🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமூகநீதி 360 டிகிரியில் ஒரு பன்முகப் பார்வை! - பகுதி - 6

I. இந்திய அரசமைப்புச் சட்ட பிரிவுகள்

சமூகநீதியை சட்டப்படி புரிந்துகொள்ள அடிப்படையான இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 12,13,14, 15,16,29,31-B, 31C, 38, 39 46, 141, 243D,243T, 309,330,332,334,335,338,338A,338B, 340, 341,342, 342A, 366-2A, 366-25  மற்றும் 336-26C ஆகிய 29 சரத்துகளைத் தெளிவாக தெரிந்திருக்க வேண்டும். எனவே, இந்தச் சரத்துக்கள் மட்டுமே தமிழாக்கம் செய்யப்பட்டு இங்கே தரப்படுகின்றது. இருப்பினும் உண்மையான பொருள் ஆங்கில மொழியில் இருப்பதே இறுதியானது.

மேலும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை தான் சமூகநீதியை சமூகத்தின் எல்லா தளங்களிலும் உத்தரவாதமாக வழங்கப்படுகிறது. இடஒதுக்கீடு வழங்காமல் அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கவே முடியாது என்ற நமது வாதத்திற்கு சட்ட அரணாக இருப்பதுதான் 

முகப்புரை

இந்திய மக்களாகிய நாம்இந்திய நாட்டினை இறையாண்மையும் சமநிலைச்சமுதாயமும் சமயச்சார்பின்மையும் மக்களாட்சிமுறையும் அமைத்ததொரு குடியரசாக நிறுவவும், அதன் குடிமக்கள் அனைவரும் சமுதாய, பொருளியல், அரசியல் நீதி, எண்ணம், அதன் வெளியீடு, கோட்பாடு, சமயநம்பிக்கை, வழிபாடு இவற்றில் தன்னுரிமை, சமுதாயப்படிநிலை, வாய்ப்புநலம் இவற்றில் சமன்மை ஆகியவற்றை எய்திடச் செய்யவும்,

அவர்கள் அனைவரிடையேயும் தனிமனிதனின் மாண்பு, நாட்டுமக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு இவற்றை உறுதிப்படுத்தும் உடன்பிறப்புரிமையினை வளர்க்கவும் உள்ளார்ந்த உறுதியுடையராய்; நம்முடைய அரசமைப்புப் பேரவையில், 1949 நவம்பர் இருபத்தாறாம் நாளாகிய இன்று, ஈங்கிதனால், இந்த அரசமைப்பினை ஏற்று, இயற்றி, நமக்கு நாமே வழங்கிக்கொள்கிறோம்.

சத்து : 12 பொருள்  வரையறை:

இந்தப் பகுதியில், தறுவாயின் தேவை வேறானாலன்றி, "அரசு" என்பது, இந்தியாவின் அரசாங்கத்தையும் நாடாளுமன்றத்தையும் மாநிலங்கள் ஒவ்வொன்றின்  அரசாங்கத்தையும் சட்டமன்றத்தையும், இந்திய ஆட்சிநிலவரைக்குள்ளோ இந்திய அரசாங்கத்தின் கட்டாள்கையிலோ இருக்கும் உள்ளாட்சி அல்லது பிறவகை அதிகார அமைப்புகள் அனைத்தையும் உள்ளடக்கும்.

சரத்து 13 : அடிப்படை உரிமைகளுக்கு முரணான அல்லது அவற்றைத் திறக்குறைவு செய்யும் சட்டங்கள்:

1. இந்த அரசமைப்பின் தொடக்கநிலையை ஒட்டிமுன்பு இந்திய ஆட்சிநிலவரையில் செல்லாற்றலிலுள்ள சட்டங்கள் அனைத்தும், இந்தப் பகுதியின் வகையங்களுக்கு முரணாக இருக்கும் அளவிற்கு இல்லாநிலையன ஆகும்.

2. இந்த பகுதியில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பறிக்கும் அல்லது ஒடுக்கும் சட்டம் எதனையும் அரசு இயற்றுதல் ஆகாது; மேலும், இந்தக் கூறினை மீறும் வகையில் இயற்றப்படும் சட்டம் எதுவும், அவ்வாறு மீறும் அளவிற்கு இல்லாத நிலையது ஆகும்

3. இந்த உறுப்பில், தறுவாயின் தேவை வேறானலன்றி

. "சட்டம்" என்பது, இந்தியா ஆட்சி நிலவரையில் சட்டச் செல்லாற்றல் கொண்ட அவசரச் சட்டம், ஆணைதுணை விதி, விதி, ஒழுங்குறுத்தும் விதி, அறிவிக்கை, வழக்கம், வழக்காறு இவற்றை உள்ளடக்கும்;

. "செல்லாற்றலிலுள்ள சட்டங்கள்" என்பது, இந்த அரசமைப்பின் தொடக்கநிலைக்கு முன்பு, இந்திய ஆட்சி நிலவரையில் இருந்த ஒரு சட்டமன்றத்தினாலலோ தகுதிறமுள்ள பிறவகை அதிகார அமைப்பினாலோ நிறைவேற்றப்பட்டு அல்லது இயற்றப்பட்டு, முன்னரே நீக்கறவு செய்யப்படாதச் சட்டங்களை, அத்தகைய சட்டம் எதுவும் அல்லது அதன் பகுதி எதுவும் அப்போது முற்றிலுமாகவோ குறிப்பிட்ட படப்பிடங்களிலோ செயற்பாட்டில் இல்லாதிருப்பினும், உள்ளடக்கும்.

4. இந்த உறுப்பிலுள்ள எதுவும், இந்த அரசமைப்பின் 368 ஆம் உறுப்பின்படி செய்யப்படும் திருத்தம் எதற்கும் பொருந்துறுவதில்லை.

சமன்மைக்கான உரிமை

சரத்து :14 சட்டத்தின் முன்னர்ச் சமன்னை:

அரசு, இந்தியா ஆட்சி நிலவரைக்குள் சட்டத்தின் முன்னர்ச் சமன்மையையும் சட்டங்கள் அளிக்கும் பாதுகாப்பில் சமன்மையையும் எவர் ஒருவருக்கும் மறுத்தல் ஆகாது.

சரத்து :15 சமயம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறப்பிடம் காரணமாக வேற்றுமை காட்டுதலுக்குத் தடை:

1. அரசு, குடிமகன் எவர் மட்டும், சமயம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் இவற்றை மட்டுமே அல்லது இவற்றுள் ஏதொன்றையும் மட்டுமே காரணமாகக் கொண்டு வேற்றுமை காட்டுதல் ஆகாது

2. குடிமகன் எவரையும்

) கடைகள்பொது உண்டிச்சாலைகள், உணவு விடுதிகள், பொதுக் கேளிக்கையிடங்கள் ஆகியவற்றிற்குச் சென்று வருவதையோ,

) அரசு நிதியங்களை முழுவதுமாகவோ பகுதியாகவோ கொண்டு பேணப்படும் அல்லது பொதுமக்களின் பயன்பாட்டுக்கு உரித்தாக்கப்படும் கிணறுகள், குளங்கள், நீராடுதுறைகள், சாலைகள், பொதுமக்கள் சாருமிடங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதையோ பொறுத்து, சமயம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் இவற்றை மட்டுமே அல்லது இவற்றுள் ஏதொன்றையும் மட்டுமே காரணமாகக் கொண்டு, தகவுக்கேடு, கடப்பாடு, வரைத்தடை அல்லது நிபந்தனை எதற்கும் உட்படுத்துதல் ஆகாது.

3. இந்த உறுப்பிலுள்ள எதுவும், மகளிர்க்காகவும் சிறார்க்காகவும் தனி ஏற்பாடு எதனையும் அரசு செய்வதற்குத் தடையூறு ஆவதில்லை.

4.  இந்த உறுப்பிலோ 29ஆம் உறுப்பின் 2 ஆம் கூறிலோ உள்ள எதுவும், குடிமக்களில் சமுதாய நிலையிலும் கல்வி நிலையிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மேம்பாட்டிற்காகவோ பட்டியலில் கண்ட சாதியினர், பட்டியலில் கண்ட பழங்குடியினர் ஆகியோருக்காகவோ தனி ஏற்பாடு எதனையும் அரசு செய்வதற்குத் தடையூறு ஆவதில்லை.

5. இந்த உறுப்பிலோ அல்லது 19ஆம் உறுப்பின் 1) ஆம் கூறின் ) உட் கூறிலோ உள்ள எதுவும், குடிமக்களில் சமுதாய நிலையிலும் கல்வி நிலையிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எவரின் மேம்பாட்டிற்காகவோ அல்லது பட்டியல் கண்ட சாதியினர் அல்லது பட்டியலில் கண்ட பழங்குடியினருக்காகவோ, 30 ஆம் உறுப்பின் 1 ஆம் கூறில் சுட்டப்பட்ட சிறுபான்மையினர் கல்வி நிலையங்கள் அல்லாத பிற அரசு உதவிபெறும் அல்லது உதவி பெறாத தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளடங்கலான கல்வி நிறுவனங்களில், அவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கு, தனி ஏற்பாடு எதுவும் எந்த அளவுக்குத் தொடர்புடையதாயிருக்கிறதோ அந்த அளவுக்கு, அத்தகைய தனி ஏற்பாடு எதனையும், அரசு சட்டத்தின் வாயிலாகச் செய்வதற்குத் தடையூறு ஆவதில்லை.

6. இந்த உறுப்பு அல்லது 19 ஆம் உறுப்பின் 1) ஆம் கூறின் ) உட்கூறு அல்லது 29 ஆம் உறுப்பின் 1) ஆம் கூறிலோ உள்ள எதுவும் அரசு கீழ்கண்டவற்றை உருவாக்குவதற்கு தடையூறு ஆவதில்லை,

) உட்கூறு 4 மற்றும் 5 ல் குறிப்பிடப்பட்டுள்ள வகுப்புகள் தவிர பொருளாதாரத்தில் பலவீனமான பிரிவைச் சேர்ந்த குடிமக்கள் எவரின் மேம்பாட்டிற்காகவும் தனி ஏற்பாற்டினை செய்யவோ : மற்றும்

) உட்கூறு 4 மற்றும் 5 ல் குறிப்பிடப்பட்டுள்ள வகுப்புகள் தவிர பொருளாதாரத்தில் பலவீனமான பிரிவைச் சேர்ந்த குடிமக்கள் எவரின் மேம்பாட்டிற்காகவும் தனி ஏற்பாடுகள் எதுவும் செய்யவும், மேற்படி தனி ஏற்பாடுகள் 30 ஆம் உறுப்பின் 1 ஆம் கூறில் சுட்டப்பட்ட சிறுபான்மையினர் கல்வி நிலையங்கள் தவிர்த்த பிற அரசு உதவிபெறும் அல்லது உதவிபெறாத தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளடங்கிய கல்வி நிறுவனங்களில் அவர்களின் சேர்க்கை தொடர்புடைய சிறப்பு விதிமுறைகள் இயற்றவும். இடஒதுக்கீட்டைப் பொருத்தவரை, தற்போதுள்ள இடஒதுக்கீட்டிற்கு கூடுதலாகவும், ஒவ்வொரு வகையிலும் உள்ள மொத்த இடங்களில் அதிகபட்சமாக பத்து சதவீதத்திற்கு உட்பட்டதாக இருக்கும்

விளக்கம்:

இந்த உறுப்பு மற்றும் உறுப்பு 16 னைப் பொருத்தவரை "நலிவடைந்த பிரிவினர்" என்பதை மாநில அரசு, குடும்ப வருமானம் மற்றும் பொருளாதார குறைபாட்டுக்குக் காரணமாக பிற காரணிகளையும் அவ்வப்போது கணக்கில் கொண்டு அறிவிக்கை வெளியிடலாம்.

சரத்து :16 பொது வேலையமர்த்தங்கள் தொடர்பாகச் சமன்மையான வாய்ப்பு நலம்:

1. குடிமக்கள் அனைவருக்கும், அரசின் கீழுள்ள வேலையமர்த்தம் அல்லது பதவியமர்த்தம் தொடர்பாகச் சமன்னையான வாய்ப்பு நலம் இருத்தல் வேண்டும்.

2. குடிமகன் எவரையும், சமயம், இனம், சாதி பாலினம், குடிவழி, பிறப்பிடம், உறைவிடம் இவற்றை மட்டுமே அல்லது இவற்றுள் ஏதொன்றையும் மட்டுமே காரணமாகக் கொண்டு, அரசின் கீழுள்ள வேலையமர்த்தம் அல்லது பதவி எதனையும் பொறுத்துத் தகுமை அற்றவராகவோ வேற்றுமை காட்டுதலுக்கு உற்றவராகவோ ஆக்குதல் ஆகாது

3. இந்த உறுப்பிலுள்ள எதுவும், ஒரு மாநில அல்லது ஒன்றியத்திலுள்ள ஆட்சிநிலவரை அரசாங்கத்தின் அல்லது அதிலுள்ள உள்ளாட்சி அல்லது பிறவகை அதிகார அமைப்பு எதங்கீழும், ஒரு வகையினை அல்லது வகைகளைச் சார்ந்த வேலையமர்த்தம் அல்லது பதவியமர்த்தம் பொறுத்து, அத்தகைய வேலையமர்த்தத்திற்கு அல்லது பதவியமர்த்தத்திற்கு முன்னரே அந்த மாநிலத்திற்குள்ளோ ஒன்றியத்து ஆட்சி நிலவரைக்குள்ளோ உறைவிடம் இருக்க வேண்டிய தேவைப்பாட்டினை வகுத்துரைக்கும் சட்டம் எதனையும் நாடாளுமன்றம் இயற்றுவதற்குத் தடையூறு ஆவதில்லை.

4. இந்த உறுப்பிலுள்ள எதுவும், அரசின் கீழுள்ள பணியங்களில் போதிய அளவிற்கு இடம்பெறவில்லை என அரசு கருதும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் எதனையும் சேர்ந்த குடிமக்களின் நலச்சார்பாகப் பதவியமர்த்தங்களை அல்லது பணியடைகளை  ஒதுக்கீடு செய்வதற்கான ஏற்பாடு எதனையும் அரசு செய்வதற்குத் தடையூறு ஆவதில்லை.

) இந்த உறுப்பிலுள்ள எதுவும், அரசின் கீழுள்ள பணியங்களில் போதிய அளவு சார்பாற்றம் செய்யப்படாது, அரசின் கருத்தில் பட்டியலில் கண்ட சாதியினரின் மற்றும் பட்டியலில் கண்ட பழங்குடியினரின் நலச்சார்பாக உள்ள அரசின் கீழுள்ள பணியிடைகளின் வகை எதற்கும் அல்லது வகைகள் ஏவற்றிற்கும்,2[முந்துறு விளைவுடையதாய் பணி முதுநிலையின் அடிப்படையில் பணி உயர்வு குறித்த பொருட்பாடுகளில்] ஒதுக்கீடு செய்வதற்கான ஏற்பாடு எதனையும் அரசு செய்வதற்குத் தடையூறு ஆவதில்லை].

) இந்த உறுப்பிலுள்ள எதுவும், 4 ஆம் கூறின் அல்லது 4. கூற்றின்படி செய்யப்பட்ட ஒதுக்கீட்டிற்கான ஏற்பாடு எதற்கும் இணங்க, அந்த ஆண்டில் நிரப்பப்படுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட அந்த ஆண்டிற்கான நிரப்பப்படாத காலியிடங்கள் எவற்றையும் பின்வரும் ஆண்டு எதிலும் அல்லது ஆண்டுகள் எவற்றிலும் நிரப்புவதற்கான தனிப்பட்ட வகையைச் சார்ந்த காலியிடங்கள் அரசு கருதுவதற்கு தடையூறு ஆவதில்லை மற்றும் அத்தகைய காலியிடங்கள், அந்த ஆண்டிலுள்ள காலியிடங்களின் மொத்த எண்ணிக்கையில், ஐம்பது விழுக்காடு ஒதுக்கீடு என்ற உச்சவரம்பை நிர்ணயிப்பதற்காக அவை நிரப்பப்பட வேண்டிய ஆண்டிலுள்ள காலியிடங்களுடன் சேர்த்து காலியிடங்களாகக் கருதப்படுவதல் ஆகாது.

5. இந்த உறுப்பிலுள்ள எதுவும், சமயம் அல்லது சமயக்களை சார்ந்த நிறுவனம் ஒன்றன் அதுவறபாடுகள் தொடர்பாக ஒரு பதவி வகிப்பவரோ அல்லது ஆட்சிக்குழும உறுப்பினர் எவருமே, ஒரு குறிப்பிட்ட சமயத்தை ஓம்புகிறவராகவோ ஒரு குறிப்பிட்ட சமயக்கிளையைச் சேர்ந்தவராகவோ இருத்தல் வேண்டும் என வகை செய்கிற சட்டம் எதுவும் செயல்படுவதைப் பாதிப்பதில்லை.

6. இந்த உறுப்புகள் எதுவும் உட்கூறு 4 ல் குறிப்பிடப்பட்டுள்ள வகுப்பினர் தவிர பொருளாதாரத்தில் பலவீனமான பிரிவைச் சேர்ந்த குடிமக்கள் எவருக்கும் நியமனங்கள் அல்லது பதவிகளில் தற்போது நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டுக்கு கூடுதலாக மற்றும் அதிகபட்சம் பத்து சதவீதத்திற்கு உட்பட்டு இட ஒதுக்கீடு வழங்க ஏதேனும் ஏற்பாட்டை செய்வதற்கு அரசுக்கு எந்த தடையூறும் ஆவதில்லை.

பண்பாடு கல்வி பற்றிய உரிமைகள்

சரத்து 26 சிறுபான்மையினர் நலங்களுக்குப் பாதுகாப்பு:

1. இந்திய ஆட்சி நிலவரையில் அல்லது அதன் பகுதி எதிலும் குடியிருந்துவரும் குடிமக்களில் எப்பிரிவினரும் தமக்கெனத் தனிவேறான மொழி, எழுத்து வடிவம் அல்லது பண்பாடு உடையவராயிருப்பின் அவற்றைப் பேணிக்காக்கும் உரிமை உடையவர் ஆவார்.

2. குடிமகன் எவரையும், சமயம், இனம், சாதி, மொழி இவற்றை மட்டுமே அல்லது இவற்றுள் ஏதொன்றையும் மட்டுமே காரணமாகக் கொண்டு, அரசினால் பேணிவரப்படும் அல்லது அரசு நிதியங்களிலிருந்து உதவி பெறும் கல்வி நிறுவனம் எதிலும் சேர்ப்பதற்கு மறுத்தல் ஆகாது.

சரத்து : 38 மக்கள் நிலப்பாட்டை வளர்க்கும் வகையில், சமுதாய முறையமைவினை எய்திடுமாறு அரசி செய்தல் வேண்டும்:

1. அரசு, தேசிய வாழ்வின் அமைவனங்கள் அனைத்திலும் சமுதாயம், பொருளியல், அரசியல் நீதி நிறைந்து

 நிலவதான ஒரு சமுதாய முறையமைவினைப் பயனுற எய்திப் பாதுகாத்து, மக்களின் நலப்பாட்டை வளர்த்திட  அரிதின் முயலுதல் வேண்டும்.

2. அரசு, தனிமனிதர்களுக்கு இடையே மட்டுமின்றி வெவ்வேறு பகுதிகளில் வாழ்கின்ற அல்லது வெவ்வேறு வாழ்க்கைத் தொழில்களில் ஈடுபட்டிக்கின்ற மக்கள் பிரிவினருக்கிடையே, குறிப்பாக, வருமானத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகளை இயன்ற அளவு குறைப்பதற்கு அரிதின் முயல்வதோடு, அவர்களிடையே சமுதாயப் படிநிலை, வளவசதிகள், வாய்ப்பு நலங்கள் ஆகியவற்றிலுள்ள ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவதற்கும் முனைந்து முயலுதல் வேண்டும்.

சரத்து :3 9 அரசு பின்பற்ற வேண்டிய குறித்த சில கொள்கைக் கோட்பாடுகள்:

குறிப்பாக, பின்வருவனவற்றை எய்திடுமாறு அரசு தன் கொள்கையை நெறிப்படுத்தல் வேண்டும்

) குடிமக்கள், ஆண்களும் பெண்களும் சரிநிகராக, வாழ்க்கைக்குப் போதுமான வழிவகைக்கு உரிமை உரையவராதல்

) பொதுமக்கள் நலங்களுக்கு நனிசிறக்க உதவும் வகையில், சமுதாயத்தின் பொருள்வளங்கள் மீதான சொத்துரிமையினையும் கட்டாள்கையினையும் பகிர்ந்தளித்தல்

) பொருளியல் முறைமையின் செயல்பாட்டினால், செல்வவளமும் உற்பத்திச் சாதனங்களும், பொது நலனுக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் ஒரு சிலரிடம் குவிந்து விடாது இருத்தல்

) ஆண், பெண் இருபாலரும் ஒத்த வேலைக்கு ஒத்த சம்பளம் பெறுதல்

) ஆண், பெண் உழைப்பாளர்களின் உடல் நலம், உடல்வலிவு, சிறார்களின் இளம்பருவம் இவற்றை நெறிதவறிப் பயன்படுத்தாமை; மேலும், பொருளியல் தேவையுறுத்தம் காரணமாகக் குடிமக்கள் தங்கள் வயதுக்கோ உடல் வலிமைக்கோ பொருந்தாத பிழைப்பாடுகளில் ஈடுபடுமாறு இருக்கப்படாமை;

) நலஞ்சார் முறையிலும் சுதந்திரமும் கண்ணியமும் நிலவும் சூழ்நிலைகளிலும் வளர்ச்சியுறுவதற்கான வாய்ப்பு நலன்களும் வளவசதிகளும் சிறார்கள் பெறுமாறு செய்தல்; மேலும், பிறர் நலனுக்காகக் குழந்தைப் பருவத்தினரும் இளமைப் பருவத்தினரும் கருவிகளாக்கப்படுவதினின்றும், ஒழுக்கமும் உயிர்வாழ் வசதியும் அகற்றுப்போகுமாறு கைவிடப்படுவதினின்றும் பாதுகாத்தல்.

சரத்து 46 பட்டியலில் கண்ட சாதியினர் பட்டியலில் கண்ட பழங்குடியினர் பிற நலிந்த பிரிவினர் ஆகியோரின் கல்வி பொருளியல் நலன்களை வளர்த்தல்:

மக்களில் நலிந்த பிரிவினர், குறிப்பாக, பட்டியலில் கண்ட சாதியினர், பட்டியலில் கண்ட பழங்குடியினர் ஆகியோரின் கல்வி, பொருளியல் நலன்களை அரசு தனிப்பொறுப்புணர்வுடன் வளர்த்தல் வேண்டும். மேலும், சமுதாய அநீதியிலிருந்தும் அனைத்து வகைப்பட்ட சுரண்டல்களிலிருந்தும் அவர்களைப் பாதுகாத்தலும் வேண்டும்.

சரத்து 141 உச்சநீதிமன்றத்தால் விளம்பப்படும் சட்டநெறி, நீதி மன்றங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும்

உச்சநீதிமன்றத்தால் விளம்பப்படும் சட்டநெறி, இந்திய ஆட்சி நிலவரைக்குள் உள்ள நீதிமன்றங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும்.

சரத்து : 243 ஈ பதவியிடங்களை ஒதுக்கீடு செய்தல்

1.       ஒவ்வோர் ஊராட்சியிலும்,

அ) பட்டியலில் கண்ட சாதியினறுக்காகவும்,

ஆ) பட்டியலில் கண்ட பழங்குடியினருக்காகவும்

பதவியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுதல் வேண்டும், மற்றும் அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் பதவியிடங்களின் எண்ணிக்கைக்கும், அந்த ஊராட்சியில் நேரடித் தேர்தல் வாயிலாக நிரப்பப்பட வேண்டிய பதவியிடங்களின் மொத்த எண்ணிக்கைக்கும், இடையிலான வீத அளவானது கூடுமானவரையில், அந்த ஊராட்சிப் பிரப்பிடங்களில்  உள்ள பட்டியலில் கண்ட சாதியினரின் அல்லது அந்த ஊராட்சிப் பரப்பிடங்களில்  உள்ள பட்டியலில் கண்ட சாதி  பழங்குடியினரின் மக்கள் தொகைக்கும் அந்தப் பரப்பிடத்திலுள்ள மொத்த மக்கட்தொகைக்கும் இடையிலான அதே வீதத்தில் இருத்தல் வேண்டும், மற்றும் அத்தகைய பதவியிடங்கள் ஊராட்சியில் வெவ்வேறு தேர்தல் தொகுதிகளுக்காக சுழற்சி முறையில் பகிர்ந்தொதுக்கப்படலாம்.

2. 1-ஆம் கூற்றின்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட பதவியிடங்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கிற்குக் குறையாமல், பட்டியலில் கண்ட சாதிகளைச் சேர்த்த, அல்லது தேர்வுக்கேற்ப, பட்டியலில் கண்ட பழங்குடிகளைச் சேர்ந்த பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படுதல் வேண்டும்.

3. ஒவ்வோர் ஊராட்சியிலும் நேரடித் தேர்தல் வாயிலாக நிரப்பப்பட வேண்டிய பதவியிலடங்களின் (பட்டியலில் கண்ட சாதிகளையும் பட்டியலில் கண்ட பழங்குடிகளையும் சேர்ந்த பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பதவியிடங்களின் எண்ணிக்கை உள்ளடங்கலாக) மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கிற்குக் குறையாமல் பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படுதல் வேண்டும், மற்றும் அத்தகைய பதவியிடங்கள், ஊராட்சியில் வெவ்வேறுபட்ட தேர்தல் தொகுதிகளுக்காக சுழற்சி முறையில் பகிர்ந்தொதுக்கப்படலாம்.

கிராம நிலையில் பிற நிலை எதிலும் ஊராட்சிகளின் தலைமையர் பதவி, மாநிலச் சட்டமன்றம் சட்டத்தினால் வகை செய்யலாகும் முறையில், பட்டியலில் கண்ட சாதியினருக்காகவும், பட்டியலில் கண்ட பழங்குடியினருக்காகவும், பெண்களுக்காகவும் ஒதுக்கீடு செய்யப்படுதல் வேண்டும்.

வரம்புரையாக: மாநிலம் எதிலும், ஒவ்வொரு நிலையிலும், ஊராட்சிகளில், பட்டியலில் கண்ட சாதியினருக்காகவும், பட்டியலில் கண்ட பழங்குடியினருக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்ட தலைமையர் பதவிகளின் எண்ணிக்கைக்கும், ஒவ்வொரு நிலையிலும், ஊராட்சிகளிலுள்ள பதவியிடங்களின் மொத்த எண்ணிக்கைக்கும் இடையிலான வீத அளவானது, மாநிலத்திலுள்ள பட்டியலில் கண்ட சாதியினரின் அல்லது மாநிலத்திலுள்ள பட்டியலில் கண்ட பழங்குடியினரின் மக்கள் தொகைக்கும் அந்த மாநிலத்தின் மொத்த மக்கட்தொகைக்கும் இடையிலான அதே விகிதத்தில் இருத்தல் வேண்டும்:

மேலும் வரம்புரையாக: ஒவ்வொரு நிலையிலும், ஊராட்சிகளிலுள்ள தலைமையர்

பதவிகளின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கிற்குக் குறையாமல், பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படுதல் வேண்டும்:

இன்னும் வரம்புரையாக: இந்தக் கூறின்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட பதவிகளின் எண்ணிக்கை, ஒவ்வொரு நிலையிலும் வெவ்வேறுபட்ட ஊராட்சிகளுக்கு சுழற்சி முறையில் பகிர்ந்தொதுக்கப் டுதல் வேண்டும்.

5 1 ஆம் மற்றும் 2ஆம் கூறுகளின்படி பதவியிடங்களை ஒதுக்கீடு செய்தல் மற்றும்ஆம் கூறின்படி (பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டவைகள் அல்லாத பிற) தலமையர் பதவிகளை ஒதுக்கீடு செய்வதால், 334 ஆம் உறுப்பில் குறித்துரைக்கப்பட்ட கால அளவு கழுவுறுவதன்பேரில், செல்திறம் அற்றுப் போகும்.

6 இந்தப் பகுதியில் உள்ள எதுவும், குடிமக்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சார்பாக எந்த நிலையிலுமான ஊராட்சி எதிலும் உள்ள பதவியிடங்களை அல்லது ஊராட்சிகளில் தலைமையர் பதவிகளை ஒதுக்கீடு செய்வதற்காக மாநிலச் சட்டமன்றம் வகை எதனையும் செய்வதற்குத் தடையூறு ஆவதில்லை.

சரத்து 243 - பதவியிடங்களை ஒதுக்கீடு செய்தல்:

1.       ஒவ்வொரு நகராட்சியிலும், பட்டியில் கண்ட சாதியினருக்கவும் பட்டியலில் கண்ட பழங்குடியினருக்காவும் பதவியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுதல் வேண்டும். அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் பதவியிடங்களின் எண்ணிக்கைக்கு அந்த நகராட்சிப் பகுதியில் உள்ள பட்டியலில் கண்ட சாதியினர் மற்றும் அந்த நகராட்சிப் பகுதியில் உள்ள பட்டியல் கண்ட பழங்குடியினரின் மக்கள் தொகைக்கு இடையிலான வீத அளவானது, கூடுமானவரையில், அந்த வரையிடத்தில் உள்ள மக்கள் தொகைக்கு அந்த நகராட்சியில் நேரடித் தேர்தல் வாயிலாக நிரப்பப்பட வேண்டிய பதவியிடங்களின் மொத்த எண்ணிக்கைக்கும் இடையிலான அதே வீத அளவில் இருத்தல் வேண்டும், மற்றும் அத்தகைய பதவியிடங்கள் நகராட்சி ஒன்றில் உள்ள வெவ்வேறு தேர்தல் தொகுதிகளுக்காக சுழற்சி முறையில் பகிர்ந்தொதுக்கப்படலாம்.

2.       1 ஆம் கூறின்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட பதவியிடங்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கிற்குக் குறையாமல் பட்டியலில் கண்ட சாதிகளை அல்லது, தேர்வுக்கேற்ப பட்டியலில் கண்ட பழங்குடிகளைச் சார்ந்த பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படுதல் வேண்டும்.

3.       ஒவ்வொரு நகராட்சியிலும், நேரடித் தேர்தல் வாயிலாக நிரப்பப்பட வேண்டிய (பட்டியலில் கண்ட சாதிகளை மற்றும் பட்டியல் பழங்குடிகளைச் சார்ந்த பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பதவியிடங்களின் எண்ணிக்கை உள்ளடக்கலாம்) பதவியிடங்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கிற்குக் குறையாமல், பெண்களுக்காக ஒதுக்கப்படுதல் வேண்டும் மற்றும் அந்தப் பதவியிடங்கள், நகராட்சியிலுள்ள பல்வேறுபட்ட தொகுதிகளுக்கு சுழற்சி முறையில் குறித்தொதுக்கப்படலாம்.

 4.  நகராட்சியிலுள்ள தலைமையர்களின் பதவியிடங்கள் பட்டியலில் கண்ட சாதியினருக்கும், பட்டியலில் கண்ட பழங்குடியினருக்கும், பெண்களுக்கும் இடையே மாநிலச் சட்டமன்றம், சட்டத்திம் வழிவகை செய்யலாகும் முறையில் ஒதுக்கீடு செய்யப்படுதல் வேண்டும்.

5 1 மற்றும் 2 ஆம் கூறுகளின் படியான பதவியிடங்களின் ஒதுக்கீடு செய்தல் மற்றும் 4 ஆம் கூறின்படி (பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டவை அல்லாத பிற) தலைமையர்களின் பதவிகளுக்கான ஒதுக்கீடு செய்தல், 334 ஆம் உறுப்பில் குறித்துரைக்கப்பட்ட கால அளவு கழுவுறுவதன் பேரில் செல்திறம் அற்றுப் போகும்.

6 இந்தப் பகுதியிலுள்ள எதுவும், குடிமக்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கு சார்பாக நகராட்சி எதிலும் பதவியிடங்களை அல்லது நகராட்சிகளில் தலைமையர்களின் பதவிகளை ஒதுக்கீடு செய்வதற்காக மாநில சட்டமன்றம் வகை எதனையும் செய்வதற்குத் தடையூறு ஆவதில்லை.

சரத்து 309 ஒன்றியத்திற்கு அல்லது ஒரு மாநிலத்திற்குப் பணிபுரிவதற்காக ஆளெடுத்தலும் பணிவரைக் கட்டுகளும்:

இந்த அரசமைப்பின் வகையங்களுக்கு உட்பட்டு  உரிய சட்ட மன்றத்தின், சட்டங்கள், ஒன்றியத்தின் அல்லது மாநிலம் ஒன்றின் அலுவற்பாடுகள் தொடர்பான அரசுப் பணியங்களுக்கும் பணியடைகளுக்கும் ஆளெடுப்பதையும் அவற்றின் அமர்த்தப்பெறுபவர்களின் பணி வரைக்கட்டுகளையும் ஒழுங்குறுத்தலாம்.

வரம்புரையாக :  ஒன்றியத்து அலுவற்பாடுகள் தொடர்பான பணியங்கள், பணியடைகள் ஆகியவை பொறுத்து, குடியரசுத்தலைவர் அல்லது அவர் குறிப்பிடும் ஒருவர், மாநில ஒன்றின் அலுவற்பாடுகள் தொடர்பான பணியங்கள், பணியடைகள் ஆகியவை பொறுத்து அந்த மாநிலத்தின் ஆளுநர் அல்லது அவர் குறிப்பிடும் ஒருவர், இந்த உறுப்பின்படி உரிய சட்டமன்றத்தின் சட்டத்தாலோ அதன் வழியாலோ அகற்கென வகைசெய்யப்படும் வரையில், அந்தப் பணியங்களுக்கும் பணியடைகளுக்கும் ஆளெடுப்பதையும் அவற்றிற்கு அமர்த்தப்பெறுவர்களின் பணிவரைக்கட்டுகளையும் ஒழுங்குறுத்தும் விதிகளைச் செய்வதற்கு அதிகார உடையவர் ஆவார்;  மேலும் அவ்வாறு செய்யப்படும் விதிகள் எதையும், அத்தகைய சட்டம் ஒன்றின் வகையங்களுக்கு உட்பட்டு செல் திறம் உடையன ஆகும்.

சரத்து 335 பணியங்களுக்கும் பணியடைகளுக்கும் பட்டியல் கண்ட சாதியினர், பட்டியலில் கண்ட பழங்குடியினர் ஆகியோரின் கோருரிமைகள்;

ஒன்றியத்தின் அல்லது ஒரு மாநிலத்தின் அலுவற்பாடுகள் தொடர்பான பணியங்களுக்கும் பணியடைகளுக்கும் அமர்த்தங்கள் செய்யுங்கால், நிருவாகத் திறப்பாட்டினைப் பேணுவதற்கு ஒவ்வும் வகையில், பட்டியலில் கண்ட சாதியினர் பட்டியலில் கண்ட பழங்குடியினர் ஆகியோரின் கோருரிமைகளைக் கருத்தில் கொள்ளுதல் வேண்டும்:

2 வரம்புரையாக: ஒன்றியத்தின் அல்லது மாநிலம் ஒன்றின் அலுவற்பாடுகள் தொடர்பான பணியங்களின் அல்லது பணியடைகளின் வகை எதிலும் அல்லது வகைகள்  எவற்றிலும் பதவி உயர்வு குறித்த பொருட்பாடுகளில் ஒதுக்கீடு செய்வதற்காக தேர்வு எதிலும் தகுதிப்பாடுடைய மதிப்பெண்களைத் தளர்த்துவன் வாயிலாக அல்லது மதிப்பீட்டுத்தர முறைகளைத் தாழ்த்துவதன் வாயிலாக பட்டியலில் கண்ட சாதிகளின் மற்றும் பட்டியலில் கண்ட பழங்குடிகளின் உறுப்பினர்கள் சார்பாக வகையம் எதையும் செய்வதற்கு இந்த உறுப்பில் உள்ள எதுவும் தடையூறு ஆவதில்லை.

சரத்து 338 பட்டியலில் கண்ட சாதியினருக்கான தேசிய ஆணையம்

1 பட்டியலில் கண்ட சாதியினருக்கான தேசிய ஆணையம் என்று அழைக்கப்பெறும் ஆணையம் ஒன்று பட்டியலில் கண்ட சாதியினருக்காக இருத்தல் வேண்டும்.

2 நாடளுமன்றத்தினால் இதன் பொருட்டு இயற்றப்படும் சட்டம் ஒன்றன் வகையங்களுக்கு உட்பட்டு, தலைவர், துணைத்தலைவர் மற்றும் மூன்று உறுப்பினர்களைக் கொண்டதாக இந்த ஆணையம் இருக்கும், மேலும், அவ்வாறு அமர்த்தப்பெறும் தலைவர், கதுணைத்தலைவர், பிற உறுப்பினர்கள் ஆகியோரின்பணி வரைக்கட்டுகளும் பதவிக்காலமும் குடியரசுத் தலைவரர் வகுக்கும் விதிகளின்படி இருக்கும்.

3 ஆணையத்தின் தலைவர் துணைத்தலைவர், பிற உறுப்பினர்கள் ஆகியோரை குடியரசுத் தலைவர், தம் கையொப்பமும் முத்திரையும் கொண்ட அதிகார ஆணையின் வழி அமர்த்துவார்.

4 ஆணையம், தனக்குரிய நெறிமுறையை ஒழுங்குறுத்த அதிகாரம் உடையது ஆகும்.

5 பின்வருவன ஆணையத்தின் கடமைகள் ஆகும்

அ) இந்த அரசமைப்பின்படி அல்லது அப்போதைக்கு செல்லாற்றலிலுள்ள பிற சட்டம் ஒன்றன்படி அல்லது அரசாங்க ஆணை ஒன்றின்படி பட்டியலில் கண்ட சாதியினருக்கு வகை செய்யப்பட்டுள்ள காப்பாணைவுகள் தொடர்பான பொருட்பாடுகள் அனைத்தையும் ஆய்ந்து காணுதல் மற்றும் கண்காணித்தல்; மேலும், அந்தக் காப்ணைவுகளின் செயற்பாட்டு விளைபயணக் கணித்தல்.

ஆ) பட்டியலில் கண்ட சாதியினரின் உரிமைகளும் காப்பணைவுகளும் பறிக்கப்படுவது பற்றிய குறிப்பிட்ட குறியீடுகளை விசாரணை செய்தல்;

இ) பட்டியலில் கண்ட சாதியினரின் சமூக பொருளியல் வளர்ச்சிக்கான திட்டமிடு செயல்முறையில் பங்கேற்றல் மற்றும் அறிவுரை வழங்குதல் மேலும், ஒன்றியத்திலும் மாநிலம் எதிலும் அவர்கள் வளர்ச்சியில் ஏற்படும் முன்னேற்றத்தைக் கணித்தல்

ஈ) அந்தக் காப்பணைகளின் செயற்பாடு பற்றிய அறிக்கைகளை ஆண்டுதோறும் மற்றும் ஆணையம் பொருத்தமெனக் கருதும் பிற காலங்களிலும்  குடியரசுத்தலைவரிடம் முன்னிடுதல்;

உ) பட்டியலில் கண்ட சாதியினருக்கான காப்பணியகளையும் அவர்களுடைய பாதுகாப்பு, நல்வாழ்வு, சமூக பொருளியல் வளர்ச்சி ஆகியவற்றுக்கான பிற நடவடிக்கைகளையும் திறம்படச் செயல்படுத்துவதற்காக, ஒன்றியம் அல்லது ஒரு மாநிலம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அத்தகைய அறிக்கைகளில் பரிந்துரைகள் செய்தல்; மற்றும்

ஊ) பட்டியலில் கண்ட சாதியினருக்கான பாதுகாப்பு, நல்வாழ்வு, வளர்ச்சி, மேம்பாடு ஆகியவை தொடர்பாக நாடாளுமன்றம் இயற்றும் சட்டம் ஒன்றின் வகையங்களுக்கு உட்பட்டு, குடியரசுத் தலைவர் வகுக்கும் விதிகளின்படி செயற்பணிகளை ஆற்றுதல்.

6) அத்தகைய அறிக்கைகள் அனைத்துடன், ஒன்றியம் தொடர்பான பரிந்துரைகளின் மீது எடுக்கப்படும் அல்லது எடுக்கக் கருதப்படும் நடவடிக்கைகளையும் அத்தகைய பரிந்துரைகளில் எவையும் ஏற்றுக்கொள்ளப்படாவிடின், அதற்கான காரணங்களையும் விளக்குகின்ற விவரக்குறிப்புடன் சேர்த்து, நாடாளுமன்ற ஈரவைகளின் முன்பும் வைக்குமாறு குடியரசுத்தலைவர் செய்விப்பார்.

7) அத்தகைய அறிக்கை எதுவும் அல்லது அதன் பகுதி எதுவும், ஒரு மாநில அரசாங்கம் தொடர்புடைய பொருட்பால் குறித்ததாயிருக்குமிடத்து, அத்தகைய அறிக்கையின் படியொன்று, மாநில ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும், அவர், அத்தகைய அறிக்கையுடன் மாநில தொடர்பான பரிந்துரைகளின் மீது எடுக்கப்படும் அல்லது எடுக்கக் கருதப்படும் நடவடிக்கையையும், அத்தகைய பரிந்துரைகளில் எவையும் ஏற்றுக்கொள்ளப்படாவிடின், அதற்கான காரணங்களையும் விளக்குகின்ற விவரக்குறிப்புடன் சேர்த்து, மாநிலச் சட்டமன்றத்தின் முன்பு வைக்குமாறு செய்விப்பார்.

8) ஆணையமானது, 5 ஆம் கூறின்  அ) உட்கூறில் சுட்டப்பட்ட பொருட்பாடு எதனையும் ஆய்ந்து காண்கையில் அல்லது ஆ) உட்கூறில் சுட்டப்பட்ட முறையீடு எதனையும் விசாரணை செய்வகையில், உரிமைவழ்க்கு ஒன்றை விசாரணை செய்யும் ஒர் உரிமையியல் நீதிமன்றம், குறிப்பாகப் பின்வரும் பொருட்பாடுகளைப் பொறுத்து கொண்டிருக்கும் அனைத்து அதிகாரங்களையும் உடையது ஆகும்:

அ) இந்தியாவின் எந்தவொரு பகுதியிலிருந்தும் நபர் எவரையும் அழைப்பாணை அனுப்பித்தன் முன் வரவழைத்தல் மற்றும் ஆணை மொழியின் மீது அவரை விசாரணை செய்தல்;

ஆ) ஆவணம் எதனையும் வெளிக்கொணர்ந்து முன்னிலைப்படுத்துமாறு வேண்டுறுத்தல்;

இ) ஆணையுறுதி ஆவணங்களைச் சான்றாக ஏற்றல்;

ஈ) நீதிமன்றம் அல்லது அலுவலகம் எதிலிருந்தும் அரசுப் பதிவணம் அல்லது அதன்படி எதனையும் பெறுவதற்கு வேண்டுதலாணை இடுதல்;

உ) சாட்சிகளை விசாரணை செய்வதற்காகவும் ஆவணங்களை ஆய்வு செய்வதற்காகவும் பணிப்பாணியகளைப் பிறப்பித்தல்;

ஊ) குடியரசுத்தலைவர், வகுக்கும் விதிகளில் கூறப்படும் பிற பொருட்பாடுகள்.

9)ஓன்றியமும், ஒவ்வொரும் மாநில அரசாங்கமும் பட்டியலில் கண்ட சாதியினரைப் பாதிக்கும் முக்கியமான கொள்கைகள் அனைத்திலும் ஆணையத்தைக் கலந்தாய்வு செல்லுதல் வேண்டும்.

10) இந்த உறுப்பில், பட்டியலில் கண்ட சாதிகள் என்னும் சுட்டுரைகள், குடியரசுத்தலைவர் 340 ஆம் உறுப்பின் 1 ஆம் கூறுன்படி அமர்த்தப்படும் ஒர் ஆணையத்தின் அறிக்கையைப் பெற்றதன் மேல், ஆணையின்வழி குறித்துரைக்கும் பிற பிற்பட்ட வகுப்புகளையும், அத்துடன் ஆங்கிலோ இந்தியர் சமூகத்தினையும் குறிப்பதாகப் பொருள் கொள்ளப்படும்.

சரத்து 338 அ. பட்டியலில் கண்ட பழங்குடியினருக்கான தேசிய ஆணையம்;

1) பட்டியலில் கண்ட பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் என்று அழைக்கப்பெறும் ஆணையம் ஒன்று பட்டியலில் கண்ட பழங்குடியினருக்கான இருத்தல் வேண்டும்.

2) நாடாளுமன்றத்தில் இதன் பொருட்டு இயற்றப்படும் சட்டம் ஒன்றன் வகையங்களுக்கு உட்பட்டு, தலைவர், துணைத் தலைவர் மற்றும் மூன்று உறுப்பினர்களைக் கொண்டதாக இந்த ஆணையம் இருக்கும்; மேலும், அவ்வாறு அமர்த்தப்பெறும் தலைவர், துணைத்தலைவர், பிற உறுப்பினர்கள் ஆகியோரின் பணி வரைக்கட்டுகளும் பதவிக்காலமும் குடியரசுத்தலைவர் வகுக்கும் விதிகளின்படி இருக்கும்.

 3)ஆணையத்தின் தலைவர், துணைத்தலைவர், பிற உறுப்பினர்கள் ஆகியோரை குடியரசுத்தலைவர், தம் கையொப்பமும் முத்திரையும் கொண்ட அதிகார ஆணையின் வழி அமர்த்துவார்.

4) ஆணையம், தனக்குரிய நெறிமுறையை ஒழுங்குறுத்த அதிகாரம் உடையது ஆகும்

5) பின்வருவன ஆணையத்தின் கடமைகள் ஆகும்

அ) இந்த அரசமைப்பின்படிஅல்லது அப்போதைக்குச் செல்லாற்றலிலுள்ள பிற சட்டம் ஒன்றின்படி அல்லது அரசாங்க ஆணை ஒன்றின்படி பட்டியலில் கண்ட பழங்குடியினருக்கு வகைசெய்யப்பட்டுள்ள காப்பணியவுகள் தொடர்பான பொருட்பாடுகள் அனைத்தையும் ஆய்ந்து காணுதல் மற்றும் கண்காணித்தல்; மேலும், அந்தக் காப்பணைவுகளின் செயற்பாட்டு விளைபயணக் கணித்தல்;

ஆ) பட்டியலில் கண்ட பழங்குடியினரின் உரிமைகளும் காப்பாணைவுகள் பறிக்கப்படுவது பற்றிய குறிப்பிட்ட முறையீடுகளை விசாரணை செய்தல்;

இ) பட்டியலில் கண்ட பழங்குடியினரின் சமூகபொருளியல் வளர்ச்சிகான திட்டமிடு செயல்முறையில் பங்கேற்றல் மற்றும் அறிவுரை வழங்குதல்; மேலும், ஒன்றியத்திலும் மாநில எதிலும் அவர்கள் வளர்ச்சியில் ஏற்படும் முன்னேற்றத்தைக் கணித்தல்;

ஈ) அந்தக் காப்பணைவுகளின் செயற்பாடு பற்றிய அறிக்கைகளை ஆண்டுதோறும் மற்றும் ஆணையம் பொருத்தமெனக கருதும் பிற காலங்களிலும் குடியரசுத்தலைவரிடம் முன்னிடுதல்;

உ) பட்டியலில் கண்ட பழங்குடியினருக்கான காப்பணைவுகளையும் அவர்களுடைய பாதுகாப்பு, நல்வாழ்வு, சமூக பொருளியல் வளர்ச்சி ஆகியவற்றிகான பிற நடவடிக்கைகளையும் திறம்படச் செயல்பட்டதற்காக, ஒன்றியம் அல்லது ஒரு மாநிலம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அத்தகைய அறிக்கைகளில் பரிந்துரைகள் செய்தல்; மற்றும்

ஊ)பட்டியலில் கண்ட சாதியினருக்கான பாதுகாப்பு, நல்வாழ்வு, வளர்ச்சி, மேம்பாடு ஆகியவை தொடர்பாக நாடாளுமன்றம் இயற்றும் சட்டம் ஒன்றின் வகையங்களுக்கு உட்பட்டு, குடியரசுத் தலைவர் வகுக்கும் விதிகளின்படி செயற்பணிகளை ஆற்றுதல்.

6) அத்தகைய அறிக்கைகள் அனைத்துடனும், ஒன்றியம் தொடர்பான பரிந்துரைகளை மீது எடுக்கப்படும் அல்லது எடுக்க கருதப்படும் நடவடிக்கையையும் அத்தகைய பரிந்துரைகளில் எதையும் ஏற்றுக்கொள்ளப்படாவிடின், அதற்கான காரணங்களையும் விளக்குகின்ற விவரக்குறிப்புடன் சேர்த்து, நாடாளுமன்ற ஈரவைகளின் முன்பும் வைக்குமாறு குடியரசுத்தலைவர் செய்விப்பார்.

7) அத்தகைய அறிக்கை எதுவும் அல்லது அதன் பகுதி எதுவும், ஒரு மாநில அரசாங்கம் தொடர்புடைய பொருட்கள் குறித்ததாயிருக்குமிடத்து, அத்தகைய அறிக்கையின் படியொன்று, மாநில ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும், அவர், அத்தகைய அறிக்கையுடன் மாநிலம் தொடர்பான பரிந்துரைகளின் மீது எடுக்கப்படும் அல்லது எடுக்க கருதப்படும் நடவடிக்கையையும், அத்தகைய பரிந்துரைகளில் எவையும் ஏற்றுக் கொள்ளப்படாவிடின், அதற்கான காரணங்களையும் விளக்குகின்ற விவரக்குறிப்புடன் சேர்த்து, மாநிலச் சட்டமன்றத்தின் முன்பு வைக்குமாறு செய்விப்பார்.

8) ஆணையமானது, 5ஆம் கூறின் அ) உட்கூறில் சுட்டப்பட்ட பொருட்பாடு எதனையும் ஆய்ந்து காண்கையில் அல்லது ஆ) உட்கூறில் சுட்டப்பட்ட முறையீடு எதனையும் விசாரணை செய்கையில், உரிமை வழக்கு ஒன்றை விசாரணை செய்யும் ஓர் உரிமையியல் நீதிமன்றம், குறிப்பாகப் பின்வரும் பொருட்பாடுகளைப் பொறுத்து கொண்டிருக்கும் அனைத்து அதிகாரங்களையும்  உடையது ஆகும்.

அ) இந்தியாவின் எந்தவொரு பகுதியிலிருந்தும் நபர் எவரையும் அழைப்பாணை அனுப்பித்தன் முன் வரவழைத்தல் மற்றும் ஆணைமொழியின் மீது அவரை விசாரணை செய்தல்;

ஆ) ஆவணம் எதணையும் வெளிக்கொணர்ந்து முன்னிலைப்படுத்துமாறு  வேண்டுறுத்தல்;

இ) ஆணையுறுதி ஆவணங்களைச் சான்றாக ஏற்றல்;

ஈ) நீதிமன்றம் அல்லது அலுவலகம் ஏதிலிருந்தும் அரசுப் பதிவணம் அல்லது அதன்படி எதனையும் பெறுவதற்கு வேண்டுதலாணை இடுதல்;

உ) சாட்சிகள் விசாரணை செய்வதற்காகவும் ஆவணங்களை ஆய்வு செய்வதற்காகவும் பணிப்பாணைகளைப் பிறப்பித்தல்;

ஊ) குடியரசுத்தலைவர், வகுக்கும் விதிகளில் கூறப்படும் பிற பொருட்பாடுகள்.

9) ஒன்றியமும், ஒவ்வொரும் மாநில அரசாங்கமும் பட்டியலில் கண்ட சாதியினரைப் பாதிக்கும் முக்கியமான கொள்கைகள் அனைத்திலும் ஆணையத்தைக் கலந்தாய்வு செய்தல் வேண்டும்.

10) இந்த உறுப்பில், பட்டியலில் கண்ட சாதிகள் 1 என்னும் சுட்டுரைகள், குடியரசுத்தலைவர் 340ஆம் உறுப்பின் 1 ஆம் கூறுன்படி அமர்த்தப்படும் ஓர் ஆணையத்தின் அறிக்கையைப் பெற்றதன் மேல், ஆனையின்வழி குறித்துரைக்கும் பிறபிற்பட்ட வகுப்புகளையும், அத்துடன் ஆங்கிலோ இந்தியர் சமூகத்தினையும் குறிப்பதாகப் பொருள் கொள்ளப்படும்.

சரத்து 338 அ. பட்டியலில் கண்டபழங்குடியினருக்கான தேசிய ஆணையம்:

1. பட்டியலில் கண்ட பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் என்று அழைக்கப்பெறும் ஆணையம் ஒன்று பட்டியலில் கண்ட பழங்குடியினருக்காக இருத்தல் வேண்டும்.

 2. நாடாளுமன்றத்தினால் இதன்பொருட்டு இயற்றப்படும் சட்டம் ஒன்றன் வகையங்களுக்கு உட்பட்டு, தலைவர், துணைத் தலைவர் மற்றும் மூன்று உறுப்பினர்களைக் கொண்டதாக இந்த ஆணையம் இருக்கும்; மேலும், அவ்வாறு அமர்த்தப்பெறும் தலைவர், துணைத்தலைவர், பிற உறுப்பினர்கள் ஆகியோரின் பணி வரைக்கட்டுகளும் பதவிக்காலமும் குடியரசுத்தலைவர் வகுக்கும் விதிகளின்படி இருக்கும்.

3) ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர், மற்றும் பிற உறுப்பினர்கள் ஆகியோரை குடியரசுத் தலைவர், தம் கையொப்பமும் முத்திரையும் கொண்ட அதிகார ஆணையின் வழி அமர்த்துவார்.

4) ஆணையம், தனக்குரிய நெறிமுறையை ஒழுங்குறுத்த அதிகாரம் உடையது ஆகும்.

5) பின்வருவன ஆணையத்தின் கடமைகள் ஆகும்.

அ) இந்த அரசமைப்பின்படி அல்லது அப்போதைக்குச் செல்லாற்றலிலுள்ள பிற சட்டம் ஒன்றன்படி அல்லது அரசாங்க ஆணை ஒன்றன்படி பட்டியலில் கண்ட பழங்குடியினருக்கு வகைசெய்யப்பட்டுள்ள காப்பணைவுகள் தொடர்பான பொருட்பாடுகள் அனைத்தையும் ஆய்ந்து காணுதல் மற்றும் கண்காணித்தல்; மேலும், அந்தக் காப்பணைவுகளில் செயற்பாட்டு விளைபயனைக் கணித்தல்;

ஆ) பட்டியலில் கண்ட பழங்குடியினர் உரிமைகளும் கப்பணைவுகளும் பறிக்கப்படுவது பற்றிய குறிப்பிட்ட முறையீடுகளை விசாரணை செய்தல்;

இ) பட்டியலில் கண்ட பழங்குடியினரின் சமூகபொருளியல் வளர்ச்சிக்கான திட்டமிடு செயல்முறையில் பங்கேற்றல் மற்றும் அறிவுரை வழங்குதல்; மேலும், ஒன்றியத்திலும் மாநிலம் எதிலும் அவர்கள் வளர்ச்சியில் ஏற்படும் முன்னேற்றத்தைக் கணித்தல்;

ஈ) அந்தக் காப்பணைவுகளின் செயற்பாடு பற்றி அறிக்கைகளை ஆண்டுதோறும் மற்றும் ஆணையம் பொருத்தமெனக் கருதும் பிற காலங்களிலும் குடியரசுத் தலைவரிடம் முன்னிடுதல்;

உ) பட்டியலில் கண்ட பழங்குடியினருக்கான காப்பணைவுகளையும் அவர்களுடைய பாதுகாப்பு, நல்வாழ்வு, சமூக பொருளியல் வளர்ச்சி ஆகியவற்றிற்கான பிற நடவடிக்கைகளையும் திறம்படச் செயற்படுத்துவதற்காக, ஒன்றியம் அல்லது ஒரு மாநிலம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அத்தகைய அறிக்கைகளில் பரிந்துரைகள் செய்தல்; மற்றும்

ஊ) பட்டியலில் கண்ட பழங்குடியினருக்கான பாதுகாப்பு, நல்வாழ்வு, வளர்ச்சி, மேம்பாடு ஆகியவை தொடர்பாக, நாடாளுமன்றம் இயற்றும் சட்டம் ஒன்றின் வகையங்களுக்கு உட்பட்டு, குடியரசுத்தலைவர் வகுக்கும் விதிகளின்படி செயற்பணிகளை ஆற்றுதல்.

 6) அத்தகைய அறிக்கைகள் அனைத்துடன், ஒன்றியம் தொடர்பான பரிந்துரைகளின் மீது எடுக்கப்படும் அல்லது எடுக்க கருதப்படும் நடவடிக்கையையும் அத்தகைய பரிந்துரைகளில் எவையும் ஏற்றுக்கொள்ளப்படாவிடின், அதற்கான காரணங்களையும் விளக்குகின்ற விவரக்குறிப்புடன் சேர்த்து, நாடாளுமன்ற ஈரவைகளின் முன்பும் வைக்குமாறு குடியரசுத் தலைவர் செய்விப்பார்.

7) அத்தைகைய அறிக்கை எதுவும் அல்லது அதன் பகுதி எதுவும், ஒரு மாநில அரசாங்கம் தொடர்புடைய பொருட்பாடு குறித்ததாயிருக்குமிடத்து, அத்தகைய அறிக்கையின் படியொன்று, மாநில ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும், அவர், அத்தகைய அறிக்கையுடன் மாநிலம் தொடர்பான பரிந்துரைகளின் மீது எடுக்கப்படும் அல்லது எடுக்கக் கருதப்படும். நடவடிக்கையையும், அத்தகைய பரிந்துரைகளில் எவையும் ஏற்றுக்கொள்ளப்படாவிடின், அதற்கான காரணங்களையும் விளக்குகின்ற விவரக்குறிப்புடன் சேர்த்து, மாநிலச் சட்டமன்றத்தின் முன்பு வைக்குமாறு செய்விப்பார்

8) ஆணையமானது, 5 ஆம் கூறின் அ) உட்கூறில் சுட்டப்பட்ட பொருட்பாடு எதனையும் ஆய்ந்து காண்கையில் அல்லது ஆ) உட்கூறில் சுட்டப்பட்ட முறையீடு எதையும் விசாரணை செய்கையில், உரிமை வழக்கு ஒன்றை விசாரணை செய்யும்  ஓர் உரிமையியல் நீதிமன்றம், குறிப்பாக பின்வரும் பொருட்பாடுகளைப் பொறுத்து கொண்டிருக்கும் அனைத்து அதிகாங்களையும் உடையது ஆகும்;

அ) இந்தியாவின் எந்தவொரு பகுதியிலிருந்தும் நபர் எவரையும் அழைப்பானை அனுப்பித் தன் முன் வரவழைத்தல் மற்றும் ஆணைமொழியின் மீது அவரை விசாரணை செய்தல்;

ஆ) ஆவனம் எதனையும் வெளிக்கொணர்ந்து முன்னிலைப்படுத்துமாறு வேண்டுறுத்தல்

இ) ஆனையுறுதி ஆவணங்களைச் சான்றாக ஏற்றல்;

ஈ) நீதிமன்றம் அல்லது அலுவலகம் எதிலிருந்தும் அரசுப் பதிவணம் அல்லது அதன் படி எதனையும் பெறுவதற்கு வேண்டுதலானை இடுதல்;

உ) சாட்சிகளை விசாரணை செய்வதற்காகவும் ஆவணங்களை ஆய்வு செய்வதற்காகவும் பணிப்பாணைகளைப் பிறப்பித்தல்;

ஊ) குடியரசுத்தலைவர் வகுக்கும் விதிகளில் கூறப்படும் பிற பொருட்பாடுகள்.

9) ஒன்றியமும், ஒவ்வொரு மாநில அரசாங்கமும் பட்டியலில் கண்ட பழங்குடியினரைப் பாதிக்கும் முக்கியமான கொள்கைகள் அனைத்திலும் ஆணையத்தைக் கலந்தாய்வு செய்தல் வேண்டும்).

சரத்து 338ஆ - பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆனையம்

1) கல்வியிலும் சமுதாயத்திலும் பின்தங்கிய வகுப்பினர்களுக்கான தேசிய ஆனையம் என்று அழைக்கப்பெறும் ஆனையம் ஒன்றின் கல்வியிலும் சமுதாயத்திலும் பின்தங்கிய வகுப்பினர்களுக்காக இருத்தல் வேண்டும்.

2) நாடுளுமன்றத்தினால் இதன் பொருட்டு இயற்றப்படும் சட்டம் ஒன்றின் வகையங்களுக்கு உட்பட்டு, தலைவர், துணைத்தலைவர், மற்றும் மூன்று உறுப்பினர்களைக் கொண்டதாக இந்த ஆணையம் இருக்ககும்; மேலும் அவ்வாறு அமர்த்தப்பெறும் தலைவர், துணைத்தலைவர், பிற உறுப்பினர்கள் ஆகியோரின் பணி வரைக்கட்டுகளும் பதவிக்காலமும் குடியரசுத்தலைவர் வகுக்கும் விதிகளின்படி இருக்கும்.

3) ஆணையத்தின் தலைவர், துணைத்தலைவர் மற்றும் பிற உறுப்பினர்கள் ஆகியோரை குடியரசுத்த்லைவர், தம் கியயொப்பமும் முத்திரையும் கொண்ட அதிகார ஆனையின் வழி அமர்த்துவார்.

4) ஆணையம் தனக்குரிய நெறிமுறையை ஒழுங்குறுத்த அதிகாரம் உடையது ஆகும்.

5) பின்வருவன ஆனையத்தின் கடமைகள் ஆகும்.

அ) இந்த அரசமைப்பின்படி அல்லது அப்போதைக்குச் செயல்பாட்டிலுள்ள பிற சட்டம் ஒன்றின்படி அல்லது அரசாங்க ஆணை ஒன்றின்படி கல்வியிலும் சமுதாயத்திலும் பின்தங்கிய வகுப்பினர்களுக்கான வகை செய்யப்பட்டுள்ள காப்பணைவுகள் தொடர்பான பொருட்பாடுகள் அனைத்தையும் ஆய்ந்து காணுதல் மற்றும் கண்காணித்தல்; மேலும், அந்தக் காப்பனைவுகளின் செயற்பாடு விளைபயனைக் கணித்தல்;

ஆ) கல்வியிலும் சமுதாயத்திலும் பின்தங்கிய வகுப்பினர்களின் உரிமைகளும் காப்பணைவுகளும் பறிக்கப்படுவதுபற்றிய குறிப்பிட்ட முறையேடுகளை விசாரணை செய்தல்;

இ) கல்வியிலும் சமுதாயத்திலும் பின்தங்கிய வகுப்பினர்களின் சமூகபொருளியல் வளர்ச்சிக்கான திட்டமிடு செய்முறையில் பங்கேற்றல் மற்றம் அறிவுரை வழங்குதல்; மேலும், ஒன்றியத்திலும் மாநில எதிலும் அவர்கள் வளர்ச்சியில் ஏற்பாடு முன்னேற்றத்தைக் கணித்தல்;

ஈ) அந்தக் காப்பணைவுகளின் செயற்பாடு பற்றிய அறிக்கைகளை ஆண்டுதோறும் மற்றும் ஆணையம் பொருத்தமெனக் கருதும் பிற காலங்களிலும் குடியரசுத்தலைவரிடம் முறையிடுதல்;

உ) கல்வியிலும் சமுதாயத்திலும் பின்தங்கிய வகுப்பினர்களின் காப்பணைவுகளையும் அவர்களுடைய பாதுகாப்பு, நல்வாழ்வு, சமூகபொருளியல் வலர்ச்சி ஆகியவற்றிற்கான பிற நடவடிக்கைகளையும் திரம்படச் செயற்படுத்துவதற்காக, ஒன்றியம் அல்லது ஒரு மாநிலம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அத்தகைய அறிக்கைகளில் பரிந்துரைகள் செய்தல்; மற்றும்

ஊ) கல்வியிலும் சமுதாயத்திலும் பின்தங்கிய வகுப்பினர்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு, வலர்ச்சி, மேம்பாடு ஆகியவை தொடர்பாக, நாடாளுமன்றம் இயற்றும் சட்டம் ஒன்றின் வகையங்களுக்கு உட்பட்டு, குடியரசுத்த்லைவர் வகுக்கும் விதிகளின்படி செயற்பணிகளை ஆற்றுதல்

6) அத்தகைய அறிக்கைகள் அனைத்துடன், ஒன்றியம் தொடர்பான பரிந்துரைகளின் மீது எடுக்கப்படும் அல்லது எடுக்க கருதப்படும் நடவடிக்கையையும் அத்தகைய பரிந்துரைகளில் எவையும் ஏற்றுக்கொள்ளப்படாவிடின், அதற்கான காரணங்களையும் விளக்குகின்ற விவரக்குறிப்புடன் சேர்த்து, நாடாளுமன்ற ஈரவைகளின் முன்பும் வைக்குமாறு குடியரசுத் தலைவர் செய்விப்பார்.

7) அத்தைகைய அறிக்கை எதுவும் அல்லது அதன் பகுதி எதுவும், ஒரு மாநில அரசாங்கம் தொடர்புடைய பொருட்பாடு குறித்ததாயிருக்குமிடத்து, அத்தகைய அறிக்கையின் படியொன்று, மாநில ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும், அவர், அத்தகைய அறிக்கையுடன் மாநிலம் தொடர்பான பரிந்துரைகளின் மீது எடுக்கப்படும் அல்லது எடுக்கக் கருதப்படும். நடவடிக்கையையும், அத்தகைய பரிந்துரைகளில் எவையும் ஏற்றுக்கொள்ளப்படாவிடின், அதற்கான காரணங்களையும் விளக்குகின்ற விவரக்குறிப்புடன் சேர்த்து, மாநிலச் சட்டமன்றத்தின் முன்பு வைக்குமாறு செய்விப்பார்

8) ஆணையமானது, 5 ஆம் கூறின் அ) உட்கூறில் சுட்டப்பட்ட பொருட்பாடு எதனையும் ஆய்ந்து காண்கையில் அல்லது ஆ) உட்கூறில் சுட்டப்பட்ட முறையீடு எதையும் விசாரணை செய்கையில், உரிமை வழக்கு ஒன்றை விசாரணை செய்யும்  ஓர் உரிமையியல் நீதிமன்றம், குறிப்பாக பின்வரும் பொருட்பாடுகளைப் பொறுத்து கொண்டிருக்கும் அனைத்து அதிகாங்களையும் உடையது ஆகும்;

அ) இந்தியாவின் எந்தவொரு பகுதியிலிருந்தும் நபர் எவரையும் அழைப்பானை அனுப்பித் தன் முன் வரவழைத்தல் மற்றும் ஆணைமொழியின் மீது அவரை விசாரணை செய்தல்;

ஆ) ஆவனம் எதனையும் வெளிக்கொணர்ந்து முன்னிலைப்படுத்துமாறு வேண்டுறுத்தல்

இ) ஆனையுறுதி ஆவணங்களைச் சான்றாக ஏற்றல்;

ஈ) நீதிமன்றம் அல்லது அலுவலகம் எதிலிருந்தும் அரசுப் பதிவணம் அல்லது அதன் படி எதனையும் பெறுவதற்கு வேண்டுதலானை இடுதல்;

உ) சாட்சிகளை விசாரணை செய்வதற்காகவும் ஆவணங்களை ஆய்வு செய்வதற்காகவும் பணிப்பாணைகளைப் பிறப்பித்தல்;

ஊ) குடியரசுத்தலைவர் வகுக்கும் விதிகளில் கூறப்படும் பிற பொருட்பாடுகள்.

9) ஒன்றியமும், ஒவ்வொரு மாநில அரசாங்கமும் கல்வியிலும் சமுதாயத்திலும் பிந்தங்கிய்ச் வகுப்பினர்களைப் பாதிக்கும் முக்கியமான கொள்கைகள் அனைத்திலும் ஆணையத்தைக் கலந்தாய்வு செய்தல் வேண்டும்.

இது சரத்து 342கி-3ல் கீழ் எடுக்கப்படும் செயல்களுக்குப் பொறுந்தாது.

சரத்து 340 பிற்பட்ட வகுப்பினரின் நிலைமைகளை ஆய்ந்து காண்பதற்கு ஆணையம் ஒன்றை அமர்த்துதல்:

1) இந்தியா ஆட்சி நிலவரையிலுள்ள சமூக நிலையிலுள்ள கல்வி நிலையிலும் பிற்பட்ட வகுப்பினர் இன் நிலைமைகளையும் அவர்களை உழற்றும் இடர்பாடுகளையும் ஆய்ந்து காண்பதற்கும் அத்தகைய இடர்பாடுகளை அகற்றி, அவர்களின் நிலைமையை மேம்படுத்துவதற்கு ஒன்றியம் அல்லது மாநிலம் எதுவும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அதன் பொருட்டு ஒன்றியம் அல்லது ஒரு மாநிலம் அளிக்கவேண்டிய மானியங்கள் பொறுத்தும் அம்மானியங்கள் எந்த வரைக்கட்டுகளுக்குட்பட்டு அளிக்கப்பட வேண்டும் என்பதும் பற்றியும் பரிந்துரைகள் செய்வதற்கு, குடியரசுத்தலைவர் ஆணையின் வழி, தாம் தக்கவர்களெனக் கருதுபவர்களைக் கொண்ட ஆணையம் ஒன்றை அமர்த்தலாம்; அத்தகைய ஆணையத்தை அமர்த்துகிற ஆணையானது, அந்த ஆணையம் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளையும் வரையறை செய்யும்.

2) அவ்வாறு அமர்த்தப்பட்ட ஆணையம், தனக்குக் குறித்தனுப்பப்பட்டுள்ள பொருட்பாடுகளை ஆய்வுசெய்து தான் கண்டறிந்த பொருண்மைகளை விவரித்துத் தான் ஏற்புடையவை எனக் கருதும் பரிந்துரைகளுடன் ஓர் அறிக்கையைக் குடியரசுத்தலைவரிடம் அளித்தல் வேண்டும்.

3) அவ்வாறு அளிக்கப்பட்ட அறிக்கையின் ஒரு படியினை, அதன் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை விளக்கும் விவரக்குறிப்புடன் சேர்த்து, குடியரசுத் தலைவர், நாடாளுமன்ற அவை ஒவ்வொன்றின் முன்பும் வைக்குமாறு செய்வார்.

சரத்து 341 பட்டியலில் கண்ட சாதிகள்:

1) மாநிலம் அல்லது ஒன்றியத்து ஆட்சிநிலவரை எத்தனை பொறுத்தும், அது ஒரு மாநிலமாக இருக்குமிடத்து அதன் ஆளுநரைக் கலந்தாய்வு செய்தபின்பு, அந்த மாநிலம் அல்லது, நேர்வுக்கேற்ப, ஒன்றியத்து ஆட்சிநிலவரை தொடர்பாக, இந்தாரசமைப்பினைப் பொறுத்தவரை பட்டியலில் கண்டசாதிகள் என்று கொள்ளப்பட வேண்டிய சாதிகள், இனங்கள் அல்லது பழங்குடிகள் எவை என்றும்,சாதிகளில், இனங்களில் அல்லது பழங்குடிகளில் உள்ள பகுதிகள் அல்லது தொகுதிகள் எவை என்றும் குடியரசுத்தலைவர் பொது அறிக்கை வாயிலாக குறித்துரைக்கலாம்.

2) நாடாளுமன்றம் சட்டத்தினால், சாதி, இனம் அல்லது பழங்குடி எதலையும் அல்லது சாதியில், இனத்தில் அல்லது பழங்குடியில் உள்ள பகுதிகள் அல்லது தொகுதிகள் எவற்ரையும், 1 ஆம் கூறின்படி பிரப்பிக்கப்பட்ட அறிக்கை ஒன்றில் குறித்துரைக்கப்பட்ட பட்டியலில் கண்ட சாதிகளின் வரிசைத் தொகுப்பில் சேர்க்கலாம் அல்லது அத்தொகுப்பிலிருந்து நீக்கிவிடலாம்; ஆனால், மேலே கண்டவாறன்றி, மேற்சொன்ன கூறின்படி பிறப்பிக்கப்பட்ட ஓர் அறிக்கையானது பிந்திய அறிவிக்கை அதனாலும் மாறுதல் செய்யப்படுதல் ஆகாது.

சரத்து 342 பட்டியலில் கண்ட பழங்குடிகள்

1 மாநிலம் அல்லது ஒன்றியத்து ஆட்சிநிலவரை எத்தனை பொறுத்தும், அது ஒரு மாநிலமாக இருக்குமிடத்து அதன் ஆளுநரைக் கலந்தாய்வு செய்தபின்பு, அந்த மாநிலம் அல்லது, நேர்வுக்கேற்ப, ஒன்றியத்து ஆட்சிநிலவரை தொடர்பாக, இந்தாரசமைப்பினைப் பொறுத்தவரை பட்டியலில் கண்ட பழங்குடிகள் என்று கொள்ளப்பட வேண்டிய பழங்குடிகள், பழங்குடிச் சமூகங்கள் எவை என்றும், பழங்குடிகளில் அல்லது பழங்குடிச் சமூகங்களில் உள்ள பகுதிகள் அல்லது தொகுதிகள் எவை என்றும் குடியரசுத்தலைவர் பொது அறிக்கை வாயிலாக குறித்துரைக்கலாம்.

2) நாடாளுமன்றம் சட்டத்தினால், பழங்குடி அல்லது பழங்குடிச் சமூகம் எதனையும் அல்லது அந்த  பழங்குடி அல்லது பழங்குடி சமூகம் எதிலும் உள்ள பகுதிகள் அல்லது தொகுதிகள் எவற்ரையும், 1 ஆம் கூறின்படி பிறப்பிக்கப்பட்ட அறிக்கை ஒன்றில் குறித்துரைக்கப்பட்ட பட்டியலில் கண்ட பழங்குடிகளின் வரிசைத் தொகுப்பில் சேர்க்கலாம் அல்லது அத்தொகுப்பிலிருந்து நீக்கிவிடலாம்; ஆனால், மேலே கண்டவாறன்றி, மேற்சொன்ன கூறின்படி பிறப்பிக்கப்பட்ட ஓர் அறிக்கையானது பிந்திய அறிவிக்கை எதனாலும் மாறுதல் செய்யப்படுதல் ஆகாது.

சரத்து 342A  குடியரசுத்தலைவர், எந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தைப் பொறுத்தமட்டில், அது ஒரு மாநிலமாக இருந்தால், அதன் ஆளுநருடன் கலந்தாலோசித்த பிறகு, பொது அறிவிப்பின் மூலம், மத்தியப் பட்டியலில் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினரைக் குறிப்பிடலாம். அந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்துடன் தொடர்புடைய மத்திய அரசின் சமூகம் மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினரைக் கருதப்படும்.

2) பாராளுமன்றம் சட்டத்தின் மூலம் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினர் மத்தியப் பட்டியலுக்குள் சேர்க்காலம் அல்லது  விலக்கப்படலாம். அவற்றை எந்த அடுத்தடுத்து அறிவிப்பில் மாறக்கூடாது

உட்பிரிவுகள் 1) மற்றும் 2) நோக்கங்களுக்கான விளக்கம்: "மத்திய பட்டியல்" என்பது மத்திய அரசால் தயாரிக்கப்பட்டு பராமரிக்கப்படும் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினரின் பட்டியலைக் குறிக்கிறது.

3) உட்பிரிவுகள் 1) மற்றும் 2)இல் உள்ள எதுவும் இருந்தபோதிலும், ஒவ்வொரு மாநிலமும் அல்லது யூனியன் பிரதேசமும், சட்டப்படி, அதன் சொந்த நோக்கங்களுக்காக, சமூகம் மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினர் பட்டியலை தயாரித்து பராமரிக்கலாம். மத்திய பட்டியலில் இருந்து வேறுபட்டது.

சரத்து 366 -24 "பட்டியலில் கண்ட சாதிகள்" என்பது, இந்த அரசைப்பினைப் பொறுத்தவரை, 341 ஆம் உறுப்பின் படி பட்டியலில் கண்ட சாதிகள் எனக் கொள்ளப்படுகின்ற சாதிகள், இனங்கள் அல்லது பழங்குடிகள் அல்லது அத்தகைய சாதிகள், இனங்கள், பழங்குடிகள் இவற்றின் பகுதிகள் அல்லது தொகுதிகள் என்று பொருள்படும்;

25 "பட்டியலில் கண்ட பழங்குடிகள்" என்பது, இந்த அரசமைப்பினைப் பொறுத்தவரை, 342 ஆம் உறுப்பின்படி பட்டியலில் கண்ட பழங்குடிகள் எனக் கொள்ளப்படுகிற பழங்குடிகள் அல்லது பழங்குடிகச் சமூகங்கள், அத்தகைய பழங்குடிகள் அல்லது பழங்குடிச் சமூகங்கள் இவற்றின் பகுதிகள் அல்லது தொகுதிகள் என்று பொருள்படும்;

26-C "சமூகரீதியாக மற்றும் கல்விரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்புகள்" என்பது, 342A பிரிவின் கீழ் கருதப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் குறிக்கிறது இவை மத்திய அரசு அல்லது மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களின் அந்த அந்த அரசுகளுக்குப் பயன்படும்.


இட ஒதுக்கீட்டு தொடர்பான மத்திய அரசு சட்டங்கள்

1) மத்திய அரசு கல்வி நிறுவனச்சட்டம் 2006

2) மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் நியமன சட்டம் 2019 இட ஒதுக்கீடு தொடர்பான தமிழ்நாடு  சட்டங்கள்

 இடஒதுக்கீடு தொடர்பான தமிழ்நாடு அரசு சட்டங்கள்

3) தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், அட்டவணைச் சாதிகள் மற்றும் அட்டவணைப் பழங்குடிகளுக்குக் கல்வி மற்றும் பணி நியமனங்களில் இடஒதுக்கீட்டுச் சட்டம் 1993

4) தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், அட்டவணை சாதிகள் மற்றும் அட்டவணைப் பழங்குடிகளுக்கு தனியார் கல்வி நிறுவன இட ஒதுக்கீட்டுச் சட்டம் 2006

5) தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட முகமதியர்கள் கல்வி மற்றும் பணி நியமனங்களில் இடஒதுக்கீட்டு திருத்தச் சட்டம் 2007

6) தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட முகமதியர்களின் கல்வி மற்றும் பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு திருத்தச் சட்டம் 2008

7) தமிழ்நாடு அருந்ததியார் அட்டவணைச் சாதிகளுக்குள் கல்வி தனியார் நிறுவனங்கள் உட்பட மற்றும் பணிநியமனங்களில் உள் இட ஒதுக்கீட்டுச் சிறப்புச் சட்டம் 2009

 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved