🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமூகநீதி 360 டிகிரியில் ஒரு பன்முகப் பார்வை! - பகுதி - 10

ஓபிசி சாதிவாரிக் கணக்கெடுப்பின் அவசியமும் அவசரமும்

இந்தியாவில் சென்செஸ் கணக்கெடுப்பு 1872 ல் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டு, 1881 முதல் நாடுமுழுவதும் ஒரேநேரத்தில் மக்கள் தொகையை எண்ணும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகின்றது. 1881 முதலே சாதிவாரிக்கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகின்றது. இந்தக் கணக்கெடுப்பு மத்திய அரசின் தலைமை பதிவுத்துறை அதிகாரி மற்றும் சென்செஸ் கணக்கெடுப்பு ஆணையரின் மூலம் நடத்தப்படுகிறது. நாடு விடுதலை அடைவதற்கு முன் அரசாணைகள் மூலம் சென்செஸ் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. விடுதலைக்கு பின் சென்செஸ் சட்டம் 1948-ன் படி நடத்தப்படுகிறது. அரசமைப்புச் சட்டத்தில் மத்தியரசின் அதிகாரப் பட்டியலில் 69-வது வரிசை எண்ணில் சென்செஸ் கணக்கெடுப்பு வைக்கப்பட்டுள்ளது.

சென்செஸ் கணக்கெடுப்பு இரண்டு நிலைகளில் நடத்தப்படுகின்றது. முதலில் 31 கேள்விகள் கொண்ட குடும்பக் கணக்கெடுப்பு என்றும், பின்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுத்துத் தொகுத்து வெளியிடப்படுகின்றது. இந்த புள்ளிவிபரங்களே மக்களவை, சட்டப்பேரவை, உள்ளாட்சி அமைப்புகளின் தொகுதிவரையறை, மத்திய அரசின் வருவாய் பகிர்மானம், குடியரசுத்தலைவர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் வாக்கை கணக்கிட மற்றும் இடஒதுக்கீடு வழங்க அடிப்படையான புள்ளி விபரமாகும். சாதிவாரிக் கணக்கெடுப்பு தாழ்த்தப்பட்டோர் பழங்குடிகள் மக்களுக்கு அவசியம், ஆனால் ஓபிசிக்கு அவசியம் இல்லை என்று தவறாகக் கருதப்பட்டுவருகின்றது. பணி மற்றும் கல்வி இடஒதுக்கீட்டில் மூன்று பிரிவினருக்கும் ஒரே சட்டம்தான். 

தொகுதி இடஒதுக்கீட்டிலும் 1993-ல் அரசமைப்புச் சட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் ஓபிசிக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்ய சரத்து 243D-6 மற்றும் சரத்து 243T-6 சேர்க்கப்பட்டபின் மூன்று பிரிவினருக்கும்  ஒரே மாதிரியான சட்டத் தேவைதான் இருகின்றது. 1941ல் எடுக்கப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பு இரண்டாம் உலப்போர் குறுக்கிட்டதால் கணக்கெடுப்பு நடத்தியும் அதை திருத்தி வெளியிடவில்லை. 1951ல் எடுக்கப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பும் தொகுக்கப்படவில்லை. 1955-ல் காகா கலேல்கர் தலைமையிலான முதல் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப் பரிந்துரைத்தது. 1961 முதல் அட்டவணைச் சாதிகள் மற்றும் அட்டவணைப் பழங்குடிகள் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படுகின்றது. 1970-ல் தமிழக சட்டநாதன் ஆணையமும், 1980ல் மண்டல் ஆணையமும் ஓபிசி சாதிவாரிக் கணக்கெடுப்பு புள்ளிவிபரங்கள் இல்லாததால் 1931ல் எடுக்கப்பட்ட கணக்கின் அடிப்படையிலேயே மக்கள் தொகையை மதிப்பிட்டன. மண்டல் ஆணையமும் சாதிவாரிக் கணக்கெடுக்க பரிந்துரைத்துள்ளது. 1983ல் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த ஆணையம் நியமித்தும் முறையாக எடுக்காததால் ஆணையத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களே அதனை நிராகரித்துவிட்டனர்.

1993-ல் ஆண்டு நியமிக்கப்பட்ட தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், ஓபிசி சாதிவாரிக்கணக்கெடுப்பு நடத்தப் படிந்துரைத்து. அப்பரிந்துரை சட்டப்படி மத்திய அரசைக் கட்டுப்படுத்தும். இராம்சிங் வழக்கில் (ஜாட் வழக்கு) உச்சநீதிமன்றம் இச்சட்டநிலையை உறுதிசெய்துள்ளது. மீண்டும் 2004 மற்றும் 2015ல் பரிந்துரைத்துள்ளது. ஆனால் அரசு அப்பரிந்துரைகளை இன்றுவரை செயல்படுத்தவில்லை. இந்நிலையில், 2000ம் ஆண்டு போடப்பட்ட ரங்கராஜன் தலைமையிலான தேசிய புள்ளிவிபர ஆணையம், மத்திய மாநில அரசுகள் திறம்பட புள்ளிவிபரங்களைச் சேகரிக்க சட்டம் இயற்றவேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது. அதன்படி 2008ம் ஆண்டு புள்ளிவிபரச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்கீழ் மத்திய,மாநில அரசுகள் மக்கள்தொகை விபரம் உட்பட அனைத்து புள்ளிவிபரங்களையும் சேகரிக்க அதிகாரமளித்துள்ளது. சென்செஸ் கணக்கெடுப்புச் சட்டம் 1948ன் கீழ் மத்திய அரசு மட்டும் தான் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களை எண்ணும் பணியைச்செய்யமுடியும். ஆனால் மாநில அரசுகள் 2008ம் ஆண்டு சட்டத்தின் படி எப்போது வேண்டுமானாலும் நடத்திக்கொள்ளலாம்.

இருப்பினும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தாததால், ஓபிசி மக்கள் அரசமைப்புச்சட்டம் வழங்கிய உரிமைகளைக்கூட பெற முடியவில்லை. தேசிய,மாநில பிற்படுத்தப்பட்ட ஆணையங்கள் அவர்கள் பணிகளைச் செய்ய முடியவில்லை. 2010 மே 6-7 நாட்களில் பாராளுமன்றத்தில் நடந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு குறுகிய கால விவாதத்தில் அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தனர். இருப்பினும் சென்செஸ்சில் ஓபிசி சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தவில்லை. அதற்குப் பதிலாக 2012ல் ரூ.4600 கோடி செலவில் சாதிவாரி சமூக பொருளாதாரக் கணக்கெடுப்பு (SECC) நடத்தி நிறைய பிழைகள் இருந்ததால், குறிப்பாக நாடு முழுவதும் 46,73,034 சாதிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மத்திய அரசின் சத்தியப் பிரமாணத்தில், மகாராஸ்ரா மாநிலத்தில் மட்டும் 4,28,677 சாதிகள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. ஆனால் இந்திய மானுடவியல் ஆய்வகத்தின் கணக்கின்படி, இந்தியாவில் மொத்தம் 4635 சாதிகளே உள்ளன. இந்த குழப்பத்திற்கும் பிழைகளுக்கும் காரணம், சாரியான வழிகாட்டுதல் வழங்காமல் கணக்கெடுப்பு நடத்தியதே. பிழைகளைக் களைய நிதிஆயோக் முழு அமைத்தும், அது இன்றுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதனால் இன்றுவரை அந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு விபரங்கள் வெளியிடப்படவில்லை.

2021 சென்செஸ் கணக்கெடுப்பிலாவது ஓபிசி சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி, ஓரிசா, பீகார் மற்றும் மஹாராஸ்டிரா மாநிலங்களின் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இருப்பினும் ஜனவரி 2020ல் வெளியிட்ட குடும்பக்கணக்கெடுப்பு கேள்விப் பட்டியலில், ஓபிசி சாதிவாரிக் கணக்கெடுப்பு சேர்க்கப்படவில்லை. 2021 சென்செஸ் கணக்கெடுப்பு காகிதமில்லா கணக்கெடுப்பு, அதில் கேள்வி 10ல் உட்பிரிவு 13ல் மட்டும் ஓபிசி பிரிவையும் சேர்ப்பதால் அரசுக்குக் கூடுதலாக எந்த செலவினங்களும் இல்லை. நவீன தொழில்நுட்ப வசதிகள் இருப்பதால், விரைவான துல்லியமான புள்ளிவிபரங்களைச் சேகரிக்க முடியும். இருப்பினும் அதிகாரிகள் இந்த அவசியமான நடவடிக்கைக்கு நிர்வாகச் சிரமங்களைக் காரணமாகக் காட்டி தடை போட்டுக்கொண்டுள்ளனர். இது அரசின் கொள்கைமுடிவு நீதிமன்றங்கள் தலைவிட முடியாது. சென்னை உயர்நீதிமன்றம் 12.05.2010 அன்று இருநீதிபதிகள் அமர்வு WP 10090/2010 கிருஷ்ணமூர்த்தி வழக்கில் WP 25785/2005 டாக்டர் சயது அலி வழக்கில் 24.10.2008 தீர்ப்பின்படி சாதிவாரி சென்செஸ் எடுக்க உத்தரவிட்ட தீர்ப்பை எதிர்த்து தொடுக்கப்பட்ட CA No.9996/2014 வழக்கில் 7.11.2014 அன்று உச்சநீதிமன்றம் நீதிமன்றங்கள் தலையிடமுடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை இரத்து செய்து தீர்ப்பளித்துவிட்டது என்று தவறான வாதங்களை வைத்து அரசு தப்பிக்கப் பார்க்கிறது. ஆனால் சட்டம் என்னவென்றால் நீதிமன்றங்கள் அரசை  கொள்கைமுடிவு எடுக்கச்சொல்லி உத்தடவிடமுடியாது. ஆனால் ஒருகொள்கை முடிவு ஒருதலைப் பட்சமானதாக குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கும் படி இருந்தால், நீதிமன்றங்கள் தலையிடலாம் என்று பல உச்சநீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புவழங்கப்பட்டுள்ளன. பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருக்கும் ஒரு பிரிவினருக்கு மட்டும் சாதிவாரிக்கணகெடுப்பு, ஓபிசிக்கு சுண்ணாம்பு அடிப்பது அடிப்படை உரிமையை மீறும் செயல். 2012ல் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுவிட்டது.எனவே இதுகொள்கைமுடிவு என்று அரசு கூறமுடியாது. சட்டத்தில் எந்தத் தடையும் இல்லை. ஓபிசி சாதிவாரிக் கணகெடுப்பு நடத்த மறுப்பது சதியே. எனவே இம்முறை உரிய உரிமைகளைப் பெற ஓபிசி மக்கள் ஒற்றுமையோடு சதியை முறியடித்து சரித்திரம் படைக்க வேண்டும்.

மத்திய அரசு சென்செஸ் சட்டம் 1948 ன் கீழ் ஓபிசி சாதிவார் கணக்கெடுப்பு நடத்த சில முக்கிய காரணங்களைப் பார்ப்போம். 

பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள SC/ST க்கு மட்டும் சாதிவாரிக் கணக்கெடுப்பை எடுத்துக்கொண்டு, ஒபிசிக்கு மட்டும் மறுப்பது சரத்து 14 வழங்கும் அடிப்படை சமத்துவ உரிமையை மீறிய செயல்.

2010 மே 6-7 தேதிகளில் பாராளுமன்றத்தில் நடந்த குறைந்தகால விவாதத்தில் BJP உள்பட அனைத்துக் கட்சிகளும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதற்கு ஆதரவளித்துள்ளனர்.

2012ல் சென்சஸ் சட்டத்திற்கு வெளியே 4,600 கோடி செலவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது, நிலுவையில் உள்ள 2021ல் ஓபிசி என்ற ஒற்றை சொல்லைச் சேர்ப்பதால் அரசுக்கு எந்தச் செலவும் இல்லை.

1993ல் சட்டப்படி உருவாக்கப்பட்ட தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், 2001 சென்செஸ் கணக்கில் ஓபிசியைச் சேர்க்கப் பரிந்துரைத்தது, மீண்டும் 2004ல் 2011 சென்செஸ் சிலாவது சேர்க்கப் பரிந்துரைத்துள்ளது. இப்பரிந்துரை சட்டப்படியும், இராம்சிங் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படியும் மத்திய அரசைக் கட்டுப்படுத்தும்.

1955ல் காக்கா கலேக்கர் ஆணையம், 1957ல் ஹாவனூர் ஆணையம், 1980ல் மண்டல் ஆணையம் என்று பல ஆணையங்கள் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப் பரிந்துரைத்துள்ளன.

பீகார், ஒரியா, மகாராஷ்டிரா சட்டமன்றங்கள் ஓபிசி சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

உச்சநீதிமன்றம் இட ஒதுக்கீடு வழங்க மக்கள்தொகை உள்பட சமீபகாலப் புள்ளி விவரங்கள் தேவை என்று பல தீர்ப்பளித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் சபை சமூகரீதியான புள்ளிவிவரங்களைச் சேகரிக்க வழிகாட்டியுள்ளன.

சாதிவாரிக் கணக்கெடுப்பு பல திட்டங்களை திறம்பட செயல்படுத்தப் பயனுள்ள விவரங்களைத் துல்லியமாக வழங்கும்.

நவீன தொழில்நுட்பங்கள் மூலம் விரைவாக துல்லியமாக சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த இயலும்.

மேலும் தமிழ்நாடு அரசும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த மறுப்பது வினோதமாக இருக்கின்றது.

1983ல் அம்பாசங்கர் ஆணையம் நடத்திய சாதிவாரிக்கணக்கெடுப்பு விபரங்களை சட்டப்படிப் பயன்படுத்த முடியாது என்பதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது (விரிவாக இந்நூலில் விளக்கியுள்ளோம்). கர்நாடகா போன்ற மற்ற மாநிலங்கள் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தியுள்ளன. சமீபத்தில் 2022ல் பீகார் மாநிலமும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த முடிவெடுத்துள்ளது. தமிழக 69% இட ஒதுக்கீட்டிற்கு எதிரான காயத்ரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தவில்லை என்றால் 69% இட ஒதுக்கீடு செல்லாமல் போய்விடும். எனவே 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க ஏன் தனியாக புள்ளிவிவரச் சேகரிப்புச் சட்டம் 2008ன் கீழ் சாதிவாரிக் கணக்கெடுப்பு உடனடியாக நடத்த வேண்டும் என்பதற்கான காரணத்தைப் பார்ப்போம்:

1921 முதல் இடஒதுக்கீடு வழங்கி சமூகநீதிக்கு முன்னோடி மாநிலம் என்று தமிழகம் மார்தட்டி கொண்டாலும், விடுதலை இந்தியாவில் மாநில வேலை மற்றும் அரசு - தனியார் கல்வி நிலையங்களில் 69% இடஒதுக்கீடு வழங்கினாலும், அவற்றை அரசமைப்புச் சட்டத்தில் பாதுகாப்பாக வைத்தாலும், 69% இடஒதுக்கீட்டை நியாயப்படுத்த போதிய புள்ளிவிவரங்கள் அவசியம் என்று உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் வலியுறுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் 69% இடஒதுக்கீட்டிற்கு எதிரான சட்டம் எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு வரலாம். உரிய புள்ளிவிவரம் இல்லாததால் BC/MBC/DNT  மக்களின் இட ஒதுக்கீடு 50% லிருந்து 31% ஆக குறைக்க வேண்டிய துர்ப்பாக்கியம் வரலாம். அதைத் தவிர்க்க, மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக, கல்வி நிலை குறித்து அறியவும் தமிழகத்தில் கீழ்க்காணும் சட்டக்காரணங்களுக்காக சாதிவாரிக் கணக்கெடுப்பு அவசியம்.

1970ல் சட்டநாதன் அறிக்கை 1921 சென்செஸ் கணக்கெடுப்பு விபரங்களின் அடிப்படையில் கணக்கிட்டுப் பிற்படுத்தப்பட்டோருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கவே பரிந்துரைத்தது. எனவே அது 69%க்கு அடிப்படையாகாது.

1.2.1980 BCக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க எந்த அடிப்படையும் இல்லை. அதை எதிர்த்த உச்சநீதிமன்ற வழக்கில் 1982ல் சாதிவாரிக் கணக்கெடுக்க உத்தரவிட்டு அம்பாசங்கர் ஆணையம் நியமனம் செய்தாலும், அதில் நடத்தப்பட்ட பல தில்லு முல்லு வேலைகளின் காரணமாக, அந்த விவரங்களை அரசு ஏற்க வேண்டாம் என்று 14 பெரும்பான்மை உறுப்பினர்கள் அறிக்கை அளித்துள்ளதால் தமிழகம் பெரும் வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டது.

இப்படி BC 50% இட ஒதுக்கீட்டிற்கு அடிப்படையில்லாத போது 1989ல் MBC க்கு 20% அடிப்படையே இல்லாமல் வழங்கப்பட்டது.

69% இட ஒதுக்கீடுச் சட்டம் 45/1994ம் அடிப்படையும் இல்லாமல் இயற்றப்பட்டதால், 13.10.2010ல் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த மீண்டும் ஒரு வாய்ப்புக் கிடைத்தும் TNBCC  செல்லாத அம்பாசங்கர் விபரங்களையே பயன்படுத்தி 8.7.2011ல் அறிக்கையளித்து 11.7.2011ல் அரசாணை 50ன் மூலம் ஏற்றுக்கொண்டு பெரும் வரலாற்றுத் தவறைச் செய்துவிட்டது.

10.5%  உச்சநீதிமன்றத் தீர்ப்பு 69% இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து உள்ளதை உறுதி செய்துள்ளது. எனவே சாதிவாரிக் கணக்கெடுப்பு உடனடியாகத் தேவை.

சாதிவாரிக் கணக்கெடுப்பு அரசின் கொள்கை முடிவல்ல, அரசமைப்புச்சட்டத்தின் ஆணை.

பொதுவெளியில் அரசு நினைத்தால்த்தான் சாதிவாரி சென்செஸ் கணக்கெடுப்பு நடத்த முடியும், நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்று பல தவறான வாதங்கள் வைக்கப்படுகின்றன. ஓபிசி சாதிவாரி சென்செஸ் கணக்கெடுப்பு மறுப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பதை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிசி ஒருங்கிணைப்புக் குழு சார்பாக தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வமான வாதத்தை உங்கள் கவனத்திற்கு கீழ்காணுமாறு வழங்குகின்றோம்.

 1. It is submitted that the said WP has been filed inter alia on the ground that the 4th respondent has issued notification for House listing operation as part of census 2021 on 7/9.1.2020 which was to being on 1.4.2020 but due to COVID 19 Pandemic, the said operation has been postponed since due on 24.3.2020 and in the said notification in the question 10,4th respondent while including SC/ST Category, omitted the OBC which is arbitrary, unreasonable and infringes on the fundamental rights of the OBC. Besides the discrimination ground, the petitioner submitted that i) Various Backward Class Commission constituted u/a 340 has specifically recommended for caste wise census; ii) The NCBC has time and again recommended for OBC census and as per Section 9-2 of National Commission for Backward Class Act 1993, the Recommendation of NCBC is binding on the central government; iii) there is no policy restriction as in SECC 2011, the casted details has been already enumerated and in catena of decisions the Apex court has given imprimatur that as casted is one of the factor for classification and parliament and various assemblies have passed reservation taking into account the caste classification and thus all three wings of state has accepted casted as essential factor for classification and affirmative action and tool for development of downtrodden communities; iv) As the census 2021 is paperless census and the advancement in the date science and technology has great power in complying any quantum of date with accuracy without any additional cost and the OBC category also be included in the Colum 13 of the Schedule of information for house listing operation corresponding to question 10.

2. It is submitted that the respondents in their unified counter tried to bludgeon the case with the very same bogey of difficulties in collecting caste date which the 4th respondent has been raising for last 3 decades for the reasons best known to them and the other submissions of the respondents are i) it is a policy matter and court cannot pass direction to conduct OBC census as held in Apex court in CA 9996/2014; ii) it will be difficult to include OBC caste details in the census 2021 as it is sensitive matter; iii) There are constitutional mandate for conducting SC/ST census u/a 330 and 331 but not for OBC iv) Preparatory work for the census 2021 has been already completed; v) the recommendation of NCBC for OBC census is not binding on the Union of India; iv) Similar matter is pending before Bombay High Court and Supreme Court of India.

 3. It is submitted that in view of the above submissions, mainly 3 issues emerge for consideration by this Hon'ble court in this WP which are

i) Whether omission of OBC census is discriminatory or not;

ii) Whether the recommendation of NCBC for OBC census is binding on the central government or not;

iii) Whether the difficulties raised by the 4th respondent in collecting OBC census is sustainable;

I. Discriminatory Policy Decision of the Respondents

4. It is submitted that the respondents contention that it is a policy decision of the respondents to conduct only SC/ST census since 1951, as there are clear SC/ST caste lists as notified u/a 341 and 342 and there is also mandate u/a 330and 332 of Constitution of India and therefore to ensure their adequate representation, SC/ST census are conducted and as there is no such mandate for OBC, the OBC castes are omitted in the census 2021 is untenable in law because the purpose of adequate in fact similar to SC/ST, adequate representation in services, educational institutions and local bodies has been contemplated for Backward Class u/s 46-4,15-4,15-5, 243D-96, 243T-6 r/w 342A of Constitution of India and this issues is also no more res integira because the Apex Court in State of Punjab & Ors Vs Davinder Singh & Ors (CA 2317/2011 decided on 27.8.2020) has help in para 27 as under:-

“27.xxxx The provisions of Article 314, 342, and 342A are pari materia, and the reservation for socially and educationally backward classes was the subject matter under consideration in Indra Sawhney. Thus, the question arises how different opinions can be expressed with respect to Scheduled Castes, Scheduled Tribes, and socially and educationally backward  classes for the purposes of the classification. The provisions of Article 16-4 and Article 342A indicate that it would not be permissible to adopt different criteria for Scheduled Castes, Scheduled Tribes, and socially and educationally backward classes.”

 5. It is submitted that the 1951 policy decision of the respondents to include only SC/ST in the census and omit other castes details as it considered to be divisive is no more valid because i) it has been approved by the legislative bodies as caste is one of factor for classification and reservation; ii) the caste details has been already enumerated by the respondents under SECC 2011; iii) after Indra Sawhney Judgment (16.11.1992) upholding 27% OBC reservation and specific direction in para 123 to assess over / under inclusion of OBC; iv) the recommendation 4th respondent in 1999 to include OBC in the census as widely written by Dr.M.Vijayanunni former census commissioner and an expert in the matter; v) the PIB statement of Ministry of Home affairs on 31.8.2018 to include OBC category also in census 2021 etc shall demonstrate that stand of the respondent is devoid of merit and omission of only OBC discriminatory and in flagrant violation of Article 14 of Constitution of India.

 6. It is submitted that the stand of respondents that Apex Court in CA 9996/2014 arising from SLP 480 of 2017 challenging this Hon’ble Court’s Mandamus to conduct caste census vide its order dated 12.5.2010 in W.P. 10090/2010 R Krishnamurthy Vs Census Commissioner has set side this Hon’ble Court mandamus and held that court cannot interfere into the policy decision of the respondents whereas a careful reading of the said judgment reveals that the said order of this Hon’ble Court was set side mainly because it was not a reasoned order and it simply reiterated the single judge decision dated 24.10.2008 in WP 25785 of 2005 in Dr.E.Sayed Ali Va. Union of India & Ors in which the different and the 4th respondent was not arrayed as parties. whereas in this writ petition the discrimination has been demonstrated with unimpeachable legal provision and biding ratio of the constitutional bench of Apex Court. Further, it is settle law in catena authority that the court can interfere the policy decision if it is arbitrary, unreasonable and violative of fundamental rights and in the said CA No9996/2014 the apex court at para 28 has help as under;

“28. From the aforesaid pronouncement of law, it is clear as noon day that it is not within the domain of the court to embark upon an enquiry as to whether a particular public policy is wise and acceptable or whether a better policy could be evolved. The court can only interfere if the policy framed is absolutely capricious or not informed by reasons or totally arbitrary and founded ipse dixit offending the basic requirement of Article 14 of the Constitution. In certain matters, as often said, there can be opinions and opinions but the Court is not expected to sit as an appellate authority on an opinion.”

Further in D.N.Jeevaraj Vs Chief Secretary, government of Karnataka, (2016) 2 SCC 653 the Apex Court held as follows;

“43. To this we may add that if a Court is of the opinion that a statutory authority cannot take an independent or impartial decision due to some external or internal pressure, it must give its reasons for coming to that conclusion. The reasons given by the Court for disabling the statutory authority from taking a decision can always be tested and if the reasons are found to be inadequate, the decision of the court to bypass the statutory authority can always be set aside.

If the reason are cogent, then in an exceptional case, the Court may take a decision without leaving it to the statutory authority to do so. However, we must caution that if the Court were to  take over the decision taking power of the statutory authority it must only be I exceptional circumstances and not as a routine”

7. It is submitted that the Apex Court in M.Nagaraj & Ors. Vs. Union of India & Ors [2006-8 S.C.C.212] and Ashoka Kumar  Thakur Vs. union of India & Ors. [2008-6 S.C.C.1] reservation can exceed the 50% celling set in the Indra Sawhney Vs. Union of india, discharge the constitutional mandate under article 15-4, 15-5, 243D-6, and 243T-6 of constitution of India and an exceptional case has been made out. Hence, petitioner has pulverised the bogey of policy decision of the respondents and demonstrated and spotlighted the discriminatory action of respondents against OBCs. Therefore, keeping in view of article 13, the impugned notification of the 4th respondent is discriminatory and on this ground alone this Hon’ble court directs the 4th respondent to include OBC also in the census 2021.

 II. The Recommendation of NCBC is binding

8. It is submitted that through the respondent has admitted that the National commission for Backward Class (NCBC) has recommended for OBC census but contented that as per section 9 of the NCBC Act 1993 only the recommendation in connection with over/under inclusion of OBC is binding on the respondent not other recommendations. Whereas a cursory reading of the said provision and relevant direction of the Apex court in Indra Sawhney case (Supra) shall confirm that the stand of respondent is bereft of merit. The Section 9 of the said Act 1993 is as extracted as under;

“9. Functions of the Commission 1) The Commission shall examine requests for inclusion of any class of citizens as a backward class in the lists and hear complaints of over-inclusion or under-inclusion of any backward class in such lists and tender such advice to the Central Government as it deems appropriate.

2) The advice of the Commission shall ordinarily be binding upon the Central Government.”

The impart of this provision can be further amplified and fortified by the Apex Court decision in Indra Sawhney Vs. Union of India, (Supra) as held in para 123 as under;

“123. A. The Government of India, each of the State Governments and the Administrations of Union Territories shall, within four months from today, constitute a permanent body for entertaining, examining and recommending upon requests for inclusion and complaints of over-inclusion and under-inclusion in the lists of other backward classes of citizens. The advice tendered by such body shall ordinarily be binding upon the Government.”

A conjoined reading of this provision makes it clear that the recommendation of NCBC to include OBC in census is not without mandate whereas only on the accurate head count of OBC the over/under inclusion can be decided and it is basic and essential requirement to discharge the statutory duty cast on the NCBC. Thus the NCBC recommendation to conduct OBC census is binding on the respondents and this issue also no more res integira in view of the Apex Court decision in Ram Singh Vs Uol in WPc  No 274 of 2014 (Jat Case).

“46. Xxxxx Something more would be required in order to bypass the advice tendered by the NCBC which judicially (Indra Sawhney) and statutorily (NCBC Act) would be binding on the Union Government in the ordinary course. An impossible or perverse view would justify exclusion of the advice tendered but that had, by no means, happened in the present case. The mere possibility of a different opinion or view would not detract from the binding nature of the advice tendered by the NCBC.”

Therefore on this ground alone the respondent to bound to include OBC also in the census 2021.

III). Unsustainable Objection of the respondent for OBC census

9. It is submitted that the other objections of the respondents that i) including OBC shall affect the integrity of census date; ii) it is sensitive matter; iii) errors shall be creep in; iv) the enumerators are not capable; v) the schedule and guidelines are already printed and circulated; v) representation  dated 20.7.2020 has been replied; v) similar matter is pending etc. are bald excuses and misleading. To prove that these contentions of the respondents is without substance, it is appropriate to quota Dr.M. Vijayanunni, former Census Commissioner from https://independent.academia.edu/MVijayanunni as under:

“The social studies division dealing with the subject of caste in the office of the census commissioner and registrar general of India has been blocking the taking up of this work by advancing all sorts of unconvincing grounds to avoid it. The census establishment has been getting away with bludgeoning the political leadership into believing its bogey that collecting caste details will casus the “the integrity of the census date to be compromised” and the “ population count to get distorted” which is fatuous and unsubstantiated as it has never happened in the long history of the census of India. It is unfortunate that while the census of India in the British period had been painstakingly collecting and disseminating the most useful and caste date, the post-independence census officials also shirking this work and depriving the country and the governments of this date mandated by the law and even specifically required by the supreme court of the country.”

10. It is submitted that the legal provision for collection of information is laid down in section 8 of the census Act 1948 as under;

8.1 A census officer may ask all such questions of all persons within the limits of the local area for which he is appointed as, by instructions issued in this behalf by the Central Government and published in the Official Gazette, he may be directed to ask.”

There is no restriction to collect OBC details as it permits all questions framed by the central government and in fact head count of the population can be done only under this Act and as it is subject matter  of central government as per entry 69 of List I of the Constitution of India Further, to ensure the constitutional mandate of adequate representation to any Backward Class, the OBC census also since quo none and respondent ought to include OBC option also in question 10 and Colum 13 of the schedule of information for house listing enumeration and corresponding population enumeration schedule.

11. It is submitted that the advancement in IT has throw open all time great opportunity in conducting census with ease and indeed of the respondent is going for paperless census through mobile App on real time basis and only addition the option of OBC at Colum 13 will not be difficult and online instruction can be communicated to all enumerators without much difficulties as it is legal necessity. Further, the PIB statement dated 31.8.2018 makes it clear that the training for the enumerators has been already given including on enumeration of caste details as it was envisaged then and training was also over then. It is also submitted that the petitioner’s representation dated 28.7.2020 the respondents are still pending and the alleged reply dated 29.7.2020 confirms that the respondents has decided the matter without even referring the representation. Further whatever procedure is to be followed for enumeration of SC/ST, the same procedure needs to be followed for OBC also. Above all more difficulties can not be ground for violating the fundamental rights and therefore all the specious objections of the respondent must be rejected as baseless and directed to include OBC in the census 2021.

Therefore in view of the legal provision, frivolous objections of the respondent and paucity of time in considering the representation dated 28.7.2020, EP-MD No 14200/2020 is being PIL, it is most respectfully prayed to direct the respondents to include OBC in Census 2021.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved