🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமூகநீதி 360 டிகிரியில் ஒரு பன்முகப் பார்வை! - பகுதி - 7

i) Depressed Classes - ஒடுக்கப்பட்ட வகுப்புகள்

ஆங்கிலேயர்காலத்தில் அரசு தலையிட்டு முன்னேற நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்ட போது முதலில் உருவாக்கப்பட்ட வகுப்பு ஒடுக்கப்பட்ட வகுப்புகள் இதில் மூன்று பிரிவினர்கள் சேர்க்கப்பட்டு இருந்தனர் 1) குற்றப்பழங்குடிகள், 2) ஆதிபழங்குடிகள், 3) தீண்டத்தகாதவர்கள். 1928 க்கு பிறகு தீண்டத்தகாதவர்களை மட்டுமே ஒடுக்கப்பட்டவர்களாக கருதப்படவேண்டும் என்று அம்பேத்கர் கோரிக்கை வைத்ததை ஏற்று அதன்பின் ஒடுக்கப்பட்டவர்கள் என்றால் தீண்டத்தகாதவர்களை மட்டும் குறிக்கும்படி பயன்படுத்தப்பட்டது

 ii) Backward Classes பிற்படுத்தப்பட்ட வகுப்புகள்

அரசமைப்புச் சட்டம் சரத்து 16-4ல் குறிப்பிட்டிருந்தாலும் எங்கும் வரையறையில்லை. இருப்பினும் நீதிமன்றம் தீர்ப்புகளின் படி பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் SC/ST மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் மூன்றையும் உள்ளடக்கியது தான் பிற்படுத்தப்பட்டோர் என்று கூறியுள்ளது. ஆனால் மாநில அரசுகளில் பிற்படுத்தப்பட்டோர் என்றால் அதில் SC/ST அல்லாத பின்தங்கிய சாதிகளை குறிக்கும். தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையச் சட்டம் 1993 சரத்து 2a வில் பிற்படுத்தப்பட்டோர் என்று கீழ்க்காணுமாறு வரையறை செய்துள்ளது

"2-a "backward classes" means such backward classes of citizens other than the Scheduled Castes and the Scheduled Tribes as may be specified by the Central Government in the lists," தமிழ்நாடு  இட ஒதுக்கீடுச் சட்டம் 1993 ல் கீழ்க்காணுமாறு வரையறை செய்யப்பட்டுள்ளது.

"3 In this Act unless the contex otherwise requires a) "backward classess" means the class or classes of citizens who are Socially Educationally Backward as may be specified by the Government in the Tamil Nadu Government Gazzette and includes the Most Backward Classes and the Denotified Communities"

 மத்திய மாநில அரசுகளின் வரையறையிலேயே வேறுபாடுகள் உள்ளது. அடிப்படையில் அரசால் பிற்படுத்தப்பட்டோர் என்று அறிவிக்கப்பட்ட சாதிகள் பிற்படுத்தப்பட்டோர் என்று கருதப்படுகின்றனர். ஆனால் அவ்வாறு அறிவிக்க என்ன அளவீடுகள் என்பதை பின்பு பார்ப்போம்.

 iii) Schedule Castes -  அட்டவணைச் சாதிகள்

இந்திய அரசமைப்புச்சட்டம் 366 -24 அட்டவணைச்சாதிகள் என்றால் என்னவென்று கீழ்க்காணுமாறு வரையறுக்கின்றது. இந்த வரையறைப்படி மேலே விளக்கிய முறைப்படி தீண்டாமையால் பாதிக்கப்பட்ட சாதிகள் அட்டவணைச்சாதிகள் என்று அறிவிக்கப்படுகின்றனர்.

24 "Scheduled Castes" means such castes, races or tribes or parts of or groups within such castes, races or tribes as are deemed under article 341 to be Scheduled Castes for the purposes of this Constitution;

 iv) Scheduled Tribes - அட்டவணைப் பழங்குடிகள்

இந்திய அரசமைப்புச் சட்டம் 366-25 அட்டவணை பழங்குடிகள் என்றால் என்னவென்று கீழ்க்காணும்வாறு வரையருக்கின்றது. இந்த வரையறைப்படி மேலே விளங்கிய முறைப்படி இந்திய மானுடவியல் ஆய்வகம் ஆய்வு நடத்தி மத்திய மாநில அரசுகளின் ஒப்புதலைப் பெற்று அட்டவணைப் பழங்குடிகள் என்று அறிவிக்கப்படுகின்றன.

25 "Scheduled Tribes" means such tribes or tribal communities or parts of or groups within such tribes or tribal communities as are deemed under article 342 to be Scheduled Tribes for the purposes of this Constitution;

 v) Other Backward Classes இதரபிற்படுத்தப்பட்டோர்  

 இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சரத்து 338-10ல் இதரப் பிற்படுத்தப்பட்டோர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் 2018க்கு பிறகு 102 வது திருத்தப்படி நீக்கப்பட்டுவிட்டது. இருப்பினும் SC/ST அல்லாத அனைவரையும் ஓபிசி என்றும் மத்திய அரசு ஆணையங்கள் சட்டங்கள் அனைத்திலும் ஓபிசி என்று தான் உள்ளது. மத்திய கல்வி சட்டத்தில் இன்றும் ஓபிசி என்றுதான் கீழ்க்காணுமாறு வரையறையுள்ளது

2-g "Other Backward Classes" means the class or classes of citizens who are cocially and educationally backward, and are so determined by he Central Government;

 vi) Socially Educationally Backward Classes - சமூகரீதியாக கல்விரீதியாகப் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள்

2018க்கு பிறகு 102 வது திருத்தப்படி முதல் முறையாக அரசமைப்புச் சட்டத்தில் சமூகரீதியாக கல்விரீதியாகப் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் யார் என்று கீழ்க்காணுமாறு வரையறுக்கப்பட்டுள்ளது

366-26C "Socially and educationally backward classes" means uch backward classes as are so deemed under article 342A for the purposes of the central Government or the States or Union Terrtory as the case may be;"

 vii) Most Educationally Backward Classes - மிகவும் பின்தங்கிய வகுப்புகள்

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்றால் யார் என்ற வரையறை கொடுக்கப்படவில்லை என்றாலும் உச்சநீதிமன்றம் இந்திரா சஹானி வழக்கில் இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பிற்கு எந்த பிரிவினர் மிகப் பின் தங்கியுள்ளனரோ அவர்களே மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்று விளக்கமளித்துள்ளது. இந்த சாதிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைவிட சமூக கல்வி அளவீடுகளில் மிக மிகப் பின் தங்கியுள்ளனரோ அவர்களைத் தனி வகுப்பாகப் பிரித்து இட ஒதுக்கீடு வழங்கலாம் என்றும் மற்றவர்களை பிற்படுத்தப்பட்டோர் என்ற வகுப்பிலேயே வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

 viii) Denotified Tribes - அறிவிப்பிலிருந்து நீக்கப்பட்ட பழங்குடிகள்

மேலே குறிப்பிட்ட குற்றப்பழங்குடிச் சட்டம் 12.10.1871 முதல் அறிவிக்கப்பட்ட பழங்குடிகளாக இருந்தவர்கள் 31.8.1952 ல் அச்சட்டம் முற்றிலுமாக நீக்கப்பட்டபின் அந்த அறிவிப்பிலிருந்து நீக்கப்பட்ட பழங்குடிகள் என்று அழைக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் சட்டவிரோதமாக இன்றும் DNC என்று சாதிச்சான்று வழங்கப்பட்டு வருகின்றது.

 ix) Nomadic Tribes - நாடோடிப் பழங்குடிகள்

இந்தியாவில் பல பழங்குடிகள் ஒரே இடத்தில் குடி அமராமல் ஊர் ஊராகப் புலம்பெயர்ந்து கொண்டே இருப்பார்கள் அவர்களையே நாடோடிப்பழங்குடிகள் என்றும் அவர்கள் என்றும் பெரும்பாலும் குற்றப்பழங்குடிச் சட்டத்தில் கீழ் இருந்ததால் DNT மக்களோடு சேர்த்து நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றது.

 x) Semi Nomadic Tribes - அரைநாடோடிப் பழங்குடிகள்

இந்தியவில் பல பழங்குடிகள் வீடு ஆறுமாதம் காடு ஆறுமாதம் என்று ஊர் ஊராகப் புலம்பெயர்ந்து கொண்டே இருப்பார்கள் அவர்களையே அரைநாடோடிப் பழங்குடிகள் என்றும் அவர்கள் பெரும்பாலும் குற்றப்பழங்குடிச்

சட்டத்தில் கீழ் இருந்தால் DNT மக்களோடு சேர்ந்து நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

 xi) Indegenous Tribes - பூர்வப் பழங்குடிகள்

ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் கானப்படும் பழங்குடிகள், நீண்ட காலமாக ஒரே இடத்தில் வசித்து வரும் பழங்குடிகளைப் பூர்வ பழங்குடிகள் என்று அறியப்படுகின்றனர், அதாவது இது ஒரு பூலோக வரையறையாகும், சர்வதேச அளவில் இம்மக்களுக்கும் ஆதிபழங்குடி மக்களுக்கும் கல்வி கலாச்சார உரிமைகளை பாதுகாக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதில் இந்தியாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

 xii) Backward Tribes - பிற்படுத்தப்பட்ட பழங்குடிகள்

பல மாநிலங்களில் சில பழங்குடிகளைப் பிற்பட்ட பழங்குடிகள் என்று வகைப்படுத்தியுள்ளனர். புதுச்சேரியில் பிற்பட்ட பழங்குடிகள் என்று பட்டியலிடப்பட்டுள்ளனர்.

  xiii) Aboriginal Tribes - ஆதிபழங்குடிகள்

ஒரு குறிப்பிட்ட பகுதியில் நீண்ட நெடுங்காலமாகத் தோன்றி மிகப்பழமையான கலாச்சாரங்களைக் கொண்ட பழங்குடிகளை ஆதி பழங்குடிகள் என்று அறியப்படுகின்றனர், அதாவது இது ஒரு கால வரையறையாகும். சர்வதேச அளவில் இம்மக்களுக்கும் பூர்வ பழங்குடி மக்களுக்கும் கல்வி கலாச்சார உரிமைகளைப் பாதுகாக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதில் இந்தியாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

 xiv) Hill Tribes - மலைப்பழங்குடிகள்

சென்செஸ் கணக்கெடுப்பு 1881 முதல் 1961 வரை மலை பகுதிகளில் வாழ்கின்ற பழங்குடி மக்களை இந்த வகையின் கீழ் கணக்கெடுப்பு நடத்தினார்.

 அடையாளம் காணுதல்

1) அட்டவணைச் சாதிகளை தீண்டாமைக்கு உள்ளானவர்களா? இல்லையா? என்ற அடிப்படையில் கண்டறியப்படுகிறது.

2) அட்டவணைப் பழங்குடிகளை இந்திய மானுடவியல் ஆய்வகம் பரிந்துரைத்த 5 அளவீடுகளில் பொருந்தியிருந்தால் அவர்களை அட்டவணைப் பழங்குடிகள் என்று பட்டியலிடப்

பரிந்துரைக்கப்படுகிறது.

) பழமையான பழக்க வழக்கம்;

) தனித்துவமான கலாச்சாரம்;

) பூலோக தனிமை

) மற்ற சமுதாயத் தொடர்பில் தயக்கம்;

) பிற்பட்ட தன்மை

 3) இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை (.பி.சி) அடையாளம் காணுவதற்கான அளவுகோல்

மண்டல் ஆணைக்குழு தேவையான தகவல் மற்றும் சான்றுகளைப் பெறுவதற்குப் பல்வேறு முறைகள் மற்றும் நுட்பங்களைக் கையாண்டது. அந்த ஆணைக்குழு சமூக 4, கல்வி 3, மற்றும் பொருளாதாரம் 4 மூன்று குறியீடுகளிலும் 11 அளவுகோல்களைக் கொண்டிருந்தது அது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களை அடையாளம் காணுவதற்காகப் பயன்படுத்தப்பட்டது.

 சமூகம்

1) மற்றவர்களால் சமூக ரீதியாகப் பிற்படுத்தப்பட்டோராகக் கருதப்படும் சாதிகள்/வகுப்புகள்.

2) அவர்களது வாழ்வாதாரத்திற்காக உடல் உழைப்பை முக்கியமாகச் சார்ந்திருக்கும் சாதிகள்/வகுப்புகள்.

3) கிராமப்புறப் பகுதிகளில், மாநில சராசரிக்கும் மேலாக, குறைந்த பட்சம் 25 சதவீத பெண்களும், 10 சதவீத ஆண்களும் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் குறைந்த பட்சம் 10 சதவீத பெண்களும் 5 சதவீதம ஆண்களுக்கு 17 வயதுக்கு முன் திருமணம் செய்துகொள்ளும் சாதிகள்/வகுப்புகள்.

4) பெண்களி குறைந்த பட்சம் 25% மாநில சராசரிக்கும் அதிகமாகப் பணியாற்றுவார்கள் கொண்ட சாதிகள்/வகுப்புகள்

 கல்வி

5) 5 முதல் 15 வயது வரையுள்ள சிறுவர்களில், மாநில சராசரியை விட அதிகமாக, குறைந்த பட்சம் 25% பள்ளிக்குச் செல்லாதவர்களை கொண்ட சாதிகள்/வகுப்புகள்.

6) 5 முதல் 15 வயது வரையுள்ள சிறுவர்களில் மாநில சராசரியைவிட அதிகமாக, குறைந்த பட்சம் 25% பள்ளியில் இருந்து பாதியில் நின்றுவிடும் அளவைக்கொண்ட சாதிகள்/வகுப்புகள்.

7) 10ம் வகுப்புவரை படித்தவர்கள் விகிதம் மாநில சராசரியைவிட குறைந்த பட்சம் 25 சதவீதம் குறைவாகக் கொண்ட சாதிகள்/ வகுப்புகள்.

பொருளாதாரம்

8) குறைந்தபட்சம் 25 சதவீதமான குடும்பங்களிண் குடும்பச் சொத்துங்களின் சராசரியானது மாநில சராசரியைவிடக் குறைவாகயுள்ள சாதிகள்/வகுப்புகள்.

9) மாநில சராசரிக்கும் மேலாக, குறைந்தபட்சம் 25 சதவீதம் குடிசை வீடுகளில் வாழும் குடும்பங்கள் கொண்ட சாதிகள்/வகுப்புகள்.

10) 50 சதவீதத்திற்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் குடிநீருக்காக அரை கிலோ மீட்டருக்கு அப்பால் செல்லும் நிலையிலுள்ள சாதிகள்/வகுப்புகள்.

11) நுகர்விற்காகக் கடணைப் பெற்றுள்ள குடும்பங்களின் எண்ணிக்கையானது, மாநில சராசரிக்கும் மேலாக குறைந்தப் பட்சம் 25 சதவீதமாகவுள்ள சாதிகள்/வகுப்புகள்.

 சமூக மதிப்பீடு

சமூக அளவீடுகள் ஒவ்வொன்றுக்கும் 3 புள்ளிகளும், கல்வி அளவீடுகள் ஒவ்வொன்றுக்கும் 2 புள்ளிகளும், பொருளாதார அளவீடுகள் ஒவ்வொன்றுக்கும் 1 புள்ளியும் கொடுத்திருந்தனர். இதில் ஒவ்வொரு அளவீடுகளுக்கும் கொடுக்கப்பட்ட மதிப்புகளின் அடிப்படையில் மொத்த மதிப்பு 22ஆக இருக்கும். அனைத்து 11 அளவீடுகளுக்கும் குறிப்பிட்ட மாநிலத்தில் அனைத்து சாதிகளையும் கருத்தில் கொண்டு கருத்துக்கணிப்பு நடத்தினர். இந்தப் பயன்பாட்டின் முடிவாக 50 சதவீதம் (அதாவது 11 புள்ளிகள்) மதிப்பெண்ணைப் பெற்ற அனைத்து சாதிகளும் சமூகம் மற்றும் கல்வியின் பின் தங்கியவையாகப் பட்டியலிடப்பட்டன இதில் மீதமுள்ளவை 'மேம்பட்டவையாக' கருதப்பட்டன.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved