🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமூகநீதி 360 டிகிரியில் ஒரு பன்முகப் பார்வை! - பகுதி - 5

5. தேசிய மற்றும் உலக நவீன சமூகநீதி பார்வை

நீதி உணர்வு என்பது மனித இனம் உருவானபோதே உருவான மனித இயல்புணர்ச்சி. அனைவருக்கும் அவரவருக்குரிய பங்கை வழங்குவது இயல்புணர்ச்சி. மனிதன் சமூகமாக வாழ இந்த நீதி உணர்வே அச்சாணியாக இருந்து வருகிறது. அவ்வப்போது அநீதி அதிகரித்தாலும் நீதி உணர்வே மனிதச் சமூகத்தை நீட்டித்து நிலைத்து நிற்கவைத்து வருகிறது. மனிதச்சமூகம் இருக்கும்வரை நீதி உணர்வும் உயிர்ப்புடன் இருக்கும்.

நீதி குறித்துப் பல நெடுங்காலாமகப் பலாவிதமான சிந்தனைகளும் கற்பிதங்களும் பல படைப்புகள் வாயிலாக, தத்துவகோட்பாடுகளாக, அறநெறிக்கருத்துக்களாக, ஒழுக்கங்களாக, மதக்கோட்பாடுகளாக போதிகப்பட்டுக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கிரேக்கச் சிந்தனையாளர் பிளாட்டோ, தனது குடியரசு நூலிலும் அரசியல் அறிவியலின் தந்தை அரிஸ்டாட்டில் தனது நிகோமாசியன் நெறிமுறைகள் என்ற நூலிலும் விரிவாக விவரித்துள்ளனர். இதுபோன்ற பல நாகரிகங்களில் நீதிக் கோட்பாடுகள் உருவாக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. தமிழக சலாச்சரத்தில் சங்க காலம் தொட்டே நீதிக்கருத்துக்கள் நிலைபெற்று இருந்தது. குறிப்பாக 18 பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் 11 நூல்கள் நீதிபற்றி மட்டுமே போதிக்கின்றது. அதில் ஒன்றுதான் உலப்பொதுமறையான திருக்குறள். அது அறத்துப்பாலில் பல நீதிக்கருத்துக்களைப் போதிக்கின்றது. மற்ற நாகரிகங்கள் பெரும்பாலும் நீதி என்பது மனிதர்களுக்கு இடையேயான உறவுக்கோட்பாடாகவே போதிக்கிறது. தமிழகத்தில் சங்க இலக்கியம் தொட்டே, முல்லைக்குப் பாரி செய்தது, மயிலுக்குப் பெகன் செய்தது, ஆதிசோழன் சிபி சக்கரவர்த்தி புறாவிற்கும் பருந்துக்கும் செய்தது, மனுநீதி சோழன் பசுவுக்கு வழங்கிய நீதி என்று உலகநீதிகளின் உச்சமாக இருப்பதும் தான் தமிழ் நீதி.

ஆனால் இன்று நீதி பற்றிய எந்த உணவுமின்றி அநீதியைச் சிம்மாசனத்தில் ஏற்றி அழகு பார்த்துக் கொண்டிருக்கின்றோம். அரசியல் காரணங்களுக்காக எந்தத் தர்ம சிந்தனையும் இன்றி மனம் போனபோக்கில் சமூகநீதி என்ற பெயரில் சமூக அநீதி அரங்கேற்றப்பட்டுவருகின்றது

இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தின் உன்னதமான முதல் நோக்கம் அனைத்து குடிமக்களுக்கும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதியைப் பாதுகாப்பதுதான். ஆனால் 80 கோடி ஓபிசி மக்களுக்கு மட்டும் தொடர்ந்து உரிய பங்கு மறுக்கப்பட்டு வருகின்றது. நாமும் நீதி உணர்வு அற்றவர்களாக வாழ்ந்து வருகின்றோம். அறியாமை நம்மை ஆட்டிப்படைத்து ஆட்சி செய்து கொண்டுள்ளது. நீதிமன்றங்களும் சமத்துவ உரிமையைத் தவறாகப் புரிந்துகொண்டு பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிய நீதியை மறுத்து வருகின்றது. அனைத்து சமூகங்களுக்கும் உரிய வாய்ப்பு அளிப்பது எப்படி சமத்துவ கோட்பாட்டிற்கு எதிராகும். சமத்துவத்தின் பெயரில் ஓபிசி மக்களின் உரிமையை மறுப்பது சமத்துவத்திற்கே சமாதி கட்டும் செயல். இப்போக்கை மாற்ற சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

அமொரிக்கா போன்ற மேலைநாடுகளில் கூட வேலை கல்வி நிறுவங்களில் சமூகரீதியாகப் பின்தங்கியுள்ள மக்களுக்கு இடஒதுக்கீடு உட்படப் பல சிறப்புத்திட்டங்களைத் செயல்படுத்தி வருகின்றனர். ஆனால் உண்மையான பிரதிநிதித்துவம் பெற இடஒதுக்கீடுதான் சரியான கருவி. உதராணமாக இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்கள் சமூகத்தில் பல அளவீடுகளில் பின் தங்கியிருந்தாலும் இடஒதுக்கீடுச்சட்டத்தால் உரிய இடத்தை பெற முடிந்துள்ளது. எனவே ஓபிசி மக்களுக்கும் அவர்களுக்கு உரிய இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.   

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved