1.2021 குலசேகரன் ஆணையத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிம்ன்றம் தள்ளுபடி

 119. 16.2.2021 SFRBC அமைப்பு தொடுத்த WP 3287/2021 வழக்கில் அவர்களின் 28.1.2021 தேதியிட்ட புகாரை 3 மாதத்தில் முடிக்க NCBC க்கு உத்தரவு.

 120.18.2.2021 தமிழக அரசின் BC செயலாளர் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர்  ஆணையத்திடம் MBC உள் ஒதுக்கீடு சம்பந்தமாக அறிக்கை கோருகிறார்.

 121. 22.2.2021 தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் அவரின் தனிப்பட்ட கருத்தை அளிக்கின்றார்.

 122. 26.2.2021 ஆணையத் தலைவரின் தனிப்பட்ட கருத்தின்  அடிப்படையில் சட்டம் 8/2021 MBC 20% இடஒதுக்கீட்டை மூன்றாகப் பிரித்து 1 சாதிக்கு MBC-V 10.5%, 25 MBC & 68 DNCக்கு 7% - 22 MBC 2.5% வழங்கியது.

 123. 9.3.2021 தமிழகச் சட்டம் 8/2021 க்கு எதிராக WPs 6011/2021 உள்பட 36 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.

 124. 1.4.2021 உயர்கல்வித்துறையின் கடித எண் 4903/A2/2021 மூலம் சட்டம் 8/2021 செயல்படுத்த உத்தரவு.

 125. 6.4.2021 தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் F.No NCBC/09/02/422/2021 மூலம் சரத்து 338Bன் கீழ் இடஒதுக்கீடு தொடர்பான புள்ளிவிபரங்களைக்  கோரியுள்ளது. அது நிலுவையில் உள்ளது.

 126. 9.4.2021 உச்சநீதிமன்றத்தில் சட்டம் 8/2021 க்கு எதிராக WP 382/ 2021 தாக்கல் செய்யப்பட்டது

 127. 26.07.2021  தமிழ்நாடு GO 75 சட்டம் 8/2021 செயல்படுத்தும் அரசாணிய வெளியிடப்பட்டது

 128. 18.8.2021 105 அரசமைப்புசட்ட திருத்தம் சரத்து 342A வில் மத்திய மாநில அரசிகளுக்கு SEBC கண்டறியும் அதிகாரம் வழங்கியது

 129. 25.8.2021 மேற்படி 36 வழக்குகளில் உயர்நீதிமன்றம் சட்டம் 8/2021 ன் படி எடுக்கும் முடிவுகள் வழக்கின் இறுதித் தீர்ப்பைப் பொறுத்தது என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

 130. 15.09.2021 அறிவிப்பு No 4063 மூலம் 105 அரசமைப்புத் திருத்த  சட்டம் 15.9.2021 முதல் செயல்பாட்டிற்கு வரும் என்று அறிவித்தது.

 131. 01.11.2021 சென்னை உயர்நீதிமன்றம் மேற்படி 36 வழக்குகளில் சட்டம் 8/2021 அரசமைப்புச்சட்டத்திற்கு எதிரானது என்று இரத்து செய்தது.

 132. 16.12.2021 சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பல வழக்குகளில் தடைவிதிக்க மறுப்பு

 133. 31.3.2021 உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றம் 1.11.2021 அன்று 10.5% இடஒதுக்கீட்டுச் சட்டம் 8/2021 இரத்து செய்தது உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து தீப்பு வழங்கியது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved