🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமூகநீதி 360 டிகிரியில் ஒரு பன்முகப் பார்வை! - பகுதி - 3

இந்திய இடஒதுக்கீடு வரலாறு விரிவாக எழுதப்பட்டுள்ளது. வரலாறு மட்டுமே பெரும் காப்பியமாகத் தொகுக்கலாம். இருப்பினும் சில அவசியமான சுருக்கமான வரலாற்றை மட்டும் பார்ப்போம். ஒரு சாதியினரே ஆங்கிலேய அரசின் பதவிகளில் இருக்கின்றார்கள் என்பது பல சமூகங்களுக்குக் கல்வி மறுக்கப்படுகிறது என்பதைக் கண்டறிந்த அன்னிய அரசு வருவாய் நிலையாணை எண் 128-2 1854ன் படி அரசுப்பதவிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு குறிப்பிடத்தக்கது. 1883ல் பல சமூகங்களுக்குக் கல்வி உதவி வழங்கக் குழு பரிந்துரைத்தது. 1885ல் நடந்த சென்னை காங்கிரஸ் கூட்டத்தில் இந்திய வேலை இந்தியர்களுக்கே என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1891 ஆம் ஆண்டில் திராவிட மகாஜன மாநாட்டில் "விகிதாச்சார உரிமை" என்ற சமூகநீதிக் கருத்தை தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி பண்டிதர் அயோத்திதாசர் அவர்கள் முன்வைத்தார். 1884 முதல் 1922 வரை ராஜாவாக இருந்த கோல்காபூர் சமஸ்தான சாகு மஹாராஜா நலிவடைந்த சாதியினரை மேம்படுத்த 50% இடஒதுக்கீடு 1902ல் வழங்கினார். அவர்களுக்கு வேலை வழங்குவதற்காகவே பல தொழிற்சாலைகளை உருவாக்கினார். 1906 அக்டோபர் 1 ஆம் ஆகாக்கான் தலைமையில் அன்றைய தலைமை ஆளுநர் மிண்டோவைச் சந்தித்து இஸ்லாமியர்கள் இடஒதுக்கீடு கோரினர். அதையேற்று 1909 ஆம் ஆண்டு, மிண்டோமார்லி சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக, இஸ்லாமியர்களுக்குத் தேர்தல்களில் தனித்தொகுதிகள் வழங்கப்பட்டன. இதுவே அரசு வழங்கிய முதல் இடஒதுக்கீடாகும்.

தமிழகத்தில் 1916 முதல் தென்னிந்திய மக்கள் சங்கம் தொடங்கப்பட்டு பின்பு நீதிக் கட்சியாக மாற்றப்பட்டுத் தொடர்ந்து சமூகநீதிக்காகக் குரல்கொடுத்து வந்தது. 1920ல் ஆட்சிப்பொறுப்பிற்கு வந்த 17.12.1920ல் சென்னை மாகாண அமைச்சரவையை அமைத்தது. பதவியேற்றவுடனேயே, அரசு வேலைவாய்ப்புகளில் அனைத்து மத சாதியினடுக்கும் இடஒதுக்கீடு வழங்கப் பனகல் அரசர் பனங்கன்டி ராமராயநிங்கார் ஆட்சியில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. முதல் கம்யூனல் G.O 613 16.9.1921 பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து பல சமூகநீதி ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு வந்தது. சமூகநீதி இயக்கத்தின் தலைவர், சென்னை மாகாண மேனாள் கல்வி அமைச்சர் எஸ்.முத்தையா முதலியாரின் முயற்சியால் 5 வகுப்பினருக்கு கீழேயுள்ள 12  புள்ளிகள் முறையில் இடஒதுக்கீட்டு வழங்கும் இரண்டாம் கம்யூனல் GO Ms No.1071 4.11.1927 43அன்று வெளியிடப்பட்டது.


அவ்வாணையால் இன்றைய பல பிசி/எம்பிசி/டிஎன்டி சமூகங்களுக்கு எந்தப் பலனையும் கொடுக்கவில்லை, அவர்ககுக்குச் சமூகநீதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது. 'ஏற்றத்தாழ்வு' ஒழிய 'சமூகநீதி' மலர ஒடுக்கப்பட்ட எல்லா மக்களுக்கும் அவரவர் மக்கட்தொகை அடிப்படையில் இடஒதுக்கீட்டை வழங்க வேண்டுமென்ற அடிப்படையில் 1931 ஆம் ஆண்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பும் நடந்தது. மூன்று வட்டமேசை மாநாட்டின் முடிவாக 1932ல் மெக்டொனால்டு அவார்ட் மூலம் தாழ்த்தப்பட்டோருக்கும் தனித்தொகுதி வழங்கப்பட்டது. இதை எதிர்த்து மகாத்மா காந்தி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். அண்ணல் அம்பேத்கர்  மகாத்மா காந்தியிடையே பூனாணா ஒப்பந்தம் ஏற்பட்டு தனிதொகுதிக்குப் பதிலாகத் தொகுதி இடஒதுக்கீடு வழங்குவது என்று முடிவானது. ஆகவே 1935ம் ஆண்டு சட்டத்தில் சேர்க்கப்பட்டு இன்று வரை நடைமுறையில் உள்ளது.

மத்திய அரசுப் பணிகளுக்கும் இடஒதுக்கீடு வேண்டும் எனக் கேட்டுப் போராடியதன் விளைவாய் 1935 ஆம் ஆண்டில் மத்திய அரசு கொண்டு வந்த "சென்னை மாகாண பார்ப்பனர் அல்லாதோர் இட ஒதுக்கீட்டுச் சட்டம்" மூலம் அப்போதைய இம்பீரியல் வங்கி, தனியார் இயக்கி வந்த தென்னக இரயில்வேயில் நடைமுறைக்கு வந்தது. 1944 ஆம் ஆண்டுக்குப்பின் தெமராத்தா இரயில்வேயிலும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

சென்னை மாகாணத்தில் வழங்கப்பட்டு வந்த 5 வகுப்பினருக்கு 12 பள்ளி இடஒதுக்கீட்டை கீழ்க்காணுமாறு 6 வகுப்பினருக்கு 14 புள்ளிகள் முறையில் இடொதுக்கீட்டு வழங்கும் மூன்றாம் கம்யூனல் GO Ms No.3437 21.11.1947 மூலம் நடைமுறைக்கு வந்தது.

அதன்பின் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 26.1.1950 முதல் அமலுக்கு வந்தது அதில் சமூகநீதி தொடர்பான பல சரத்துக்கள் சேர்க்கப்பட்டது. அதில் சரத்து 16-4 பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அரசு வேலைவாய்ப்பில் உரியப் பிரதிநிதித்துவம் வழங்க வலியுறுத்தியுள்ளது. (பிறசரத்துக்களைப் பின்பு பார்ப்போம்). இதன் அடிப்படையில் தமிழகத்தில் மேற்படி மூன்றாம் கம்யூனல் அரசாணைப்படி கல்வியில் இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு அதிகாரமில்லை அது சமத்துவ அனுமதிக்கவில்லை என்று, செண்பகம் துரைராஜன் மற்றும் வெங்கற்றாமன் என இருவழக்குகள் தொடுக்கப்பட்டு மேற்படு மூன்றாம் கம்யூனல் அரசாணை இரத்து செய்யப்பட்டது. தமிழகத்தில் தந்தை பெரியார் தலைமையில் கடும் எதிர்ப்புக் கிளம்பியதன் விளியவாக 1951ல் முதல் அரசமைப்புச் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டு சரத்து 15-4 சேர்க்கப்பட்டது. அதன்படி அரசு சமூகரீதியாக கல்விரீதியாகப் பிந்தங்கிய வகுப்பினர் மற்றும் SC/ST பிரிவினரின் மேம்பாட்டிற்காக எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளலாம் என்று வழிவகுக்கப்பட்டது. அதன்பின் சென்னை மாகாணத்தில் அரசாணை 2432ன் மூலம் வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 25%ம் SC/ST பிரிவினருக்கு 15%ம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.  

மத்திய அரசில் தாழ்த்தப்பட்டோடுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தாலும் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படவில்லை. 1953ல் காகா கலேல்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 1955ல் அறிக்கைகொடுத்து, சாதியடிப்படையில் பிற்படுத்தப்பட்டோரை அடையாளம் காணப்பட்டதை ஏற்க முடியாது என்று பாராளுமன்றம் நிராகரித்துவிட்டது.

மொழிவாரி மாநிலம் உருவாக்கப்பட்டபின் அரசாணை 2643 நாள் 30.12.1954 மூலம் SC/ST பிரிவினரின் இடஒதுக்கீடு 15% லிருந்து 16% ஆக உயர்த்தப்பட்டது. அரசாணை353 நாள் 31.1.1957 மூலம் 58 சாதிகள் கொண்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் உருவாக்கப்பட்டு கல்வியில் SC/ST பிரிவினருக்கு நிகரான அனைத்து உரிமைகளும் வ்ழங்கப்பட்டது. 1963ல் எம்.ஆர்.பாலாஜி வ்ழக்கில் இடஒதுக்கீடு 50%ற்கு மேல் இருக்கக்கூடாது என்று கூறிவிட்டது. 1969ல் ஏ.என்.சட்டநாதன் தலைமையில் தமிழகத்தின் முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் 1971 ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோருக்கு (25%+6%) 31% என்றும் தாழ்த்தப்பட்டோருக்கு (16%+2%) 18% என்றும் உயர்த்தி புதிய ஒடஒதுக்கீடு ஆணை 645 நாள் 7.6.1971 பிறப்பிக்கப்பட்டது.

1976ல் N.M.தாமஸ் எதிர் கேரள அரசு என்ர வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு இடஒதுக்கீடு 50%க்கு அதிகமாகவும் இருக்கலாம் என்று தீர்ப்பளித்தது. 1979ல் அரசாணை 1156 நாள் 2.7.1979 மூலம் தமிழகத்தில் ரூ.9000க்கு அதிகமாக ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு இஅடஒதுக்கீடு இல்லை என்ற உத்தரவு, அரசாணை 1310 நாள் 30.7.1979 மூலம் Denotified Tribes (DNT) யில் இருந்தபழங்குடி வார்த்தையை நீக்கிவிட்டு Denotified Communities (DNC) என்ற மாற்றியும் உத்தரவிடப்பட்டது. அதற்குக் கடும் எதிர்ப்புக்கிளபியதாலும்  பாராளுமன்ற ட்ஹேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தாலும் 1.2.1980ல் அரசாணை 72 மூலம் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை 31% லிருந்து 50% ஆகவும் மேலும் 1797ல் போடப்பட்ட அனைத்து அரசாணைகளும் திரும்பப்பெறப்பட்டது. இதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வ்ழக்கில் உச்சநீதிமன்றம் 14.10.1982 அன்று வழங்கியத் தீர்ப்பில் ஒரு ஆணையம் அமைத்து புள்ளிவிபரங்களைச் சேகரிக்க உத்தரவிடப்பட்டது.

அதன்படி அரசாணை 3078 நாள் 13.12.1982 மூலம் இரண்டாம் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் திரு.அம்பாசங்கர் தலைமையில் நியயமிக்கப்பட்டு மொத்தம் 21 உறுப்புனர்கள் நியமிக்கப்பட்டனர். 1983ல் வீடுதோறும் புள்ளிவிபரங்கள் சேகரிக்கப்பட்டது. முறையாகத் திட்டமிடாததால் 50க்கு மேற்பட்ட சாதிகள் சேர்க்கப்படவில்லை. இரண்டாம கட்டமாக சமூக கல்விநிலைகுறித்து மாதிரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது இதிலும் பலசாதிகள் விடுபட்டன. 1985ல் அறிக்கை தயார் செய்யும் போது அதில் பெரும் தில்லுமுல்லு அரங்கேற்றப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ந்துபோன 14 உறுப்பினர்கள் அந்த புள்ளிவிபரங்களை அரசு ஏற்கக்கூடாது என்று தனி அறிக்கை சமர்ப்பித்தனர். அதன்படி அரசாணை 242 நாள் 28.3.1989 மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/DNT மக்களுக்கு 20% தனி ஒதுக்கீடு வழங்கப்பட்டது. உயர்நீதிமன்றன் உத்தரவுப்படி அரசாணை 1090 நாள் 22.6.1990ன் படி தமிழகத்தில் ST வகுப்பினருக்கு 1% தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. தமிழகத்தில் இவ்வாறு இடஒதுக்கீட்டின் அளவு 69% அடந்தது.

இந்த காலகட்டங்களில் மத்திய அரசில் 1979ல் பி.பி. மண்டல் தலைமையில் இரண்டாம் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நியமிக்கப்பட்டு 22 புள்ளிகள் அளவுகோலில் சாதி உள்பட சமூக, கல்வி, பொருளாதார பிற்படுத்தப்பட்டோர் அளவீடுகளைத் தயாரித்து அந்த அலவுகோலில் 11 புள்ளிகளுக்கு அதிகமாகப் பெற்றவர்களை இதரப்பிற்படுத்தப்பட்டோர் என்று அடையாளம் கண்டார். 1980ல் ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு உட்படப் பல வரிந்திரைகளி வழங்கினார். அதன் ஒரு உறுப்பினர் திரு.ஆர்.எல்.நாயக் ஓபிசியில் தொகுப்பு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று அறிக்கியகொடுத்தார். அந்த அறிக்கை அப்படியே கிடப்பில் கிடந்தது. பாரதப் பிரதமர் வி.சி.சிங்க் வடந்தியாவில் நிலவிய பல கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் ஆட்சி கவிழும் ஆபத்தான அரசியல் பின்விளைவுகள் இருந்தும் மன உறுதியோடும் உரியய எண்பத்தோடும் அரசமைப்புச்சட்டத்தின் இலட்சியத்தை நிறைவேற்றும் பொருட்டும் 13.8.1990ல் ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டார். அதை 15.8.1990 செங்கோட்டையிலிருந்து பிரகடனப்படுத்தினர். அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் போடப்பட்ட இந்திரா சஹானி வழக்கில் 16.11.1992ல் மண்டல் அறிக்கையைச் சரியென்றும் ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு வழங்கியது அரசமைப்புச்சட்டத்திற்கு எதிரானதில்லை என்றும் தீர்ப்பளித்து. மேலும் அந்த வழக்கில் 1991ம் ஆண்டு பாரதப் பிரதமர் நரசிம்மராவ் காலத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது செல்லாதுஎன்றும் அறிவித்தனர். ஆனால் SC/St வகுப்பினருக்கு வழங்கி வந்த பதவி உயர்வில் இடஒதுக்கீடு அரசமைப்புச் சட்டத்திற்கு புறம்பானது என்றும் தீர்பளித்தனர். இடஒதுக்கீடு 50%க்கும் மிகுதியாக வழங்குவது சரத்து 14ல் உள்ள சமத்துவ உரிமையை மீறுவதாகும் என்றும் தீர்ப்பளித்தனர். ஆனால் 50% அளவை மீற போதுமான நியாயப்படுத்தக்கூடிய புள்ளிவிபரங்கள் அடிப்படையிலான காரணங்கள் இருந்தால் இடஒதுக்கீட்டின் அளவை அந்தந்தப் பகுதியில் கூட்டுக்கொள்ளலாம் என்ற்ம் தெளிவுபடுத்தியிருந்தது. மத்திய மாநில அரசுகள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதற்கும் நீக்குவதற்கும் நிரந்தர ஆணையங்களை நியமிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதனால், தமிழகத்தில் வழங்கப்பட்டு வந்த 69% இடஒதுக்கீட்டுச் சட்டத்திற்கு ஆபத்து வந்தது. அதையடுத்து தாக்கலான SLP. No. 1362/1993 வழக்கில் உச்சநீதிமன்றம் இடஒதுக்கீடு 50%ஐ தாண்டக்கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

அப்போதைய முதல்வர் துரிதமாகச் செயல்பட்டு 31.12.1993ல் 69% இடஒதிக்கீட்டுச்சட்டத்தை நிறைவேற்றி அதற்கு அரசமைப்புச்சட்டம் சரத்து 31-C ன் கீழ் 19.7.1994ல் குடியரசுத் தலைவரின் ஒப்புதல்பெற்று சரத்து 14-19லிருந்து பாதுகாப்பும் பின்பு 76வது அர்சமைப்புச்சட்ட திருத்தத்தின் மூலம் அச்சட்டத்தை 9வது அட்டவணையில் வைத்து சரத்து 31-Bன் கீழ் 31.8.1994ல் ஒப்புதல் பெற்று எல்லா அடிப்படை உரிமையிலிருந்தும் பாதுகாப்புப் பெற்றார். அதாவது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளது என்ற அடிப்படையில் நீதிமன்றங்கள் 9வது அட்டவணைச் சட்டங்களைச் செல்லாது என்று அறிவிக்க முடியாது என்ற பாதுகாப்பு பெறப்பட்டது. மேலும் அரசாணை 9 மூலம் 15.3.1993 முதல் நிரந்தத் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் உருவாக்கப்பட்டு ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் 10.2.1993 அன்று உச்சநீதிமன்றம் ஆர்.கே.சபர்வால் வழக்கில் இடஒதுக்கீட்டிற்கான இடங்களியக் கணக்கிடும்போது காலி இடங்களின் அடிப்படையில் கணக்கிடக்கூடாது. மாறாக அந்தந்தத் துறையில் உள்ள மொத்தப் பணி இடங்களின் அடிப்படையில் கணக்கிட வேண்டும் என்றும் அதாவது Post based roster முறையைச் செயல்படுத்த உத்தரவிட்டது. அதன்பின் 17.6.1995 அன்று 77வது அரசமைப்புச்சட்ட திருத்தத்தின் மூலம் சரத்து 16-4A சேர்க்கப்பட்டு SC/ST வகுப்பினருக்குப் பதவி உயர்வில் இடஒத்க்கீடு வழங்க வழிவகை செய்யப்பட்டது. அதேபோன்று 1.5.2000 அன்று 81 வது அரசமைப்புச்சட்ட திருத்தத்தின் மூலம் சரத்து 16-4B சேர்க்கப்பட்டு நிரப்பப்பராத இடஒதுக்கீட்டு இடங்களை அடுத்த ஆண்டுகளில் நிரப்பிக்கொள்ள அதிகாரம் வழங்கியது. 19.11.2001 அன்று 85வது அரசமைப்புச்சட்ட திருத்தத்தின் மூலம் சரத்து 16-4A மேலும் திருத்தப்பட்டு SC/ST வகுப்பினருக்குப் பணிமூப்புடன் பதவி உயர்வு வழங்க வழிவகை செய்த்து. இனாம்தார் வழக்கீல் தனியார் கல்விநிலையங்களில் இடஒதுக்கீடு வழங்கச் சட்டம் அனுமதிக்கவில்லை என்று தீர்ப்பளித்து. எனவே 9.12.2005அன்று 93வது அரசமைப்புச்சட்டத் திருத்தம் மூலம் சரத்து 15-5 சேர்க்கப்பட்டு தனியார் கல்வி நிலையங்களிலும் இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்தது. அதன்படி 7.6.2006ல் தமிழக அரசு தனியார் கல்விநிறுவன இடஒதுக்கீட்டுச் சட்டம் 12/2006ஐ நிறைவேற்றியது. 1.7.2007 அன்று மத்திய அரசு கல்வி நிறுவன இடஒதுக்கீட்டுச் சட்டம் 2006ஐ (சட்ட எண் 5/2007) நிறைவேற்றியது.இவ்விரு சட்டங்களை எதிர்த்தும் தனித்தனி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டாலும் அரசமைப்புச்சட்ட திருத்த்ம் 93ஐ எதிர்த்துப் போடப்பட்ட அசோக்குமார் தாகூர் வழக்கில் அரசமைப்புச்சட்ட அமர்வு சரத்து 15-5 செல்லும் என்றும் அதனால் மத்திய அரசு சட்டம் செல்லும் என்றும் கிரீலிலேயரை இடஒதுக்கீட்டிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் 10.4.2008 அன்று உத்தரவிட்டது. அதனடிப்படையில் தமிழக சட்டம் 12/2006ஐயும் உறுதிசெய்து 27.7.2015 அன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

11.7.2006 ல் அரசாண 30ன் மூலம் நீதிபதி ஜனார்த்தனன் தலைமையிலான ஆணையத்தியம் தமிழக சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டு நிலைகுறித்து பரிந்துரைக்க உத்தரவிட்டது. 2007ம் ஆண்டு அந்த ஆணியயம் சிறுபான்மையினருக்குத் தனை இடஒதுக்கீடு வ்ழங்கப் பரிந்துரைத்தது. 15.9.2007 முதல் முகமதியர் மற்றும் கிருஸ்தவ்ர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டுவந்த 30% இடஒதுக்கீட்டிலிருந்து தலா3.5% வழங்கும் இடஒதுக்கீட்டுச்சட்டம் 33/2007 கொண்டுவரப்பட்டது. அதை எதிர்த்துப் போடப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றன் அரசமைப்புச்சட்ட அமர்வில் உள்ள வழக்கில்ன் தீர்ப்புக்கு உட்பட்டது என்று கூறி முடிக்கப்பட்டது. அந்த உச்சநீதிமன்ற வழக்கு இன்றும் நிலுவையில் உள்ளது. கிருஸ்தவர்கள் தனி இடஒதுக்கீட்டை ஏற்காததால்2.12.2008 அன்று சட்டம் 51/2008ன் மூலம் சட்டம் 33/2007 திருத்தப்பட்டு கிருஸ்தவர்கள் மீண்டும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் சேர்க்கப்பட்டு பிற்ப்படுத்தப்பட்டோருக்கு  26.5% வழங்கப்பட்டு வருகின்றது. 2008ல் அருந்ததியர் இடஒதுக்கீட்டை ஆய்வு செய்ய நீதிபதி ஜனார்த்தனன் ஒரு நபர் ஆணையம் நியமிக்கப்பட்டு அறிக்கை பெறப்பட்டு 12.3.2009 அன்று சட்டம் 4/2009 இயற்றப்பட்டு, 7 தனித்தனி அரசமைப்பு ஆணை வரிசை எண்களில் உள்ள 7 வேறு வேறு சாதிச்சான்றிதழ் பெறும் 7 சாதிகளைத் தொகுத்து அருந்ததியர்கள் என்ற ஒத்தநிலையில் உள்ள மற்ற தாழ்த்தப்பட்ட சாதிகளிலிருந்து மிகவும் பிந்தங்கியுள்ள சாதிகள் தொகுப்பிற்கு எஸ்சி வகுப்பிற்கு வழங்கப்பட்டு வந்த 18% இடஒதுக்கீட்டிலிருந்து 16% தொகுப்பு முன்னுரிமை இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இச்சட்டத்தை எதிர்த்துப் போடப்பட்ட வழக்குகள் உச்சநீத்மன்றத்திற்கு மாற்றப்பட்டு 7 நீதிபதிகள் அமர்வு முன்பு நிலுவையில் உள்ளது. 

வாமன்ராவ் மற்றும் கொயல்கோ வழ்க்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு பிறகு 9வது அட்டவணையில் வைக்கப்பட்டிருந்த சட்டப்பாதுகாப்பு நீர்த்துபோனது அதாவது, அடிப்படை உரிமையை மீறும் சட்டங்கள் 24.4.1973க்கு (கேஷ்வானந்த பாரதி வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்பின் நாள்) பிறகு 9வது அட்டவணையில் வைக்கப்பட்டாலும் நீதிமன்றங்கள் சரத்து 14-21ஐ மீறும் சட்டங்களைச் செல்லாது என்று அறிவிக்கலாம் என்று தீர்ப்பளித்துவிட்டது. 69% இடஒதுக்கீட்டுச் சட்டத்தை எதிர்த்துப் போடப்பட்ட WP 454/1994 வழக்கில் 13.7.2010 அன்று தமிழக அரசு 69% இஅடஒதுக்கீட்டை நியாயப்படுத்த  தேவையான புள்ளி விபரங்களைச் சேகரித்து TNBCC யிடம் வழ்ங்கிய ஆணையம் வழங்கும் பரிந்துரையின் படி முடிவெடுக்க உத்தரவிட்டது. ஆனால் எந்த புள்ளிவிபரங்களும் இல்லாமல் நீதியரசர் ஜனார்த்தனன் ஆணையம் ஒரு அறிக்கையை 8.7.2011ல் சமர்ப்பித்தது. அதை அரசு ஏற்று 11.7.2011ல் அரசாணை எண் 50ஐ பிரகடனப்படுத்தியது. அதை எதிர்த்துப்போடப்பட்ட காயத்திரி வழக்கு WP-C No.365/2012 இன்றுவரை நிலுவையில் உள்ளது.

அதன்பின் 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் TNBCC தலைவர் ஜனார்த்தனன் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப் பரிந்துரைக்க ஆணையத்தைப் பணித்து உத்தரவிடுங்கள் என்று தமிழக அரசுக்குக் கடிதம் எழுதுகிறார். அதன்ழ்டிப்படையில் அரசாணை எண்35,21.3.2012 அன்று வெளியிடப்பட்டு MBC உள் இடஒதுக்கீடு தொடர்பாகப் பரிந்துரைக்குமாறு ஆணையம் பணிக்கப்பட்டது. 24.5.2012ல் நடந்த ஆணியயக் கூட்டத்தில் தலைவர் தவிர மற்ற எல்லா உறுப்பினர்களும் சாதிவாரிக்கணக்கெடுப்பு நடத்தாமல் உள்ஒதுக்கீடு தொடர்பாக எந்தப் பரிந்துரையும் வ்ழங்க முடியாது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அந்த தீர்மானம் ஆணையச் செயலாளர் உறுப்பினர் மூலம் 25.5.2012லேயே அனுப்பப்படுகின்றது. இருப்பினும் ஆணையத்தலைவர் மட்டும் 13.6.2012ல் வன்னியர்களுக்கு MBC 20% இடஒதுக்கீட்டிலிருந்து 10.5% தனி இடஒதுக்கீடு வழங்கப் பரிந்துரைத்து அரசுக்கு அறிக்கை அனுப்புகிறார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வன்னியர்களுக்குத் தனி இடஒதுக்கீடு கோரி CN ராமமூர்த்தி தொடுத்த் WP 14025/2010 வழக்கில் 1.4.2015 அன்று அவருக்கு அந்த அறிக்கையையும் அதில் எடுக்கப்பட்ட நடவடிக்கையையும் தெரிவிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு முடிக்கப்பட்டது.

DNT மக்கள் குறித்து ஆய்வு செய்ய, பிகுராம்ஜி இதாதே தலைமையில் போடப்பட்ட தேசிய DNT ஆணையம் 2015ல் அம்மக்கள் குறித்து கணக்கெடுக்கத் திட்டமிடுகிறது, அதை எதிர்த்து TNBCC தலைவர் ஜனார்த்தனன் தேசிய DNT ஆணையத்திற்கு நேரடியாகக் கடிதம் எழுதுகிறார். DNT கணக்கெடுப்பு நின்றுவிடுகிறது. 27.2.2015  அன்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஓபிசி இடஒதுக்கீட்டை மூன்றாகப் பிரித்து வ்ழங்கப் பரிந்துரைக்கின்ரது. 2.10.2017 அன்று ஓபிசி உள்ஒதுக்கீடு குறித்துப் பரிசீலிக்க நீதிபதி டோகிணி தலைமையில் ஆணையம் நியமிக்கப்பட்டு இன்று வரை கால நீட்டிக்கப்பட்டு வருகின்றது. 11.8.2018ல் 102வது அரசமைப்புசட்ட திருத்தத்தின் மூலம் சரத்துக்கள் 338-B, 342-A, 366-26C சேர்க்கப்பட்டு தேசிய பிற்படுத்தப்பட்டோராணையத்திற்கு SC/ST ஆணையங்களுக்கு நிகரான அதிகாரம் அளித்து அரசமைப்புச் சட்ட தகுதி வழங்கப்படுகிறது. 13.44.201 அன்று அரசாணை எண் 73ன் படி 4 IAS அதிகாரிகள் கொண்ட குழு DNT மக்கள் குறித்து ஆய்வு செய்யப் போடப்பட்டு, அறிக்கை அளித்தும் அதுவும் கிடப்பில் போடப்படுகிறது. 8.3.2019 அன்று அரசாணை2 6 மூல பழங்குடிகள் என்ற வார்த்தையை நீக்கொய அரசாணை1 310 நாள் 30.7.1979 இரத்து செய்யப்பட்டு மத்திய அரசு உரிமைகளுக்கு மட்டும் பழங்குடிகள் அதாவது DNT என்று சான்று வழங்கப்படும் என்றூ உத்தரவிடப்படுகிறது. 14.1.2019 அன்று 103வது அரசமைப்புச்சட்ட திருத்தத்தின் மூலம் சரத்து 15-6, 16-5 சேர்க்கப்பட்டு முன்னேறிய வகுப்பில் பொருளாதாரரீதியாக நலிவடைந்தவர்களுக்கு (Economically Weaker Section EWS) இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யப்படுகிறது.

இந்நிலையில் 8.7.2020 அன்று அரசாணை எண் 52ன் மூலம் நீதிபதி தணிகாச்சலம் தலைமையில் ஆனையம்நியமிக்கப்பட்டு 5வது பணியாக MBC உள் ஒதுக்கீடு செய்யப் பரிந்துரை பணிக்கப்படுகின்றது. 18.8.2020 அன்று மத்திய அரசின் சமூகநீதி அமைச்சகம் மத்திய அரசின் செலவிலேயே DNT சமூக, பொருளாதர, குடும்பக் கணக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பிக்கின்றது. தமிழக அரசு இன்று வரை ஒரு தொடர்பு அதிகாரியைக்கூட நியமிக்கவில்லை. அதுநிலுவையில் இருக்கின்ற போதே 21.12.2020 அன்று தமிழகத்தில் சாதிவாரி புள்ளிவிபரங்களைச் சேகரிக்க நீதிபதி கலசேகரன் ஆணையம் நியமிக்கப்படுகிறது அந்த ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காலம் அதன் ஆயுள் காலம் 21.6.2021ல் முடிந்துவிடுகிறது. 22.2.2021 அன்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் தணிகாச்சலம் அவரின் தனிப்பட்ட கருத்தாக MBC 20%த்தை ஒரு சாதியான வன்னியர்களுக்கு 10.5%, 25 MBC & 68 DNT சாதிகளுக்கு 7% மீதுமுள்ள 22  MBC சாதிகளூக்கு 2.5% வழங்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளார். அதன் அடிப்படையில் 26.2.2021 அன்று சட்டம் 8/2021 சட்டமன்றத்தின் கடைசிநாளில் எல்லா சட்ட மரபுகளையும் மீறி எந்த விவாதமும் இலாமல் தேர்தல் அறிவிக்கும் சில நிமிடங்களுக்கு முன்பு சட்டம் நிறைவேற்ரப்பட்டது. அதை எதிர்த்து 36 வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையில் 18.8.2021 அன்று 105 அரசமைப்புச்சட்ட திருத்தம் மூலம் சரத்து 342A வைத்திருத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு தனித்தனியாக SEBC கண்டறியும் அதிகாரம் வழங்கியது. மேற்பை சட்டம் 8/2021க்கு எதிரான வழக்குகளில் 1.11.2021 அன்று 7 சட்ட கேள்விகளை எழுப்பி அச்சட்டம் அரசமைப்புச்சட்டசரத்துக்களுக்கு எதிரானது என்றும் அச்சட்டம் செல்லாது என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. (ஆது குறித்து பின்பு விரிவாகப் பார்ப்போம்). இந்த 1.11.2021 உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட 41 வழக்குகளில்31.3.2022 அன்றூ உச்சநீதிமன்றத்தில் உயர்நீதிமன்றம் எழுப்பிய 7 சட்டக்கேள்விகளில் 6 கேள்விகளை ஏற்று உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிசெய்தது. இருப்பினும் அதிகாரமே இல்லாமல் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மீண்டும் உள் ஒதுக்கீடு குறித்து விவாதிக்க முயற்சித்தது அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்து 26.5.2022 அன்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளது. இங்கு மிகச் சுருக்கமான வரலாற்றை மட்டுமே கொடுத்துள்ளோம் பல்வேறு தலைப்புகளில் இந்நூலில் சமூகநீதியின் பல கோணங்கலையும் பல பரிமாணங்கலையும் விவாகப் பார்ப்போம், சமூக நீதியைக் காப்போம்.      

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved