🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமூகநீதி 360 டிகிரியில் ஒரு பன்முகப் பார்வை! - பகுதி - 4

இடஒதுக்கீட்டின் பன்முகங்கள்

இடஒதுக்கீடு என்பது அரசு வேலைகளில் கல்வி நிறுவனங்களிலும் ஒதுக்கீடு வங்குவது மட்டுமல்ல. அதற்குள்ளும் பல் நடைமுறைகள் கையாளப்படுகின்றது. பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு வழங்கப்படுகின்றது பாரளுமன்றம் சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகளில் ஒடஒதுக்கீடு வழங்கப்படுகிறது, திட்டங்கள், பெற்றோல் பங்குகள் ஒதுக்கீடு செய்வதிலும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பல நேரடி நியமனப் பணிகளில் இடஒதுக்கீடு வழங்குவதில்லை. குறிப்பாகப் பலநாடுகளுக்குத் தூதுவர்களாக நியமிக்கப்படும் பதவிகளில் இடஒதுக்கீட்டு முறை கடைப்பிடைக்கப்படுவதில்லிய, அமைச்சரவை நியமனம் துறைச்செயலாளர் போன்ற முக்கியமான பதவிகளில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. எனவே உறவுகள் குறைந்தப் பட்சம் என்னனென்ன இடஒதுக்கீடுகள் நடைமுறையில் உள்ளது. அதில் என்ன குறைபாடுகள் உள்ளன? அதை எப்படிக் களைய வேண்டும்? என்று தெரிந்து திட்டமிட வேண்டும்.

I நேரடி நியமனத்தில் இடஒதுக்கீடு முறை

1. இந்திய முழுவதும் திறந்த போட்டி தேர்வு மூலமாக நியமிக்கும் பணிகளில் OBCக்கு 27%, SCக்கு 15%, STக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

2. இந்திய முழுவதும் திறந்தம்போட்டி தேர்வு அல்லாத  முறையில் நியமிக்கும் பணிகளில் OBCக்கு 25.84%, SCக்கு 16.66%, STக்கு 7.5% க்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

3.டெல்லியைத் தவிர மற்ற பகுதிகளில் சி மற்றும் டி வகுப்பு பணிகளில் நியமனங்களில் அந்தந்தப் பகுதியில் இருக்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் போது SC, ST மக்கள் தோகிய விகிதத்திற்கு ஏற்பவும் OBCக்கு 27% க்கும் மிகாமலும் கீழ்க்காணுமாறு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்

ஆதாரம் : Annexure to O.M.No.36017/1/2004-Estt.(Res.) dated 5.7.2005

4. ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் பணி நியமனம் செய்யும் போது அந்தப் பகுதிகளின் கூட்டு மக்கள் தொகைக்குத் தகுந்தார் போல் SC,ST மக்களுக்கு மக்கள் தொகைக்கு விகிதத்திற்கு ஏற்பவும் OBC க்கு 27%க்கு மிகாமலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

5. OBC யில் கிரீமிலேயர் பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடையாது SC,ST பிரிவில் அனைவருக்கும் இடஒதுக்கீடு உண்டு.

II பதவி உயர்வில் இடஒதுக்கீடு

 மத்திய அரசில் OBC பிரிவினருக்கு எந்தப் பதவி உயர்விலும் இடஒதுக்கீடு கிடையாது. நேரடி நியமனம்75%க்கு மிகாமல் இருக்கும் கீழ்க்காணும் பணிகளில் SCக்கு 15%, ST க்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

) துறை தேர்வுகள் மூலம் நடக்கும் பி.சி - டி வகுப்பு பணிகளில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

) வகுப்பு பி யிலிருந்து பதவி உயர்விலும் பி,சி, மற்றும் டி பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

) தேர்ந்தெடுக்கப்படாமல் நியமிக்கப்படும் ,பி,சி, மற்றும் டி பதவி  உயர்வுகளில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

) தற்காலிகப் பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு SC, ST பிரிவினருக்கு இடஒதுக்கீடு உண்டு ஆனால் OBC க்கு கிடையாது

) வகுப்பு பதவி உயர்வுகளில் சலுகை மத்திய அரசியல் OBC பிரிவினருக்கு எந்தப் பதவி உயர்வுகளில் எந்தச் சலுகையும் கிடையாது. SC/ST பிரிவினருக்கு பல சலுகைகள் உண்டு. தகுதியாக இருக்கும்போது அளவுகோல்களைப் பொருத்திப் பார்க்காமல் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

 III தற்காலிகப் பணி நியமனத்தில் இடஒதுக்கீடு

வழக்கமான பணியிடங்களுக்கு தற்காலிகப் பணியாளர்களை நியமனம் செய்வதில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்

 IV தொழில்துறை பணியாளர் இடஒதுக்கீடு

மத்திய அரசின் தொழில்துறை பணியாளர்களின் பதவிகளில் இடஒதுக்கீடு .பி.சி, மற்றும் டி என்று பிரிக்காமல் இருந்தாலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

 V பொதுத்துறைகளில் இடஒதுக்கீடு

பொதுத்துறை நிறுவனங்களில் மத்திய அரசு இடஒதுக்கீடு முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். தன்னாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு அரசு உதவிபெறும் அனைத்து தன்னாட்சி அமைப்புகளிலும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

 VI இடஒதுக்கீட்டில் இருந்து விலக்கு

1. அன்னிய பணி நியமனம், நிரந்தரமாக கிரகித்துக்கொள்ளும் பணி நியமனங்களில் OBC,SC, ST இடஒதுக்கீடு இல்லை. ஆனால் அதிக எண்ணிக்கையில் இருக்கும் போது அவர்களுக்கு உரியப் பங்கு கிடைக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2. 45 நாட்களுக்கு குறைவான பணிகளில் OBC, SC, ST இடஒதுக்கீடு இல்லை

3. அவசரக் காலங்களில் நியமிக்கப்படும் வேலை சார்ந்த (Work charged) பணிகளில் இடஒதுக்கீடு இல்லை.

4. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பதவிகளில் இடஒதுக்கீடு கீழ்நிலை வகுப்பு பணிகள் வரைதான் இடஒதுக்கீடு வழங்க முடியும்.

5. ஆராய்ச்சிக்காக நியமிக்கப்படும் உயர் வகுப்பு பணிகளில் இடஒதுக்கீடு கிடையாது. ஆனால் விதிவிலக்கு அறிவிக்கும் முன் சம்பந்தப்பட்ட துறையில் ஒப்புதல் பெற் வேண்டும்.

6. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கீழ்நிலை வகுப்பு பணிகளும் ஒருமுறை மட்டுமே விளம்பரப்படுத்தப்படும் இடஒதுக்கீடு இடம் பூர்த்தியாகவில்லை என்றால் அது பொதுப்பிரிவிற்கு சென்றுவிடும்

7. வேலை சார்ந்தப் பணிகளில் முடிந்த அளவிற்குத்தான் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றுதான் கூறப்பட்டுள்ளது.

8. தினக்கூலி வேலைகளில் இடஒதுக்கீடு கிடையாது

9. புதிதாக அமைக்கப்பட்ட பணிகளில் இஅட ஒதுக்கீடு வழங்க வேண்டிய அவசியமில்லை ஆனால் வெளியிலிருந்து ஆட்களை எடுக்கும் போது இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்

10. ஒரு காலியிடத்தில் இடஒதுக்கீடு வழங்க வேண்டியதில்லை அது ஒதுக்கப்பட்ட இடமாக இருந்தாலும் பொது இடமாக கருதப்படும்.

11. ஒரு பதவி பணிகளில் இடஒதுக்கீடு கிடையாது.

12. வெளிநாட்டின் பணி நியமனம் செய்யும் போது இடஒதுக்கீடு இல்லை.

VII இடஒதுக்கீட்டைத் தீர்மானிக்கும் முறை

1. ஒரு துறையில் 13 இடங்களுக்கு மேல் இருந்தால் அந்தப் பணியின் எண்ணிக்கையோடு இடஒதுக்கீடு விகிதத்தைப் பெருக்கினால் வருகின்ற எண்ணிக்கையே அந்தப் பிரிவுக்கான ஒதுக்கீடாகும்.

2. 14 இடங்களுக்கு குறைவாக இருந்தால் சுழற்சி முறையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

3. ஒராண்டில் வருகின்ற காலியிடங்கள் 50%ஐ மிகக் கூடாது. அதில் பழைய காலியிடங்களைச் சேர்க்கக்கூடாது.

4.எல்லாத் துறைகளிலும் இடஒதுக்கீடு பதிவேடு கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.

5.இடஒதுக்கீடு சுழற்சி முறை பதிவேடு வைத்திருக்க வேண்டும்

6.கருணை/உபரிபணியாட்கள் நியமனம் செய்பவர்களில் இஅஒதுக்கீடு நியமிக்கப்பட்டால் மட்டுமேய்டஒதுக்கீடாகக் கருதவேண்டும் பொது இடங்களில் நியமித்தல் இடஒதுக்கீடு விகித்த்தில் சேர்க்கக்கூடாது

7. SC/ST விண்ணப்பதாரர்கள் பதவி உயர்வுக்குக் கிடைக்காதப் பட்சத்தில் அது பொது இடங்ளாக மாற்றப்படும்

8. நேரடி ஆட்சேர்ப்பு நியமனங்களில் இட ஒதுக்கீட்டின் கீழ் ஆட்கள் இல்லாத எ வகுப்பு பணிகளை பொதுநலன் கருதி காலியாக வைக்க முடியாது என்று கருதி சம்பந்தப்பட்ட ஆணையத்தின் அனுமதியைப் பெற்று பொது இடங்களாக மாற்றிக்கொள்ளலாம்.

9. நேரடி ஆட்சேர்ப்பில் வயது, தகுதி, கட்டண தளர்வு

10. ஓபிசிக்கு மூன்று ஆண்டுகள்

11. எஸ்சி/எஸ்டிக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வுகள் வழங்கப்படும்

12.பதவி உயர்வில் எஸ்சி/எஸ்டி க்கு வயது வரம்பில் தளர்வு உண்டு ஆனால் ஓபிசி க்கு கிடையாது

13. தேர்வுக் கட்டணத்தில் எஸ்சி/எஸ்டிக்குக் கட்டணமில்லை ஆனால் ஓபிசி கட்டணம் செலுத்த வேண்டும்

14. நேரடி ஆர்சேர்ப்பு அனுபவத் தகுதி தளர்வு தேவைப்பட்டால் போதுமான அளவுக்கு ஆட்கள் இல்லை என்றால் இடஒதுக்கீட்டின் கீழ் வருபவர்களுக்கு அதிலிருந்து விதிவிலக்கு அளிக்க நியமனம் செய்யும் அதிகாரிக்கு அதிகாரம் உண்டு.

15. நேரடி ஆர்சேர்ப்பு பொருந்தக்கூடிய  தரத்தின் தளர்வு போதுமான அளவுக்கு ஆட்கள் இல்லை என்றால் இடஒதுக்கீட்டின் கீழ் வருபவர்களுக்கு அதிலிருந்து விதி விலக்கு அளித்து இட ஒதுக்கீட்டு இடங்களை நிரப்ப வேண்டும்.

16.கல்வித் தகுதியில் தளர்வு இல்லை

17. நேர்வுக்கான ஆட்சேர்ப்பு விதிகள்/விதிமுறைகள் இடஒதுக்கீட்டின் கீழ் வரும் மாணவர்களுக்கு தளர்வுகள் வழங்க வழிவகை செய்திருக்க வேண்டும்.

 VIII இடஒதுக்கீடு அறிக்கைகள்

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் ஒவ்வொரு துறையிலும் கடந்த ஆண்டு எத்தனைப் பேர் நியமிக்கப்பட்டனர் அதில் எத்தனைப் பேர் எஸ்சி, எஸ்டி, மற்றும் ஓபிசி என்றும் அதில் எத்தனைப் பேர் ஏ வகுப்பு பணியில் சேர்ந்துள்ளார் என்றும் அறிக்கிய அளிக்க வேண்டும்.

சாதிச்சான்று மாற்றம்

1. ஒருவர் திருமணத்தின் மூலம் சாதிச்சான்றிதழை மாற்ற முடியாது.

2. ஒருவர் மதம் மாறினாலும் ஓபிசியாத்தான் இருப்பார். ஆனால் SC யாக இருந்தால் மத்திய அரசில் முன்னேறியவகுப்பாகவும், மாநிலங்களில் பிற்பட்ட வகுப்பாகவும் கருதப்படுவார்கள். எஸ்டியாக இருந்தால் எந்த மதம் மாறினாலும் எஸ்டியாகத்தான் இருப்பார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved