🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஹம்பியில் கம்பளத்தார் எதிர்கொண்ட சவால்!- பகுதி-1

இராஜகம்பளத்தார் வரலாறு முழுக்க கம்பிளி தேசமும், முஸ்லிம் மன்னன் பெண்கேட்டு வந்ததால், அவர்களிடம் இருந்து தப்பி ஆற்றைக்கடந்து வந்ததாக சொல்லப்படும் செவிவழி செய்தியும், கதையும், பாடல்களும் தவறாமல் இடம்பெற்றிருக்கும். விஜயநகரப்பேரரசு தோற்றுவிக்கப்படும் முன்பே ஹம்பி தேசத்தில் கோலோச்சிக்கிக் கொண்டிருந்த யதுவம்சத்தில் வந்ததாக கூறப்படும் கம்பளத்தார் சமுதாயத்தினரின் ஆட்சிகள் எவ்வாறு சிதறடிக்கப்பட்டு அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டனர் என்ற கேள்வியும், மீண்டும் ஒரு ராஜ்ஜியத்தை தோற்றுவிக்கும் அளவிற்கு வலிமையான இனக்குழுவை எப்படி ஒரு முஸ்லீம் மன்னனால் வீழ்த்தமுடிந்தது. அப்படி வீழ்த்திய முஸ்லீம் மன்னன் யார்? அவர் பின்னனி என்ன? அன்று நாட்டில் நிலவிய சூழல் என்ன என்ற பல கேள்விக்கு விடைகாண வேண்டியுள்ளது. வெறுமனே முஸ்லீம்களுக்கு பயந்து போய் ஆற்றைக்கடந்து வந்தோம் என்று சொல்லிக்கொண்டே இருப்பதைவிட, அன்றைய அரசியல் சூழலையும், எதிரியின் வலிமையையும் அறிந்துகொள்வது கம்பளத்தார்களுக்கு மிக முக்கியமானது. வரலாற்றில் புதைந்து கிடக்கும் சம்பவங்களை அறிந்துகொள்ள முயல்கிறது இக்கட்டுரை. 

ஆயிரமாண்டுகால வரலாற்று சம்பவங்களை யாராலும் துள்ளியமாக சொல்லிவிடமுடியாது என்றாலும், வரலாற்றில் கிடைக்கும் செய்திகளை அவ்வப்பொழுது சமூகத்தோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம். இத்தொடருக்கு யார் வேண்டுமானாலும் தாங்கள் படித்து தெரிந்துகொண்ட செய்திகளை அனுப்பலாம்.

தொடரும்...

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved