🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமூகநீதி 360 டிகிரியில் ஒரு பன்முகப் பார்வை! - பகுதி - 8

அரசமைப்புச் சட்டம் சரத்து 15-4, 15-5 - 16-4 ன் கீழ் இட ஒதுக்கீடு வழங்க மத்திய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதில் SC/ST பிரிவினருக்கு மட்டும் அடையாளம் காணும் அதிகாரம் 342ன் கீழ் குடியரசுத் தலைவர்க்கு மட்டும் உள்ளது. அதாவது இடஒதுக்கீடு இரண்டு அதிகாரங்களைக் கொண்டது 1.தகுதியான சமூகங்களை அடையாளம் காண்பது. 2.யாருக்கு எவ்வளவு விகித இட ஒதுக்கீடு என்று தீர்மானம் செய்வது.

 BC/MBC/DNTயைப் பொருத்தவரை இரண்டு அதிகாரங்களும் இரண்டு அரசுகளுக்கும் உள்ளது. ஆனால், SC/ST யைப் பொருத்தவரை மத்திய அரசுக்கு மட்டும் தான் இரண்டு அதிகாரங்களும் உண்டு, மாநில அரசுக்கு விகிதம் நிர்ணயம் செய்யும் அதிகாரம் மட்டும் தான் உண்டு. ஆனால் 2018 ம் ஆண்டு 102வது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் சரத்து 342A சேர்க்கப்பட்டதால் உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு அடையாளம் காணும் அதிகாரம் இல்லை என்று மாராத்தா வழக்கில் கூறிவிட்டது. அதன்பின் 2021 ம் ஆண்டு 105 வது அரசமைப்பு சட்டம் திருத்தத்தின் மூலம் சரத்து 342A-3 சேர்க்கப்பட்டு மாநில அரசுக்கு இரண்டு அதிகாரங்களையும் முதல் முறையாக வெளிப்படையாக உள்ளது.

 இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் மராத்தா வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் சட்டம் 8/2021 இயற்றும்போது மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று கூறியுள்ளது. உச்சநீதிமன்றம் புதிதாக அடையாளம் காணுவதற்குத்தான் அதிகாரம் இல்லை பழைய சாதிகளை வகைப்பபடுத்த அதிகாரம் மாநில அரசுக்கு இருந்தது என்று கூறியுள்ளது. தீர்ப்பு எப்படி இருந்தாலும் மாநில அரசுக்கு இரண்டு அதிகாரங்களும் 15.9.2021க்கு பிறகு இருக்கின்றது என்பதுதான் சட்டம். சட்டம் 8/2021 115 MBC/DNT சமூகங்களின் சரத்து 14.15 - 16 ல் உள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதால் அச்சட்டம் செல்லாது என்று அறிவித்தபின் அதிகாரம் இருக்கின்றதா இல்லையா என்ற வாதம் விளைவுகள் இல்லாத விவாதமே.

 இருப்பினும் சட்டநிலை என்ன என்பதை நாம் புரிந்து கொள்வது அவசியம். உச்சநீதிமன்றத்தின் இரண்டு முரண்பட்ட தீர்ப்புகள் இருந்தால் அதிக நீதிபதிகள் கொண்ட தீர்ப்பே அனைவரையும் கட்டுப்படுத்தும் என்பதும். அதிகநீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை குறைவான எண்ணிக்கை கொண்ட அமர்வு மீற முடியாது என்பதும், அப்படி மீறினால் அந்தத் தவறான பகுதி மட்டும் செல்லாது என்பதும் சட்டம். இதன்படி மாரத்தா வழக்கில் பட்டியலில் மாற்றத்தை உருவாக்கும் செயல், அதற்கு அதிகாரம் இல்லை. மேலும் மக்கள் நலன் கருதி சரத்து 142ன் கீழ் குடியரசுத் தலைவர் பட்டியலில் வெளியிடும் வரை மாநில அரசு வைத்துள்ள பட்டியல் தொடர அனுமதித்துள்ளது மாற்றம் செய்ய அல்ல. இதோ அந்த தீர்ப்பின் குறிப்பிட்ட பகுதி

 188-5 Re.Point No.5 Whether, States' power to legislate in relation to "any backward class" under Articles 15-4 and 16-4 is anyway abridged by Article 342-A read with Article 366-29C of the Constitution of India. On these two interrelated points of reference, my conclusions are as follows:

 i) By introduction of Article 366 -26C and 342A through the 102nd Constitution of India, the President alone, to the exclusion of all other authorities, is empowered to identify SEBCs and include them in a list to be published under Article 342A-1, which shall be deemed to include SEBCs in relation to each state and union territory for the purposes of the Constitution.

ii) The states can, through their existing mechanisms, or even statutory commission, only make suggestion to the President or the Commission under Article 338B, for inclusion, exclusion or modification of castes or communities, in the list to be published under Article 342A-1.

iii) The reference to the Central List in Article 342A-2 is the one notified by the President under Article 342A-1. It is to be the only list for all purposes of the Constitution, in relation to each state and in relation to every union territory. The use of the term "the Central List" is only to refer to the list prepared and published under Article 342-1, and no other; it does not imply that the states have any manner of power to publish their list of SEBCs. Once published, under Article 342A-1, the list can only be amended through a law enacted by Parliament, by virtue of Article 342A-2.

iv) In the task of identification of SEBCs, the President shall be guided by the Commission set up under Article 337B; its advice shall also be sought by the state in regard to policies that might be framed by it. If the commission prepares a report concerning matters of identification, such a report has to be shared with the state government, which is bound to deal with it, in accordance with provisions of Article 338B. However, the final determination culminates in the exercise undertaken by the President (i.e. the Central Government, under Article 342A-1, by reason of Article 367 read with Section 3-8-b General Clauses Act).

v) The states power to make reservation, in favour of particular communities or castes, the quantum of reservations, the nature of benefits and the kind of reservations, and all other matters falling within the ambit of Article 15 and 16 - expert with respect to identification of SEBCs, remains undisturbed.

vi) The Commission set up under Article 338B shall conclude its task expeditiously, and make its recommendations after considering which, the President shall expeditiously publish the notification containing the list of SEBCs in relation to states and union territories, for the purpose of the Constitution.

vii) Till the publication of the notification mentioned in direction vi), the existing lists operating in all states and union territories, and for the purpose of the Central Government and central institutions, continue to operate. This direction is issued under Article 142 of the Constitution of India.

 இதுதான் இடஒதுக்கீடு தொடர்பான அன்றும் இன்றும் உள்ள சட்டம், விவாதம் என்ற பெயரில் பலர் பொதுவெளியில் மக்களைக் குழப்புவதை நம்ப வேண்டாம்.

 மாநில அரசுக்கு 102 க்கும் 105 க்கும் இடைப்பட்ட காலத்தை தவிர மற்ற எல்லாக்காலங்களிலும் சரத்து 246 மற்றும் 15,16ன் கீழ் முழு அதிகாரம் இருந்தது என்று பார்ப்போம். ஆனால் 246 இல் உள்ள நிபந்தணையின்படி மாநில அரசின் எல்லாச்சட்டமும் அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டுத் தான் இருக்க முடியும் முரணாக அல்ல. சட்டம் 8/2021 பல அரசமைப்புச் சட்ட நடைமுறைகளை மீறியுள்ளது. அதில் ஒன்று சரத்து 301-B. இதோ அந்தப் பிரிவு

"31B. Validation of certain Acts and Regulations. -Without prejudice to the generality of the provisions contained in Article 31A, none of the Acts and Regulations specified in the Ninth Schedule nor any of the provisions thereof shall be deemed to be void, or ever to have become void, on the ground that such Act, Regulation or provision is inconsistent with, or takes away or abridges any of the right conferred by, any provisions of this Part, and notwithstanding any judgment, decree or order of any court or Tribunal to the contrary, each of the said Acts and Regulations shall, subject to the power of any competent Legislature to repeal or amend it, continue in force."  

இந்தப் பிரிவு அரசியல் அமைப்புச்சட்டத்தில் வருவதற்கு பெரும்காரணம் தந்தைப்பெரியாரின் போராட்டம் ஆனால் I.R.Coelho Vs State of TN(2007) 2 SCC 1  தீர்ப்புக்குப் பிறகு ஒரு சட்டம் ஒன்பதாவது அட்டவணையில் இருந்தாலும் நீதிமன்றம் அது அடிப்படைக் கூறுகளை மீறியுள்ளதா என்று ஆய்வு செய்ய முடியும் என்று கூறிவிட்ட காரணத்தினால் தான் தமிழக சட்டம் 45/1994 ஒன்பதாவது அட்டவணையில் இருந்தாலும் அதற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனால் இந்தச் சட்டத்தில் இன்னொரு கட்டுப்பாடும் சேர்ந்தே உள்ளது. அப்படி 9வது அட்டவணையில் சேர்க்கப்பட்ட சட்டமும் அதிலுள்ள ஒவ்வொரு சரத்துக்களும் அதைத் திருத்தும் வரை தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என்பதுதான் அந்தக் கட்டுப்பாடு, அதாவது மாநில அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை என்பது அல்ல மாநில அரசாங்கத்திற்கு ஒன்பதாவது அட்டவணையில் வைத்திருக்கின்ற சட்டத்தைத் திருத்துவதற்கு அதிகாரம் இருக்கிறது என்று இந்தச் சரத்து தெளிவாக கூறுகிறது. அதனால் யாரும் அதிகாரம் இல்லை என்று வாதிட முடியாது. ஆனால் பொதுவெளியில் தேவையில்லாத வாதங்களை பார்க்கின்றோம். அட்டவணையில் இருக்கின்ற சட்டத்தை திருத்தும் வரை செயல்பாட்டில் இருக்கும் எந்ற காரணத்தினால் அந்தச் சட்டம் தொடர்பான துணைச்சட்டமோ அந்தச் சட்டத்தை மாற்றுகின்ற அளவிற்கு ஒரு சட்டம் இயற்றிய பொழுது அந்தச் சட்டத்தைத் திருத்த வேண்டியது அரசமைப்புச்சட்டம் சட்டத்தின் கட்டாய நடைமுறை. ஆனால் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் ஒரு நிலைப்பாட்டையும் உச்சநீதிமன்றத்தில் ஒரு நிலைப்பாட்டையும் எடுத்ததை அந்த இரண்டு தீர்ப்புகளிலும் உள்ள தொடர்பான பகுதிகளை படித்தால் புரிந்து விடும்.

 உயர்நீதிமன்றத்தில் அரசு வைத்த வாதம்

30. "Whereas the learned Advocate General appearing for the State argued that the impugned Act has not varied the reservation of 20% to MBC, but, within 20% reservation, it has only apportioned the reservation into three categories in proportion to their population and hence, there is no illegality in the impugned Act".

 உயர்நீதிமன்றத் தீர்ப்பு

32. "In our view, a combined reading of the Act 45 of 1994 as well as the impugned Act would make it clear that the impugned Act (Act 8 of 2021) has been enacted as a Special Act and not by way of Amendment Act to amend the provisons of the Act 45 of 1994. Article 31-B of the Constitution of India mandates that only amendment or repeal alone is permissible and not by way of overruling of the said as the same has been placed in the Ninth Schedule of the Constitution of India".

 உயர் நீதிமன்றத்தில் அரசு வைத்த வாதம்

41. "Mr.Dwivedi proffered arguments on a different aspect of this issue. He submitted that the High Court completely misunderstood the Scope of Article 31-B. While Article 31-B provided protection to statutes placed within the Ninth Schedule against challenge in terms of part III of the Constitution, it cannot be interpreted to restrict powers of legislation under Article 246 and alter the federal distribution of powers. Additionally, he urged that Article 31-B did not pre Scribe any procedure for amendment or repeal of a statute in the Ninth Schedule and therefore, the high Court's observation on amending statutes also being placed in the Ninth Schedule was only evidence of the procedure adopted with respect to certain amending statutes and not a requirement of every amending statute. Assuming that this Court was not inclined to accept that the 2021 Act was in exercise of Section 7 of the 1994 Act, even then the 2021 Act in its own right is a valid piece of legislation, without the protection of Article 31-B as the incurred consequence. To support his submissions, he placed reliance on judgments of this Court in Sri Ram Ram Narain Medhi (supra), Chandra Sekhra Singh Bhoi (supra), Godavari Sugar Mills Ltd. (supra) and UCO Bank V. Dipak Debbarama.

 உயர்நீதிமன்ற தீர்ப்பு

77 iv) "Placing of the 1994 Act under the Ninth Schedule cannot operate as a hurdle for the State to enact legislations on matters ancillary to the 1994 Act. Legislative competence of the State Legislature can only be circumscribed by express prohibition contained in the Constitution itself and Article 31-B does not stipulate any such express prohibition on the legislative powers of the State."

 சரத்து 31B அரசியன் அதிகாரத்தை கட்டுப்படுத்தவில்லை அந்த அட்டவணையில் உள்ள சட்டத்தைப் பாதுகாக்கின்றது என்பது விதி. அது தேவையில்லையென்றால் அது தலைவிதி, 69%க்குத் தலைவலி. எனவே மேற்படித் தீர்ப்புகளின் சாரம் சட்டம் 45/1994 திருத்தாமல் அதன் கூறுகளை மாற்ற முடியாது. அச்சட்டத்தை மாற்றுவதற்கு அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் மாற்றிய சட்டம் மீண்டும் 9வது அட்டவணையில் வைக்கவில்லையென்றால் மாற்றப்பட்ட சட்டத்திற்கு பாதுகாப்புக் கிடையாது. 69% சட்டத்திற்கு பாதுகாப்பு வேண்டாம் நாங்கள் 9வது அட்டவணையில் வைக்காமல் அரசியலுக்காகச் சட்டத்தைத் திருத்தியுள்ளோம் என்று வாதிட்டது உள்ளபடி சமூகநீதிக்கு மிகப்பெரிய சறுக்கு. விரைவில் பெரிய ஆபத்து வரலாம். ஆனால் சட்டம் 45/1994க்கு மேலும் ஒரு அசைக்கமுடியாத பாதுகாப்பு 31C ல் இருந்தது அதையும் இத்தீர்ப்பு தகர்த்துவிட்டது. இப்போது சட்டம் 45/1994 காக்க வேண்டுமானால் சாதிவாரிக் கணக்கெடுப்பு தவிர்க்க முடியாதது. ஒரு சாதிக்கு மட்டும் புள்ளிவிபரம் சேகரிப்பது மேலும் ஆபத்தானது. சமூகநீதியை உருக்குலைக்கும் புற்றுநோய்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved