🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பேராசிரியர் நாகராஜன் எழுதும் விஞ்ஞானமும் மெய்ஞானமும் - பகுதி 8

அன்புச் சொந்தங்களே வணக்கம்!

இந்த பகுதியில், எப்படி இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தில் நாம் வந்தோம், நாம் வாழும் அண்டத்தின் பெயர் என்ன என்பதைப்பற்றி தெரிந்து கொள்வோம். மிக பெரிய வெடிப்புக்கு பின்னர், பல கோடி ஆண்டுகளாக வெவ்வேறு அணுக்கள் ஒன்று சேர்ந்து கோள்கள், துணை கோள்கள், அண்டங்கள், பேரண்டங்கள் என இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவ தொடங்கியது. இன்றும் இது விரிவடைந்து கொண்டே வருகிறது. இதை நமது முன்னோர்கள் நான் முன்னரே குறிப்பிட்டபடி தங்களின் அகக் கண்களால் கண்டு இந்த பிரபஞ்சத்தில் உள்ள உலகங்களை ஈரேழு பதினான்கு லோகங்கள் என குறிப்பிட்டுள்ளனர். ஆனால் விஞ்ஞானம் இதுவரை இரண்டே பேரண்டங்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.


முதலில் பால் வீதி ( Milky Way) மற்றும் ஆண்ரோமெடா (Andremedon ). நாம் இருப்பது பால் வீதி என்னும் பேரண்டம். இதில் எண்ணற்ற கோள்கள் மற்றும் துணை கோள்கள் , விண்மீன்கள், நாம் இருக்கும் சூரிய மண்டலம் மற்றும் பரந்த வெளி உள்ளது. இதில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய கோள்களும் அடங்கும். இதை விஞ்ஞானம் கீழே உள்ள பெயர்களால் அழைக்கிறது. Mercury, Venus Earth . Mars, Jupiter, Saturn, Uranus ,Neptune and Pluto. இந்த பூமி பந்தில் நாம் காண்பது போல் சூரியன், சந்திரன் மற்றும் கோள்கள், துணைக்கோள் அடங்கிய வேறு சில  கோள்களும் இருக்கக் கூடும் என்பதை பற்றிய ஆய்வுகள் இன்று வரையில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் பூமியில் இருப்பதுபோல் உயிரினங்கள் வாழும் கோள்களோ அல்லது துனண கோள்களோ இதுவரை கண்டறியப்படவில்லை. கோள்களின் புகைப்படம் சேர்க்கப்பட்டுள்ளது.

இத்தனை எண்ணில் அடங்கா அண்டங்கள், பேரண்டங்கள், இருந்தும் பூமி என்னும் கோளில் மட்டுமே சுமார் என்பத்தி ஒன்பது லட்சம் உயிரின வகைகள் உள்ளதாக  கண்டறியப்பட்டுள்ளது. இதில் நாமும் ஒர் உயிரினம் அவ்வளவு தான். அதைத் தான் நாம் ஏற்கனவே அறிந்தபடி, இந்த பூமி பந்தே ஒரு தூசு என திருமூலர் கூறியதையும் அறிவோம். அதில்தான் இத்தனை விசயங்களா? அல்லது அதியங்களா? இதில் மனிதன் என்னும் உயிர் உடனே உண்டாக வில்லைஇதை திருஞானசம்பந்தர் தனது சிவபுராணத்தில் இப்படி குறிப்பிடுகிறார். புல்லாகி, பூண்டாகி,  புழுவாகி பல் மிருகமாகி, பறவையாகி,  பாம்பாகி, கல்லாகி, மனிதராகி, பேயாகி, கணங்களாகி, வல் அசராராகி முனிவராய், தேவராய் என பல்வேறு பிறப்பு நிலைகளை குறிப்பிடுகிறார். இப்படி பல்வேறு நிலைகளை கடந்து பெற்ற மனித நிலையை வீணடிக்கலாமா? நாம் மனிதபிறவி எடுத்த இந்த பிறவிப்பயனை அடையாமல் விட்டு விடலாமா? விடக்கூடாது. நாம் இந்த பிறவிப் பயனை அடைய இறைவனை பிரார்த்திப்போம். வாருங்கள் தொடர்ந்து சிந்திப்போம் அடுத்த வாரமும்எனது அன்பான  சொந்தங்களுக்கு இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் கூறி விடைபெறுகிறேன்.

என்றும் அன்புடன் உங்கள்

கெ.நாகராஜன்.
இயற்பியல் துறை பேராசிரியர்,
PSG கலை, அறிவியல் கல்லூரி,
கோவை.



  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved