🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பத்தாயிரம் ஆண்டுகால இந்திய வரலாறு! உண்மையை உரக்கச் சொல்லுமா?

2020 செப்டம்பர் 14 அன்று மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பண்பாட்டுத்துறை அமைச்சர் அளித்துள்ள பதிலின்படி 10,000 ஆண்டுகால இந்திய பண்பாட்டு வரலாற்றை, இந்திய பண்பாட்டின் தோற்றம், விரிவாக்கம் மற்றும் அதன் பரிமாண வளர்ச்சி என்பதைப் பற்றி ஒரு இறுதி வடிவம் கொடுப்பதற்காக ஒரு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது என்று கூறியிள்ளார். இந்திய வரலாறு குறித்து இந்திய அரசின் ஆவணமாக இருக்கப்போகின்ற இந்த குழுவில் இடம்பெற்றுள்ள 16 பேர் கொண்ட குழுவின் விபரம் வருமாறு... 

(1). இக்குழுவின் தலைவராக கே.என்.தீட்சித் - இந்தியன் ஆர்க்கியலாஜிகல் சொசைட்டி என்ற தனிப்பட்ட அமைப்பின் தலைவராக இருப்பவர். தவிர, இந்திய தொல்லியல்துறையின் இணை இயக்குனர் ஜெனரல் ஆக பணியாற்றியவர்.

(2). ஆர்.எஸ்.பிஸ்த் - முன்னாள் டைரக்டர் ஜெனரல், இந்திய தொல்லியல்துறை.

(3). டாக்டர்.பி.ஆர்.மணி - டெல்லி மியூசியத்தின் மு.தலைவர், தொல்லியல்துறை மு.அதிகாரி.

(4). பேராசிரியர். சந்தோஷ் சுக்லா - ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்.

(5). டாக்டர்.ரமேஷ் குமார் பாண்டே - துணைவேந்தர், ஸ்ரீலால்பகதூர் சாஸ்திரி சன்ஸ்கிரிட் வித்யாலயா, தில்லி

(6). பேராசிரியர்.மக்கன் லால், இயக்குநர், டெல்லி இன்ஷ்டிடுயூட் ஆப் ஹெரிடேஜ்பிரீத்தி மேனேஜ்மென்ட். (இது விவேகானந்தா இன்டர்நேஷனல் பவுண்டேஷன் நியூ டெல்லியை சார்ந்தது).

(7). டாக்டர் ஜி.என். ஸ்ரீவத்ஸவா- ஜியாகரபிகல் சர்வே ஆப் இந்தியாவின் கூடுதல் டைரக்டர் ஜெனரல் ஆக இருந்தவர்.

(8).நீதிபதி டாக்டர் முகுந்த்காம் ஷர்மா - வேந்தர், லால்பகதூர் சாஸ்திரி சம்ஸ்கிருத வித்யாபீடம், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி.

(9).பேராசிரியர் பி.ஆர்.சாஸ்திரி- துணைவேந்தர்,ராஷ்ட்ரிய சம்ஸ்கிருதி சம்ஸ்தான், நியூடெல்லி.

(10).ஆர்.சி.சர்மா - மொழியியல்துறை தலைவர், டெல்லி பல்கலைக்கழகம்.

(11). கே.கே.மேரா -  மானுடவியல் துறை, ஹைதராபாத் பல்கலைக்கழகம்.

(12). டாக்டர்.பல்ராம் சுக்லா- சமஸ்கிருதத்துறை, டெல்லி பல்கலைக்கழகம்.

(13). ஆசாத் கௌசிக், அறிவியலாளர் மற்றும் கனடாவில் வசிக்கும் சர்வதேச சிந்தனையாளர்.

(14). எம்.ஆர்.சர்மா, உலக பிராமண கூட்டமைப்பின் இந்திய தலைவர், புதுதில்லி.

 இரண்டு நியமன உறுப்பினர்கள்.

(15).பண்பாட்டுத் துறையின் பிரதிநிதி

(16). இந்திய தொல்லியல்துறையின் பிரதிநிதி.

இந்தப்பட்டியலுள்ள 16 உறுப்பினர்களில், 4 பேர் அரசுத்துறையில் பணியாற்றுபவர்களாகவும், மீதமுள்ள 12 பேற் நியமன உறுப்பினர்கள் என்பதும், இவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமஸ்கிருததுறையைச் சார்ந்தவர்கள் 4 பேர், தொல்லியல்துறையைச் சார்ந்தவர்கள் 3 பேர், பண்பாட்டு பிரிவில் ஒருவர் சமஸ்கிருததுறை சார்ந்தவர், புவியியலாளர் ஒருவர், மானுடவியல்துறை சார்ந்தவர் ஒருவர், பிராமண சங்கத்தைச் சார்ந்த ஒருவர், சர்வதேச சிந்தனையாளர் ஒருவர் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், வரலாற்றுத்துறை பேராசிரியர்கள், மானுடவியல் சிந்தனையாளர்களின் கடும் விமர்சனத்திற்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியுள்ள இந்தக்குழு பல்வேறு மொழி,இன,பண்பாட்டு அடையாளங்கள் வாழும் பரந்துபட்ட தேசத்தின் உண்மை வரலாற்றை வெளிக்கொண்டு வருமா என்ற அச்சம் எழுவதற்கான முகாந்திரம் இல்லாமல் இல்லை. 

அச்சத்திற்கும், விமர்சனத்திற்கும் காரணம் என்ன? காத்திருங்கள்



  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved