🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பேராசிரியர் நாகராஜன் எழுதும் விஞ்ஞானமும், மெய்ஞானமும் – பகுதி 5

விஞ்ஞானமும் மெய்ஞானமும்- பகுதி 5

அன்புச் சொந்தங்களே வணக்கம்! விஞ்ஞானமும் மெய்ஞானமும் தலைப்பில் சென்ற வாரம் நாம் மெஞ்ஞானத்தின் வழியாக திருமூலர் அருளிய திருமந்திரத்தில் வாயிலாக இந்த பிரபஞ்சம் என்பது என்ன மற்றும் எதனால் ஆனது என்பதைப்பற்றி சிந்தித்தோம். இந்த வாரம் விஞ்ஞானம் கூறியுள்ள பிரபஞ்சத்தைப் பற்றி சிந்திப்போம்.

சுமார் 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் அதாவது சுமார் பத்தாயிரம் லட்சம் வருடங்களுக்கு முன்னர் ஒரு பெரிய வெடிப்பில் (Big Bang) இருந்து இந்த பிரபஞ்சம் உருவாகி இருக்கலாம் என கூறுகிறது. ஆரம்பத்தில் இந்த பிரபஞ்சம் ஒரு ஆற்றல் மற்றும் நிறை ( matter and radiation) கொண்ட ஒரு சிறிய அதிகமான வெப்பம் கொண்ட தீ பந்தான நிலையில் இருந்து விரிவடைந்து வருகிறது எனவும், தீவிர மற்றும் மிதமான மின்காந்த மோதல்கள் மூலம் இது விரிவடைந்து வருகிறது எனவும் கூறுகிறது. இந்த பிரபஞ்சமானது சில நிலை மாற்றங்கள் மூலம் அதாவது வெப்பம் அடைதல் மற்றும் குளிர்ச்சி அடைதல் மூலமாக தொடர் மாற்றங்களை ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் சந்தித்து விரிவடைந்து வருகிறது. அதாவது ஆரம்பத்தில் நீராவியாக உள்ளது வெப்பம் மாறுவதால் நீராக மாறி பின்னர் ஐஸ் கட்டியாக மாறுவது போல , இந்த பிரபஞ்சம் மிக அதிக வெப்ப நிலையில் இருந்து கால (time passes) மாற்றத்தால் அது  திரவ நிலைக்கு மாறி, இன்றுள்ள  திட நிலைக்கு மாறி உள்ளது.


இன்றைய நிலையில் உள்ள பிரபஞ்சத்தில் நாம் காண்பது எல்லாம் பல உருமாற்றங்களுக்கு பின்னர் உள்ளது. இதனை விளக்கும் விதமாக மேலே உள்ள படம் தரப்பட்டுள்ளது. அதாவது பெரிய வெடிப்புக்கு பின்னர் சுமார் 10^-43  s  என்ன நடந்தது என்பதை இன்றைய அறிவியல் அறிவு மூலம் கணிக்க முடியவில்லை. அதன் பின்னர் மூலக்கூறுகள் தொடர் மோதல்களால் வெவ்வேறு நிலைகளுக்கு படத்தில் காண்பிக்கபட்டுள்ளது போல் மாறி இன்றைய நிலையை அடைந்து உள்ளது. இந்த படத்தில் உள்ளவற்றை விரிவாக அடுத்த வாரம் சிந்திப்போம். மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்

அன்புடன் உங்கள்,
முனைவர்.கெ. நாகராஜன்,
இயற்பியல்துறை பேராசிரியர்,
பிஎஸ்ஜி கல்லூரி, கோவை.


 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved