🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பேராசிரியர் நாகராஜன் எழுதும் விஞ்ஞானமும், மெய்ஞானமும் – பகுதி 6

விஞ்ஞானமும் மெய்ஞானமும் பகுதி -6

அன்புச் சொந்தங்களே வணக்கம், நீங்கள் அனைவரும் சென்ற வாரம் வந்த விஞ்ஞானமும் மெய்ஞானமும் பகுதி -5 ஐ படித்திருப்பீர்கள் என நம்புகிறேன். மேலும் எப்படி இந்த பிரபஞ்சம் தோன்றி இருக்கக்கூடும்? அது எப்படி இந்த அளவுக்கு உருமாற்றம் அடைந்து இருக்க கூடும்? என்பதை அறிய ஆவலாக இருப்பீர்கள் என்பதையும் உணர்கிறேன். ஆம், இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொரு உயிருள்ள பொருட்களுக்கும் , உயிரற்ற பொருள்களுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது என்பதை அறிவீர்களா? அது என்ன அதாவது எந்த ஒரு உயிருள்ள பொருளும் சரி , உயிரற்ற பொருளும் சரி இந்த மூன்று நிலைகளை அடைகின்றன. அதாவது உதித்தல், இருத்தல் மற்றும் மறைதல். அதாவது ஒரு ஆட்டுக்குட்டி அல்லது . குழந்தை பிறக்கிறது, கொஞ்ச நாட்கள் வாழ்கிறது, பிறகு அது மறைந்து போகிறது. அதே மாதிரி ஒரு நட்சத்திரம் பிறக்கிறது, பிறகு கொஞ்ச நாள் வாழ்கிறது பின்னர் மறைந்து போகிறது. இதே நிலை தான் இந்த பிரபஞ்சத்திற்கும் உண்டு என்பதை கீழே கூறியபடி அறியலாம். அதாவது, புராணங்களின் படி யுகங்கள் நான்கு  அதாவது கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் மற்றும் கலியுகம். இந்த நான்கு யுகங்கள் சேர்த்து ஒரு சதுர்யுகம் அல்லது மகாயுகம் என்று கூறப்படுகிறது. ஒவ்வொன்றும் வெவ்வேறு கால அளவுகளைக் கொண்டன. இவற்றுள் சிறிய யுகமான கலியுகம்  ( நாம் அனுபவித்து கொண்டு உள்ளது) நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம் (4,32,000) ஆண்டுகள் கொண்டது. துவாபர யுகம்  8,64,000 ஆண்டுகளையும் ( இரண்டு மடங்கு கலியுகத்தைவிட),   பெரியதான திரேதா யுகம் 12,96,000 ஆண்டுகளையும் கொண்டன ( மூன்று மடங்கு). கிருத யுகம் மொத்தம் 17,28,000 ஆண்டுகள் கொண்டது. இது கலியுகத்தை போல நான்கு மடங்கு பெரியதாகும். இது முடியும் தருவாயில் ஒரு பிரளயம் ஏற்பட்டு மீண்டும் இந்த பிரபஞ்சம் தோன்றும் என மெய்ஞானம் கூறுகிறது.

இதை ஏன் இப்போது கூறுகிறேன் என்று யோசிக்கின்றீர்களா? காரணம் உண்டு. சென்ற வாரம் நாம் பார்த்த படத்தில் இதே மாதிரி யுகங்கள் உண்டு. யுகங்கள் என்றால் வருடங்கள் என ஒரு கணக்கு உண்டு, இத்தனை வருடங்கள் சேர்ந்தது ஒரு யுகம் என்று சொல்லுவார்கள். அதாவது அந்த பெரிய வெடிப்புக்கு பின்னர் இந்த பிரபஞ்சம் சுமார் நான்கு யுகங்களை கடந்து ஐந்தாவது யுகமாகிய அணு யுகத்தில் உள்ளது. அதாவது அந்த மிகச்சிறிய நெருப்பு பந்து   ( Hiighly compressed matter) மிக பெரிய சப்தத்துடன் வெடித்த பிறகு முதல் 10^-43  s என்ன நடந்தது என்பதை  ஒன்றாகும் யுகம் என்பதையும்,  10^-43s to 10^-35s  இந்த பிரபஞ்சம் மிக குளிர்ச்சி அடைந்து வெப்பநிலை படிப்படியாக குறைகிறது, அதாவது 10^28 -10^23 eV. க்கு குறைகிறது. அதாவது 1eV =10^4 K. அதாவது K – Kelvin  கெல்வின் என்பது வெப்பத்தை அளக்கும் ஒர் அலகு. இந்த ஆற்றல் நிலையில், மிதமான மற்றும் தீவிர மின்காந்த துகள்களின் மோதல்கள் குறிப்பாக X- Bosons துகள்களின் மூலம் நடைபெறுகிறது. ஆனால் 10^-35s இல் துகள்களின் ஆற்றல் குறைந்து X- Boson கள் உற்பத்தி செய்ய முடியாமல் போகிறது.



எனவே தீவிர துகள்களின் மோதல்கள் குறைந்து  மிதமான மோதல் உள்ள துகள்களாக மாறுகிறது. இந்த சமயத்தில் இந்த பிரபஞ்சத்தின் அளவு 1மிம மட்டுமே! எவ்வளவு ஆச்சரியம் இன்று நாம் காணும் இந்த பிரபஞ்சம் 1 மிமீ அளவு தான் இருந்திருக்கிறது! குவார்க்ஸ் மற்றும் லெப்டான்கள் பிரிய ஆரம்பிக்கிறது. இந்த சமயம் வரைக்கும் நிறை மற்றும் எதிர் நிறை ( matter and antimatter) சமமாகவே உள்ளது. ஆனால் போசான்களின்  எண்ணிக்கை சீராக குறையாததால்  நிறையின் அளவு எதிர் நிறையை விட அதிகமாகிறது. அதாவது பத்து லட்சத்திற்கு ஒரு பங்கு அதிகமாகிறது. பின்னர் காலம் ஆக ஆக நிறை மற்றும் எதிர் நிறை ஒன்றோடொன்று மோதி அழித்துக் கொண்டு நிறை (matter) மட்டுமே உள்ளதான பிரபஞ்சம்மாக மாறுகிறது. பின்னர் காலம் 10^ -35  - 10^-10s ஆக குறையும் போது குவார்க்ஸ் மற்றும் லெப்டான் துகள்களாக மாறுகிறது. இதை தீவிர மற்றும் மிதமான மின்னணு மற்றும் புவியீர்ப்பு மோதல்கள் கட்டுப்படுத்துகிறது. 10^-10 s இல், மிதமான மின்னணு மோதல்கள், இன்று நாம் காணும் மின்காந்த மற்றும் மிதமான துகள்களாக அடைவதை காண்கிறோம். இந்த நிலையில் , துகள்களின் மோதல்கள் மிகவும் பலவீனம் அடைந்து W and Z bosons துகள்களாக மாறுகிறது பின்னர் நாம் ஏற்கனவே பார்த்தது போல் ஒருமித்த X-Boson களமாக மாறுகிறது.

பின்னர் 10^-6s இல், குவார்ட்ஸ்  துகள்கள் (hadrons) கேட்ரான் துகள்களாக உருமாறுகிறது.  1s நிலையில், நீயூட்ரினோ துகள்களின் ஆற்றல் குறைந்து கேட்ரான்- லெப்டான் (hadron- lepton) துகள்களுடன் மோதல்கள் நடக்காமல் உறைந்த விடுகின்றன. பின்னர், மீதமுள்ள நீயூட்ரினோ மற்றும் எதிர் நீயூட்ரினோ  ( neutrinos and antineutinos) எந்தவித மாற்றமும் இன்றி பிரபஞ்சம் விரிவடைதற்கு தன்னை ஈடுபடுத்தி கொள்ளாமல் நிறைந்திருக்கிறது. இந்த நிலையில் , புரோட்டான்களால் , நீயூட்ரான்களாக மாற இயலாத நிலையில் உள்ளது. ஆனால் நீயூட்ரான்கள் , பரோட்டான்களாக மாறி பின்னர் அணுகரு கதிரியக்க நிகழ்வால் ஹீலியம் அணுக்களாக மாறி மறைகிறது.  பின்னர் 5 நிமிட அளவில் அணுகருகதிரியக்கம் நின்றுவிடுகிறது. பின்னர் புரேட்டான்களின் எண்ணிக்கையும் ஆல்பா துகள்களின் எண்ணிக்கையும்  3:1 என்ற அளவில் நிலைபெற ஆரம்பிக்கிறது , இதுதான் இன்றைய பிரபஞ்சத்தின் விகிதமும் கூட. பின்னர் 5 நிமிடம் முதல் ஒரு லட்சம் வருடங்களுக்கு பிறகு அதாவது பெரிய வெடிப்பு நிகழ்ந்து ஒரு லட்சம் வருடங்களுக்கு பிறகு இந்த பிரபஞ்சம் முழுவதும் கூழ்ம மற்றும் ஹைட்ரஜன், ஹீலியம் அணுக்களாலும் , மற்றும் எலக்ட்ரான்களாலும் நிரம்பி ஒரு வெப்ப சமநிலையில் கதிர் வீச்சுகளாக உள்ளது.

பின்னர் வெப்பநிலை 13.6eV  ஐ அடையும் போது, அதாவது,  ஹைட்ரஜன் அணுக்களின் அயனைசேசன் ஆற்றல் அடைந்து நிறை மற்றும் கதிர் வீச்சு பிரிந்து separation of matter and radiation நிலையை அடைந்து இன்று நாம் காணும் பிரபஞ்சம் உருவானது. இதை விளக்கும் விதமாக மேலே உள்ள படம் தரப்பட்டுள்ளதுஇதன் தொடர்ச்சியை அடுத்த வாரம் சிந்திப்போம். 

அன்புடன் உங்கள்.

முனைவர் கெ. நாகராஜன்,
இயற்பியல்துறை பேராசிரியர்,
பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரி,
கோவை.

 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved